பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார்.சாருகா 31.07.18

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், திரு திருமதி , தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2018) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள்,  வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து இவரை   
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து .திரு செல்லத்துரை யோகசிங்கம் 27.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட 
.திரு செல்லத்துரை யோகசிங்கம் அவர்களின்
  பிறந்தநாள்  27.07.2018 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்
 இணைந்து .
    இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மெய்சிலிர்க்க வைக்கும் திருக்கேதீஸ்வரம் திருக்கோவிலின் வரலாறு

புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும்.இத் திருக்கோயில் புராண, மற்றும் இதிகாச காலத்து வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது. இந்து சமயத்தின் உலக மகா இதிகாசமான இராமாயணம் மற்றும் முருகப் பெருமானின் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கூறும் ‘ஸ்கந்த புராணம்’ – தமிழில் ‘கந்த புராணம்‘ -என்ற புராண நூலிலும் இலங்கைத் தீவின் அழகும், அத்தீவில் நிலவிய சிவ வழிபாடும், மக்களின் வாழ்க்கை முறைகளும் சிறந்த முறையில் எடுத்தியம்பப்படுகின்றன.
இராமாயணக் கதை இலங்கைத் தீவு பற்றிக் குறிப்பிடும் உண்மைகளைப் பார்ப்போம்: திருக்கேதீஸ்வரத் திருக்கோயில் இராமாயண காவியத்திலேயே சிறந்த முறையில் குறிப்பிடப்படுகின்றது.இராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி. இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. (மாதோட்டம் பண்டைய இலங்கையின் சிறப்பு வாய்ந்த துறைமுகம் என்பதையும், அதன் சிறப்புகளையும் பின்னர் சொல்வேன்.)
மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும், அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் பிருகு என்ற மகாமுனிவர் சிவபெருமானை வழிபட்டதை ‘மகா முனிவர்கள் வரலாறு‘ நமக்கு எடுத்துரைக்கின்றது.
நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபட்டுத் தமது சாபம் நீங்கப்பெற்றார் என்று ‘தக்ஷிண கைலாச மான்மியம்‘ என்ற பண்டைய வரலாற்று நூல் கூறுகின்றது. கேது பகவான் பக்தியுடன் பூசித்ததாலேயே இத் திருக்கோயிலுக்குத் ‘திருக்கேதீஸ்வரம்’ என்னும் பெயர் உண்டாயிற்று.
திருக்கேதீஸ்வரம்இந்து மதத்தின் மிகப் பெரிய புராண நூலான ‘ஸ்கந்த புராண’த்தில் (இது முருகப்பெருமானின் வரலாற்றுச் சிறப்புகளைக் கூறும் நூல் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும், முருகப்பெருமான் குற வள்ளியைத் திருமணம் செய்த திருத்தலம் இலங்கையிலுள்ள கதிர்காமம்தான் என்பதும் ஒரு கர்ண
 பரம்பரைக் கூற்று.)
மூன்று அத்தியாயங்களில் இலங்கையைப் பற்றியும், அத்தீவின் அழகைப் பற்றியும் அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் பற்றி விளக்கிவிட்டு, இலங்கையின் முக்கியமான இரண்டு புராதனமான சிவன் திருக்கோயில்களான திருக்கேதீஸ்வரம்,
 திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றின் தோற்றத்தைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது.அப் புராணத்தின்படி, முன்னொரு காலத்தில், வாயுதேவனுக்கும், ஆதிசேடனுக்கும் யுத்தம் மூண்டபோது, ஆதிசேடனைத் தாக்குவதற்காக வாயுதேவன் மகா மேரு மலையின் சிகரங்களில் மூன்றை எடுத்து வீசினார். அந்தச் சிகரங்களில் இரண்டு இலங்கைத் தீவில் வீழ்ந்தன. ஒன்று திருக்கேதீஸ்வரமாகியது.
மற்றொன்று, திருக்கோணேஸ்வரமாகியது. மகா மேரு மலை இறைவன் உறையும் புனிதமான மலையாகையால், சிவபெருமான் இத் திருத்தலங்களையும் தமது உறைவிடங்களாக்கிக் கொண்டார். ஆகையால், மகா மேரு மலையின் புனிதத்துவமும், பெருமையும் திருக்கேதீஸ்வரத் தலத்துக்கும் உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புகள் ‘தக்ஷிண கைலாச மான்மியம்’ என்ற பண்டைய தமிழ் வரலாற்று நூலிலும் விளக்கப்பட்டுள்ளது.
புராண காலத்தைக் கடந்து வரும்போது, அடுத்ததாக, சைவ சமயத்தின் சமய குரவர்களான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஏழாம் நூற்றாண்டிலும், சுந்தர மூர்த்தி நாயனார் எட்டாம் நூற்றாண்டிலும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து இத் திருக்கோயிலில் உறையும் திருக்கேதீஸ்வரரின் சிறப்பைப் பற்றியும், அதன் அருகே அமைந்துள்ள புனிதமான பாலாவித் தீர்த்தத்தின் மகிமைகளைப் பற்றியும் தமது தேவாரங்களில்
 பாடியுள்ளார்கள்.
இந்தியாவிலும், இலங்கையிலும் அமைந்துள்ள 275 தேவாரப் பாடல் பெற்ற சிறப்புத் தலங்களுள் இத் திருக்கோயிலும் ஒன்றாகும். ஈழத்திலுள்ள சிவன் திருக்கோயில்களுள், திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் மட்டுமே இவ்வாறு பாடல்பெற்ற தலங்களாக விளங்குவது
 இவற்றின் தனிச் சிறப்பாகும்.
திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகருக்கு ஏழு மைல் தொலைவில், மாதோட்டம் என்ற புராதனமான துறைமுக நகரத்தில் அமைந்துள்ளது.பண்டைக் காலத்தில் இத் திருக்கோயிலும், மாந்தை என்று அழைக்கப்படும் மாதோட்டத் துறைமுகமும் உலகப் புகழ் பெற்று விளங்கின.
மாதோட்டத் துறைமுகம் முக்கியமான வியாபாரத் துறைமுகமாக விளங்கியது. கிரேக்கர்களும், ரோமானியர்களும், அராபியர்களும், எத்தியோப்பியர்களும், பெர்சியர்களும், சீனர்களும்
, ஜப்பானியர்களும் மற்றும் பர்மியர்களும் கடல் கடந்து இத் துறைமுகத்துக்குக் கப்பல்களில் வந்திறங்கினார்கள். இலங்கையிலிருந்து வியாபாரப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.பிற்பட்ட காலகட்டத்தில், இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்ட
மாக்கினார்கள்.
அவ்வாறே, திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலும் 1505 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.அந்தத் திருக்கோயிலின் அழகும், வலிமையும் வாய்ந்த கருங்கற்கள் மன்னார் கோட்டையையும், ஊர்காவற்றுறை (Kayts) கடற்கோட்டையையும் மற்றும் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தையும் கட்டுவதற்கு
 உபயோகிக்கப்பட்டன. அப்போது திருக்கோயிலிலிருந்த செல்வங்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமானோர்
 கொல்லப்பட்டனர்.மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின்னர், புராதனமான இத் திருக்கோயிலின் இடிபாடுகளில் மீதமிருந்த பொருட்கள் 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்த புதைபொருள் ஆராய்வின்போது கிடைக்கப்பெற்றன.அந்த ஆராய்ச்சியின்போது, திருக்கேதீஸ்வரப் பெருமானின் சிவலிங்கமும் மேலும் பல வழிபாட்டுத் திருவுருவங்களும் கூட இறைவனருளால் 
கிடைக்கப் பெற்றன.
அன்றிலிருந்து, இத் திருக்கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவல் ஈழத்துச் சைவப் பெருமக்கள் மனங்களில் உதயமானது. ஆயினும், ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்குப்பின்னரே அம்முயற்சி கைகூடியது.ஆம், சைவ சமயம் தழைத்தோங்கப் பல வழிகளிலும் பாடுபட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் 
அருமுயற்சியாலும், ஈழத்துச் சைவப் பெருமக்களின் ஒன்றுசேர்ந்த உழைப்பாலும் 1910 ஆம் ஆண்டில் இத் திருக்கோயில் புதிய பொலிவுடன் சிவாகம விதிகளுக்கு இணங்க மீண்டும் கட்டப்பட்டது.பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது.1952 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. மேலும் சில அகழ்வாராய்ச்சிகளின்பின்னர், இத் திருக்கோயிலில் மீண்டும் 1976 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பண்டைய அழகுத் திருக்கோயில் தற்போது இல்லையென்றாலும், சிவாகம விதிகளுக்கு இணங்கவும், திராவிடச் சிற்பக்கலை முறைகளுக்கிணங்கவும் தற்போதுள்ள திருக்கோயில் அழகும் சிறப்பும் 
ஒருங்கே அமையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஈழத் திருநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இத் திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காக மக்கள் கூடி வருகின்றார்கள். மகா சிவராத்திரி விழா இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திருமண நாள் நிகழ்வு திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது  (வெள்ளிவிழா)   திருமண நாள்நிகழ்வு  22.07.2018.அன்று 
 பசேல் மாநகரில்  (basel) (basel) மண்டபத்தில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள் .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா 
தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்  நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று  
   பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 
தம்பதியினர்  இருபத்தி ஐந்து ஆண்டுக்கு 
 முதல் இணைந்த  இணைகள் இவர்கள் 
என்று உலகிற்கு அறிவிக்கும் 
அற்புதநாள் ! 
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் 
உலகமே வியந்து பாராட்டுது நம்மை ! 
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் 
ஒருபோதும் வராது சண்டை
 வழக்கு ஊடல் ! 
நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும் 
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும் ! 
பொறுமை இழந்து கண்டபடி
 பேசியதால் 
பூமியில் இணைகள் பிரிந்து விடுகின்றனர் ! 
அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால் 
ஆயும் இருவருக்கும் நீளும் என்பது உண்மை ! 
மனைவியின் மனதை மதித்து 
நடந்தால் 
மனையில் இன்பம் பொங்கி வழியும் ! 
கணவன் மனதை புரிந்து நடந்தால் 
கடைசிவரை பிரியாது இணைந்து வாழலாம் ! 
எங்கிருந்தோ இங்கு வந்த 
மனைவியின் 
எண்ணம் அறிந்து கணவன் நடக்க வேண்டும் ! 
ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றி வாழ்ந்தால் 
அகமும் புறமும் வாழ்வு அன்பாய் 
அமையும் ! 
எடுத்து எறிந்து மனைவியைப் பேசியதால் 
இன்னலில் வாடி வதங்கும் கணவர் உளர் ! 
கணவனின் குணம் அறிந்து 
மனைவியும் 
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும் ! 
வசமாகும் வானம் மகிழ்வோடு வாழ்ந்தால் 
வருடா வருடம் கொண்டாடி மகிழும் திருநாள் 
வாழ்க வளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை  வசிப்பிடமாகக்கொண்ட .திரு திருமதி பாலமுரளி  (சாந்தி ) அவர்களின்  பிறந்தநாள்.23.07.2018,இன்று .இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்புப் பிள்ளைகள் 
 சகோதர சகோதரிகள்  சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் , 
 பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர்  குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும்.திரு திருமதி சந்திரன்  (தேவி ) அவர்ககின்  பிறந்தநாள்.22.07.2018,இன்று .இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்பு மகன்மார் 
 சகோதர சகோதரிகள்   குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை அருள் பெற்று
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பாற்குட பவனி காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சத்தின் 7ம் நாளாகிய 19.07.2018 இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொட
ர்ந்து கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடமேந்தி பவனியாக காரைதீவு தேரோடும் வீதி வழியாக மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை
 சென்றடைந்தது.
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் விசேட பூசைகளோடு மாவடிக் கந்தனிற்கு பாலாவிஷேகம் 
நடைபெற்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



விருப்பங்கள் யாவும் நிறைவேற செய்ய வேண்டிய வழிபாடு

எங்கள்  வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற, நமது விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம்.
விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி ஏழுமலையானை சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி, காமாட்சி போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை
 செய்யலாம்
இதற்கு பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அதை விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து 
ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றியதும் நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது
 பலன் தரும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.18.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்நில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின்
பிறந்தநாள் 19.07.2018 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்திஆறாவது  பிறந்தநாள் இன்று 17..07.2018.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் நல்­லூர் கந்­தன் பெருந்­தி­ரு­விழா ஆரம்­பம் 16.08.18

வர­லாற்­றுப் பிர­சித்­தி­பெற்ற யாழ் நல்­லூர் கந்­த
சு­வாமி கோவில் வரு­டாந்த பெருந்திரு­விழா அடுத்த மாதம் 16.08.2018 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­கி­றது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது.
கொடி­யேற்­றத்­துக்கு முதல்­நா­ளான15.08.2018. ஆம் திகதி புதன் கி­ழமை முற்­ப­கல் 10 மணிக்­குக் கொடிச்­சீலை எடுத்­து­வ­ரப்­ப­டும். மாலை 5 மணிக்கு வைர­வர் சாந்தி இடம்­பெற்று, மறு­நாள் முற்­ப­கல் 10 மணிக்குக் கொடி­யேற்­றம் 
நடை­பெ­றும்.
தொடர்ச்­சி­யாக 27 தினங்­கள் திரு­வி­ழாக்­கள் இடம்­பெ­றும். எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் 08.09.2018ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 7 மணிக்­குத் தேர்த்­தி­ரு­வி­ழா­வும், மறு­நாள்.09.08.2018 காலை 7 மணிக்குத் தீர்த்­தத் திரு­விழா இடம்­பெற்று செப்­ரெம்­பர் 11.09.2018. ஆம் திகதி வைர­வர் உற்­ச­வத்­து­டன் திரு­விழா
 நிறை­வு­ பெ­றும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் .15.07.18

யாழ் மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வசிக்கும் திரு  சிவயோகநாதன். நதீசன்.15.07.2018. இன்று தனது இல்லத்தில்அன்பு  அம்மாவின் வாழ்த்தோடு
மனைவி , மாமா , மாமி , மத்துனன் , மச்சாள் , மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன் இணைந்து இவரை   
இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.
கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வரத்தினம் லோவிதன் 14.07.18

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் இந்தியா திரிச்சியை  வதிவிடமாகவு​ம் கொண்டசெல்வன் செல்வரத்தினம் லோவிதன் அவர்களின் பிறந்தநாள்.14.07.2018..இன்று இவரை அன்பு அப்பா அம்மா
அக்கா அண்ணா அப்பாப்பா  அப்பம்மா மாமா மாமி மார் மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார் . மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள்  இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.மற்றும் பழநி முருகன் 
இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.
கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கீதா என்றால் "நல்ல உபதேசம். கீதையின் பொருள்

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம்
 இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள்.
 "துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார்.
 எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக 
விளங்குகிறது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .நற்குணகுலசிங்கம் [மஞ்சு] 08.07.18

யாழ் இடைக்காட் டை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்டதிருமதி. நற்குணகுலசிங்கம் [மஞ்சு]அவர்களின் பிறந்தநாள்  08.07.2018 இன்று .இவரை அன்புக் கணவர்  அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள்  .நண்பர்களும் 
இவரை  இறை அருள் பெற்று அருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் (வண்ணம்) 07.07.18

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2018,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் 
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி கனகலிங்கம் (வசந்தி) 06.07.18

யாழ்  சுதுமலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாக கொண்ட  திருமதி கனகலிங்கம் (வசந்தி)  அவர்களின்   
பிறந்தநாள் .06.07.2018 இன்று 
. இவரை  அன்புக்கணவன் , அருமைப்பிள்ளைகள்,அன்பு  அம்மா  அக்கா அத்தான் கோதரர்கள்  பேரப்பிள்ளைகள்  இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை  சுதுமலை  அம்மன்   இறை அருள் பெற்று 
 நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காட்டுப்பாதை கதிர்காமம் செல்வதற்க்கு திறந்து வைப்பு

கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரையில் செல்லும் பாத யாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 6. 45மணியளவில் திறந்து வைக்கப்பட்டதுடன், உகந்தமலை முருகனாலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் தலைமையிலான விசேட பூஜை நிகழ்வுகளும்
 நடத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க திபர் க.விமலநாதன் உதவி அரசாங்க அதிபர் கே.உதார லாகுகல, பிரதேச செயலாளர் சந்துருவன், உதவி பிரதேச செயலர் கே.நவநீதன், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நுவன் வெத்தசிங்க, பொத்துவில் பொலிஸ் பொறுப்பதிகாரி நிசாந்த, இராணுவ பொறுப்பதிகாரி மேஜர்ஜெனரல் எமல்.உம்.முதலிகே உள்ளிட்ட உயரதிகாரிகள் என பலரும்
 கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை சீதாராம் குருக்கள் இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,
நீங்கள் இருசுமைகளுடன் செல்கின்றீர்கள். ஒன்று வெளிச்சுமை நீங்கள் தோளிலும் தலையிலும் தூக்கிச்செல்லும் சுமைகள் மற்றது நீங்கள் செய்த கர்மவினைகள்.
இரண்டும் காட்டுப்பாதையில் குறைவடைந்துகொண்டுபோகும். கதிர்காமம் நெருங்கநெருங்க தலையிலுள்ள சுமைகள் குறைவதுபோல் கர்மவினைகளின் சுமைகளும் குறையும். இந்த புனிதபாதயாத்திரை ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுக்கும்.
காட்டில் பயணிக்கும்போது கொடியமிருகங்கள் பறவைகளிருக்கும் விசஜந்துக்கள் இருக்கும். எனவே பழமரம் நாடி காட்டினுள் உள்ளுக்குள் சென்றுவிடக்கூடாது.
பயபக்தியுடன் முருகனின் சிந்தனையுடன் பயணித்தால் எதுவுமே அணுகாது. சுகமாகச்சென்றுவர ஆசிக்கின்றேன் என
 குறிப்பிட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிர்சன் 03.07.18

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட செல்வன்  சந்திரன் அதிர்சன்அவர்களின்  பிறந்த நாளை 03.07.2018 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணாதம்பி  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





யாழ் பூநகரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் 
பதிவிட்டுள்ளனர்.
இதன் உண்மை தன்மை தொடர்பில் உறுதியான தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது./

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


Powered by Blogger.