சகல சௌபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம்


சகல சவுபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம்    தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தை அமாவாசையையொட்டி நடைபெறும் சூலவிரத சிறப்பு வழிபாடு பிரசித்தி பெற்றது ஆகும். சூலவிரத மகிமை குறித்து கந்தபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சகல விதமான சவு பாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூலவிரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய

சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்து கொண்டு அபஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.
பிறகு மதியம் வேளையில் திருநீறு, ருத்ராட்ச மாலைகளை தரித்த சிவ பக்தர்களுக்கு தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான தர்மம் செய்ய வேண்டும். அதன் பின் சிவாலயத்திற்கு சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து திருக்கோவிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி இறைவனை வணங்க வேண்டும்.

பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். இப்படி இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்க ஆயுள், புத்திர செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அடைந்து சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்.

முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மகா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலி நீங்க பெற்றார். மேலும் கொடிய அசுரனான காமநேமியை சம்ஹாரம் செய்தார். ஜமத்கனி முனிவரின் புதல்வனும், மிக பல சாலியுமான பரசு ராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும், ராவணனை மிஞ்சும் பராக்கிரம சாலியான கார்த்தவீர்யாஜூனனைக் கொன்றார்.

பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்று வலி நீங்க பெற்றார். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடை பிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பெளத்திரர்களை பெற்றெடுத்து அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான்.

இவர்களை போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப் பெற்று இறுதியில் திருக்கயிலாயத்தையும் அடைந்தனர். இந்த சூல விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்கள் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களிலிருந்து நீங்கியும், மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

தோஷ நிவர்த்தி பெறுவார்கள். இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமை பற்றி மகாபலட்டரான வீர பத்திரர் சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்கு கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்கிறார்– சூதமா முனிவர்.

ஆகையால் தவ சீலர்களே சகல பாவங்களையும் வேரோடு அழிக்க வல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பை பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயம் இராது.

கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்று பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால் வெகு சமீபத்தில் உள்ள சூல மங்கலம் என்னும் இவ்வூர் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்கார வள்ளி உடனுறை ஸ்ரீ கிருத்திவாசேஸ்வரர் திருக்கோவிலே சூல மங்கை என்பதாகும்.
சூல மங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று. இப்போது மருவி சூலமங்கலம் என்று விளங்குகிறது. இக்கோவில் தலம் (சூலமங்கை) மூர்த்தி (கிருத்திவாசர்) தீர்த்தம் (சூல தீர்த்தம்) என்னும் 3–ம் கொண்டுள்ளது.

அஸ்திரதேவர் (சூல தேவர்) வழிபட்டு திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்க தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம். சப்த மங்கையரில் சூல மங்கை வழி பட்ட தலம். பெரிய சிவாலயம், கல் திருப்பணி, ஊரின் பெயருக்கேற்றவாறு கோவில் வெளி வாயிலின் புறத்தில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார்.

அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று இத்திருக்கோவிலில் விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை மெழுகிட்டு கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னம் பாலித்தல், தான தர்மங்கள் செய்தல்,

திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், தினசரியோ, வார நாட்களிலோ தவறாது திருக்கோவிலுக்கு செல்லுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்தல் போன்ற திருப்பணிகளை செய்வோமாயின் உலகத்தில் யாவரும் செய்திராத தவப்பயனும்,

ஒப்பற்ற யாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிட்டுவதுடன், சிவ பெருமானின் அனுக்கிரக பார்வையில் நாம் இருந்து அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று சிவானந்த பெரு வாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.

முருகன் பிறப்பு வித்தியாசமான கதை

பத்மபுராணம் என்ற நூலின், 41வது சர்க்கத்தில் உள்ள 100 ஸ்லோகங்கள், முருகனின் பிறப்பு பற்றியும், அவருக்கு ஆறுமுகம், 12 கை என மாறுபட்ட உருவம் அமைந்தது குறித்தும் வித்தியாசமான தகவல் உள்ளது. ஒருமுறை பார்வதியையும், பரமேஸ்வரனையும் ஆயிரம் ஆண்டுகளாக எங்கும் காணவில்லை. அவரைக் காணச் சென்ற தேவர்களை, வீரகன் என்ற கணநாதன் தடுத்து விட்டான். தேவர்கள், அக்னியை அனுப்பி அவர்களைத் தேடச் சொன்னார்கள்.

அவன் கிளி வடிவெடுத்து அவர்கள் தங்கியிருந்த அறை பக்கம் சென்றான். சாளரம் (ஜன்னல்) வழியாக எட்டிப் பார்த்த போது, அங்கே இருவரும் தனிமையில் இருந்ததைக் கண்டான்.
சிவன் கிளியைப் பார்த்து விட்டார். ""அக்னியே! எனது வீரியம் வெளிப்படும் வேளையில், இங்கு வந்து பார்த்தாய். எனவே, இதன் ஒரு பகுதியை நீயே ஏற்பாய்,'' என்று சாபமிட்டார்.

இதையடுத்து அக்னி அதை ஏற்றான். அது ஒரு குளமாகப் பெருகியது. பார்வதி தேவி அந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த குளத்து நீரை பருகினர். அந்த நீரை ஒரு தாமரை இலைக்குள் அடக்கியெடுத்து கொண்டு போக முயன்றனர்.
பார்வதி அவர்களைத் தடுத்தாள். ""இது என் கணவருக்குரியது. இதை நீங்கள் கொண்டு போகக்கூடாது,'' என்றாள்.

அந்தப்பெண்கள் பார்வதியிடம்,"" எங்களை தடுத்த உனக்கு குறையுள்ள ஒரு பிள்ளையே பிறக்கும். நாங்கள் இந்த குளத்து நீரைப் பருகி விட்டதால், அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையாவது எங்களுக்கு தர வேண்டும்,'' என்று உரிமை கொண்டாடினர். இதற்கும் பார்வதி மறுத்தாள்.
"" இதற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியாது,'' என்றவள், அவர்கள் எடுத்துச் சென்ற நீரை திரும்பவும் வாங்கி பருகி விட்டாள். இதையடுத்து அந்தப் பெண்கள்,""உனக்கு பிறக்கும் குழந்தை குறையுடையதாகப் பிறக்கட்டும்,'' என்று சாபமிட்டு சென்றனர்.

அதன்படி, வலது விலா வழியாக குமாரர் என்ற குழந்தையும், இடது விலா வழியாக ஸ்கந்தர் என்ற குழந்தையும் பிறந்தது. இவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்டதாகத் திகழ்ந்தது.
 

12வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா [19.01.14]

பன்னிரன்டாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2014.  யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன்  தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன்பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர் {காணொளி}



 
 

திருமண நாள் நல் வாழ்த்து லோவி ரஜீ [19.01.14]

இரண்டாவது திருமணநாள் லோவி ரஜீ  இன்று 19.01.2014 நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு மகள் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று  சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் >இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர் {காணொளி}


 

இன்று தைப்பூசம்: செல்லப்பிள்ளையை வணங்குவோமா!

போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவர் சிவபார்வதிக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார். இந்நாளில், இவரை இருந்த இடத்தில் இருந்தே சிந்தித்தாலே போதும். இப்பிறவிக்கு வேண்டிய பொருளும், மறுபிறவி இல்லாமலும் செய்து விடுவார். சித்தர்களுக்கெல்லாம் தலைமைச் சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து

ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் "பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு

செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை அல்லவா! இதனால் இப்படி ஒரு அலங்காரம்! மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும்

தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பகைவனுக்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று பழநி தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம்

இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று

வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். தைப்பூச நன்னாளில் ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.

தைப்பூசம் கொண்டாடுவது ஏன்?


நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப்பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார்.  சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும்

ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம்

வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

பழநியில் திருக்கல்யாண கோலாகலம் தைப்பூச விழா:!

 தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி பெரிய நாயகியம் மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். விநாயகர் பூஜையுடன், கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடந்தது. இரவு 7.25மணிக்கு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு வெள்ளிரதத்தில், சுவாமி திரு உலா வந்தார். பெரியநாயகியம்மன் கோயில், ரதவீதிகளில் இன்று மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: தைப்பூச விழா ஜன., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஜன., 20 வரை நடக்கிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரவசதிகள் பெயரளவில் மட்டுமே செய்துதரப்பட்டுள்ளன. சரவணப்பொய்கையில் இலவசமாக குளிக்குமிடத்தில், கட்டணம் வசூலிக்கின்றனர். முடிகாணிக்கை செலுத்துமிடத்திலும் அதிக வசூல் செய்கின்றனர். இடும்பன் குளத்தில் போதிய தண்ணீர் வசதி

இல்லாததால், குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மலைக்கோயில் கிரிவீதியின் இருபுறங்களிலும், தள்ளுவண்டி, பழக்கடைகள் வைத்துள்ளதால் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குப்பை குவிந்துகிடக்கிறது. "வின்ஞ், "ரோப் கார் ஸ்டேஷன் களில், 4 மணி முதல் 5 மணிநேரம் வரை காத்திருந்து, தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
 

அய்யப்பன் அவதரித்த வரலாறு

அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம். சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும். காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள்.

தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள். பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது.

அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர். காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள் சதி திட்டம் தீட்டப்பட்டது.

ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார். பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள்.

லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள். அய்யன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.

இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு  மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார். இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன்  மனம் உடைந்தார்.

அவர்  திருப்திக்காக அய்யப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார். பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார்.

சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.  இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் இன்றும்  அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..

ponkal0

அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினதும் உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத் திருநாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல் பொங்க உள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றேன்.. அன்றியும்இ சொந்த ஊரிலே சொந்த மண்ணிலேஇ சொந்த வீட்டின் முற்றத்திலே பொங்கலோ பொங்கல் எனப் பொங்கி மகிழ்ந்திட ஏக்கமுடன் ஏங்கி நிற்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இன்பமும் நிம்மதியும் சாந்தியும் சமாதானமும் அன்பும் அறமும் பொங்கி வழிந்திட தேடுதல்கள் யாவும் கிடைத்திட தேவைகள் யாவும் நிறைந்திட எமது மண்ணிலே வாழையடி வாழையாக தொடர்ந்திடும் எம் தமிழர் தம் வரலாற்றின் வளங்களும் கலாசாரம் மற்றும் பண்பாடு கல்வியின் வளர்ச்சியும் உழவுத் தொழிலின்

மேன்மைச் சிறப்பும் மீண்டும் பொங்கி வழிந்தோட ஒளியும் சுபீட்சமும் மலர்ந்திட சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பொங்கல் பொங்கி மகிழ்ந்திட நிச்சயமாக தை பிறக்கும் போது வாசல்கள் திறக்கப்பட்டு வழிகளும் பிறக்குமென்ற நம்பிக்கையோடு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றேன்..


 
 
 


இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு

அதிகாலையில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
மார்கழியில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் பாவங்கள் விலகி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக பக்தர்கள் நேற்று முதலே விரதம் இருந்து ஒரு வேளை மட்டும் உணவு உண்டனர். இன்று அதிகாலையில்

சொர்க்கவாசலில் பெருமாளை தரிசனம் செய்து துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி சுத்த ஏகாதசி விரதம் இருப்பர். இன்றில் இருந்து நாளை துவாதசி பகல் முழுவதும் விழித்திருந்து ஹரி நாமத்தை மட்டும் ஜெபிப்பர். துவாதசியன்று பாரணம் எனும் அனைத்து காய்கறிகளால் குழம்பு வைத்து பெருமாளுக்கு படைத்து விரதத்தை பூர்த்தி செய்வர். விரதத்தில் அகத்தி கீரை, நெல்லி மற்றும் சுண்டைக்காய்

கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இதில் அகத்திகீரை பாற்கடல் அமுதமாகவும், நெல்லி மற்றும் சுண்டைக்காய் லட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இன்று தூங்காமல் ஹரி நாமத்தை சொல்லி வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலை துவாதசியன்று நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் உட்பட பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்து விரதத்தை முடிப்பர்.

    இன்று தல்லாகுளம் பெருமாள் கோயில் மற்றும் அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாளை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்கும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் பெருமாள் மோகனவதாரத்தில் காட்சி அளித்தார். இந்த

அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளாக பூதேவி, ஸ்ரீதேவியுடன் சயன அலங்காரத்தில் காட்சி அளித்தார். கூடலழகர் பெருமாள் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்வர்.

வளங்கள் அருளும் வைகுண்ட ஏகாதசி.விரதம்


வைகுண்ட ஏகாதசி விரதம்.விஷ்ணுவின் விரதங்களில் மிகச்சிறந்த வைகுண்ட ஏகாதசி விரதம்.
கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'.

மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது.

24 ஏகாதசியின் விரதபலன்:
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுந்த ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் தெரிந்து கொள்வோம். சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம்.

 * மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி'' எனப்படும். பகையை வெல்ல..

அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோயில்


மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள், உச்சிப் பிள்ளையாரைச் சேர்த்து பன்னிரண்டு பிள்ளையார்களைத் தரிசிக்கலாம். இதில் இவர் ஏழாவதாக இருக்கும் பிள்ளையாராகத் திகழ்வதால் ஏழைப் பிள்ளையார் ஆகிவிட்டார். உண்மையில் இவர் எழுந்தருளியிருக்கும் கோவில் சப்தபுரீஸ்வரர் கோயிலாகும். இங்கே ஈஸ்வரனோ, அம்பாளோ, வேறு எந்த பரிவார தெய்வங்களோ இல்லை. நாகர்கள் சிலைகள் மட்டும் சன்னதிக்கு வெளியே உள்ளன. பிள்ளையார்தான் இங்கு மூலவர்.

இசைக்கலைஞர்கள் குரல் வளம் பெற, செல்வ செழிப்பு உண்டாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்க இங்குள்ள விநாயகரை பிரார்த்தனை செய்கின்றனர்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இந்த விநாயகர் சன்னதியில் இசைக் கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும், மந்தபுத்தி உள்ள

குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள். மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும்

வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் (தாயுமானவர்) அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். இந்த விநாயகரைத் தரிசித்தால் மலை ஏறி உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்த பலன் கிட்டும்.
அகில உலகங்களிலும் உள்ள எல்லா ஒலிகளும், சொற்களும், ஸ்வரங்களும் பரம்பொருளான சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியவை. பூலோக மக்கள் அறிந்தது ஏழு ஸ்வரங்களை மட்டும்தான். இந்த ஏழு ஸ்வரங்களை  அடிப்படையாகக் கொண்டு பல ராகங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் சப்தஸ்வர தேவதைகளுக்குத் தங்களால்தான் மக்களின் மனதைக் கவரும் இனிமையான இசை எழுப்ப முடிகிறது என்ற கர்வம் உண்டாயிற்று. இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. இசையால்

உடலும் நலம் பெறும்; மனதுக்கும் அமைதி கிட்டும். தங்கள் ஸ்வரங்களில்தான் உலகமே அற்புதமான இசையால் நிறைந்திருக்கிறது. இறைவன்கூட இராவணன் வாசித்த சாம கானத்தில் மனதைப் பறி கொடுத்தவர்தானே! அப்படியிருக்க நாம்தான் மிகவும் உயர்ந்தவர்கள் என்ற ஆணவத்தால் இறைவனைத் துதிப்பதை மறந்தன. இதனைக் கவனித்த கலைவாணி சப்தஸ்வர தேவதைகளை, இனி உங்கள்

இசையால் யாரையும் கவர முடியாது. ஸ்வரங்கள் பயனற்றுப் போகட்டும் என்று சபித்துவிட்டாள். கலைவாணியிடம் சாபம் பெற்ற சப்தஸ்வர தேவதைகள் ஊமையாகிப் போயின. தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் மௌனமாக பிராயச்சித்தம் பெற மன்றாடின. அகில உலக நாதனான சிவபெருமான் அவர்களுக்கு சாபவிமோசனம் அருள மனம் கொண்டார்.

பூலோகம் சென்று, தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சிராப்பள்ளி மலை உச்சியில் அமர்ந்திருக்கும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டு வலம் வந்து, ஏழு ஸ்வரங்களுக்கும் அதிபதியாக இருந்த நீங்கள் கிரிவலம் வரும் பாதையில் ஏழாவதாக ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து,

அங்கிருந்து மீண்டும் உச்சிப் பிள்ளையாரை வழிபட்டால் உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் மீண்டும் சப்தஸ்வரங்களை ஒலிக்கும் சக்தியைப் பெறுவீர்கள் என்று அருளினார். இறைவன் அருளியதுபோல், மலைக்கோட்டையின் வடக்குப் பகுதியில், உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்கும் வகையில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி ஏழு ஸ்வரங்களும்

சாபவிமோசனம் பெற்றன. சிவபெருமானின் கட்டளைப்படி சப்த ஸ்வர தேவதைகள் கிரிவலப் பாதையில் ஏழாவது விநாயகராக இவரை ஸ்தாபிதம் செய்ததால் இந்த விநாயகர் ஆலயம் ஏழைப் பிள்ளையார்- சப்தபுரீஸ்வரர் கோவில் என்று பெயர் பெற்றது.

அதிசயத்தின் அடிப்படையில்: ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.
 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.2014


அன்பர்கள் நண்பர்கள் உற்றார் உறவினர் அன்புள்ள வாசகர்களுக்கும் உறவு இணையங்களுக்கும் எமது நிலாவரை இணையம் நவற்கிரி இணையங்களின்சார்பாக மலர்ந்த.01-01.2014ஆண்டின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகலசெல்வங்களும் பெற்று . வாழ்க என்றும் நலமுடன்
Powered by Blogger.