திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 24.07.16

இன்று யேர்மனி கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 23.07.16 இனிதே நடந்தேறியுள்ளதாக ஊடகவியலாளர்  முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
இன்று சிறப்பான பக்தர்வருகையுடன் மதியம் இரண்டுமணிக்கு முருகன் வள்ள தெய்வானை சகிதம் தேரில் வந்தமர்ந்து வீதியுலா ஆரம்பித்து 02.25 அளவில் இருப்பிடத்தை வந்தடைந்ததாக ஊலகவியலாள‌ைர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
அலயங்களின் சிறப்பால் அடியவர்கள் குறைதீரும் ஆலயங்களில் வருகையால் எமது கலை பண்பாடு வளரும் அதனால் ஆலம் தொழுவது அடிவர்கு நன்று என்று நாம்தொழுவோம் நலன்பெறுவோம் 
வழ்க வையகம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி பாலகுமார் .23.07.16

யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்
 .{ சாந்தி  }
 அவர்களின்  பிறந்த நாள்.23.07.2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  கணவர்  பிளைகள்  பெற்றார்   அக்கா அத்தான்  
மருமக்கள் .பெறாமக்கள்  பேரப்பிள்ளைகள் 
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள்  இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பாலமுரளி தர்மசாந்தி [ 23.07.16 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் இன்று 23,07,2016 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும் இவரை அன்பு கணவர்   பிள்ளைகள் அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள்மருமகள் மற்றும் 
உறவினர்கள்வாழ்த்துகின்றனர்.
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இவர்களுடன் இணைந்து எமதுநவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
.வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






உங்களுக்கு நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.
ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பாஷாணங்கள் என்னவென்றால்..,

1. சாதிலிங்கம்.
2. மனோசிலை
3. காந்தம்
4. காரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கௌரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது 
நம்பிக்கையாகும்.
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.
நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.
இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சந்திரன், .22.07.16

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட 
 திரு திருமதி .சந்திரன்,தர்மதேவி  (தேவி ) 
அவர்களின்   பிறந்தநாள்  22..07.2016.இன்று இவரை அன்பு க்கணவர்  பிள்ளைகள்,அம்மா 
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்று  என்றென்றும்  இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஹர்சன் அஞ்சலி -19.07.16.

சுவிஸ்சை வதிப்பிடமாகக்கொண்ட ,ஹர்சன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அஞ்சலி   அவர்கள்
தனது இரண்டாவது பிறந்தநாளை வெகுவிமார்சையாக குடும்பஉறவுகளுடன் .19.07.2016 அன்று 
கொண்டாடினர்  இவரை அன்பு  அப்பா   அம்மா மாமா சித்தி  அப்பப்பா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா மாமி  பேரன் பேத்தி  உற்றார் உறவினர்கள்  பல்கலை களும் பெற்று இறை அசியடன் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.16.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின்
பிறந்தநாள் 19.07.2016 இன்று. இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள்  இறை அசியடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.16.

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்திஆறாவது  பிறந்தநாள் இன்று 17..07.2016.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.16

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள் 15.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி 
வணங்கி நின்றனர்
      நினைத்திட மனதினில்
          நிறைந்தவன் நிற்பான் 
 நின்மதி மனதினில்
           நிதம் தந்து காப்பான்
      சுற்றிடும் உலகத்தை
                 காத்திடும் கயிலையன்
        கோவிலை நாடி
                        அடியார்கள் வருவதுவரம்பெறவே.
நிழல்படங்கள்  இணைப்பு ...







பிறந்தநாள் வாழ்த்து திரு தப்பிப்பிள்ளை நடேசலிங்கம் 15.07.16

யாழ் அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும்சுவிஸ் போர்ன் மாநிலத்தில் வசிக்கும் திரு தப்பிப்பிள்ளை நடேசலிங்கம் (பேபி)  அவர்களின் பிறந்தநாள் 15.07.2016 இன்று தனது பிறந்தநாளை குடும்ப உறவுகள் சுவிஸ் வாழ் நண்பர்களுடன் கொண்டாடுகி​றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார்,  அக்கா அத்தான்ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர்.இன்று பிறந்தநாளை கொண்டாடும் பேபியை வயிரவர்   பத்தமேனி இறை அருள் பெற்று
 நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் ….
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமானா இலக்கியமும் சிற்பமும்...

எல்லாக் கலைகளும் மனித வாழ்க்கையில் இருந்து பிறந்தவைதாம். மனித வாழ்க்கையின் தேவைகளையும், நம்பிக்கைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துபவைதாம். எனவே இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பும் தவிர்க்க முடியாதது. சில கலைகள் ஒன்றுக்கு ஒன்று மிக நெருக்கமாக அமைந்திருக்கும். வேறு சில கலைகள் பல கலைகளுக்கு நடுவில் நாயகமாக அமர்ந்திருக்கும். இலக்கியம் அப்படிப்பட்ட நாயகக் 
கலைகளில் ஒன்று.
நம் மரபுவழி இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை வடிவில் அமைந்தவை. கவிதையும் இசையும் பிரிக்கமுடியாத தன்மை கொண்டவை. இலக்கியம், வரலாறு ஆகிய இரண்டு கலைகளும் காலம் என்கிற பரிமாணத்தைத் துல்லியமாகக் காட்ட வல்லவை. ஒன்று தளர நேரிடும்
 போது மற்றொன்று
 கைகொடுக்கும் தன்மை வாய்ந்தவை. இலக்கியத்தோடு நெருங்கிய தொடர்புள்ள மற்றொரு கலை சிற்பக்கலையாகும். ஒளிப்படங்களும், திரைப்படங்களும் மனித மூளையில் பேராட்சி செலுத்தும் காலமிது. எனவே சிற்பக் கலையினுடைய அருமை பெருமைகளை நாம் உணராமல் போய்விட்டோம்.
செதுக்க வேண்டிய சிற்பம் கடவுளானாலும், மனிதனானாலும் அந்த உருவத்தை மனத்தில் கற்பனை செய்கிறான் சிற்பக் கலைஞன். அந்தக் கற்பனை அந்தரத்தில் பிறப்பது அன்று. அவனுடைய வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டிப் பிறப்பதாகும். அதைப் போன்று அழகியல் அனுபவம் வேறு யாருக்கேனும் கிடைத்து இருக்கிறதா? என்று பார்க்கிறான். பெரும்பாலும் முன்பிறந்த இலக்கிய அனுபவங்கள் அவனுக்குக் கைகொடுக்கின்றன. அத்தகைய கவிதைகளை மனத்துள் வரித்துக் கொள்கிறான். கண்ணை மூடிக்கொண்டு கவிதையைச் சொன்னால் மனத்தில் அந்த உருவம் அப்படியே வந்து நிற்கிறது.
பெருமாள் கோயில்களில் திருமங்கையாழ்வாரின் சிலையைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் மணக்கோலத்தில் வந்த இறைவனை வேலைக் காட்டி அச்சுறுத்தி வழி மறிக்கிறார். திருமால் ஆகிய இறைவன் அவரது வலது காதிலே எட்டெழுத்தால் ஆன நாராயண மந்திரத்தை 
உபதேசித்துத்
 திருத்துகிறார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின் திருமங்கையாழ்வாரின் தோற்றம் எப்படி இருந்தது என்பதனை ஒரு கவிஞன் கவிதையாக்குகிறான். இந்தக் கவிதையைச் சிற்பமாக்குகிறான் மற்றொரு கலைஞன் மெத்தப்பணிவாக, மார்பில் வேலை அணைத்தபடி, ஒரு கையால் வாய் புதைத்து, தலையைச் சற்றே முன்புறம் சாய்த்து, எதையோ கேட்கும் பாவனையில் அமைந்த சிலையினைப் பாருங்கள் சிலையைப் பிறப்பித்த பாட்டு இதுதான்.
"மறையுரைத்த மந்திரத்தை மால்உரைக்க, அவன்முனே
மடிஒதுக்கி மனம்ஒடுக்கி வாய்புதைத்து ஒன்னலார்
கறைகுளித்த வேல்அணைத்து நின்றஇந் நிலைமைஎன்
கண்ணை விட்டகன்றிடாது கலியன்ஆணை 
ஆணையே"
பாட்டினை நினைத்தபடியே சிற்பத்தைப் பார்த்தால் மனம் ஒடுக்கிய செய்திகூடக் கண்ணுக்குப் புலப்படும். கலையின் வெற்றி இதுதான். எழுத்தாணியாலே ஏட்டிலே கவிஞன் வடித்த பாட்டு, சிற்பக்கலைஞனால் உளியினைக் கொண்டு கல்லிலே வடிக்கப்பட்டு விட்டது. இவ்வகையான பாட்டுக்களை வடமொழியாளர் "தியான சுலோகம்" என்று 
குறிப்பிடுவர்.
தமிழர்களின் சிற்பக்கலைத் திறமையை உலகிற்குக் காட்டிய சிற்பங்களில் முதன்மையானது நடராசரின் ஆனந்தத் தாண்டவச் சிற்பமாகும். கல்லிலும், செம்பிலும் இந்த ஆனந்தத் தாண்டவ நடராசச் சிற்பத்தைத் தமிழகமெங்கும் கோயில்களில் காணலாம். இந்தச் சிற்பத்தின் கலை அழகினையும், தத்துவப் பிற்புலத்தையும் குறித்துக் கலை அறிஞர் "ஆனந்த கென்டிஷ் குமாரசாமி" எழுதிய சிவ நடனம் என்னும் ஆங்கில நூல் உலகக் கலை வரலாற்றில் புகழ்பெற்ற நூலாகும்.
மாமன்னன் முதலாம் இராசராசன் இந்தச் சிற்பத்திற்கு "ஆடல் வல்லான்" எனப் பெயரிட்டான். அவன் காலத்தில்தான் (கி.பி. 985 - 1010) இந்தச் சிற்ப வடிவம் சிறப்புப் பெற்றதாகத் தெரிகிறது. திருநாவுக்கரசரின் பாடல் ஒன்று இச்சிற்பத்திற்கு உரிய அடிப்படையாகும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற்
பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.
இந்தப் பாட்டை நினைத்துக் கொண்டு அந்த ஆனந்தத் தாண்டவச் சிற்பத்தைப் பாருங்கள். சிற்பக் கலையினை இலக்கியக்கலை வழி நடத்திய உண்மை உங்களுக்குப் புலப்படும். ஊர் ஊராகத் தமிழ்நாட்டில் காணக் கிடைக்கிற நடராசரின் செப்புத் திருமேனிகளில் நுணுக்கமான வேறுபாடுகளும் பல உண்டு.
எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். ஆடல்வல்லானின் நடனச் சிற்பங்களில் அவர் முயலகனின் முதுகின் மீது ஒரு காலை ஊன்றி ஆடுவது மரபு. ஆனால் தஞ்சை மாவட்டம் திருநல்லூரில் மட்டும் அவரது ஊன்றிய கால் முயலகனின் தலைமீது பதிந்திருக்கும். பொது விதிக்கு மாறாக இந்தச் சிற்பம் அமைந்தது ஏன் என்ற வினாவுக்கு விடை இலக்கியத்தில் கிடைக்கிறது. தேவாரத்தில் அப்பர் தம் திருநல்லூர்ப் பதிகத்தில்
"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்
நல்லூர்எம்பெருமானார் நல்லவாறே
என்று பாடுகிறார். அப்பரின் தலைமீது சிவன் திருவடி வைத்த ஊர் என்பதனால் முயலகனின் தலைமீதும் திருவடி வைத்தது போல் சிற்பி கற்பனை செய்திருக்கிறான். சிற்பக்கலைஞன் மீது கவிஞன் செலுத்திய செல்வாக்கிற்கு இது ஓர் அடையாளம்.
பூம்புகாருக்கருகில் மேலப்பெரும் பள்ளம் என்றொரு ஊர். இதன் பழைய பெயர் திருவலம்புரம். இந்த ஊரின் சிவபெருமான் செப்புத் திருமேனியில் "வட்டணை படவந்த நாயகர்" என்று எழுத்துப் பொறிப்பும் உள்ளது. "வட்டணை" என்பது நடனக்காரன் ஆடியவாறே ஆடுகளத்தை விரித்துக் கொண்டே செல்வதாகும். இது ஒரு நாட்டியக் கலைச் சொல். ஆடல் வல்லானாகிய சிவபெருமான்,
"வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கு மன்னினாரே"
என்பது அப்பர் தேவாரத்தில் திருவலம்புரப் பதிகத்தில் வரும் ஓர் அடியாகும். இந்த அழகு நடையினை அப்படியே சிற்பமாகச் செய்து விட்டான் ஒரு கலைஞன். அவன் கற்பனைக்குக் கைகொடுத்தது அப்பரின் தேவாரப் பாடலாகும். நடனம் ஆடியபடி அமைந்த இந்தச் சிற்பம் தமிழகக் கலைச்செல்வங்களில் குறிப்பிடத்தக்கதாகும்.
பாளையக்கோட்டை அழகிய மன்னார் இராசகோபாலசாமி கோயிலில் அடுத்தடுத்த தூண்களில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தவை. ஒன்றில் அசோகவனத்தில் சிதை ஒரு மரத்தடியில் சிறிய மேடையொன்றில் அமர்ந்திருக்கிறாள். எதிரில் அனுமன் கைகட்டி வாய்புதைத்து
 நிற்கிறான்.
 பணிவுக்கு அடையாளமாக அவன் வால் கீழ்நோக்கித் தொங்குகிறது. அடுத்த தூணில் ஓரிடத்தில் சிதை, இராமன், இலக்குவன் அமர்ந்திருக்கின்றனர். குகன் ஓடத்தைச் செலுத்துகிறான். சிற்பத்துக்குக் கீழே "இத்தூணின் நாமம் ஸ்ரீஹநுமன்" என்று ஒரு கல்வெட்டு அனுமன் இருக்கிற தூணை விட்டுவிட்டு, குகன் இருக்கிற தூணில் அனுமன் பெயர் ஏன் இடம் பெற்றது? இந்த இடத்திலும் இலக்கியம்தான் சிற்பத்தைப் புரிந்து கொள்ள நமக்குத் துணை செய்கிறது.
பெரியாழ்வார் திருமொழியில் "செறிந்த கருங்குழல் மடவாய்" என்று தொடங்கும் பதிகம். அசோகவனத்தில் அனுமன் தான் இராமனின் தூதன் என்பதைச் சிதைக்கு மெய்ப்பிக்கப் பலவகை அடையாளங்களைச் சொல்கிறான். ஏனென்றால் சிதைக்கு அனுமனை அதுவரை யாரென்று தெரியாது. இதுதான் முதல் தூணில் உள்ள சிற்பத்தின் பொருள். அவன் கூறும் அடையாளங்களில் ஒன்று, குகனோடு இராமன் கொண்ட தோழமை உணர்வாகும். மற்றையோர் கூற அனுமன் இந்தச் சிறிய நிகழ்ச்சியினை அறிந்து கொண்டவன். "நீ என் தோழன்" என்று கூறிக் குகனை இராமன் ஏற்றுக்கொண்ட இந்த நிகழ்ச்சியினை,
"கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்
சிரணிந்த தோழமை கொண்டதும்ஓர் அடையாளம்"
எனக்கூறி குகனை அனுமன் நினைவுபடுத்துகிறான். இதனால்தான் (முதல் தூணில் அனுமனைக் காட்டி, அடுத்த தூணில் குகனைக் காட்டி, குகனைக் காட்டும் சிற்பத் தூணுக்கு "அனுமன்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டுக் கவிதை பத்தாம் நூற்றாண்டில் சிற்பமாகி 
இருக்கிறது.
கி.பி. ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளில் இராமகதைச் சிற்பங்கள் (குறிப்பாக இவ்விரண்டு காட்சிகளும்) தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. இராமகதையின் கங்கை காண்படலம், குகப்படலம், சூளாமணிப்படலம் ஆகியவற்றுக்கான உணர்வினைக் கம்பன் இந்தச் சிற்பங்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டிருக்கவேண்டும். இலக்கியக் கலை சிற்பத்தை வளர்க்க, சிற்பக்கலை மீண்டும் இலக்கியத்தை வளர்த்திருக்கிறது. பெருங் கவிஞர்களுக்கும் கவிதைக்கான உந்து சக்தியைத் 
தந்திருக்கின்றது.
பெருங்கவிஞர் சேக்கிழாரின் பெரிய புராணத்துக்கு அவர் காலத்திய கல்வெட்டுகளும் சிற்பங்களும் பேருதவி செய்தன. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரம் கோயிலின் அடித்தளத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சேக்கிழார் காலத்துக்குச் சற்று முந்திய காலத்துச் சிற்பங்கள் இவை. இவற்றின் கீழே சிறிய
 கல்வெட்டுக்கள்
 மெய்ப்பொருள் நாயனாரின் சிற்பத்துக்குக் கீழே உள்ள தொடர் "தத்தாநமர் என்ற மிலாடுடையார்" என்பதாகும். மெய்ப் பொருள் நாயனாரின் ஒற்றைச் சேவகரின் பெயரும், அவர் கடைசியாகப் பேசிய செய்தியும் சேக்கிழாருக்கு இச்சிற்பத்திலிருந்தும் கல்வெட்டிலிருந்துமே கிடைத்திருக்கின்றன. சேக்கிழார் இந்தப் பெயரினையும் செய்தியினையும் "தத்தா நமரே காண் என்று தடுத்து வீழ்ந்தார்" என்று பெரியபுராணத்தில் அப்படியே 
எடுத்தாண்டிருக்கிறார்.
காலந்தோறும் இப்படிப் பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. இவற்றிலிருந்து நாம் பெறுகின்ற செய்திதான் என்ன? கோயிற் சிற்பங்கள் ஒரு தனிமனிதனின் கற்பனையில் மட்டும் பிறந்தவை அல்ல. அவற்றுக்கு வரலாற்றுப் பிற்புலமும் இலக்கியப் பிற்புலமும் உண்டு. சிற்பிகளும், இலக்கியவாதிகளும் ஒருவர் மற்றவரின் கலையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் மதித்திருக்கிறார்கள்.
நுண்கலைகள் எனப்படும் கலைகள் அனைத்துமே தம்மில் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. ஒன்றையொன்று வளர்ப்பன. தாங்கள் பிறந்த காலத்தின் கண்ணாடியாகத் திகழ்வன. அவை அனைத்துமே தனிமனிதர் வழியாக வெளிப்பட்டாலும் சமூகத்தின் படைப்புகளே. இலக்கியத்தையும் சிற்பத்தையும் ஒருங்கே நோக்கும் போது நமக்குக் கிடைக்கின்ற செய்தி இதுதான்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மஸ்ரீ சர்மினி.13.07.16.

யேர்மனியில் (Freiburg)பிறைபூர்க்கில் வசிக்கும்   திரு திருமதி தர்மஸ்ரீ தம்பதிகளின் செவப்புதல்வி சர்மினி 13.07.2016. இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் மற்றும் .
வாழ்கவென 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா  நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி சகல கலைகளும் பயின்று  சீரும் சிறப்புடன்.. எல்லா நலமும்பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
.வாழ்க வளமுடன்.    
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



டோட்முண்ட் சிவன்ஆலய (2)ஆம் திருவிழா10.07.2016

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் (2)ஆம் திருவிழா10.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக
அடியார்கள் வருகைதந்த சிறப்புடன் சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவதுவரம்பெறவே
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

டோட்முண்ட் சிவன் கொடியேற்றத்திருவிழா 09.07.2016

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 09.06.16 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா நடைபெறும் அடியார்கள் வருகைதருக சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நிற்க தெய்வத்தின் அருள்நாடி வந்துள்ளது இதில் கலந்து எங்கள் நேத்திகளை தெய்வ வழிபாட்டை கண்டு வணங்குங்கள்
நினைத்திட மனதினில்
நிறைந்தவன் நிற்பான்
நின்மதி மனதினில்
நிதம் தந்து காப்பான்
சுற்றிடும் உலகத்தை
காத்திடும் கயிலையன்
கோவிலை நாடி
அடியார்கள் வருவவர்கள் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம ய்தள் >>>




எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா 10.07.16

யேர்மனியில் எசன் நகரில் உள்ள முருகன் ஆலயத்தேர் இன்று சிறப்பாக நடைபெற்றது, அதில் நிறைந்த பக்தர்கள் கலந்து முருகனை தரிசிக்க வந்திருச்தார்கள்
தேர்வரம்பிடித்து இணைந்து முருகனை வலம் நகர்த்தி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்த காட்ச்சி கண்கொள்ளாக்காச்சியா இருந்ததாக ஊடகவியலாளர் முல்லைமோகன் தகவல் தந்திருந்தார்
இறைவனின் தரிசணம் நலம்தரும்
இன்பமும் துன்பமும் அவன் வசம்
அவனடி தொழுவதில் பரவசம்
அவன் இன்று எங்கு இங்கு அசைந்திடும்
நிழல்படம் தகவல் ஊடகவியலாளர் முல்லைமோகன்.



கூத்தராக ஆடும் சிவன் நடராஜர் உருவ தத்துவம் விளக்குவது?

நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன்
சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு.
நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு :
* ஒரு வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் ஆற்றல் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்).
* ஒரு இடக்கையிலுள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்.
* இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்.
* இன்னொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்.
* தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் மனமாயை உட்பட தீய சக்திகளிலிருந்து காக்கும்
 ஆற்றலை குறிக்கும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

உங்களுக்கு பூரி ஜெகன்னாதர் கோவிலின் 8 அதிசயங்கள் தெரியுமா?

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு சிறப்பான அற்புதங்கள் இருக்கும். பூரி ஜெகன்னாதர் கோவிலின் நடக்கும் 8 அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1. கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2. கோவில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
4. இக்கோவிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ மறப்பதில்லை.
6. இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை. மீந்து போய் வீணானதும் இல்லை.
7. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது. 
8. சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.
ஆனால் … அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக
 உணர முடியும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பாண்டவர்களின் சிவனாலயம்கடலுக்கடியில்!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக… இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித்
 திரும்புகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.