பிறந்தநாள் வாழ்த்து திரு.த.கந்தசாமி:28.02.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை  கந்தசாமி :28.02.2017: தனது பிறந்தநாளை யேர்மனியில்  உள்ள தனது இல்லத்தில் உற்றார். குடும்ப  உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு  மனைவி ,அன்புப்பிள்ளைகள்  மருமகள்  ,அக்கா ,அண்ணன், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து  இவரை சிறுப்பிட்டி வடக்கு  வைரவர் ஆசியுடன்  வாழ்க வாழ்க 
எனவாழ்த்துகின்றனர்.இவர்களுடன்  இணைந்து இவரை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி 
வாழ்க வென
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா 28.02.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2017 -இன்று
இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் 
மச்சாள் மார் சகோதரர்கள் ... 
 உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான் 
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகின்றனர்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
இவர்களுடன் இணைந்து நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ்கவென 
இவரை வாழ்த்துகின்றன..
 வாழ்கவளமுடன்

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது நல்லது?

இந்துக்களால் சிவனுக்குரிய விரதமாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரிக்
 குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. மகா சிவராத்திரி அன்று ஒருவர் சிவனை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம் மற்றும் ஆசை நிறைவேறும்.
அதோடு, இந்நாளில் சிவ லிங்கத்திற்கு பல பொருட்களால் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இங்கு மகா சிவராத்திரி அன்று எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளைக் கொண்டு சிவனை வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், சிவ லிங்கத்தை கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்து, ஊமத்தை பழத்தை படைத்தால், ஆசைகள் நிறைவேறும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள், பாங் பால்/நீரால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், சிவன் நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள் புரிவார்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், சிவன் வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.
கும்பம்
மகா சிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெயால் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம்/லாபம் கிடைக்க உதவுவார்.
மீனம்
மீன ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு 
இருக்க வழி செய்வார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாம் கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்

கோயில்களில் மணி அடித்து சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.
வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.
மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.
மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கி ற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பி னார்கள். அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.
கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நே ரங்களில் தெய்வீகசூழ் நி லைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவ னிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.
கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டு வதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றி த்தனமாக ஏதே தோ சொல்வது
 உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறி யாமையால் சொல் வதுண்டு.
 எழுப்பி தெரியப்படுத்த வே ண்டிய அவசியம் இறைவனுக்கு இல் லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுண ர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆய த்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.
பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்ப டும் பூஜைகளின் போது கோ யில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல் ல முடியாது. வே லை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.
கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர் கள் தங்கள் வேலையை அப் படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொ ழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த 
நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங் குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவ னைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக் கிறது. ஊருக்கே கேட்கும் வண் ணம்
 பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.
கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட் க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங் கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோ ம்.
 அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவ னிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்.
ஓர் அரியதொரு விளக்க‍ம்...--.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாம பூஜைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு ஜாமத்தின் போதும், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம்.
முதல் ஜாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
நான்காம் ஜாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.17.

>
யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்   பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.2017..
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின் 
 பிறந்தநாள்.22.02.2017 இன்று.  இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
   சகலகலைகளும்பயின்று சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன்.22.02.17

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு.திருமதி தர்மதேவன் (தர்சினி)அவர்களின்
பிறந்தநாள் இன்று 22.02.2017 இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அம்மா அப்பா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் வாழ்த்து செல்வன் அருளானந்தம் நிதுர்சன் 19.02.17

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2017..இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உற்றார்  உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறைஆசியுடன் என்றும் இன்பமாய் 
எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வளம் பொங்கி 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றனர... மகிழ்ச்சியான பிறந்த நாள் 
வாழ்த்துக்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சிவராத்திரியை முன்னிட்டு யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்

சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணி மனை யின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் நான்கு இடங்களில்  இரு ந்து  எதிர்வரும்  17ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. என சைவமகா சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிம னையின் அனுசரணையில் "தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்" எனும் சிரமதான பயணம் எதிர்வரும்  18ஆம் திகதி தொடக்கம்  25ம் திகதி வரை காலை 6.30 தொடக்கம் 12.30 வரை  நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18ம் திகதி சிரமதான பயணத்தின் நிகழ்வுகள் நான்கு  இடங்களில்  ஆரம்பமாகவுள்ளது  .  அதாவது  நாச்சிமார் கோவிலில் இருந்து கே.கே.எஸ் வீதியூடாகவும், கோம்பயன்மணல் மயானத்தில் இருந்து மானிப்பாய் வீதியூடாகவும், நல்லூரில்  இருந்து
 பருத்தித்துறை வீதியூடாகவும், யாழ் பல்கலையில் இருந்து பலாலி வீதியூடாகவும் என நான்கு  இட ங்களில்  இருந்து  ஆரம்பித்து யாழ் போதனா வைத்தியசாலை முன்றலை
 வந்தடையவுள்ளது. 
இந்த சிரமதான பயணத்தின் போது வீதியின் இரு மடங்கிலும்  உள்ள பொலித்தீன்கள் துப்பரவு செய்யப்படவுள்ளன. மேலும் 10000 கடைகளுக்கு பொலித்தீன் தொடர்பான  விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் 
வழங்கப்படவுள்ளது. 
மேலும் 18ம் திகதி போதனா  வைத்தியசாலை முன்றலில் நடைபெறவுள்ள ஒன்று கூடலிற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதி பர் நா.வேதநாயகன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார், மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி  ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பொதுமக்களின் ஆதர வையும் நல்கி நிற்கின்றோம்  என ஏற்பாட்டாளர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆலயங்களில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.
அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?
தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?
தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.
அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது
 இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.
அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?
ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.
தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?
நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?
நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக
 கருதப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா 16.0217

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி  தர்விகாஅவர்களின் 
 பிறந்தநாள்.16.02.2017 இன்று.  இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு தம்பி அப்பம்மா  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகலகலைகளும்பயின்று  எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



எட்டு வடிவ நடை சித்தர்கள் காட்டிய பயிற்சி !

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர
வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற
கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.
 வாழ்க வளமுடனும் நலமுடனும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



அரசடிப்பிள்ளையார் மஹாகும்பாபிஷேப் பெருவிழா

 யாழ்ப்பாணம் – நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நேற்று  09.02.2017 வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை(07.02.2017) காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற்றது.
இன்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து: திரு திருமதி செல்வா 11.02.17

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி செல்வா  ( தர்சி) அவர்களின் பிறந்தநாள் .11.02.2017. இன்று. இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,அண்ணா , மாமா மாமி மச்சான் மச்சாள்  மார்  மருமகன் ம​ற்றும் 
நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும்  கனடாவில் வசிக்கும் ,நண்ப​ர்களும் வாழ்துகின்ற​னர். இவர்களுடன்  இணைந்து இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று 
 இன்றுபோல் என்றும் மங்களமும் மகிழ்ச்சியாகவும்  வாழ்வில் சகல வளங்களும்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு
 காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும் வாழ்த்துகின்றன
,வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 11.02.17


சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன் தம்பதிகளின் பதின் ஓராவது   திருமண நாள் 11.02.2017.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்  சகோதர்கள், மருமக்கள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,மேலும் பல்லாண்டுகள் சீரும் சிறப்புடன் இறைவன் ஆசியுடன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் நாங்களும்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றனர்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இறைஅருள் பெற்று தம்பதியினர்  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து செவன் ஜெகதாஸ் ஜெவின் 10.02.17

 லண்டனை  பிறப்பிடமா​வும் வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி  ஜெகதாஸ்  தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜெவின்.அவர்களின் பிறந்த நாள் 10.22.2017  இன்று தனது பிறந்த நாளை   11.02.2017. அன்று  தாயகத்தில்  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா  அம்மா ,அன்பு மாமா மாமா   மாமிகுடும்பத்தினர், ,சித்தி ,அத்தைமார் மாமா  பேரன் பேத்தி பூட்டி மார்  குடும்பத்தினர்,
,மச்சான்மார் ,தம்பிமார்உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்-- 
உரும்பிராய் கர்பகப்பிள்ளையார் இறை அருள் பெற்று சகல கலைக்கும் பெற்று நித்தம் ஒளியோடு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்!தினம் ஒரு மந்திரம்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா?
ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் கிடைப்பதுதான் 
அவனுக்கான ஒளி!
சரி,
இந்த ஒளி என்பது எங்கிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது?
சூரியனில் இருந்தா? சந்திரனில் இருந்தா? அல்லது வானத்தில் மின்னும் நட்சத்திரங்களில் இருந்தா? உண்மையில் இந்த மூன்றில் இருந்தும் ஒளி கிடைப்பதில்லை. பின் இந்த ஒளி எங்கிருந்துதான் கிடைக்கிறது? இதைப் பற்றி கடோபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அந்த
 மந்திரம் இதுதான்.
கடோபநிஷதம் நசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பாகும்.
ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்
ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
எங்கே சூரியன் ஒளிர்வதில்லையோ அங்கே சந்திரனும் நட்சத்திரங்களும்கூட ஒளிர்வதில்லை. மின்னலும் ஒளிர்வதில்லை. இந்த அக்னியில் இருந்து வரும் ஒளியினால்தான் அத்தனையும் ஒளிர்கின்றன. இந்த அக்னியின் மூலம் எது என்று பார்த்தால், அந்த மூலம்தான் ஆதிசக்தியான பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே அனைத்தும் 
ஒளியைப் பெறுகின்றன.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் இறைவனின் அருளால் இறைவனை உணரமுடியும்; இறைவனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதாக அமையும்.
இந்த மந்திரத்தை பாராயணம் செய்யமுடியாதவர்களுக்கு தாயுமானவரின் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் திருச்சியை ஆண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கம் என்ற அரசரிடம் அரண்மனைக் கணக்கராக பணிசெய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றுத்
 திகழ்ந்தவர். ஒருமுறை இவர் அரச சபையில் இருந்தபோது, முக்கியமான ஒரு ஆவணத்தை கசக்கி தூரமாகப் போட்டார். இப்படிச் செய்வது அரசரையும் அரசியையும் அவமதிப்பதாகும் என்று
 அவையில் இருந்த மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த சிவாச்சார்யர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும், தாயுமானவர் வந்து தம் கைகளால் கசக்கி 
அணைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தாயுமானவரின் தெய்விகத்தன்மையைப் புரிந்துகொண்டார்கள்.
தாயுமானவர் எண்ணற்ற பக்திப் பாடல்களை இயற்றி உள்ளார். நாம் முன்பு பார்த்த கடோபநிஷத மந்திரத்துக்கு பதிலாக தாயுமானவரின் இந்தப் பாடலையும் பாராயணம் செய்யலாம்.
கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்
தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் – அந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி
மிகவும் எளிமையான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனின் அருள் என்னும் ஒளி பெற்று 
சிறப்புற வாழலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.