நாம் எந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்

உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
என்ன தானம் செய்தால் என்ன பலன்
ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது..ஆடைகள் தானம் 
ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.தேன் தானம் :
புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று
(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.நெய் தானம் 
பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான
 நோய்களும் தீரும்.தீப தானம் :
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.
அரிசி தானம் :
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக உண்டு.
கம்பளி-பருத்தி தானம் :
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்ப ருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து 



செல்லக் கதிர்காம மாணிக்கவிநாயகர் கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்புமிக்க செல்லக் கதிர்காமம் மாணிக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (28) இடம்பெறுகின்றது.
இன்று நடைபெறுகின்ற மகா கும்பாபிஷேகத்திறக்கு பூர்வாங்கமாக கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கலந்துகொள்ளும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் இன, மத பேதங்களைக் கடந்து எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று காலை சுபவேளையில் செல்லக் கதிர்காமம் ஶ்ரீ மாணிக்க விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் பஞ்சதள இராஜ கோபுரத்துடன் புனருத்தாபனம் செய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது


நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து .திரு ஸ்ரீஸ்கந்தராஜா விமல் 27.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிஸ்  லண்டனை  வசிப்பிடமாககொண்ட 
..திரு ஸ்ரீஸ்கந்தராஜா விமல்அவர்களின்பிறந்தநாள்  27,11,2018 இன்று
இவரை அன்பு அம்மாஅப்பா   அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள்   சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மச்சான்
 மச்சாள் மார் மற்றும் நவற்கிரி ,நண்பர்கள்  உறவினர்களும்  வாழ்துகின்றனர். இவர்களுடன்
 இணைந்து . இவரை  நவற்கிரி 
 ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்   .
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து.திருலோகநாதன் சைலன்.25.11.18

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லேகநாதன் அவர்கள்  25.11.18 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்,
இவரைஅன்பு அப்பா, அம்மா , அன்பு மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>


பிறந்த நாள் வாழ்த்து.திருமதி கனகரத்தினம்-25.11.18

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்டதிருமதி கனகரத்தினம் அவர்களின் பிறந்த நாள் .25.11.2016 .இன்று
 இவரை அன்பு கணவர்  அன்பு  மகள்மார் அன்பு மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்   வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


யோக வாழ்வு மனிதருக்கு தரும் 5 பிள்ளையார்கள்

கட்டமுது கொடுத்த பிள்ளையார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தலயாத்திரையில் `திருக்குருகாவூர் வெள்ளடை' என்ற தலத்தை தரிசிக்கச் செல்கிறார். அப்போது கோடை காலம். கடுமையான வெயில். சீர்காழியிலிருந்து இத்தலத்துக்கு வரும் வழியில், நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசிவேட்கையும் மிகுந்திருந்தன. தம்பிரான் தோழரும் அவருடன் வந்த சிவனடியார்களும் மிகவும் 
களைப்படைந்தனர். இவர்களின் தவிப்பையும் வேதனையையும் கண்டு மனம் குழைந்த சிவபெருமான், அத்துயரை மாற்ற 
திருவருள் புரிந்தார்.
அவர்கள் நடந்து வரும் வழியில் எடமணல் என்ற ஊரில் வீடுகளோ அல்லது சாலைகளோ இல்லை. ஊர்ப்பெயருக்கு ஏற்றவாறு எங்கும் வெட்டவெளியாகக் கடற்கரை மணல் போன்று காட்சியளித்தது. ஆனால், அங்கு ஒரு மூலையில் மூத்த பிள்ளையார் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த விநாயகர் மூலம் சுந்தரரின் இடர்நீக்க திருவுளம் பாலித்தார் சிவபிரான்.
“என் அன்பன் சுந்தரன் அடியார் கணங்களுடன் மிகுந்த பசியுடனும் களைப்புடனும் வருகிறான். ஒரு பந்தல் அமைத்து அவர்களுக்கு அன்னம் பாலித்து பசியாற்றி, அவர்கள் இளைப்பாற வழி செய்வாய்” என்று மூத்த பிள்ளைக்கு ஆணையிட்டார் தந்தை. அதன்படி கோடை வெயிலின் சூட்டை அடியோடு மாற்றும் வகையில், குளிர்ச்சியைத் தரும் குளம் போன்ற ஒரு கோடைப் பந்தலை அமைத்தார் பிள்ளையார். அத்துடன், சீலம் மிகுந்த அந்தண வடிவம் கொண்டார் சிவனார் மகனார்; சுந்தரமூர்த்தியாரின் வரவை எதிர்நோக்கினார்.
மாசிலா மறையவரைக் கண்ட சுந்தரர் “சிவாயநம:” என்று கூறி அடியார் கூட்டத்துடன் அருகில் சென்று பேரன்புடன் பேசி பந்தலின் கீழ் அமர்ந்தார். சுந்தரரும் மற்றும் அடியார்களும் பல வகையான சித்திரான்னங்களைப் பசிதீர உண்டனர். ஏலக்காய் பொடியுடன் கூடிய குளிர்ந்த தண்ணீரைப் பருகி களைப்பு நீங்கச் சற்று கண் அயர்ந்தனர். அவ்வளவுதான்! 
மறையவராக வந்து உணவளித்த மூத்த பிள்ளையார் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார். நிழல் கொடுத்த பந்தலையும் காணவில்லை. எதுவுமே தெரியாததுபோல் தம் இருப்பிடத்துக்குச் சென்று அமர்ந்துவிட்டார் அந்த ‘கட்டமுது விநாயகர்'.
சுந்தரர் கண் விழித்துப் பார்த்தார். இறைவன் திருவருளை எண்ணி உருகினார். ‘பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளை வாய்...' (பிணி - பசிப்பிணி) என்று உள்ள மனமுருகிப் பாடினார். சீகாழியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது எடமணல். இவ்வூர் விநாயகரை வழிபட்டால், வீட்டில் அன்னத்துக்குக் குறையிருக்காது.
வெண்ணெய்ப் பிள்ளையார்!
கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருக்குடமூக்கு என்று பெயர். ஒரு பிரளயத்தின்போது, சிருஷ்டி பீஜம் வைத்த குடம் வெள்ளத்தில் மிதந்து வர, சிவபெருமான் ஒரு வேட வடிவில் (கிராத மூர்த்தியாக) வந்து அக்குடத்தின் மீது பாணம் எய்தி சிருஷ்டியைத் தோற்றுவித்த தலம் இதுவாகும். 
குடத்திலிருந்த மண் லிங்க வடிம் பெற்று சிவபெருமானாலேயே பூஜிக்கப்பெற்றது. இவ்வாறு இறைவன் கும்பேஸ்வரராகித் தன்னைத்தானே பூஜித்த சிறப்புடையது இத்திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை அழகே வடிவானவள். கிராதமூர்த்தி (வேடமூர்த்தி) சந்நிதிக்கு முன்புறம் கிழக்கு நோக்கி (கிணற்றுக்கு எதிர்புறம்) காட்சியளிப்பவர் நவநீத விநாயகர். 
இந்திரனும் நான்முகனும் சத்யலோகம் சென்று அளவளாவியிருந்தனர். அந்த நேரத்தில் காமதேனு அங்கே வேகமாக வந்தபோது, கால் குளம்பினால் துர்வாச முனிவரை மிதித்துவிட்டது. உடனே முனிவர் கோபம் கொண்டு காமதேனுவைச் சபித்தார். இதனால் வருந்திய காமதேனு பிரம்மதேவனை வணங்கி நடந்ததைக் கூறிற்று.  
அவர் காவிரிக் கரையில் திருக்குடமூக்கு என்ற தலத்தில் ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்க வழி கூறினார். 
அதன்படி காமதேனு குடமூக்கில் காசிப தீர்த்தத்தில் நீராடி ஆதி கும்பேஸ்வரரைத் தரிசிக்க வரும்போது, `கணபதியைப்  பூஜை செய்க; உடனே சாபம் நீங்கும்' என்று அசரீரி எழுந்தது. 
அதன்படி தன் குளம்பினால் ‘குரத் தீர்த்தம்' என்ற தீர்த்தத்தை உண்டாக்கி, விநாயகரைப் பிரதிஷ்டை செய்ததுடன், ஆதிகும்பேஸ்வர பெருமானையும் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்று மகிழ்ச்சியடைந்தது. இந்த விநாயகருக்குத் தன் நவநீதத்தை (வெண்ணெய்யை) எடுத்துச் சார்த்தி `நவநீதக் களிறு' என்று பெயரிட்டு வழிபட்டது. இவருக்குச் சுத்தமான வெண்ணெய் சார்த்தி பூஜை செய்தால், வம்ச விருத்தி முதலான எல்லா யோகங்களையும் பெற்று இன்புறுவர். இந்தத் தகவல், திருக்குடந்தை புராணத்தில் காமதேனு பூசித்த படலத்தில் விரிவாக உள்ளது.
ஞானப் பிள்ளையார்!
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிப்பரவிய குன்றுதோறாடு குமரன் தலங்களில் ஒப்பற்ற திருத்தலம் ‘ஞானமலை'. திருவண்ணாமலையில், அருணகிரிநாதர் உலகை வெறுத்துத் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முனைந்தபோது, அவருக்குத் திருவடிக்காட்சி அளித்து அருள் பாலித்தான் அருணைக்கந்தன். அதேபோல், அருணகிரியாருக்கு
 யோகாநுபூதி அளித்து மீண்டும் திருவடி தரிசனம் கொடுத்த அற்புதத் திருத்தலமே ஞானமலை. இத்தலத்தில் தனித் திருக் கோயிலில் அருள்பாலிக்கும் ‘குறமகள் தழுவிய குமரன்' வடிவம் உலகெங்கிலும் காண இயலாத அரிய மூர்த்தமாகும்.
சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 95 கி.மீ. தொலைவி லுள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சோளிங்கர் செல்லும் வழியில், 14-வது கிலோமீட்டரில் உள்ள மங்கலம் என்ற ஊருக்கு
 அருகில், கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் உள்ள மலை மீது ஞானமலை ஞானபண்டித சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் மலைக்குச் செல்லும் படிகள் தொடங்கும் இடத்தில் ‘ஞானஸித்தி கணபதி' தனியாக ஒரு சிற்றாலயத்தில் அருள்காட்சியளிக்கிறார். 
`ஸித்தி' என்பது எந்தச் செயலையும் குறைவில்லாமல் நிறைவுறச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பதைக் குறிக்கும். நமது உள்ளத்தில் நற்செயலை நினைக்கவைத்து அதனைச் செயல்படுத்த வலிமையையும் ஊக்கத்தையும் தந்து அதன் பூரணமான பயனை நாமே அனுபவிக்கச் செய்து இன்பமடையச் செய்யும் ஆற்றலே இறையருளாகும். அந்த ஆற்றலுடன் ஞானத்தையும் வழங்கி அருள்வதால் ஞானஸித்தி விநாயகர் என்று 
இவர் அழைக்கப் பெறுகிறார். 
இவர் நான்கு திருக்கரங்களில் முறையே பரசு, மாங்கனி, கரும்புத்துண்டு, பூங்கொத்து ஆகியவையும், துதிக்கையில் எள் உருண்டையும் கொண்டு எழிற்காட்சியளிக்கிறார். கரும்பு செயல் நோக்கத்தையும், மழுவாயுதம் (பரசு) செயல் ஆக்கத்தையும், பூங்கொத்து அதன் வெற்றியையும், மாம்பழம் செயலின் பலனையும், எள் உருண்டை பயன் அனுபவிப்பதையும் குறிக்கிறது. இவரை வழிபாடு செய்வதால், நாம் மேற்கொள்ளும் செயல்கள் யாவும் சிறப்புடன் நிறைவேறும்; அதன் பலனும் மிக நல்லதாக அமைந்து 
வாழ்க்கைச் செழிக்கும்.

சிறை மீட்ட பிள்ளையார் 
தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்ற ஊரில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் நெற்குன்ற வாணர். மிகச்சிறந்த கவிஞர்; ஆசுகவி. ஆனால் வறுமையால் வாடினார். வாழ்க்கை நடத்தப் பொருள் தேவைப்பட்டது. அதனால் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. கடனைத் திரும்ப செலுத்தவோ வட்டியைக் கட்டவோ இயலவில்லை. கடன் கொடுத்தவர்கள் இவரை மிரட்டினர். அரசனிடம் தெரிவித்தனர். இதனால் பயந்து சோழநாட்டுக்குச் சென்றார்.
இதனிடையே அரசாங்க சேவகர்கள் இவர் சோழ நாட்டில் திருப்புகலூரில் இருப்பதை அறிந்து, இவரைத் தேடி வந்தார்கள். அத்தலத்தில் அக்னி தீர்த்தக் கரையிலுள்ள விநாயகப் பெருமானை தரிசித்து, அங்கிருந்து திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அக்னீச்வரரை வழிபட்டுக்கொண்டிருந்தார் புலவர். அந்த நேரத்தில் சேவகர்கள் இவரைச் சிறைப்பிடிக்க முற்பட்டனர். நெற்குன்றனார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்
 “இங்குள்ள விநாயகரை நான் வழிபாடு செய்துவிட்டு வருகிறேன்'' என்றார். சேவகர்களும் உடன்பட்டனர்.
புலவரும் ஆசுகவியாக ஒரு பாடலைப் பாடினார். பாடலின் ஈற்றடி... `திருப்புகலூர் அரசினிடத்து மகிழ்வஞ்சி ஈன்றவோர் அத்திநின்றே' என்று முடிந்தது. அப்போது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிந்தாமணி என்ற தாசி அங்கு வந்தாள். அவள், இவரது பாடலைக் கேட்டு வியந்து மகிழ்ந்தாள். திருப்புகலூர் இறைவனிடம் அளவற்ற பக்தியுடைய அவள், தன்னைக் குறிப்பிட்டு இப்பாடல் அமைந்ததாக எண்ணினாள். அவள் உடனே புலவரிடம் ``இச்செய்யுளைக் காப்பாக (விநாயகர் துதியாகக்) கொண்டு ஒரு அந்தாதி பாட வேண்டும்'' என்று வேண்டினாள்.
“இந்தக் காப்பு எனது விலங்கை நீக்குமா'' என்று கேட்டார் புலவர். “நிச்சயமாக!” என்று கூறிய சிந்தாமணி, புலவர் கட்ட வேண்டிய அசல் மற்றும் வட்டித்தொகையை உடனே சேவகர்களிடம் செலுத்தி, சிறை செல்வதிலிருந்து அவரை மீட்டாள். புலவர் அந்த விநாயகப் பெருமானின் அருளை வியந்து `திருப்புகலூர் அந்தாதி' பாடி முடித்தார். 
ஆமாம்! இந்த விநாயகர் திருவருளால்தான் சிறை செல்வதிலிருந்து புலவர் தப்பித்தார்; திருப்புகலூர் அந்தாதியும் நமக்குக் கிடைத்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் அமைந்துள்ளது திருப்புகலூர். இத்தல இறைவனை தேவார மூவரும் போற்றியுள்ளனர். திருநாவுக்கரசு நாயனார் இத்தலத்தில் முக்தியடைந்தார்.
படிக்காசு தந்த பிள்ளையார்
தேவாரப் பாடல் பெற்ற அற்புதமான திருத்தலம் திருவீழிமிழலை. இந்தத் திருத்தலத்துக்கு 23 திருப்பதிகங்களுடன், சேந்தனார் திருவிசைப்பாவும், அருணகிரிநாதரது திருப்புகழும் உள்ளன. 
இங்கு அருள்பாலிக்கும் சுவாமி வீழியழகர் எனும் நேத்ரார்ப்பணேஸ்வரர். இறைவி சுந்தர குஜாம்பிகை. வீழிச்செடி தலவிருட்சமாதலால், இத்தலத்துக்கு வீழிமிழலை என்று பெயர் உண்டாயிற்று. திருமால் இத்தலத்தில் சக்கரம் வேண்டி பூஜை செய்த போது, ஒருநாள்
 ஒரு மலர் குறையவே தம் கண்ணையே அளித்து சக்கரத்தைப் பெற்றாராம். எனவே நேத்ரார்ப்பண ஈஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார் இறைவன்.  மேலும், இறைவன் உமையை மணந்துகொண்ட தலம் என்பதால், கர்ப்பக்கிரக வாயிலில் `அரசாணிக்கால்' எனும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் `பந்தக்கால்' எனும் தூணும் உள்ளன. தனி மண்டபத்தில் மாப்பிள்ளை சுவாமி என்ற திருநாமத்துடன் அம்மையுடன் அருள்பாலிக்கிறார்
 கல்யாணசுந்தரர்.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்துக்கு வந்தபோது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. சிவபெருமான் இந்த இருவருக்கும் தினமும் ஒவ்வொரு பொற்காசு வீதம் அளித்தருளினார்.
அப்பர் பெற்ற பொற்காசுக்கு வணிகர் உடனே பொருள் கொடுத்தனர். அதைக் கொண்டு அவர் அடியார்களுக்கு அமுதளித்து உதவினர். ஆனால் சம்பந்தர் பெற்ற காசுக்கோ, வாசி (வட்டம் - கமிஷன்) கேட்டனர். அதனால், சம்பந்தப்பெருமான் பொன்னுக்குப் பொருள் பெற்று அடியார்களுக்கு உணவளிக்கத் தாமதமாயிற்று. ஆகவே,
‘வாசிதீரவே காசு நல்குவீர்...' என்று சம்பந்தர் வீழிமிழலை இறைவனைப் பாடி, வாசியில்லா காசு பெற்றார். அவ்வாறு படிக்காசு வைத்த பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன. 
மேற்கு கோபுரத்தின் வழியே நுழைந்தால் பலிபீடத்தின் அருகே  உள்ளவர் படிக்காசு விநாயகர். அருகில் சம்பந்தர், அப்பரின் திருவுருவங்கள் உள்ளன. அடியார்களுக்கு உணவளிக்கத் தேவையான
 இந்தப் படிக் காசுகளை இறைவன் ஆணைப்படி விநாயகர் வைத்தார் என்ற செய்தியை ‘பாரறிய அனுதினமும் வீழிநகர்தனில் முன் படிக்காசு வைத்த கணபதி' என்று தலபுராணம் போற்றுகிறது.
 மயிலாடுதுறை - திருவாரூர் வழியிலும், கும்பகோணம் பூந்தோட்டம் வழியிலும் உள்ளது திருவீழிமிழலை. இந்தப் பிள்ளையாரை வழிபட பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கும்;
 கடன் தொல்லைகள் விலகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமணவாழ்த்து திரு திருமதி கனகலிங்கம் .21.11.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம்.
.(லிங்கம்& வசந்தி ) தம்பதியினரின்  திருமணநாள் ,21.11.2018, இன்று
இவர்களை  அன்புப்  ,பிள்ளைகள்,.அன்பு  அப்பா அம்மா,மாமி
மார் தங்கை தம்பிமார். குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்களை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.சுதுமலை அம்மன்  இறை அருள் பெற்று. திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து
தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா (தீபா)
 அவர்களின்   பிறந்த நாள் 19.11.2018. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்     
இவர்  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்      நோய் நொடி இன்றி என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி..தில்லைநாதன்,16.11.18.

 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும்,தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி..தில்லைநாதன் (தில்லை ஆசிரியர்  தம்பதிகளளின் )திருமணநாள்  திருமணநாள்  
 ,16.11.2018. இன்று .இவர்களை    பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் 
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள்  
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவர்களுடன் இணைந்து தம்பதியினர்  தோப்பு ப்பிள்ளையர்ஆசியுடன்  பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இந்த ஒரு பொருள் மட்டும் உங்க வீட்டில் இருந்தால் : செல்வம் பெருகுமாம்

செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் வறுமையில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவர்.ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. அத்தகைய வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலா
வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும்
வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும் தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம்.
சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.
தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் – மனைவிக்கு
 புத்திர பாக்கியம் கிட்டும்.
உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் 
தாக்கம் அண்டாது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இன்று சூரனை வதம் செய்த முருகப்பெருமான்.

ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபதுமனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.
சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் 
சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது, சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில்
 இன்று நடக்கிறது.
சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காணலாம்...!
முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபதுமனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் 
பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான
 வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம்
 வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.
வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அம்மலைக்கு அதிபதியான சூரபதுமனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.
முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபதுமன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன்
 கொல்லப்பட்டான்.
  அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபதுமன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபதுமன் மக்கள் மூவாயிரம்
 பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபதுமன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். சர்வசங்கார கால மூர்த்தியான 
உருத்திரமூர்த்தியின் வேற்படை சூரபதுமனை தேடி சென்று, செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும்,
 மயிலாகவும் மாறியது.
பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து
 சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர். 
தேவாதி தேவர்கள்
 புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.
தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம்
 சொன்னார்.
திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. 
சிவபெருமான்- பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீலமயில் மீது ஏறி, குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.
முருக பெருமானது வரலாறுகளையும், சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டி அன்று அவனது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் 
ஆனந்த வாழ்வு தருவான்.




பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .தேவராசா சுதந்தினி,,13.11.18

யாழ் மட்டுவிலை   பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி .தேவராசா சுதந்தினி அவர்கள் 13.11.18 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் அன்புக் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார்
 மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் மட்டுவில் அம்மன்   இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி என்றும் 
சீரும் சிறப்பும் பெற்று சிறந்தோங்கும் வாழ்வுடனே பாரில் உள்ளவர்போற்ற பல நுாறு ஆண்டு வாழ்க வாழ்க என வாழ்துகின்றனர்
. இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் நற்குணகுலசிங்கம்.சுயன் 13.11.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட ¨செல்வன்  நற்குணகுலசிங்கம். சுயன் அவர்களின்   பிறந்த நாள் 13.11.2018. இன்று. இவரை அன்பு அப்பா அம்மா  மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்   சுவிஸ்  நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் 13.11.18

யாழ்  தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள  
திரு திருமதி  பாலகுமார் , (பாபு &சாந்தி ) தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்த நாள்.13-11.2018.  இன்று பிறந்த நாள் காணும் இவரை அன்பு  அப்பா அம்மா தம்பி   மாமா அக்கா அத்தான் 
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து இவரை  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன், 11.11.18.

யாழ் கோப்பாயைப்  பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியில் வசித்து   தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி .
ராஜேஸ்வரன் (ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் (11.11.2018) இன்று  16வது திருமணநாள் காணும்   இவகளை  அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கைமார்  தம்பிமார்  குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள்  நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் அருள் பெற்று  
  தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து .திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசி
ப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்அவர்களின்  பிறந்தநாள்  .0 9.11.2018 இன்று .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி 
அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் மச்சான்  மற்    பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்

எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நீ வாழிய வாழியவே பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன் 




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிஸ்னன் .08.10.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் அதிஸ்னன்அவர்களின்  பிறந்தநாள் .08.11.2018.இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா அண்ணாமார்    சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் .யேர்மன்  லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மஞ்சல்மாவில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்

 மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும் காரிய சித்தி தருவார்.குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்
. வியாபாரத்தை பெருக வைப்பார்.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும். வளம் தருவார்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்
. செல்வம் உயரச் செய்வார்.
விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்
. நோய்களை நீக்குவார்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.18

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள
 திரு.கி .தயாவரன்-அவர்களின் 
 பிறந்தநாள். 06.11.2018.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள்  சகோதரர்கள்  மற்றும் 
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார்   ..
.புத்துர். உறவினர்கள். நண்பர்களும்...இவரை 
   ,புத்தூர் குருநாதர்  அருள் பெற்று    பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இவரை  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அனை வருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.06 .11.2019

எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள்  அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்க
ளுக்கும்  நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்.நவக்கிரி  http://lovithan.blogspot.ch/.இணையிகள் . சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்- 05.11.18.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன் (மோகன்) அவர்களின் 
 பிறந்தநாள். 05.11.2018.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும் 
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ..
.கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





தீபாவளியன்று வீட்டில் செல்வம் செழிக்க மறக்காமல் இதை செய்யுங்கள்

தீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும்.பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான்.
இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். லக்ஷ்மி பூஜை என்றால் இது பெண்களுக்கானது என்பது இல்லை. ஆண்களும் விரதம் இருந்து இந்த லட்சுமி குபேர பூஜையை செய்யலாம்.லட்சுமி குபேர பூஜை
 செய்யும் முறை
தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜை செய்யப்போகும் அறையிலோ அல்லது பூஜையறையிலோ லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைக்க வேண்டும்.
பின் சுவாமி படங்களை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள்,குங்குமம் இட்டு, ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத்
 தனித்தனியாக வைக்க வேண்டும்.
நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள்
 பூசி, வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
இவை எல்லாம் செய்தானப் பின்பு, லஷ்மிகுபேர பூஜை துவங்கும் முன் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக 
வைக்க வேண்டும்.
அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி 
வழிபட வேண்டும்.
ஸ்துதி தெரியாதவர்கள், ‘குபேராய நமஹ… தனபதியே நமஹ…’ என்று துதித்து, உதிரிப் பூக்களை பூஜைக் கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு
 நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த
 தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.இந்தப் பூஜையை செய்வதற்கு அதிக நேரம் கூட ஆகாது. ஆனால் தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்தால்,மன சங்கடங்கள், காரியத்தடைகள், கடன் பிரச்னைகள் நீங்கும். நம் இல்லத்தில் செல்வமும்,உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.
குபேர பூஜையன்று எதுவுமே செய்ய இயலாதவர்கள், பசு மாட்டிற்கு, ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்,புண்ணியம் சேரும்.ஏனென்றால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்
 என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று தூய்மையான மனதுடனும், இறை நம்பிக்கையுடனும் குபேர பூஜை செய்து, குபேர சம்பத்தையும் லட்சுமி தேவியின் 
அருளையும் பெறுவோம்

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி.திரு திருமதி அருளானந்தம் 01.10.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட.திரு திருமதி  அருளானந்தம் தம்பதிகளளின்      
திருமணநாள்  இன்று 01.10.2018  .இவர்களை  அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் 
சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் 
மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்
திருமணநாளான இன்றும் உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து பல்லாண்டு காலம் வாழ்கவென 
வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


Powered by Blogger.