பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம்!

சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது.சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை 6 முதல் 11 மணி வரை உப்புமா, கடலைக்கறி, காபி வழங்கப்படுகிறது. மதியம் 3 மணி வரை சோறு, சாம்பார், அவியல், ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின் மாலை 5 மணி முதல் இரவு வரை கஞ்சி, பயறு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின்பும் கூட்டம் வந்தால் உப்புமா வழங்கப்படும். 125 ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் தினமும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருகோவிலில் இயமசங்கார உற்சவம்

es1
அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருகோவிலில் இயமசங்கார உற்சவம் வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் இடம்பெற்றது இயம சங்காரம் பற்றிய சிறிய கதை மார்க்கண்டேயனின் கதை நாம் அனைவரும் அறிந்ததே. ம்ருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி பிள்ளைப் பேறு வேண்டி கடுந்தவம் புரிந்தனர். தவத்தின் பயனாக அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், ,” அறிவிலர்களாய் நூறு பிள்ளைகள், இல்லையேல் அறிவு ஜீவியாய் பதினாறே ஆண்டுகளே ஆயுள் உள்ள மகன், இதில் ஒன்றை தேர்ந்து எடு்ப்பீர்களாக,” என்றார். எதிர்பார்த்தபடியே அறிவில் சிறந்த பிள்ளையை அவர்கள் வேண்ட அவ்வாறே ஒரு மகனை அவர்கள் பெறுகின்றனர். மார்கண்டேயன் என்று பெயர் சூட்டி, அன்பும், அறமும் திகழ வளர்கிறது குழந்தை. பாலகன் பதினாறு வயதை நெருங்க நெருங்க, பெற்ற மனங்கள் பதறுகின்றன. பெற்றோரின் கவலை முகங்கள் கண்டு துளைத்துத் துளைத்துச் சிறுவன் வினவ,அவர்களும் தங்கள் தவப்பயனாக அவன் பிறந்தாலும், அதிலுள்ள நிபந்தனையான 16 வயதில் மரணமெனும் செய்தியையும் கூறி அழுகின்றனர். காலனின் ஈசனே தனக்கு நித்திய பூஜா மூர்த்தியாய் இருக்கையில், மரணம் தன்னை நெருங்காது எனும் தீர்க்க முடிவோடு, மார்க்கண்டேயன் தினந்தோறும் சிவ லிங்க பூஜையில் ஈடுபடுகிறான். அவ்வாறே, குறிப்பிட்ட நாள் வருகையில், எமன் தனது பாசக் கயிற்றை வீச தக்க தருணத்தை எதிர் நோகியுள்ளான். மார்க்கண்டேயனோ, எமனுக்கு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்தவாறு உயிர் பிச்சைக்கான பூசையிலுள்ளான்! காலம், காலன் இரண்டும் நிற்காதல்லவா? பொறுமை இழந்த எமன் தன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயனை நோக்கி வீசுகையில், சிவலிங்கத்திலும் சேர்ந்தே விழுகிறது. தன் பக்தன் தன்னை ஆலிங்கனம் செய்து பூசை செய்வதைக் கூட மதியாமல், தன் பணியை செய்த (!) எமனின் செயலால் கோபம் கொண்ட சிவன், லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு, காலால் காலனை எட்டி உதைக்கிறார். ஆனால், காலன் தனது பணியைச் செய்வதையே சிவனாரே தடுத்த மாதிரி ஆகிவிடுமல்லவா? எனவே, மார்க்கண்டேயனின் ஆயுள் ‘என்றும் பதினாறு’ என்ற அரிய வரம் தந்து அருள்கிறார். இங்குஅழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு es0

நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு
. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள்
 இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.  இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள்
 என சொல்வதும் இதனால் தான்.
மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும்
அணிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன்{ 9.11.2014}

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் 9.11.2014 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை
அன்பு அப்பா அம்மா மனைவி மகள் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
 







இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.14

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்  அதிஸ்னன்  ஜெர்மனியில் வசிக்கும். திரு சந்திரன் தம்பதிகளின் புதல்வன் அதிர்சனின் பதின்ஐந்தாவது பிறந்த நாள் இன்று..08.11..2014 இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா பெரியப்பா ,பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவிஅண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.
 இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/   நவக்கிரி.கொம்   நிலாவரை.கொம்  நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் ,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்.


Powered by Blogger.