தாசன் செந்து திருமண நல்வாழ்த்து

 
திருமண நாள் இன்று  29,06. 2013.♥ ஜெகதாசன்  செந்துஜா ♥,முதலாவது வது வருட திருமண நாள் காணும் தம்பதியினருக்கு  நல் வாழ்த்துக்களைகூறும்   அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து.  இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி   சீரும் சிறப்புடன்  வாழ்க வாழ்க வென  வாழ்த்துகின்றோம் ,
 

 
                    திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் அதை கொண்டாடுவோம் ஆனால் அசை போடமாட்டோம் ஆனால் திருமண நாள் நம் நினைவுகள் நிச்சயம் அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட வைக்கும்..


பிறந்தநாள் வாழ்த்து அலெக்ஸ்

 


  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2013 ) இன்று தனது பதின் ஆறாவது  பிறந்தநாளை கொண்டாடுகிறார் ,இவரை அவரது அப்பா,அம்மா,அக்கா(றமோனா)அப்பம்மா குமாரசாமி  குடும்பத்தினர்கள்அம்மப்பா அம்மம்மா   மற்றும் அவரது 
உறவினர்கள் நண்பர்களும் நவற்கிரி இணையங்களும்.ஜேர்மன். தேவராஜா , சுவிஸ் ராஜன் , அருண்,  நேசன்,  தேவன்ராஜா.ஆகிய குடும்பத்தினரும் இணைந்து பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வென  வாழ்த்துகின்றோம் .

ஸ்ரீ நயினை நாகபூஷணி அம்மன் தேர் திருவிழா


 
ஸ்ரீ நயினை நாகபூஷணிஅம்பாளின் தேர் திருக்கட்சியை கனதவர்க்கு மிண்டும் அடியவர்களின் அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேர் வீதி வலம் வந்த அழகியதிருள் காட்சியைக்கண்டு அருள் பெறுவிரக ஓம் சக்தி ஓம் ,,,,
விக்கினங்கள் தீர்க்கும் நயினை விக்கன விநாயகர்க்கு இன்று தேர் உட்சவம்..

அவனின்றி அணுவும் அனசயாது....

பூந்தமல்லி பகுதியில் மூன்று கோவில்களில் புகுந்து உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் மேட்டு தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவில் கதவில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலை சில ஆசாமிகள், பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று, வானகரம் ஆண்டாள் நகர் பகுதியில் புற்றுக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். திருவேற்காடு கோலடி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரத்தை ஆசாமிகள் திருடிச் சென்றனர். இந்த 3 சம்பவங்கள் குறித்தும் காவல்துறையின வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடவுள் இருந்தால் இப்படி கொள்ளைகள் எல்லாம் நடக்குமா? அவனின்றி ஓரணுவும் அசையாது என்று கூறும் பக்தர்களே இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்? சிந்திக்க வேண்டாமா?

விமல் பத்றீசியா தம்பதியினர் திருமணநாள்

vba
 
 
சிந்தனைசிப்பி ஊடகக் கலைஞன் பாடல் ஆசிரியர் விமல் பத்றீசியா திருமணநாள் இருமனம் இணைந்த நற் தம்பதிகள் வாழ்க்கை இனிமையாய் என்றும் தொடரட்டும் புது மணத் தம்பதிகளாய் என்றென்றும் நீவீர்வாழ்ந்து புத்தகமாய் படித்து வாழ்வை நற்குணமாய் வாழ்ந்த நீங்கள் நற்குணவதிகள் தித்திக்கும் கரும்பாக திகட்டாத கனியாக தத்துவத்தின் மொழியாக தம்பதிகள் நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்க ! பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துவோர்,நவற்கிரி .கொம் நிலா வரை .கொம் எஸ்.ரி.எஸ் ஸ்டுடியோ.கொம் ஆனைக்கோட்டை.கொம் தாவடி .கொம் சுவிஸ் தேவன்ராஜா குடும்பத்தினர் சுவிஸ‌்.பொதுத்தொண்டன்.அருண்குடும்பத்தினர்,லண்டன் கவிஞர் கந்தசாமிகுடும்பத்தினர்,பேர்லின் ரவிகுடும்பத்தினர்,நோர்வே.சந்திரன்குடும்பத்தினர்,கொலன்ட் தவம்குடும்பத்தினர், சுவிஸ‌் இராஜேவரன் குடும்பத்தினர்சுவிஸ் நேமி குடுபத்தினர் சுவிஸ் உதயன் குடுபத்தினர்,உற்றார் உறவினர் ஊடக நண்பர்கள் இணைந்து நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்கவெனவாழ்த்துகின்றனர், 

vb

பிறந்தநாள் வாழ்த்து விமல்


சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  குமாரசாமி விமல்  அவர்களுக்கு  இன்று(16:06:2013) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள்  சகோதரசகோதரிகள்   இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள்  சிறியவர்கள்   ,மற்றும் அன்பு  உறவினர்கள் ,நண்பர்கள்  சகல  வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம் 

அழகன் முருகன்

மாதொருபாகன் மைந்தன் முருகன்
மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான்.
மாம்பழம் கையில் சேராத முருகன்
மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான்.

தெய்வயானையைத் தேவியாய் கொண்டும்
தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில்,
தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும்,
தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.
 
மகாதேவன் மாதொருபாகன்
 மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்.
மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்
 சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்

 

தூயவன் பாதம்.


பிறைநிலவைச் சடையில் பின்னியவன்
 நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்.
மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்
கறையான நீலகண்டம் அமைந்தவன்.  (பிறை)
நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்
அலையா தமைதி தரும் அமலன்!
உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட
விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான்.  (பிறை
உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.
இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்
சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

 
ஓர் குறிப்பு பார்வையிட வரும் அன்பார்ந்த இணைய உறவுகளே நன்பர்களே இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம் ரி.தேவன்ராஐா ஆகியநான் கம் ஆலய தேர் தரிசனதிற்கு சென்றருந்தபோது பின்பு ,திரு,சுப்பிரமணியம் ,தேவராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டபொழுது கோவிலில் இருந்து என்னை . நட்புரீதியாக தனது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு அழைத்துச்சென்று அன்பாக உபசரித்து உற்சாகம் ஊட்டி என்னுடன் உரையாடிய போது எனது ஆதங்கத்தை தெரிவித்தேன் அதாவது நமது ஊரான நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு பாடல் ஒன்று உருவாக்கித்தரும்படி ஆசைப்பட் டென  என் ஆசை நிறைவேற இவரின் அன்புடன் இறைவன் அருள் கூடியதால் இசைந்தார் இசைத்தார் இசைத்தட்டை இரு நாளில் வெளியிட்டார் காணொளி யை  {YouTube}.யூத்துபேயில் பதி வாக்கி உலகங்கும் பரவச்செய்தார்  இந்தப்பாடலானது இரண்டுநாட்களில் உருவாகி காணோளியாக வெளியீடு நடை பெற்றது இதுமட்டுமல்ல இப்பாடலை அத்தோடு இத்தப்பாடலை இணைந்து விமலும் தேவராஜாவும் நானும் எழுதியுள்ளோம்.இணைந்து செயலாற்றல் எமக்கு இன்பம் ஊட்டும் எம்மிடையே ஒழிந்திருக்கும் கலைஞர்களை என்றும் அவர்கள் திறன் அறிந்து வலம் வரும் மேலும் குழுப்பாடகர்கள். எஸ‌்.தேவராஜா..ரி.சுதேதிகா .ரி.தேவிதா .ரி.தேனுகா.ரி.தேவகி .கலையாக ஒருங்கிணைப்பு .தேவராஜா.சுகந்தினி காணொளி பின்னணி சுந்தர். கலைப்படைப்பு முகாமை உரிமை யாளர் .எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு நம் உறவுகள் நபர்கள் எமது இணையங்கள் தேவன்ராஜா சார்பாக இந்த குழுவினர் மேலும் தாளைத் தொங்க எல்லாம் வல்லஇறைவனை வேண்டி வாழ்க வளர்கவென . வாழ்த்துகின்றோம் ,,நன்றி.நன்றி   இந்தப்பாடல் முதல்முதலாக உறவு இணையமான சிறுப்பிட்டி நெற்       இணையத்தில்07.06.2013.இணைக்கப்பட்டது மிகவும் மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றேன் . (காணெலி)

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?


அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது

கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?


பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை

சந்தோஷி மாதா வழிபாடு ,,,


வழிபாடுயதக்ஷர - பத - ப்ரஷ்டம்மாத்ராஹீனம் து யத்பவேத்தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்து தே !விஸர்க - பிந்து - மாத்ராணிபத பாதாக்ஷராணி சந்யூனானி சாதிரிக்தானி
க்ஷமஸ்வ பரமேஸ்வரி அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மதஸ்மாத் காருண்ய பாவேனரக்ஷ ரக்ஷ ஜகதாம்பிகே
பாராயண காலத்தில் - அக்ஷரத்திலே, பதங்களிலோ, எந்த ஒரு பிழை ஏற்பட்டதோ, மஹாலக்ஷ்மியே ! அவை அனைத்தையும் மன்னித் தருள்வீராக. உமக்கு நமஸ்காரம் ! உச்சாரணகாலத்தில், விஸர்கம் - பிந்து - மாத்திரை - போன்றவற்றிலும், பதங்களிலும் - பாதங்களிலும் - குறைவாகவோ, தேவைக்கு அதிகமாகவோ உச்சரித்திருந்தால், அவற்றையும் மன்னித்தருள்வீராக. எனக்கு உம்மைத்தவிர வேறு கதியில்லை. நீர்தான் சரணம். ஆகையால், கருணையுடன் என்னை காப்பீராக !

 
Powered by Blogger.