எலுமிச்சையில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள்

எலுமிச்சை தீய ஆவிகளை நீக்கும் தந்திரத்தில் பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது
. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது இந்தியாவில் மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.மேலும், இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகளை விரட்ட துர்கை அம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.
எலுமிச்சை விளக்குகள்
துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க 
வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும். கிடைமட்டமாக வெட்டக் கூடாது. சாற்றினைப் பிழிந்து
 வெளியேற்ற வேண்டும்.
பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எண்ணெய் அல்லது நெய் கொண்டு நிரப்பி திரியிட்டு 
விளக்கேற்ற வேண்டும்.
லுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியை கடவுளுக்கு காட்ட வேண்டும். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.
திரியின் முக்கியத்துவம்
வாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது. பருத்தியில் செய்யப்பட்ட திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டில் செய்யப்படும்
 திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும்,
 வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து 
விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம்இ தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.
எந்த நாட்களில் விளக்கேற்றுவது சிறந்தது?
நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று
 ராகு காலத்திலும், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று ராகு காலத்திலும், 2 எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும்
 சந்தோஷமாகவும் வாழலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




நமக்குத் தெரியாத இந்து சமயம் சொல்லி வைத்த அறிவியல் உண்மைகள்

ஆடி 1 ஐப்பசி 1--தை 1-இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்   என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்…
நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது 
உங்களுக்குத் தெரியுமா…?
“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை…
என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் நமது அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள்த் தனமான கல்வியை புகுத்தி விட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று….
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக 
கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்…
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்…
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி… இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் 
என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் “சித்திரை 1”. தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் “ஆடி 1”.ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது “ஐப்பசி 1”. தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு – இப்போது “
தை1”. பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்…
சித்திரை (equinox) – புத்தாண்டு.
ஆடி (summer solstice) – ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) – பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் 
கொண்டு சேர்ப்போம்.
நமது முன்னோர்கள் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


.பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா சந்திரன்,23.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட 
 திரு துரைராஜா சந்திரன், (குட்டி) 
அவர்களின்  ஐம்பதாவது   பிறந்தநாள்  23..01.2019.இன்று இவரை அன்பு மனைவி   பிள்ளைகள், அண்ணாஅண்ணி  மாமி  
, சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்று  என்றென்றும்  இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த
 வாழ்வோடு வளம் பொங்கி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன  
.வாழ்க  வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா 19.01.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் ( தயா &சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜெனிஷா  .
அவர்களின் பிறந்தநாள் 19.01.12019 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் கற்று  சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி.நற்குணகுலசிங்கம்19.01.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2019.இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் வாழ்த்துகின்றனர் தம்பதியினர் நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்   இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றது 
              திருமண] வாழ்த்து கவிதை         

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



.பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் 19.01,19

யாழ் உடுப்பிட்டி   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி
அருளானந்தம் புஸபறதி அவர்களின் பிறந்த நாள் ,19.01.2019.,இன்று
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார்மருமக்கள்  பேரப்பிள்ளைகள் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை 
 உடுப்பிட்டி பிள்ளையர் மற்றும்  நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி  இன்று போல் என்றும் 
சந்தோசமாக சகலசீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க  வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.19

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2019.இன்று  .பதின்ஏழாவது   திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லூர் முருகன்  இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  வாழ்த்துகின்றது 
              திருமண] வாழ்த்து கவிதை         

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி 
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா)   ஏழாவது திருமண நாள் 19.01.2019..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு  மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார்  மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 

பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது 
சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது ! 

இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள் 
என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் ! 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் 
உலகமே வியந்து பாராட்டுது நம்மை ! 

இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர் 
இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் ! 

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் 
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல் ! 

நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும் 
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும்
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







உங்கள் திருமண தடை நீங்க சிறந்த பரிகாரம்

திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. 
இவை காரணமாக திருமணம் தாமதமானால் அதற்கான பரிகாங்களை செய்தால் மட்டுமே திருமணம் எந்த தடையும் இன்றி நடைபெறும். திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் 
தோஷ நிவர்த்தி உண்டாகும். 
அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை 
நிறைவேற்றலாம். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு பாக்கியராஜா கணேசலிங்கம்,.17.01. 19

யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  அவர்களின்  
 பிறந்தநாள்  17.01..2019. இன்று .இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு  மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை 
  வாதரவத்தைப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் 15.01.2019. இன்று தமிழர் திருநாள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை மனதில் கொண்டு அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல்  வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,அனைவருக்கும் பொங்குக அனைத்து செல்வங்களும்  
 நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன   இணைங்களின்  சார்பில் பொங்கல் தின வாழ்த்துக்களை  தெரிவிக்கின்றேன் 
மற்றும்  எமக்கு உணவளிக்கும்  உழவர் பெருமக்களுக்கும் இயற்கை சக்தியான சூரியனுக்கும் எமது நன்றிகளை 
தெரிவித்து நிற்கின்றென் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


எங்கள் தைபொங்கல் பாரம்பரியத்தை மறக்கலாமா

திரும்பும் திசையெல்லாம் கரும்பும், மஞ்சள் குலைகளும் குவிந்து கிடப்பதை பார்த்தாலே பொங்கலின் இனிமை இதயத்தில் பொங்குகிறது.
பொங்கல் பாரம்பரியத்தை மறக்கலாமா?
தை மகளை வரவேற்க தமிழர்கள் தயாராகிவிட்டார்கள். திரும்பும் திசையெல்லாம் கரும்பும், மஞ்சள் குலைகளும் குவிந்து கிடப்பதை பார்த்தாலே பொங்கலின் இனிமை இதயத்தில் பொங்குகிறது. 
தை பொங்கல்
வார்த்தையால் வர்ணிக்கும் சாதாரண விழாவா? தொண்ணூறு நாட்களுக்கு முன்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய மூன்றே நிமிடங்களில் மொத்த டிக்கெட்டும் விற்றுப்போனதே! லட்சக்கணக்கான மக்கள் பஸ்களில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே! அது ஏன்? 
பொங்கல் என்றாலே உள்ளமெல்லாம் துள்ளுகிறது! சுண்டி இழுக்கிறது. அந்த நாளை நினைத்தாலே விவரிக்க முடியாத சந்தோசம் பொங்குகிறது. 
ஒருவாரத்துக்கு முன்பே அடுப்புக்கட்டி தயாராகி விடும். மண்ணை குழைத்து குத்துச்சட்டியில் நிரப்பி தட்டினால் வரும் உருண்டை வடிவ கட்டிகளை வெயிலில் உலரவிடுவார்கள். காய்ந்ததும் அதற்கு வெள்ளை அடிப்பார்கள். வெள்ளை அடிப்பது என்றாலே இந்த கால பிள்ளைகளுக்கு தெரிவதும் சந்தேகமே? வெள்ளை பெயிண்டுதானே என்றுதான் 
கேட்பார்கள்!
சுடப்பட்ட சுண்ணாம்பு சிப்பிகளை (கிளிஞ்சல்கள்) ஊற வைத்தால் (தண்ணீர் ஊற்றி கொதிக்க வைப்பது) சுண்ணாம்பு தயாராகிவிடும்.  அதை தண்ணீரில் கரைத்து பெயிண்ட் அடிப்பது போல் அடிப்பார்கள். பின்னர் காவி வண்ணக்கோடுகள் போடப்படும். வீடுகளும் வெள்ளையடிக்கப்பட்டு, பழைய பொருட்களை கழித்து சுத்தமாக பளிச்சென்று 
காட்சியளிக்கும். 
முதல் நாள் இரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்காத இரவாகத்தான் இருக்கும். பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பும் தெருக்களிலும் பிரமாண்டமான வண்ண கோலம் போடுவார்கள்.  பொங்கல் வைக்கப்படும் இடம் சாணம் மெழுகப்பட்டு மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும். 
அதிகாலை 3 மணியளவில் குளியலுக்கு தயாராவார்கள். தை பனி உடல் முழுவதையும் தைதை என ஆட வைப்பதாகும். ஆனால் உற்சாக மூடில் பனியாவது....? குளிராவது...? எதுவும் உடலில் உறைப்பதில்லை! குளித்துவிட்டு புத்தாடை அணிவது சந்தோசம். வித விதமான ஆடை மீது ஆர்வம் இருந்தாலும் அன்று மட்டும் பாரம்பரிய உடையில்தான் கலக்குவார்கள். 
பழக்கப்படாத உடைகளாக இருப்பதால் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி இடுப்பு ஒத்துழைக்க மறுக்கத்தான் செய்யும். ஆனாலும் சிரமப்பட்டு கட்டிக் கொள்வார்கள். 
ஆண்கள் பட்டு வேட்டி-சட்டை, பெண்கள் பட்டு சேலை, இளம் பெண்கள் பட்டு பாவாடை-தாவணி! அதுவே ஒரு தனி அழகு! ரவிக்கையின் வடிவமைப்பு... மேட்சிங் கச்சிதம்... நேர்த்தியாக கட்டப்பட்ட புடவை... சான்சே இல்லை...!தங்க சிலை ஒன்று உயிர்பெற்று நடமாடுதோ எனலாம்.
 அதனால்தான் கவிஞர்களின் கற்பனை ஊற்றெடுத்தது. பாடல்களும் பிறந்தது. பார்த்தவர்கள், பழகியவர்கள் கூட பாரம்பரிய உடையில் கம்பீரமாக தெரிவார்கள். அந்த அழகும் வசீகரமும் இதயத்தில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். ஐம்பதை கடந்த தம்பதிகள் கூட ஒருவருக்கொருவர் வர்ணித்து முகம்சிவந்து வெட்கப்படுவதுண்டு. 
மகிழ்ச்சி களைகட்ட வாசல்முன்பு பொங்கல் வைக்கும் இடத்துக்கு வருவார்கள். வாழை இலை போட்டு அதில் மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். விளக்கேற்றி வெற்றிலை, பாக்கு பழத்துடன் பனம்கிழங்கு, காய்கறிகளையும் படையல் வைப்பார்கள். முழுக்கரும்பையும், மஞ்சள் குலையையும் 
கட்டி வைப்பார்கள். 
புதுமண்பானையில்தான் பொங்கல் வைக்க வேண்டும். பானையை கழுவி சந்தனம், குங்குமம் வைத்து வாய் பகுதியில் மஞ்சள் குலையையும் சுற்றி கட்டுவார்கள். அது கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். தம்பதிகள் இருவரும் பானையை தொட்டு அடுப்பில் வைப்பார்கள்.  பின்னர் சாமி விளக்கில் இருந்து தீபம் எடுத்து அடுப்பை பற்ற வைப்பார்கள். சிறுவர், சிறுமிகள் சுற்றி இருந்து தீ போடுவார்கள். 
பானையில் பாதி அளவுக்கு தான் தண்ணீர் இருக்கும். தண்ணீர் சூடானதும் தேவையான அளவு பச்சரிசியை போடுவார்கள். அதை தொடர்ந்து மளமள என்று போடப்படும் தீயில் சிறிது நேரத்திலேயே பானை பொங்கி வழியும். அப்போது பெண்களின் குலவை சத்தமும், குழந்தைகளின் பொங்கலோ... பொங்கல்... என்ற மகிழ்ச்சி கோஷமும் தெருமுழுவதும் 
எதிரொலிக்கும். 
பொங்கல் தயாரானதும் கற்பூர தீபம் ஏற்றி கிழக்கு திசையில் எழுந்தருளியுள்ள சூரிய பகவானை நேரில் பார்த்து மனம் உருகி வழிபடுவார்கள். இதே போல் எந்நாளும் எங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும். விவசாயத்தை செழிக்க வைத்து எங்களை வளப்படுத்தும் இயற்கை தெய்வங்களே உங்களை நன்றியுடன் வணங்குகிறோம். பிறந்திருக்கும் இந்த ஆண்டும் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 
வருவோரும், போவோரும் ‘அக்கா, பால் பொங்கிருச்சா’...? என்று விசாரித்துக் கொள்வார்கள். சில இடங்களில் பாலையும், தண்ணீரையும் கலந்து பொங்க வைத்து விட்டு பச்சரிசி போட்டு பொங்கும் பழக்கமும் இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் 2 பானைகளில் பொங்கல் வைப்பார்கள். ஒன்று வெண்பொங்கல், மற்றொன்று 
சர்க்கரை பொங்கல். 
வெண் பொங்கலுடன் காய்கறிகள் கலவையை சேர்த்து சாப்பிடும் பழக்கம் பரவலாக உண்டு. அடுத்து தை பொங்கல் அந்த வெண்பொங்கல் சுவை நம்மிடம் இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் கூடி இருந்து அவற்றை சாப்பிட்டு மகிழ்வார்கள். 
இளவட்டங்கள் தெருக்களில் தோரணங்கள் கட்டி ஒலிபெருக்கி அமைத்து பாடல்களை ஒலிபரப்புவார்கள். வடம் இழுத்தல், ஓட்டப்பந்தயம், பாட்டிலில் நீர் நிறைத்தல், கோணி ஓட்டம் என்று பல கிராமிய விளையாட்டுகள் களைகட்டும். 

கிரிக்கெட்டில் டோனி இரட்டை சதம் அடித்தால் கூட கிடைக்காத மகிழ்ச்சி இந்த விளையாட்டுகளில் கிடைக்கும். மொத்த கிராமமும் கூடி நிற்கும். எங்கெங்கோ வாழ்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி மகிழும் மகிழ்ச்சி திருவிழா. கூடினால் குதூகலத்துக்கு குறைவிருக்குமா?

மறுநாள் மாட்டுப் பொங்கல். மனிதர்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும்-உதவும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாள். அன்றைய தினம் தொழுவங்கள் கோவிலாகி விடும். மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம்பூசி கழுத்தில் பூமாலை, நெற்றியில் திலகம், கொம்புகளில் பலூன் கட்டி குழந்தை போல் மாடுகளை மகிழ்விப்பார்கள். 

அன்றும் பொங்கல் வைத்து படையலிட்டு மாடுகளுக்கு வழங்கப்படும். 

அதற்கு மறுநாள் காணும் பொங்கல். இது முற்றிலும் உற்சாக பொங்கல். வீடுகளில் இருந்து கரும்பு, உணவுகளை எடுத்துக் கொண்டு தோட்ட பகுதிகளுக்கு செல்வார்கள். அங்கும் கிராமத்து ஜனங்கள் குழுமி இருப்பார்கள். 

கரும்புகளை கடித்து கொண்டு ஓடும் சிறுவர்-சிறுமிகள், இரண்டு பனை மரங்களுக்கு இடையில் அல்லது மரக்கிளைகளில் ஊஞ்சல் கட்டி அதில் பெண்கள் உற்சாகமாக ஆடுவார்கள். ஊஞ்சலை ஓரிருவர் ஆட்டிவிட... உயரத்துக்கு சென்று திரும்புவதும், மரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறு கிரீச்... கிரீச் என்று எழுப்பும் ஓசையும், ஊஞ்சலில் ஆடும் பெண்களில் சிலர் பயந்தும், சிலர் மகிழ்ச்சியிலும் எழுப்பும் சத்தமும் ஊஞ்சலிலாடும் பெண்களின் பட்டுப்பாவாடை காற்றில் ஆடுவது பட்டாம்பூச்சி பறப்பதை நினைவு படுத்தும். ஓடி பிடித்து, தொட்டு பிடித்து இளவட்டங்கள் போடும் துள்ளல்! மரங்களில் மறைந்து கண்ணாமூச்சி ஆடும் போது யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் மரத்தின் அந்தப் பக்கம் அவளும், இந்தப் பக்கம் அவனுமாக நின்று காதல் மொழி பேசிக் கொள்வதை நோட்டமிட்டு கேலி செய்து மகிழும் நட்புவட்டாரம்! 

அடேயப்பா.... எவ்வளவு சந்தோசம்! எவ்வளவு பணம் செலவழித்தாலும் கிடைக்காத உண்மையான மனமகிழ்வு. இந்த தை அள்ளிதரும் மகிழ்ச்சி அடுத்த தை வரை மனதில் நிலைத்திருக்குமே!

இன்று.....

இதைத்தான் யுடியூப்பில் பார்த்திருக்கிறேனே என்பார்கள். அந்த அளவுக்கு காலம் மாறிவிட்டது. ஆனால் இது உண்மையல்ல நாம் மாறிவிட்டோம் என்பதுதான் உண்மை.

கோர்ட்டு தடைபோட்டுள்ள ஜல்லிக்கட்டுக்காக மல்லுகட்டுகிறோம். பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை அழிப்பதா? என்று ஆத்திரப்படுகிறோம். நியாயமானதுதான். 

எந்த தடையும் இல்லாத பொங்கல் பாரம்பரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோமே! கடமைக்காக சர்க்கரை பொங்கல் வைத்து பூஜையறையில் வைத்து வழிபட்டு சாப்பிடுகிறோம். முழுநேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கி கிடக்கிறோம். 

பாரம்பரிய கொண்டாட்டத்தையும் பாரம்பரிய உடையையும் கைவிட்டு வருகிறோமே! நகரத்தில் இதற்கெல்லாம் ஏது வசதி எனலாம்! நினைத்தால் முடியும். 

அபார்ட்மென்டுகளில் வீடு வாசலில், மொட்டை மாடியில் கூடி பொங்கல் வைக்க முடியும். குறைந்த பட்சம் அன்றைய தினத்தில் பாரம்பரிய உடைக்கு மாறலாமே!

நமது பாரம்பரிய உடை என்ன? வேட்டி. 

நாம் அனைவரும் வேட்டி உடுத்துகிறோமா? திருமணத்தன்று மட்டும் வேட்டி கட்டியவர்கள்தான் இன்று நம்மில் பலர் உள்ளனர். வேட்டியை மறந்து போனது நியாயமா? நமது பாரம்பரியத்தைத் தொலைத்து விட்டு, பண்டிகை கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. குறைந்தபட்சம் தைப் பொங்கல் திருநாளிலாவது ஒவ்வொரு ஆண் மகனும் வேட்டி உடுத்த வேண்டும். நம் பாரம்பரியத்தை போற்றுவதற்கு அது ஒன்றுதான் வழி. 

வேட்டி உடுத்தாமல் கொண்டாடப்படும் பொங்கல் உண்மையான பொங்கல் இல்லை என்பதை ஒவ்வொரு தமிழனும் மனதார உணர வேண்டும். எனவே இன்றே, இந்த நிமிடமே சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.... இந்த ஆண்டு தைப் பொங்கல் தினத்தை வேட்டி அணிந்துதான் கொண்டாடுவேன் என்று. வேட்டியில் தொடங்கும் நமது பாரம்பரியம் அடுத்தடுத்து நமது வேர்களை அடையாளம் காண உதவும். தமிழ் இனம் தனி இனம் என்பதை உறுதிபடுத்த வேட்டியை கையில் எடுங்கள்.

ஆனால் வேட்டி உடுத்துவதை கேவலமாக நினைக்கும் அளவுக்கு நாம் மாறி வருகிறோம். இந்த நிலையை இனியும் அனுமதிக்காதீர்கள். தமிழினத்தின் அடையாளமாக பரம்பரையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழா இந்த சமுதாயம் இருக்கும் வரை மங்காமல் மறையாமல் கட்டிக்காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. 

அதற்காக மிகப்பெரிய தியாகம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கடமைக்காக பொங்கல் வேண்டாம். நம் உயிரோடும் உறவோடும் கலந்த அந்த பக்தியும், பாரம்பரியமும் மிக்க பொங்கலோடு நம் உணர்வும் பொங்கவேண்டும். அதுதான் உண்மையான பொங்கல். 

இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். தமிழினத்தின் பெருமை எங்கும் பரவட்டும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




மண் பானையில் தைப்பொங்கலுக்கு பொங்குவதே மகத்துவமானது

விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும்.ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. எனவே விண்ணிற்கும்,
 மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். முன்பெல்லாம் மக்கள் மண் பானையில் தான் பொங்கல் வைப்பார்கள்.ஆனால்
, தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள்.உடல் நலம் சீராக இருப்பதற்கு மண் பானை சமையல் தான்
 ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், பொங்கல் தினத்திலாவது மண் அடுப்பில் விறகு
 வைத்து எரித்து, அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே
 மகத்துவமானது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி இராசரத்தினம்,.பரிமளம்.11.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாக்கொண்ட ட             
திருமதி இராசரத்தினம்.பரிமளம்  அவர்ளின் 
பிறந்த நாள் .11.01.2019. இன்று மாலை 
தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடினார் .இவரை அன்புக  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா
 தம்பி மார்மருமக்கள்  
பேரப்பிள்ளைகள் பூட் டப்பிள்ளைகள்  
  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்று   இவர் நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பக்தர்களுக்கு அருளாட்சி புரியும் தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான்

இலங்கையில் இலைமறை காயாக காணப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாட்டை கடந்த 20 வருடங்களாக ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் தன்னுடைய அயராத மன்றாட்டத்தினாலும், ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானால் கொடுக்கப்பட்ட தெய்வீக அருளினாலும் வெளிக்கொணர்ந்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களிலும் ஸ்ரீ ராம வழிபாட்டுடன் கூடிய 
ஆஞ்சநேயர் வழிபாடு உலகம் போற்றும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அனுமன் சர்வ தேவதைகளின் வடிவம். எல்லா தேவதைகளும் அவருள் அடக்கம். இராம நாம மகிமையினையும் தூய பக்தி மற்றும் ஞானத்தையும், உயர்ந்த பக்தி நெறி நின்ற 
வாழ்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமானே அனுமனாக அவதரித்தார்.
ஸ்ரீ ராம பிரானின் தொண்டனான அனுமன் தான், இப் பூவுலகிற்கு இராம நாமத்தின் மகிமையை எடுத்துக்காட்டியவரும், சொன்னவருமாவார். இராம நாமத்தால் எதையும் வெற்றிகொள்ள முடியும் என்ற
 உதாரணம் காட்ட நீலக்கடலை ராம நாம உச்சரிப்புடன் தாண்டி இலங்கையில் சிறைப்பட்டுக்கிடந்த சீதையன்னையைக் கண்டு, வெற்றியோடு திரும்பி ராமரின் ஆனந்தத்தையும், ஆலிங்கனத்தையும் பெற்றார். ஸ்ரீ ராமனுக்கு அனுமன் அணுக்கத் தொண்டன்.
ஸ்ரீ ராமனையன்றி பிறிதொன்றை சிந்தையாலும் தொடாத தூய பக்தன். எங்கெங்கெல்லாம் ராம நாம சங்கீர்த்தனம் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தபடி இரு 
கைகூப்பி நிற்பவன் அனுமன்.
பூத பிசாசங்கள் முதலிய தீய சக்திகள் அனுமனின் பெயர் கேட்ட மாத்திரத்தித்திலேயே நடு நடுங்கி ஒழிந்து போகும்.கோரிய வரங்களை தடையின்றி தந்தருளும் அனுமன் எல்லா மதத்தவர்களாலும் வழிபடப்படுகின்ற ஒரு தெய்வம். அவரை வழிபடுவதால் எல்லாப் பிணிகளும் நீங்கி வாழ்வில் வெற்றி சேருமென்பதில் ஜயமில்லை. “புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், பயமற்ற மனோ உறுதி, உடற்பிணிகள் இல்லாமை, இவற்றுடன் உயர்ந்த நாவன்மையும் அனுமனை 
வழிபடுவோருக்கு அமையும்.
அப்படி ராம நாமத்தை உச்சரிப்பவர்க்கு, ராமனை வழிபடுவர்களுக்கு தானே வந்து அருள் புரிகின்ற அனுமனுக்கு ஆலயங்கள், இலங்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாலயங்களில் கொழும்பு, தெஹிவளை போதிருக்காராம வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உலகப் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குவது பெருமைக்கும், அருளுக்கும், புகழுக்கும், அற்புதத்திற்கும் உரியதாகும்.
இவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் தனி முயற்சியாலும் பக்தர்களின் அயராத உழைப்பினாலும் முழுமூச்சுடன் குறுகிய காலத்தில் இலங்கையின் முதல் தனிப்பெரும் ஆஞ்சநேயர் ஆலயம் தெஹிவளையில் சிறப்புடன் நிறைந்த எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது
.இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் பஞ்சமுக வடிவுடன் நின்ற திருக்கோலமாக காட்சியளிக்கின்றார். அனுமந்தம், நரசிம்மம், வராகம், கருடன் இவை நான்கு திசைகளை நோக்கியபடியும் ஹயக்ரீவம் இம்முகம் மேல்நோக்கியும், பத்துக்கைகளுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தந்து, கோடி கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.
இவ்வாலயத்தின் வாயிலில் நோய்களை தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானாக அமர்ந்துள்ளதும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். மற்றும் விநாயகர், நாகபூசணி அம்பாள், துர்க்கா, லக்சுமி , சரஸ்வதி, லிங்கேஸ்வரர், தனா கர்ஷன ல~;மி சகித குபேரர், ஸ்ரீ பால முருகன், ஆண்டாள், நவக்கிரகங்கள், சகல கிரக தோஷ நிவர்த்தி செய்யும் ஆஞ்சநேயன், ஸ்ரீ வைரவர் பரிவார மூர்த்திகளாகவும் உற்சவ மூர்த்திகளாகவும் 
அமைந்துள்ளனர்.ஸ்ரீ இராமர், சீதா, லட்சுமனர், ஆஞ்சநேயர் இவர்களை மூலஸ்தான
 பஞ்சமுக ஆஞ்சநேயர் நோக்கியபடி நிற்பது ஒரு சிறப்பாகும். மூலஸ்தானத்திற்கும் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்திக்கும் இடையே யாககுண்டம் அமையப் பெற்றுள்ளது. ஆலய மூல மூர்த்தி ஆஞ்சநேயராக இருக்கின்ற போதிலும் அனைத்துத் தெய்வங்களுக்கும் உரிய சிறப்புப் பூஜை, விரதங்கள் இங்கே அனுஷ்டிக்கப்படுவது மேலாகக்
 குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலயம் வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், மனநிறைவு கிடைக்கும் படியும் இப்பூஜைகள் அமைகின்றது.இக்கோயிலில் விநாயகருக்கான விநாயகர் சதுர்த்தி, விநாயகர் கதை ஆகிய 
விரதங்களுக்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அம்பாளுக்கு மாசி மகம், பங்குனித் திங்கள், ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், வரலட்சுமி பூஜை, நவராத்திரி, 
கேதார கௌரி காப்பு பூஜை, ஆகியனவும், சிவராத்திரி பங்குனி உத்தரம் லிங்கேஸ்வரருக்கும், குபேர லக்சுமி  பூஜை தீபாவளி நா
ளை ஒட்டியும் சிறப்புற நடைபெறும். தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை
 தீபத்திருநாள், ஸ்கந்த ஷஷ்டி விரதம் முதலிய விசேட தினங்களுக்கான பூஜைகள் ஸ்ரீ பால முருகனுக்கும், மார்கழி திருப்பாவை, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, ராமர் கிருஷ்ணருக்கும் சீராக நடைபெறும். சனிமாற்றம், வியாழமாற்றம் எனும் கிரக மாற்றப் பூஜைகள் சிறப்பு ஹோமத்துடன் நடாத்தப் பெறும்.
 தேரடி வைரவர் மடை வருடத்திற்கு மூன்று தடவைகள் நிறைவாகச் செய்யப்படுகின்றது.ஒவ்வொரு ஞாயிறும் சகல தெய்வங்களுக்கும் பஞ்சாமிர்தத்துடன் கூடிய சிறப்ப அபிஷேகங்களும், போயா தினம் பௌர்ணமி நாள் கல்விக்கு
 அதிபதியான ஸ்ரீ சரஸ்வதிக்கு மாணாக்கர்கள் தங்கள் கையால் பாலாபிஷேகம் செய்யும் வரப்பிரசாதமும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். அத்துடன் பௌர்ணமி மாலை நேரப்பூஜையைத் தொடர்ந்து பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்குப் பூஜையும் நடைபெறுகின்றது. ராகு தோஷ நிவர்த்திப் பூஜை செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.00 மணியின் பின்னர் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் முன்னிலையில் நடைபெறும்.
இது தவிர இவ்வாலயத்தில் அமர்ந்துள்ள நவக்கிரக மூர்த்திகள் அனைவரும் ஒரே கோட்டு வரிசையில் தென் திசை நோக்கிய வண்ணம் தமக்குரிய வாகனங்களுடன் காட்சிதருகின்றனர். சூரியன் மத்தியாகவும், சூரியனது வலதுபக்கமாக முறையே திங்கள்,புதன்,குரு,சுக்கிரனும், இடது பக்கமாக முறையே செவ்வாய், சனி, ராகு, கேது அமர்ந்து இருப்பது இலங்கையில் இவ்வாலயத்தில் மட்டுமே.
கிரகங்களை நோக்கியபடி இரண்டடி உயரமான ஆஞ்சநேயப் பெருமான் கைகூப்பிய நின்ற திருக்கோலத்தில், அடியார்களுக்கு கிரகங்களால் வரும் துயர் நீக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு மக்கள் தங்கள் கைகளால் (பெண்கள் தவிர) வெற்றிலை மாலையிட்டு வேண்டிய வரங்களையும் வாழ்வில் வெற்றியையும் பெற்று மகிழ்வெய்துகின்றனர்.இந்த ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஞாயிறு தோறும் நட
க்கும் அபிஷேகம் காண தொலைதூரத்திலிருந்து பக்தர்கள் ஆலயம் வருகின்றார்கள் இவ்வாலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளின் மன்றாட்டத்துடன் கூடிய இவ்வபிஷேகம் நீண்ட நேரத்தை எடுக்கும். பேய், பிணி, தோஷ நிவர்த்திக்காக அனுமன் முன்னால், இவற்றால் துயருறுபவர்களுக்கு நீர் தேகத்தில் ஊற்றி சுவாமி பக்தர் துயர்களை தீர்த்து அருள்வார்.
இவ்வாலயத்தில் ரசீது எடுத்து அர்ச்சனை செய்யும் வழக்கம் இல்லை. ஆலய பூசகர்களுக்கும் பூஜைக்காக தட்சணை கொடுக்கும் வழக்கமும் இல்லை. அனுமனை நினைந்து ஜம்புலன்களையும் அடக்கி “ஓம் ஸ்ரீ ராம ஜெயம்” என்று முடியுமானவரை சொல்லி மண்டியிட்டு தங்கள் பிரச்சினைகளை இறைவனுக்குக் கூறி வருந்தி முறையிட்டு, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வழிபடுவது தான் பிரதான வழிபாடாக உள்ளமை 
குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
பூஜையின் போது அலங்கார தீபங்கள் உட்பட அனைத்து தீபங்களும் அழகாக, அவசரம் இல்லாமல் ஆறுதலாக தெய்வங்களுக்கு காட்டப்படுவது ஒரு சிறப்பாகும். ஓவ்வொரு தெய்வங்களுக்கும் நாமார்ச்சனைகள் நடைபெறும் போது அங்குள்ள பக்தர்களும் “நமஹ” என்ற உச்சரிப்பை சொல்லிக்கொள்வார்கள். இங்கு உயாந்த மணிக்கோபுரத்தில் கண்டாமணி கட்டப்பட்டுள்ளது.
தினமும் காலை 6மணி, காலைப்பூஜை ஆரம்பம் 8 மணி, உச்சிக்காலம் 12 மணி, சாயரட்சை 6 மணி இந்நேரங்களில் கண்டா மணி அடிக்கப்படும். மூன்றுநேரப் பிரசாதம் தினமும் பக்தர்களுக்கு 
வழங்கப்பட்டு வருகின்றது.
தினமும் அர்த்த ஜாமப் பூஜை நிறைவு பெற்றபின் முறையே ஸ்ரீ ராமர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சக்தி, ஸ்ரீ சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்கான மங்கள ஆரத்தி பாடல்களுடன் ஆராத்தி காட்டப்பட்டு, ஆசீர்வாதம் பிரசாதம் வழங்கப்படும்.
இவ்வாலயத்திற்கு ஒரு அவதார புருஷராக மிளிரும் ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகள் ஆஞ்சநேயரிpன் அவதாரமாகத் திகழ்வதில், மக்கள் தம் நோய் பிணி, வாழ்க்கைப் பிரச்சினை, பலதுயரங்களையும் சுவாமிகளுடன் உரையாடி, தங்கள் துயர் இருளிலிருந்து விடுபட்டு 
மகிழ்வான வாழ்வு எய்துகின்றனர்.
சுவாமிகளின் சக்தியால் பல இன்னல்களில் இருந்து மீண்டவர்கள் ஆயிரம்! ஆயிரம்! சுவாமிகளின் தோற்றம் ஆஞ்சநேயரைப் போன்றே இருப்பது வியப்பானதே. நற்சிந்தனையுடன் ஆஞ்சநேயரை வழிபடுங்கள் மனத்தைரியத்தைப் பெறுவீர்கள், பலவித அனுகூலங்களையும் அடைவீர்கள் என்று கூறி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி அவர்கள் ஆஞ்சநேய வணக்கத்தை இலங்கை மக்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களுக்காக மன்றாடிப் பிரார்த்தித்து அவர்களது வாழ்க்கையில் 
ஒளிவீசப் பண்ணினார்.
இவ்வாலயத்து விக்கிரகங்கள் அனைத்திற்கும் சுத்த வெள்ளியினால் ஆன கவச அங்கிகள் வார்க்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் நவக்கிரகங்களுடன் கூடிய சகல தெய்வங்களும் வெள்ளிக் கவசத்தில் காட்சிதருவது மனதில் மென்மேலும் ஆனந்தத்தையும் பக்திப்பரவசத்தையும் அளிக்கின்றது. மூலவர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் கர்ப்பக்கிரகக் கோபுரத்தில் உலக சகலநாட்டுக் கொடிகள் நாட்டப்பட்டிருப்பது சகல நாடுகளிலும் வாழும் மக்களுக்கு அனுமனின் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டும் என்ற சுவாமிகளின் வேண்டுதலாக இருப்பது போற்றுதற்குரியதும் 
வணக்கத்திற்குரியதுமாகும்.
பக்தர்களால் அன்பாக ஆஞ்சநேய சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுவாமிஜி அவர்கள் கடல்கடந்து சீதை அன்னiயின் துயர் தீர்த்த அனுமனைப்போல், இலங்கையை விட்டு வருடாவருடம் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து, மாறாத நோய் தீராத துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சஞ்சீவி
 ராஜனாக திகழ்கின்றார்.
இவ்வாலயத்திற்கு கடல் கடந்த நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகளும், ஆன்மீக ஈடேற்ற யாத்திரிகர்களும் வருகைதந்து ஆஞ்சநேயர் பூஜை கண்டும் வழிபட்டும் நிறைந்த பக்தியுடனும், மனநிறைவுடனும் செல்வது அவர்களின் வதனங்கள் சொல்லும். குறிப்பாக வட இந்தியர்கள் அனுமனை வழிபடுவது ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவர்களின் எண்ணிக்கையற்ற வருகை உணர்த்துகின்றது. குழுக்களாகப் பிரிந்து இவ்வாலய தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சங்களும், அற்புதங்களும், சுவாமிகளின் அற்புதங்களும் சக்தியும் உலகெங்கும் புகழ் பரவி நிற்கின்றது. ஸ்ரீ ராம நாமமும் ஓங்கி ஒலிக்கின்றது. துயர்களை நீக்கி வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் அனுமந்த ராஜனுக்கு பிரத்தியேக
 அபிஷேகம் சங்காபிஷேகத்திற்கு இங்கு இயற்கை வலம்புரிச்சங்குகள் உபயோகிக்கப்படுகின்றது. எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இதுவாகும்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் எண்ணற்ற பக்தர்களை தம்பால் ஈர்த்துக் கேட்டவர்க்குக் கேட்டபடி இன்னருள் புரிகின்றார்.
நான் படும்பாடனைத்தையும் எனைப்படைத்த அந்த நான்முகன்தான் அறிவாரோ, அல்லது என் கணக்கை நாளும் பொழுதும் எழுதித்தள்ளும் சித்திரகுப்தன்தான் அறிவாரோ என்று ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற பக்தர்களுக்கெல்லாம் தஞ்சமென்றிருக்கின்றார் ஆஞ்சநேயமூர்த்தி. அவரின் அருளைத் துணையாகக் கொண்டு, நாடுவிட்டு நாடுசென்று வெளிநாடுகளில்வாழும் இளைஞார், யுவதிகள் எல்லோருக்கும் சரணாகதியாக இருப்பவரும் 
ஆஞ்சநேயரன்றோ!
கடல்கடந்த நாடுகளிலிருந்து அவர்கள் ஆஞ்சநேயரை வாழ்த்துகின்றார்கள், வணங்குகின்றார்கள், வாரிவழங்குகின்றார்கள் ராம தூதனின் தூதனை – ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளை அவர்கள் நன்றிக்கடனோடு நினைவுகூறுகின்றார்கள்.
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அதுவே ஆலயத்தின் பெருந்திருவிழா உற்சவ காலம். மற்றைய ஆலயங்களில் மூலவர் எந்ததெய்வமோ அந்த தெய்வத்திற்கு மட்டுமே பத்து தினங்களோ பதினைந்து தினங்களோ உற்சவம் நடைபெறும்.
ஆனால், அனுமன் ஆலயத்தில் முதல் நாள் கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கும் கணபதிக்குரிய திருவிழா மறுநாள் நவக்கிரகங்கள், தன்வந்திரி பஹவான், சிவன், விஷ்ணு, அம்பாள் வைரவர், முருகன், துர்க்கா லட்சுமி சரஸ்வதி குபேரர், ராமர் சீதா லட்சுமனர் 
ஆஞ்சநேயர் இப்படி தினம் ஒரு பரிவார மூர்த்திகளுக்கு விழா எடுக்கப்படும். ஆஞ்சநேயப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் மார்கழி மூலம் ஆகும். அன்றைய தினமே உற்சவ முடிவுநாள், அதன் முதல் நாளே சித்திரத்தேர்த் திருவிழா உலகிலேயே இலங்கையிலேயே முதன் முதல் தேர் செய்யப்பட்டு(பெரு வீதி) நகர்வலம் வருவது இவ் ஆஞ்சநேயர் ஆலயத்தில் தான் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு சேரும்.
வருடா வருடம் இத்திருவிழாவின் ஆரம்ப நிகழ்ச்சியாக ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் பதியம் பெற்ற நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் சென்று கொடிக்கம்பமும், தீர்த்தமும், மண்ணும் எடுத்துவரப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய முன்றலில் சுபநேரத்தில் நாட்டப்பட்ட பின்பே இவ்வாலய வருடாந்த ஜெயந்தி விழா உற்சவம்
 ஆரம்பிக்கும்.
ஜந்து முகம் கொண்ட கலையழகு மிகு ஆஞ்சநேயன் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் புரிய, அவர்தம் அடியார்கள் ராம நாம ஜபத்துடன் வலம் வர திருத்தேரில் பக்தர்களின் வாயிலில் சிறப்புற 
நின்று அருள்பாலிக்கின்றார் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிரஞ்சீவி ஆஞ்சநேயனை மன்றாடி மன்றாடி சுவாமிஜி முன்னால் வர பக்தர்கள் வடம் பிடிக்கும் இத்தேர்த்திருவிழாவை காண கண்கள் கோடி வேண்டும் என்றால் மிகையாகாது.
ஆரம்ப மூர்த்தியான எழுந்தருளி ஆஞ்சநேயருடன் திருத்தேரிலே விநாயகர் சகிதம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 தினங்கள் கிரமமாக சமயாசாரியர்களின் விசேட புரோகிதத்தை ஈர்த்து அடியார்களுக்கு சோருதல் இல்லாமல் கேட்டன அருள வீதி வலம் வருகின்றார்.
அதற்கு அடுத்த தினமான  காலை கடல் தீர்த்தத்துடன் ஆரம்பித்து காலை  409 வலம்புரிச்சங்குகளினால் மூலவர் ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயப்பெருமானுக்கு அபிஷேகம்
 நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து உச்சிக்காலப் பூஜை விஷேடமாக நடைபெறும். மாலை 5.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட வடைமாலை அலங்காரம் இடம்பெறுவதோடு, இவ்ஜெயந்தி விழாவின் நிறைவு நாளில் உலகெங்குமுள்ள ஸ்ரீமத் சுவாமிஜியின் அடியார்கள் செய்யும் “குருபாத பூஜை“ குரு வழிபாடாகவும் அமையப்பெறுவது சிறப்பம்சமாகும். அதனைத்தொடர்ந்து திருவூஞ்சலுடன் உற்சவ அருட்காட்சி 
நிறைவுபெறும்.
இலங்கையின் பலபாகங்களிலிருந்தும், இந்து மதத்தவர் மட்டுமன்றி பல்வேறு மதங்களையும், பல்வேறு இனங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் வருடா வருடம் நடைபெறும் இப்பெருவிழாவில் பங்குகொண்டு நினைத்ததை அடைந்து பேரானந்தம் அடைகின்றார்கள்.
பலவிதத்திலும் வித்தியாசமான, அதிசயமான, அழகான அருள்நிறைந்ததான ஆலயமாக விளங்குவது இந்த கொழும்பு,தெஹிவளை ஸ்ரீ ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும்.
படி ஏறிதன் பதம் தேடி வந்த பக்தர் குறை தீர்த்து அனுப்பும், அபயக்கரம் “அஞ்சேல்/ என்று மொழிய ஆசி கூறி நிற்கும் அனுமன் பதம் பணிவோம். அவன் அருளால் அவனியில் அனைத்தையும் 
பெற்று வாழ்வோம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி இராசரத்தினம்,.பரிமளம்.,11.01.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  
வசிப்பிடமாக்கொண்ட              
திருமதி இராசரத்தினம்.பரிமளம்  அவர்களின் பிறந்த நாள் இன்று.11.01.2019. 
.இவரை அன்புக  பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா
 தம்பி மார்மருமக்கள்  
பேரப்பிள்ளைகள் பூட் டப்பிள்ளைகள்  
  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







உங்கள் ராசிக்கு இந்த மாதம் 2019ல் மிகவும் ஆபத்தான மாதமாம்

உங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும் என்று பார்க்கலாம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மோசமான மாதம் எதுவெனில் அது ஜூலைதான். இந்த மாதம் உங்களுக்கு சற்று கடினமான ஆண்டாக இருக்கும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும். புதன் கிரகத்தின் காரணத்தால் பதட்டங்களும், முரண்பாடுகளும் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியரீதியான பிரச்சினைகளும் எழும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் நவம்பர் மாதம் மோசமான மாதமாக இருக்கும். ராசியில் சந்திரன் இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவரின் நேரத்தையும் மோசமானதாக மாற்றக்கூடும். சந்திரனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் பல உறவு பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல அலுவலகத்திலும் பல பிரச்சினைகள் உண்டாகும். இந்த பிரச்சினைகள் டிசம்பர் மாதத்தில் சரியாகும்.
மிதுனம
இவர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மிகவும் சோதனையான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் பல கிரகங்கள் உங்கள் ராசிக்கு வருவார்கள். இதனால் குழப்பம், பதட்டம் போன்ற பிரச்சினைகளும் தெளிவில்லாத முடிவுகள் எடுக்கவும் நேரிடும். எனவே எப்பொழுதும் இரண்டாவது முடிவுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுங்கள்.
கடகம்
கடக ராசிகாரர்களுக்கு மார்ச் மாதத்தில் உறவுரீதியிலான பல பிரச்சினைகள் ஏற்படலாம். சந்திரன் முழுவதும் ரிஷப ராசியில் இருப்பதால் உங்களுக்கு பாதிப்புகள் கொஞ்சம் குறைவாக இருக்கும். இருப்பினும் உறவுகள் தொடர்பான பிரச்சினைகளில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல சவால்களை கொண்டுவரும். உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் உங்களின் முடிவுகளை சிறப்பானதாக மாற்றும். ஒருவேளை உங்கள் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருவது உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது. ஆண்டு இறுதியில் உங்களின் பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பான ஆண்டாக இருக்காது. இந்த மாதத்தில் அனைத்து செயல்களும் தாமதமாகவும், அசௌகரியமாகவும் நடக்கக்கூடும். மற்றவர்களை விட நீங்கள் அதிக சோதனைக்கு ஆளாவீர்கள், உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பல தடைகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தவறானதாக இருக்கும். விரக்தி வரும்போது அமைதியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும். அனைவருமே வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், ஆனால் உங்களால் அவ்வாறு இருக்க இயலாது. உங்களின் மனநிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அலுவலகரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழும்.
விருச்சிகம்
மற்ற சில ராசிக்காரர்களை போலவே விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதலே உங்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், அதிலும் ஜூலை மாதத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களுடனான உரையாடல்களில் உங்களுக்கு பல பிரச்சினைகள் எழும். சிலசமயம் கண்ணீர் வரவைக்கும் அளவிற்கு கூட பிரச்சினைகள் எழலாம்.
தனுசு
உங்கள் ராசிக்கான கிரகமானது வியாழன் ஆகும். இதனாலேயே உங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பல பிரச்சினைகள் எழ நேரிடும். ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அற்புதமாக இருந்தாலும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய நிதி பிரச்சினைகள் எழும். அதேபோல நிலம் தொடர்பான பிரச்சினைகளும் எழ வாய்ப்புள்ளது. கோபமானது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும்.
மகரம்
மகர ராசிக்கும் மார்ச் மாதம்தான் சவாலான மாதமாக இருக்கப்போகிறது. உங்கள் ஜோதிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பு கொள்வதில் பல சிக்கல்களை உண்டாக்கும். புதன் கிரகத்தால் உங்கள் ஜாதகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் பல பாதிப்புகள் ஏற்படலாம். உங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் உறவுரீதியிலான பல மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு நீங்கள் காரணமாக இல்லையென்றாலும் உங்களின் கடந்த கால வாழ்கையாலோ அல்லது உங்கள் துணையின் கடந்த கால வாழ்க்கையாலோ பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்களின் எண்ணங்களில் தெளிவாக இருங்கள், துணை மீது நம்பிக்கை வையுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கொஞ்சம் மோசமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களின் ராசி அதிபதியால் சில நல்லது நடக்கலாம். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் வியாழனின் ஆதிக்கத்தால் பணம் தொடர்பான சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இந்த பணப்பிரச்சினையால் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழும், இதனால் உங்கள் நிம்மதியும், குடும்பத்தின் மகிழ்ச்சியும் கெடும்.


Powered by Blogger.