ஆஞ்சநேயர் ஜெயந்தி வழிபாடு:சுவெற்றா

 ஜெர்மனி சுவெற்றா கனகை துர்க்கை அம்மன் ஆலையத்தில் ஆஞ்சயநேயர் யெயந்தி வழிபாடு. சிறப்பு வழிபாடாக ஜனவரி பத்தாம் திகதி வியாழக்கிழமை மாலை மூன்று மணிக்கு நடைபெற உள்ளது[காணொளி]

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஆருத்ரா உற்சவம்

 
டிசம்பர் 29,2012 புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. லாஸ்பேட்டை: சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 6.30 மணிக்கு மாணிக்க வாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை உற்சவமும், தீபாராதனை, பிரகார புறப்பாடு நடந்தது. பின், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், பன்னீர்செல்வம், செல்வராஜ், சோமசுந்தரம், நாட்டாண்மை முருகையன், பழனிவேலு, அர்ச்சகர்கள் வெங்கடேச குருக்கள், ராகவேந்திரா குருக்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். வைத்திக்குப்பம்: அக்காசுவாமிகள் திருக்கோவிலில் நாராயணசுவாமிகளின் 108வது ஆண்டு குரு பூஜை விழா மற்றும் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன மகா அபிஷேக விழா நேற்று முன் தினம் துவங்கியது. விழாவையொட்டி அன்று மாலை 5 மணிக்கு கணபதி பூஜையும், நடராஜப்பெருமானுக்கு வெள்ளைச்சாற்றுபடியில் மாடவீதியுலா நடந்தது. நேற்று காலை 4.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 6.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், 9 மணிக்கு நாராயணசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே மும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அக்காசுவாமிகள் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர். காரைக்கால்: திருநள்ளார் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நேற்று முடிந்தது. நிறைவு நாளான நேற்று காலை யாக பூஜைகள் நடத்தி, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கோ பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின் ராஜகோபுர தீபாராதனையுடன் சுவாமிகள் 4 மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்த வாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும், நடராஜருக்கும் சமாதானம் செய்யும் உற்சவம் நடந்தது. பின், நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுர ஆதினம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி உட்பட பலர் கலந்து

வெள்ளியம்பல நடராஜர் வீதிகளில் உலா

 
டிசம்பர் 29,2012.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வந்தார்.

சபரிமலை நடை திறப்பு !

டிசம்பர் 29,201210.மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு
நாளைய நிகழ்ச்சிகள்:
மாலை 05.00 நடை திறப்பு; இரவு 0
. நடை அடைப்பு, ஹரிவராசனம்

உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை!

 
டிசம்பர் 22,2012வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருக்கூட்ட சுவாமிகளின் கூட்டு பிரார்த்தனை, ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நவராத்திரி விழாவை முடித்து வந்துள்ள, திருக்கூட்ட சுவாமிகள் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள பல்வேறு ஊர்களுக்கு 108 நாட்கள் யாத்திரை செல்வார். உலக நன்மை வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். மாவூற்று, மகாராஜபுரம், மாத்தூர், சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, புதுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், புனல்வேலி, டி.சுப்புலாபுரம் சென்ற சுவாமிகள் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் மூன்று நாட்கள் தங்கினார். உலக நன்மைக்கும், நோயில்லா வாழ்வுக்கும், லட்சுமி பூஜை, மகேஸ்வர பூஜை, சுமங்கலி பூஜைகள் நடத்தினார். கடந்த 198 ஆண்டுகளாக இவ்வாறான திருக்கூட்ட சுவாமிகளின் பிரார்த்தனை நடப்பதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 108 நாட்கள் யாத்திரை முடித்து செல்லும் சுவாமிகள் மீண்டும் சுந்தரமகாலிங்கத்தில் உள்ள காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தில் நிறைவு செய்கிறார்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் தங்கி இருந்த சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பிலும், ஊர் பொதுமக்களும் வரவேற்று உபசரிப்பு செய்தனர்

ஏகாதசிக்கு 50 ஆயிரம் லட்டு தயாரிப்பு தீவிரம்!


 
டிசம்பர் 22,2012.சேலம்: சேலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி விழாவுக்காக, லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 24ம் தேதி, ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. ஏகாதசி விழாவின் போது, சேலம், பட்டைகோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட உள்ளது. அதற்காக, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

டிசம்பர் 21,2012.அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே   திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. நாகப்பட்டினம் மாவட்டம்இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்து ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.

காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்

சபரிமலையில் நாளை கற்பூர ஆழி பூஜை!

 
டிசம்பர் 21,2012.சபரிமலையில் தினமும், ஏழு லட்சம் அப்பம் தயாரிப்பதற்கான, இயந்திரம் விரைவில் நிறுவப்பட உள்ளது. சபரிமலையில் நடப்பு சீசனுக்காக, இருப்பு வைக்கப்பட்டிருந்த அப்பங்களில், பூஞ்சை படிந்ததால் அவை அழிக்கப்பட்டன. இதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது, மும்பை நிறுவனம் ஒன்று, தினமும் ஏழு லட்சம் அப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை, சபரிமலைக்கு வழங்க உள்ளதாகவும், அதை பெங்களூரு பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்க உள்ளதாகவும், தேவஸ்தான உறுப்பினர் சுபாஷ் கூறினார். சபரிமலையில் கடைகள் வாடகை மற்றும் குத்தகை முறையில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க, இ-டெண்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.கற்பூரஆழி: மண்டல பூஜைக்கு முன்னோடியாக தேவசம்போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பூஜை, நாளை சன்னிதானத்தில் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரதீபம் ஏற்ற, கற்பூரம் கொளுந்து விட்டு எரியும் பாத்திரத்துடன், மேளதாளம் முழங்க, கற்பூர ஆழி பவனி புறப்படும். சன்னிதானத்தில் ஸ்ரீகோவிலை வலம் வந்த பின், மாளிகைபுறம் கோவில் வழியாக 18ம் படியருகே கற்பூர ஆழி பவனி நிறைவு பெறும்.
மூன்று கோடி வருவாய்: சபரிமலைக்கு பஸ் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள், பம்பையில் இறங்கிய பின், அவர்களின் வாகனங்கள் நிலக்கல்லுக்கு சென்று விடும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ் மூலம் நிலக்கல் சென்று, அங்கிருந்து அவர்களது வாகனத்தில் ஊர் திரும்ப வேண்டும். நிலக்கல்-பம்பை வழியில் மட்டும், கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு மூன்று கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்!

 
டிசம்பர் 20,2012.கீழக்கரை: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா நேற்று துவங்கியது. இந்த கோயிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகபாஜனம், குரு பூஜை, நவக்கிரக பூஜை, பூமி பூஜை நடத்தப்பட்டது. யாகசாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு காப்பு கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிச., 27ல் நடராஜர் சுவாமிக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது. சிதம்பரத்தில் கொடியேற்றம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், நடராஜர் சுவாமி சிற்சபைக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில், உற்ஸவ கொடியான பசுக் கொடியை உற்ஸவாச்சாரியார், தில்லை நாகபூஷண தீட்சிதர் ஏற்றினார். முக்கிய விழாவான திருத்தேர், வரும், 27ம் தேதியும், ஆருத்ரா மகா தரிசனம், 28ம் தேதியும் நடக்கிறது

வன திருப்பதியில் வரும் 24ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு!

 
டிசம்பர் 20,2012.உடன்குடி: வனத்திருப்பதியில் வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு வரும் டிச 24ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தென்திருப்பதி என அழைக்கப்படும் வனதிருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஅதிநாரயணர் ஸ்ரீசிவணணைந்த பெருமாள் கோயிலில் வரும் 24ந் தேதி வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறப்பு, அதனை தொடர்ந்து கோபூஜையும் காலை 6 மணி முதல் அனந்தனசயன சேவையும் பகல் 1 மணிக்கு திருமஞ்சனம் மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். மாலை 6.30 மணிக்கு திருவீதி உலாவும் அதனை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கையும் நடக்கிறது. வரும் ஜன.1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பும், கோபூஜையும் தொடர்ந்து திருமஞ்சணமும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரு தினங்களிலும் ஓட்டல் சரவணபவன் சார்பில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. மேலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களின் வசதிக்காக கோயில் அருகில் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுனவத்தை ஓட்டல் சரவணபவன் நிறுனவரும்,கோயில் கைங்கர்யாதரருமான ராஜகோபால் துவக்கி வைத்தார்

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்!

 
டிசம்பர் 20,2012.நடராஜர் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், நடராஜர் சுவாமி சிற்சபைக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில், உற்சவ கொடியான பசுக் கொடியை உற்சவாச்சாரியார், தில்லை நாகபூஷண தீட்சிதர் ஏற்றினார். முக்கிய விழாவான திருத்தேர், வரும், 27ம் தேதியும், ஆருத்ரா மகா தரிசனம், 28ம் தேதியும் நடக்கிறது. ராமநாதபுரம் அருகேயுள்ள, உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில், விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. யாக சாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

உலகின் 3வது பெரிய மதம் - இந்து மதம்

டிசம்பர் 18,2012.கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ‘’உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்.
இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.
இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர்.

இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர்.
இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது
 
 


 

திருவெம்பாவை-பாடல் 1

டிசம்பர் 18,2012.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்
பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்

திருவெம்பாவை பாடல் 2

டிசம்பர் 15,2012.பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.
பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.
விளக்கம்: தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா. சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து

திருவெம்பாவை பாடல் 3

டிசம்பர் 18,2012ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.
விளக்கம்: இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட வேண்டும். அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து

திருப்பாவை பாடல் 4

 
டிசம்பர் 18,2012ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்

மார்கழி மாதத்தில் வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?

டிசம்பர் 18,2012. ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.12.2012.மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் கோலம் போட்டு, அதன் நடுவில்சாணம் வைத்து, அதில், பறங்கி பூவை வைப்பது, தமிழர்களின் வழக்கம். மஞ்சள் வண்ணத்தில் பறங்கிப்பூ இருப்பதால், அதை வைக்கும் இல்லங்களில், மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. பூமலர்ந்திருப்பது போல், வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்பதால், இல்லத்தில் உள்ளோருக்கு ஆரோக்கியம் தரும். பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும் மலர்ச்சியோடும் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கன்னி பெண்கள், இவ்வாறு மார்கழி மாதத்தில் கோலமிட்டு பூ வைத்து வழிபட்டால், நல்ல வாழ்க்கை அமையும் என்பது ஐதிகம்

திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களைக்.

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிட நவீன இயந்திரம் பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கோவிலில் பக்தர்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் பொருத்தப்படவுள்ளது.
பக்தர்களின் வருகையை அதிகாரிகள் தவறுதலாக குறிப்பிடுவதாகவும் இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்கவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இவ்இயந்திரம் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வரிசை, அன்னதான பிரசாத வரிசை, முடி காணிக்கை வரிசைகளில் பொருத்தப்பட உள்ளது

காஞ்சி கோவில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்?

காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களின் பின்னணியில், பல வரலாற்று தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இங்குள்ள சிலைகள், மண்டபங்கள், தூண்கள் என அனைத்துமே, பல்லவ, சோழ, பாண்டிய என, காஞ்சியை ஆண்ட பல மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டவை. இந்த சிலைகளும், மண்டபங்களும், தமிழர் தம் பழம் பெருமையை, இன்றளவும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. கைலாசநாதர் கோவில், கலை பொக்கிஷமாக திகழ்கிறது. இது, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரதராஜப் பெருமாள் கோவில் நூறு கால் மண்டபத்தில், தசாவதாரங்கள் வரலாறு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட சங்கிலி, உருளும் தூண், போன்றவை இன்றும் காண்போரை வியக்க வைக்கிறது. அழியா ஓவியம் வரதராஜப் பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், திருப்பருத்திக்குன்றம் ஜைனர் கோவில், ஆகியவற்றில் மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற கோவில்களில் உள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், மக்களை கவரும் வண்ணம் உள்ளன. கி.பி. 1249ல், காகதீய இளவரசி கனகாம்பா, ஏகம்பன் கோவிலில் தூண் எழுப்பியுள்ளாள். சம்புவராயர்களின் ஆட்சியில், ஏகம்பரநாதன், இக்கோவிலில் கோபுரம், துலாபார மண்டபம் கட்டியதுடன், தேரும் அளித்துள்ளான்.
இம்மன்னனால் எழுப்பப்பட்ட கோபுரம், இன்றும் "பள்ளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கால் மண்டபம், விஜயநகர வேந்தர்களால் ஆயிரம் கால் மண்டபமாக மாற்றப்பட்டது. கி.பி.1509ல், கிருஷ்ண தேவராயன், ஏகம்பன் கோவிலின் தெற்கு கோபுரத்தை அமைத்து, 1517ல், தெப்போற்சவமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். வண்ண ஓவியங்கள் ராஜசிம்ம பல்லவனால், கயிலாயநாதர் ஆலயம் எடுப்பிக்கப்பட்டது. கி.பி. 1365ல், குமார கும்பண்ணன் காலத்தில், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இதன் மூலம், கோவில் மேலும் பொலிவடைந்தது. காஞ்சி, காமாட்சியம்மன் கோவில் விமானத்தை, கி.பி.1394ல், இரண்டாம் புக்கன் செப்பு கவசமிட்டு, அலங்கரித்துள்ளான். கி.பி.1449ல், இக்கோவிலில், மல்லிகார்ஜுனன் 16 கால் மண்டபத்தை எழுப்பியுள்ளான். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், இம்மன்னனின் படைத்தளபதியான நரலோக வீரன், வரதராஜபெருமாள் கோவிலில் மடப்பள்ளி, மண்டபம், பிரகார சுற்றுச்சுவர் எழுப்பி, அதில், அரியின் சிற்பத்தை இடம் பெற செய்துள்ளான். பராமரிப்பு இல்லை இந்த வரலாற்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காஞ்சிபுரம் நகரில் உள்ள கோவில்களில், காலத்தால் அழிக்க முடியாத கலை பொக்கிஷங்கள் உள்ளன. ஆனால், அவை போதிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என்பது தான் சோகம். பல சிற்பங்கள் தூசிகளாலும், எண்ணெய் பிசுக்காலும் மறைக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. பெரும்பாலும் இருளில் மூழ்கி கிடக்கும் இந்த கலைப் படைப்புக்கள், அங்கு வருவோரின் கண்களுக்கு தெரிவதில்லை. இவற்றை அறிந்து கொள்ள தகவல் பலகையோ, அடையாள குறியோ எதுவும் கிடையாது. எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களும் சரி, சுற்றுலா பயணிகளும் சரி, சுவாமி தரிசனத்தோடு சென்றுவிடுகின்றனர். காணக்கிடைக்காத கலை பொக்கிஷங்களை அவர்கள் கவனிப்பதில்லை. உயிரோட்டம் தேவை பொதுவாக ஒரு கோவிலுக்கு, ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அப்போது தான், அந்த கோவிலில் மூலவரை வழிபடும் பலன் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை என்றாலும், குறைந்த பட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, வரலாற்று சிற்பங்கள் புதுப்பிக்கப்படும் என்பது, கும்பாபிஷேகத்தின் முக்கிய பயனாகும். தற்போது நகரத்தில், ஒரு சில கோவில்களை தவிர பெரும்பாலான கோவில்களில் 20 ஆண்டுகள் கடந்தும், கும்பாபிஷேகங்கள் நடத்தப் படவில்லை. இதனால், கோவில்களில் உள்ள சிற்பங்களும், மண்டபங்களும் உயிரோட்டம் இன்றி, பொலிவிழந்து காணப்படுகின்றன. எனவே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், சிற்பங்களை மூலிகை ரசாயனம் கொண்டு பொலிவு பெற செய்யவும், கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செய்வார்களா?

மெய்யூர் சுந்தர்ராஜப் பெருமாள் கல்யாண மகோற்ஸவத்தில்...

ஆலயநிகழ்வுகள் மெய்யூர் சுந்தர்ராஜப் பெருமாள் கல்யாண மகோற்ஸவதிருவிழாவும் .அருள் நிறைந்த மிகவும் பக்தி பரவசமான பக்தி பாடல்களும் உள்ளன ,,,,,.

சீர்காழி சிவசிதம்பரம் பாடலில் ஒலிக்கும்

 

default-preview-image

தினமணி - தில்லி பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் சீர்காழி சிவசிதம்பரம் தினமணி குறித்து பாடிய பாடல்!

மகா தீப கொப்பரைக்கு இன்று சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டு, தொடர்ந்து 11 நாள்கள் எரிந்த மகா தீபம் சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, மகா தீபம் எரிய பயன்படுத்தப்பட்ட கொப்பரைக்கு கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. 27ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து, 11 நாள்கள் எரிந்தது.
திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிரகாசிக்கும் திறன் கொண்ட இந்த மகா தீபம், சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. பின்னர், மகா தீப கொப்பரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் மகா தீபக் கொப்பரையை வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, மேலாளர் இந்திரஜித், கண்காணிப்பாளர்கள் துவாரகநாத், வடிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்

இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்

தமிழர் பண்பாடுஉணவு பரிமாறும்?

தமிழர் பண்பாடு
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
...
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும்

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்,;;;;;;;;



இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார்...
கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.
இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது

இணையத்துக்கும் இணைய நிர்வாகத்துக்கும் கௌரவிப்பு

சிறுப்பிட்டி{ நெற்} இணையத்துக்கு இணையநிர்வாகி விமலுக்கு கௌரவிப்பு இது மகிழ்வான செய்தி ஊடகத்துறையை நேசித்த விமலுக்குமட்டு மல்ல சிறுப்பிட்டி ஊருக்கே கிடைத்த கௌரவமாக நினைக்கிறோம் தாயை நேசிப்பவன் தன் மண்ணை நேசிப்பான் தன் ஊருக்காய் ஏதாவது செய்ய சிந்திப்பான் ஆனால் எமது ஊருக்காய் புலத்தில் பூத்த நிலவாய் பூத்த ஊடகமே சிறுப்பிட்டி இணையம் இப்படி ஒரு நல்ல சாதனையை புரிந்து யேர்மனியில் உள்ள சுவெற்றா கனகதுக்கை ஆலயத்துக்கும் ஊடகம் சார்ந்த பணி புரிந்த சிறுப்பிட்டி இணைய நிர்வாகி ஊடகப் பணியை ஒழுங்குற செய்தது அவருக்கு மட்டுமல்ல சிறுப்பிட்டி வாழ் உறவுகள் அனைவருக்கும் கிடைத்த மகிழ்வாகும் நான் நினைக்கிறேன்{காணொளி,}
நாங்கள் அறிந்த மட்டில்சிறுப்பிட்டி ஊரின் இணைய ஊடகத்தின் முதல்வனும் விமல்தான் என்று அதனால் அவருக்கான கௌரவம் கிடைக்கப்பட வேண்டிய ஒன்று தான் அவர்பணி தொடர வாழ்த்துவதோடு இன்று போல் என்றும் நல்லதுக்காய் செயலாற்றி இணையப்பந்தில் இணைவோருக்கு நல்லதைச் சொல்லும் ஊடகமாய்த் தனித்துவம் கொண்டு வலம் வரப்பாரினில் வீரத்தொலி விழிகளை பார்த்திடவைத்திடும் இது தன் வீச்சோடு இணைந்து பணியாற்றிடும் என்பது உணர்வு உள்ளவருக்குத்தெரியும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவும் விமலின் கை வண்ணத்தில் உருவா க்க பட்ட உறவு இணையங்களும்அன்புடன் வாழ்த்துகின்றது
Powered by Blogger.