திருமண நாள் நல் வாழ்த்து லோவி றஜீ

இன்று 19.01.2013.திருமண நாள் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நன் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றானர் .இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவர்களை ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்{காணொளி}

மிகப்பெரிய திருவிழாவான மஹா கும்பமேளா தொடங்கியது

உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்று கூடல் என்று கருதப்படும் கும்பமேளா நேற்று கங்கையும் யமுனை நதியும் அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கியது. பல நாட்கள் நடைபெறும் இந்த மத விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று(14.1.13) மட்டும் ஒரு கோடி பேர் அலகாபாத் சங்கமத்தின் நீராடியிருப்பார்கள். வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும் போதிலும், ஆயிரக்கணக்கான சாதுக்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் நீராட திரண்டிருந்தனர். உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள் இங்கு புனித நீராட வருவது, கும்பமேளாவின் போது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக கருதப்படும் என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வண்ணமயமான ஒரு ஊர்வலத்தில் வந்த நிர்வாண நாகா சாதுக்கள் மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே கங்கை யமுனை சங்கமத்தில் குதித்து நீராடினர். கும்பமேளா காலத்தில் சங்கமத்தில் குளித்தால் தமது பாவங்கள் கழுவப்பட்டுவிடும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இத்திருவிழாவையொட்டி அலகாபாத் நகர் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் 30,000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர பதினான்கு இடங்களில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் தேவைக்காக 40,000 க்கும் அதிகமான கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இவ்வகையான திருவிழாக்களின் போது, நதி நீர் கடுமையாக மாசடைவதால் அங்கு வரும் மக்களின் சுகாதாரம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. அங்கு நீராட வரும் பெரும்பாலான யாத்ரிகர்கள் சிறிதளவு கங்கை நீரை உட்கொண்டு தமது உற்றார் உறவினர்கள் அதைப் பருகும் நோக்கில் சிறிய புட்டிகளில் அடைத்துச் செல்வதும் வழக்கமாக உள்ளது. ஆனால் சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். கும்பமேளா காலத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆறு நாட்கள் கங்கை யமுனை சங்கமத்தில் புனித நீராடும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், நதிகளுக்கு மேலேயுள்ள அணைகளில் இருந்து கூடுதலாக நன்னீரைத் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 210 மில்லியன் டொலர்கள், அதாவது 1150 கோடி இந்திய ரூபாய்களை செலவு செய்கிறது. எனினும் கும்பமேளா மூலம் 12,000 கோடி ரூபாய்கள் அளவுக்கு வியாபாரம் இருக்கும் என இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. இத்திருவிழாவுக்கு இந்தியர்களைத் தவிர வெளிநாட்டிலிருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.{புகைப்படங்கள்}

பொங்கல்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

   உங்கள் அணை வர்க்கும் எமது உறவுகள் இணையங்கள் சார்பாவும் நவற்கிரி இணையங்களின் இனிய தை பொங்கல்திரு நாள் நல் வாழ்த்துக்கள் எமது உள்ளத்தை கவர்ந்த அன்பு இணைய வாசகர்களுக்கும் வேஸ்புக்மூலம் உள் இணைந்து எம் இணையத்தின் வளர்சிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் உரித்தாகுக,,,,,நன்றி

வல்வெட்டி சித்தி வினயகர் தேவஸ்தானம் [ நிகழ்வுகள் ]

தைமாதம் 23ம் திகதி புதன்கிழமை கணபதி கோமத்துடன் கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து அன்றையதினம் புதிதாக அமைக்கப் பட்ட நாராயண சமேத பூலக்ஷ்மி ,மகாலக்ஷ்மி வன்னிச்சி அம்மன் கோவிலில் இருந்து மாலை 4.00 மணியளவில் ஊர் வலமாக எமது ஆலயத்துக்கு வருவர். தொடர்ந்து 24,25 ஆகிய நாட்களில் கும்பாபிஷேக கிரியைகள் நடை பெற்று 25 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு ஆலயத்திலே மூர்த்திகள் யாவும் ஸ்தாபிக்கப்படும். தொடர்ந்து 26ம் திகதி சனிக்கிழமை காலை 6.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை பக்தர்கள் எண்ணெய் காப்பு இடம்பெறும். 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் விநாயகப்பெருமான், நாராயணப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர், வைரவர், ஏனைய மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடை பெறும்...........இதனை கண்டுகளித்து எம்பெருமானின் அருட் கடாட்ஷத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.

தியாகராஜர் ஆராதனை விழா: 27ல் கவர்னர் துவக்கி வைப்பு!

தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழாவை, வரும், 27ம் தேதி தமிழக கவர்னர் ரோசைய்யா துவக்கி வைக்கிறார். தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஸ்வாமிகளின் ஆராதனை விழா, ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டு தியாகராஜர் ஸ்வாமிகள், 166வது ஆராதனை விழா வரும், 27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் மூப்பனார் கூறியதாவது: திருவையாறில் தியாகராஜர் ஸ்வாமி, 166வது ஆராதனை விழா வரும், 27ம் தேதி மாலை, நான்கு மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. விழாவில், தமிழக கவர்னர் ரோசைய்யா பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் ஜி.கே., வாசன், தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகிக்கின்றனர். பின்னர், இசை நிகழ்ச்சி துவங்கி இரவு, 12 மணி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக தியாகராஜர் முக்தி அடைந்த தினமான, 31ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு தியாகராஜர் ஸ்வாமி வசித்த வீட்டிலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டு, விழா பந்தல் முன் நிறைவடைகிறது. 9 மணிக்கு தியாகராஜர் சமாதியிலுள்ள தியாகராஜர் விக்ரகத்துக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விழா பந்தலில் உள்ள ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் ஒரே குரலில் கீர்த்தனைகளை இசைத்தும், பாடியும் தியாகராஜர் ஸ்வாமிக்கு கீர்த்தனாஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தியாக பிரம்ம மகோத்ஸவ சபை செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் மற்றும்

அழிவின் விளிம்பில் தேசிய புராதன சின்னங்கள்!

 
ஜனவரி 04,2013.மதுரை: மதுரையில், தேசிய புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருவதை தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை. மதுரையில் அரிட்டாபட்டி, ஆனைமலை, செக்கானூரணி, திண்டியூர், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புராதான சின்னங்கள் உள்ளன. இங்கு 16 மற்றும் 19ம
் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்ததற்காக அழியாப்புகழ் கொண்ட சிலைகள், கல் படுகைகள், வட்டெழுத்துக்களின் அடையாளங்கள் உள்ளன. இவை, தேசிய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு, அத்துமீறி நுழைவோர், சின்னங்களை சிதைப்போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது தொல்லியல் துறை பாதுகாப்பு சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அழியும் தேசிய சின்னம்: அரிட்டாபட்டி, கீழவளவில் உள்ள தேசிய சின்னங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்காக சிதைக்கப்பட்டுள்ளன. கிராம மக்களின் கடும் எதிர்ப்பால், பாதி சிதையுண்ட நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஒத்தக்கடையில் உள்ள பிரமாண்டமான யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஒத்தக்கடை, நரசிங்கபுரம், திருமோகூர், ராஜகம்பீரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அம்முயற்சி கைவிடப்பட்டது.
மது அருந்தும் கொடுமை: புகழ்பெற்ற யானைமலை சமணர் கல் படுகைகளில் ஹாயாக... படுத்துக் கொண்டு மது அருந்தி நாசம் செய்வது தொடர்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சமணர் படுகைக்கு செல்ல முடியாமல், முகம் சுளித்தபடி பாதியிலேயே திரும்பி செல்லும் அவலம் நிகழ்கிறது. எனினும், வேறுவழியின்றி சமணர் கோயிலில் உள்ள மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகிய தெய்வங்களை சிரமத்தின் பேரில் தரிசனம் செய்கின்றனர்.
குமுறும் சுற்றுலா பயணிகள்: மோகன், வங்கி மேலாளர், தேனி: புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய வந்தேன். நடக்க முடியாதபடி நெடுகிலும் அசிங்கம். தேசிய புராதன சின்னம் பாதுகாப்பின்றி இருப்பது வேதனைக்குரியது. இதனால், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சிரமம் அடைவர். தேசிய சின்னத்தை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை.
மூர்த்தி, துபாய்: இங்குள்ள சிலைகளில் பூசப்பட்டுள்ள வர்ணங்கள் காலத்தால் அழியாதவை. புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் கோயில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. அதுபோல் யானைமலை சமணர் கோயிலையும் பாதுகாக்க வேண்டும்

புத்தாண்டு துவங்கியது எப்படி?

ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு என்று குறிப்பிடும் போதே, இது வெளிநாடுகளில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஜார்ஜியன் காலண்டர் தான் இன்று உலகின் பல நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலண்டரை பயன்படுத்தும் நாடுகளில் ஜன., 1 புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரின் திருத்தப்பட்ட வடிவம் எனவும் கூறப்படுகிறது. இக்காலண்டரின் படி ஜன., 1 முதல் டிச., 31ம் தேதி வரை ஓர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஆண்டின் தொடக்க நாள் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
10 மாதங்கள்: ஜார்ஜியன் காலண்டர் அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆரம்பகால ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 10 மாதங்கள் தான் ஓர் ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 153ம் ஆண்டு முதன் முதலாக ஜன., 1 புத்தாண்டாக மாறியது பின் கி.மு., 46ம் ஆண்டு ஜூலியஸ் சீசரின் ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஆனால் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்கள் வேறு பெயர்களில் இருந்தன. இதிலும் ஜன., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஐரோப்பாவின் பல நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.
உலக நாடுகள் ஏற்பு: பின் 1582ம் ஆண்டு ஜார்ஜியன் காலண்டர் வந்தது. இதன் பின் தான் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகளும் ஏற்றுக்கொண்டு, பின் பற்ற தொடங்கின. இருப்பினும் 1752 வரை பிரிட்டன், இக்காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சில அமெரிக்க குடியேற்ற நாடுகளில் மார்ச் 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்படுகிறது. சீனா, பாகிஸ்தான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் வேறு தேதிகளில் புத்தாண்டை கடைபிடிக்கின்றன. இருப்பினும் உலகில் சில நாடுகளை தவிர அனைத்து நாடுகளும் ஜார்ஜியன் காலண்டர் அடிப்படையாகக் கொண்டு ஜன., 1ம் தேதியை புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடுகின்றன

ஐயப்பனுக்கு தங்க ஆபரணப்பெட்டி தூக்கும் தமிழர்

ஜனவரி 03,2013வத்தலக்குண்டு: சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க ஆபரண பெட்டி சுமந்து செல்வதில் மூன்றாவது முறையாக தமிழர் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வ தொண்டர்களாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும், பம்பை, நீலிமலை, அப்பச்சிமேடு பகுதிகளில் சேவை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான முதல் உதவிகள், சரணம் அடைந்த பக்தர்களை அவர்களது ஊர்களுக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டும் விதமாக, மண்டல பூஜை அன்று ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க ஆபரண பெட்டியை சுமந்து செல்வதற்கு சன்னிதான நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழகத்தின் சார்பில் நான்கு பேர் ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ராமையா, மதுரை பாண்டி, தேனி மனோகரன், தஞ்சாவூர் சுப்பிரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ராமையா மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐயப்ப சேவா சங்கத்தின் தென் மண்டல பொறுப்பாளராக இருக்கும் இவர் கூறுகையில்,"" சேவா சங்கத்தினரின் தன்னார்வ தொண்டர்களின் சேவையில், சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு, மண்டல பூஜை அன்று ஐயப்பனை அலங்கரிக்கும் தங்க அங்கி, ஆபரணங்கள் கொண்ட பெட்டியை சுமந்து செல்ல வாய்ப்பளிக்கப்படுகிறது. வருங்காலங்களில் இளைஞர்களும் சேவா சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்

இறை பக்தியை வெள்ளமாக கொட்டும் விசாகா

ஜனவரி 01,2013,ஸ்ரீ கிருஷ்ண கான சபா நல்லி விஹாரில் நடைபெற்ற, விசாகா ஹரியின் "நாரத பக்தி சூத்ரம்' அனைவரையும் கவர்ந்தது. வாழ்வியல் குறித்து நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திரட்டுக்கள் அனைத்துமே, "சூத்ரங்கள்' ஆகும். திருவள்ளுவரின் திருக்குறள், அவ்வை பிராட்டியின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் இவை அனைத்தும் சூத்ரங்கள்தான். வரிகள் சிறியது விஷயம் பெரியது. ஆனால், நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை, நாரதர் எப்படி ரத்தினச் சுருக்கமாக கூறியுள்ளார்? அதை எப்படி மிகவும் எளிதாகப் பின்பற்ற முடிகிறது.
இதைத் தான் இரண்டு நாள் இசைச் சொற்பொழிவாக விரிவாகக் கொடுத்தார். "வெடலின்' என்ற தியாகராஜரின் பாடலுடன் துவக்கி மடைதிறந்த வெள்ளமாக கொட்ட ஆரம்பித்தார் விஷயத்தை. இந்நிகழ்ச்சியில் அதிக கூட்டம். சுகிஸ்வரமாக இறைவனை அடையும் மார்க்கம் பக்தி ஒன்றே. அதுவும் அன்பு, பிரேமை, பேரன்பு இவை மட்டுமே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்கு செய்யும் பூஜை, புனஸ்காரங்களை காட்டிலும் நம்மிடம் எதிர்பார்ப்பது, தூய அன்பு ஒன்றே என்பதை நாரதர் அழகாக சொல்லியிருக்கிறார். நம் முன் இருக்கும் இறைவனை விட்டு, இல்லாத இடத்தில் தேடி என்ன பயன்? என்பதற்கு நாராயண தீர்த்தரின் தரங்கம் ஒன்றை பாடி விளக்கம் அளித்தார் விசாகா.
செம்பை வைத்தியநாத அய்யர் குருவாயூரில் ஏகாதசியன்று, சென்ற நூற்றாண்டில் இறைவனடி சேர்ந்தது, நாத உபாசனையால் என்பதை கூறினார். சைதன்ய மகா பிரபுவின் சரித்திரம், சதாசிவ பிரமேந்திரரின் வரலாறு போன்றவற்றில், இறை பக்தியில் சுவாசித்து, குடித்து, உண்டு அதனுடன் கலந்ததை சொன்னபோதும், அதைத் தொடர்ந்து "பிப்ரே ராமரஸம்' என்ற பாடலை பாடியபோது, நாம் ஒவ்வொருவரும் இந்த நாள் வரை இறைவனை எப்படி அணுகினோம் என்பதை விளக்கினார்.
இறை பக்திக்கு இனம், மொழி என்ற வேறுபாட்டை இறைவன் பார்ப்பதே இல்லை என்பதற்கும், நாரத சூத்திரத்தில் அதை அடிக்கோடிட்டு அனைவருக்கும் பொதுவானவன் இறைவன்.
கண்ணன் அழகில் மயங்கி, அவரைப் போற்றிய வரலாற்றை கூறினார். இஸ்லாமிய ரஸ்கான் மெய்மறந்து, கண்ணனுடன் கலந்து அவர் வாயிலிருந்து வந்த முதல் கீர்த்தனம், "மகேஷ், கணேஷ், தினேஷ், சுரேஷ் சுஹாரே ஆதி, அநாதி அகண்ட சேதன என்று உருது மொழி பேசும் வாய், வடமொழியில் கீர்த்தனத்தை பாட வைத்தது யார்? கண்ணனின் அன்பு ஒன்றே என்று விளக்கினார்.
சிலையாக அவரை பார்க்கவில்லை, "கன்னய்யா' என்ற அன்பு கலந்த அழைப்பை, கண்ணன் ஏற்ற விதம் என்று விசாகா சொன்ன போது, ரசிகர்கள் மெய் மறந்தனர். அடுத்து பாரதியின் வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டில் பாரதி. இறைவன் எங்கெல்லாம் இருப்பான் என்பதை, அவர் அனுபவித்து பாடியதை இவர் பாடியபோது, பக்தி என்பது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்றும் விளங்க வைத்தார். நாம் அனைவரும் ஒரு குலம், அது தான் நாம் அனைவரும் இறைவனின் பக்தர்கள் என்கிற குலம் என்று சொன்னபோது, ஆகாயம் இறைவனுடைய மண்டபம். அதிலிருக்கும் பறவைகள் இறைவனின் பந்துக்கள். இவ்வுடலில் உயிர் மூச்சு இருக்கும் வரையில் உழைத்து, அவனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
தன் சிஷ்யையின் கதையை கேட்க விசாகாவுக்கு தெரியாமல், லால்குடி ஜெயராமன் இத்தனை வயதிலும், வந்து யாருக்கும் தெரியாமல், ஓரமாய் அமர்ந்து கேட்டு கடைசியில் அவருக்கு ஆசீர்வாதம் செய்தபோது, விசாகா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இப்பொழுது நமது நாட்டிலும், உலகெங்கிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு, விசாகா ஹரியின் ஜாதி, மத, இன, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் பயன்படும் வகையில், தன் நிகழ்ச்சியை வரைவுபடுத்திக் கொடுக்கிறார்.
அதனால், ஆயிரக்கணக்கில் மக்கள் குவிகின்றனர். தன் நிகழ்ச்சியின் மூலம் இசையை பாரம்பரியமாகவும், தான் சொல்லும் கதையால், ரசிகர்களின் மனதைத் தொட்டு கரைய வைக்கிறார். இரண்டு நாள் மொத்தம், 7 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சி ரசிகர்களுக்கு, பெரும் விருந்தாக இருந்தது

மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு

          
 

இன்று விசேட பூசைகள்! நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்றது. அங்கு பெருந்தொகையான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இயற்கையாக கழனிகளுக்கு மத்தியில் தென்னஞ்சோலைக்குள் பாரிய ஆலமரநிழலில் பாம்புப் புற்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இல்லாலயத்திலுள்ள புற்றொன்றில் திடீரென அண்மையில் சிவலிங்கமொன்று தோன்றியதையடுத்து பக்த வெள்ளம் அலைமோதத் தொடங்கியது.

நம்பும் பக்தர்களுக்கு உடனுக்குடன் அருள் புரிவதால் பக்தர்களின் வருகை அதிகரிப்பதோடு நிறைய பொங்கலும் அன்னதானமும் இடம்பெற்று வருகிறது. இன்றும் பெருந்தொகையானோர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2013.

   அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் இணையவித்தகர் ஆசிரியர் விமலுக்கும் எமது நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.1-1-2013.ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.  
                                                   வாழ்க என்றும் நலமுடன் ,,,,,,,,,,{காணொளி,}

Powered by Blogger.