சிறப்பாக நடைபெற்ற நல்லைக் கந்தன் தீர்த்தோற்ஷவம்,30,08,19…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் பழைமை வாய்ந்த முருகன் ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதும், அலங்காரக் கந்தனாக வர்ணிக்கப்படுவதுமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆம் திருவிழா இன்றாகும்.இன்றைய தீர்த்தத்திருவிழாவினை முன்னிட்டு, காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொட
ர்ந்து 8 மணியளவில் வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.   தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு ஐந்து வாகங்களில் சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றது.அதிகளவிலான பக்தர்கள் இ
ன்று காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்க
ளை நிறைவேற்றிக் கொண்டனர். தூக்குக்காவடிகள், நேற்றைய நாளைப் போல செட்டித்தெரு வரையே அனுமதிக்கப்பட்டிருந்தன.  தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தின் பாதுகாப்பும் வழமைபோல் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பக்தர்கள் சோதனைகளின் பின்னரே ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.இந்த வருடத்திற்கான நல்லூர் மகோற்சவம் இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழில் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த நல்லூர் சப்பறத்தின் சிறப்புக்க

உலகிலேயே மிகப்பழையதுமான அதியுயரமான அசையும் கட்டுமானப்பொருளாகிய வரலாற்றுச் சிறப்ப மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறம் இன்று.இச்சப்பறம் 250 வருடங்களுக்கு 
மேல் பழைமையானதாகும். இச்சப்பறம் உருவான கதை வியப்பானதாகும் முன்னோரு காலம் நல்லை கந்தனுக்கு சப்பறம் உருவாக்க எண்ணிய போது, சிவலிங்கசெட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்பெருமானுக்கு பெரி
ய சப்பரம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் வேல்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது ழுழுத் தோற்றத்தை அவருக்கு காண்பித்தார். இதன் மூலமே நல்லூர்
 கந்தசுவாமி ஆலய சப்பரமானது முருகப்பெருமானுடைய அருளுடன் மிகப்பிரமாண்டமாக அமைந்தது. இன்று, வேல்பெருமானுடைய ழுழுத் தோற்றத்தையும் சப்பறத்தின் மேல்ப் பகுதியில் உள்ள கண்ணாடியில் காணமுடிகிறது.
இச்சப்பறம் இலங்கையில் 1வது அதி உயரமான அசையும் கட்டுமானப்பொருளாகும். உலகில் 2 வது அதிஉயரமான கட்டுமானப்பொருளாகும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



விமர்சையாக நடைபெற்ற நல்லைக் கந்தனின் 18 ஆம் நாள் திருவிழா

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்– நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த உற்சவத்தில் 
பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு நல்லூர் கந்தனின் ஆசியைப் பெற்றுக்கொண்டனர்.இதன்போது நல்லூர் கந்தனுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இந்த விஷேட
 பூஜை வழிபாடுகளின்போது பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்துக்கொண்டனர்.வருடாந்தம் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவிற்கு, நாட்
டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களும், கலந்து சிறப்பிக்கின்றமை
 வழமையாகும்.

நம் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் விரதம் மேற்கொள்வது எப்படி

கிருஷ்ணர் அவதார தினத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரத
ம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும்.இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும்
 பூஜைகள் செய்து
 வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும்.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை
 பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றைப் படை
த்து அவரை வழிபடுவது சிறப்பானது.அதன்பின்னர் விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.குழந்தைப் பாக்கியம்
 இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்கியம் மிக்க சத்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் 
கிருஷ்ணன் அருள்வார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நம் வாழ்வில் அதிக நன்மை தரும் ஆஞ்சநேய வழிபாடு

ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமன்.நன்மைகள்
 அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர். தொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும்
 பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்த ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் 
பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் 
$உண்டாகும். சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் 
$சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் விரதம் இருந்து அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான
 மாற்றங்களை ஏற்படுத்துவார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நமக்கு பலன் தரும் ஸ்லோகம்(விபத்து நேரா

ஆதிசக்தே ஜகன்மாத பக்தாநுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகே நந்தே ஸ்ரீஸந்த்யே தே நமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ, ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ
இதீக் கதிதம் ஸ்தோத்ரம், ஸந்த்யாயாம் பஹுபுண்யதம்
மஹாபாப ப்ரசமனம், மஹாஸித்தி விதாயகம்.
                                - காயத்ரி துதி 
பொதுப்பொருள்: ஆதி சக்தியும் ஜகன்மாதாவும், பக்தர்களுக்கு அருள்புரிவதையே கடமையாகக்  கொண்டவளும் காணும் இடம் யாவிலும் நீக்கமற நிறைந்திருப்பவளுமான சந்த்யா 
தேவியை வணங்குகிறேன். நீயே காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி வடிவங்களாகத் திகழ்கிறாய். இந்த துதியை மாலை வேளைகளில் ஜபித்து வர பெரும் பாவங்களும் அழிந்து  புண்ணியம்  கிட்டும். பலவித சித்திகள் கிடைக்கும். அதோடு அகால விபத்துகள் சம்பவிக்காது. 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> br />


பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா.14.08.19

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 17வது பிறந்தநாளை 14.08.20179இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள்
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்…
இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல கலைக்கும் பயின்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி
பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா.13.08.2019. இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை
 நிறைவேற்றினார்கள்.
கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு, தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து
செல்வச் சந்நிதியான், பிள்ளையார் மற்றும் வேல் தாங்கிய மூன்று இரதங்கள் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளன. இதன்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து, வேல் பூட்டி, காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.தேர்த் திருவிழாவில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 
பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டதோடு, புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகைதந்துள்ள பக்தர்களும் கலந்துகொண்டனர்.நாளை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் சந்நிதியான் ஆலயத்தின் மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>









பிறந்தநாள் வாழ்த்து திரு உமாபிபிரியன்,10,08,19


ஜெர்மனி பக்கணக்கை  பிறப்பிடமாகவும் சுவிஸை வசிக்கும் திரு 1தசிறுமதி ஊமபிரியன்.(கிரிஷானி)) அவர்களின் பிறந்தநா,10,08,2019, இன்று. பிறந்த நாளை  நண்பகல் தனது பிறந்தநாளை தனது இன்று தனது இல்லத்தில் ல் கொண்டாடுகின்றார் இவரை,அன்புக்கணவர் 
அன்பு அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார் .சகோதரர்கள் மச்சான் மச்சான்மார் பெரியப்பா சின்னம்மா 
மாமா மாமி ‌பெறாமக்கள் . . யேர்மன் லண்டன் கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள் இவர மாதா ஜேசு மற்றும்  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் பிறந்தநாள் இன்று...10.082019. அவர்களின்  பிறந்த நாளை 03.07.2018 இன்று நண்பகல் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்   .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .   வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


.பிறந்த நாள்வாழ்த்து,திரு .செல்வராஜா பாலேஸ்வரன். 06.08.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடா ரொரண்டோவில் வசிக்கும்.திரு செவராஜா பாலேஸ்வரன்  
[ பாலா] அவர்களின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2019. இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும்  , 
உற்றார் உறவினர் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை    எமது http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்  
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன..
வாழ்கவளமுடன் ..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் பால முரளிம் 04.08.19

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும்.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு பாலசுந்தரம் பால முரளி அவர்களின்
  பிறந்தநாள்  04.08.2019 இன்று
இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். 
இவர்களுடன்
இணைந்து    இவரை நல்லைககந்தன்  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்.
   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்செய்தி >>>


பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.19.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில்வில் வசிக்கும்.திரு செல்வராஜா பாலராஜா.[ அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2019. இவரை அன்பு மனைவி அன்பு அம்மா  பிள்ளைகள் மாமி  மச்சான்மார்    மச்சாள் மார்  
,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நோய் நொடி இன்றிஅறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
 பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்ற

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



முருகப் பெருமான் அருளும் மாமருந்துகள் இவைதான்..அவசியம் படியுங்கள்

முருகன் அருள்திறனால் உடலில் ஏற்படும் பிணிகளை மட்டுமல்லாமல், உள்ளத்தில் ஏற்படக்கூடிய பிணிகளையும் போக்க வல்லது. மருத்துவர்களுக்கெல்லாம் மேலான மருத்துவர் முருகப் பெருமான். ஒரு மருத்துவர் பலரறிய புகழ் பெற வேண்டுமானால், 
அது அவரிடம் வைத்தியம் பார்க்க வருபவர்களால் மட்டுமே முடியும்.அவர் எந்த அளவுக்குச் சிறப்பாக வைத்தியம் பார்க்கிறார் என்பது அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிக்குத்தான் தெரியும்.அவர்தான், 
அந்த மருத்துவரை கைராசிக்காரர் என்று மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வார்.அதேபோல், தமக்கு ஏற்பட்டிருந்த குறையை செந்திலாண்டவரின் அருள் என்னும் மாமருந்து எப்படி போக்கி அருளியது என்பது பற்றி குமரகுருபரர் மிக அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பழநி முருகனுக்கு இந்தப் பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தப் பிரசாதமே பல நோய்களுக்கு அருமருந்தாகவும் செயல்படுவதாக பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.இதையே அறிவியல் ரீதியாக நோக்கினால், பழநியில் முருகக்கடவுளின் 
திருமேனி பல்வேறு தாதுப்பொருள்களால் (நவபாஷாணம்) ஆனது. எனவே, முருகப்பெருமான் திருமேனியில் அர்ப்பணித்து எடுக்கும் பஞ்சாமிர்தத்தில், தாதுப்பொருள்களின் மருத்துவத் தன்மையும் சேருவதால், அந்தப் பஞ்சாமிர்தமே உடற்பிணியை நீக்குகிறது. தாதுப்பொருள்கள் அப்பெருமானது அருளால் அமிர்தமாக மாறி, அருந்துபவரின் நோயினைக் குணப்படுத்துகிறது.இவ்வாறு அறிவியல்ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் இந்த உண்மை நமக்கு விளங்குகிறது.இதற்கும் மேலாக அப்பெருமானது மருந்து ஒன்று உண்டு. அதுவே அவனது திருநீறு ஆகும். இதையே ‘மந்திரமாவது நீறு’ என்று திருஞானசம்பந்தர் போற்றியிருக்கிறார். எந்த மருந்தினாலும் குணப்படுத்த முடியாத நோய்களையும் இந்தத் திருநீறு போக்கும் வல்லமை கொண்டிருக்கிறது.
உடலில் நோய்கள் வராமல் இருக்க என்ன வழி?: உடலில் நோய்கள் எதுவும் அணுகாமல் இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலில் நோய்கள் எதுவும் அணுகாமல் இருக்கவேண்டுமானால், நம் உள்ளத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும். 
உள்ளம் சீராக இல்லாமல், கள்ளமும் கபடும் புகுந்துவிட்டால், அதன் விளைவாக நம் உடலைப் பல்வேறு விதமான நோய்கள் தாக்கும். எனவேதான், இதை எடுத்துச் சொல்லும் வகையில் சொக்கநாதப் புலவர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். (இந்தப் பாடலை காளமேகப் புலவர் பாடியதாகவும் சொல்வதுண்டு).
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச் சரக்கை மங்காத
சீரகத்தைத் தந்தீரேல்தேடேன் பெருங்காயம
ஏரகத்துச் செட்டியாரே!இந்தப் பாடலில் தமிழ் மருத்துவப் பொருள்கள் ஐந்து குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஐந்து மருத்துவப் பொருள்களும் இரண்டு பொருள்படும்படியாக அமைந்திருப்பதுதான் 
பாடலின் தனிச் சிறப்பு.
பாடலின் முதல் பொருள்:வெங்காயம் காய்ந்து சுக்குபோல் ஈரம் இல்லாமல் சருகானால், ஒன்றுக்கும் பயன்படாது. அதன் பின்னர் அதனோடு வெந்தயம் சேர்த்தாலும் பயன் இல்லை. வெந்து அயம்
 போல் ஆனாலும் பயனில்லை. எனவே பயனில்லாத இந்த மூன்று சரக்குகளையும் வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. தூக்கி எறிய வேண்டியதுதான். ஆனால், எந்த நிலையிலும் சீரகம் தரப்படுமானால் இந்தப் பெரிய உடம்பைப் பேணுவதற்கு வேறு எதையும் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. எனவே, அழகான இல்லத்தில் கடை வைத்து வணிகம் செய்யும் செட்டியாரே
 நற் சீரகத்தைத் தாரும்!
பாடல் கூறும் மறைபொருள்:வெம்மையான காயமாகிய உடம்பு, சுக்குப் போலக் காய்ந்து ஒடிந்து விடுமானால், 
அதன்பிறகு அந்த உடம்பை புடம் போட்டு வெந்த அயத்தாலும் (பஸ்பத்தாலும்) உயிரூட்ட முடியாது. சுக்காகக் காய்ந்துவிட்
ட பிறகு இந்த உடம்பை வைத்துக் கொள்வது, பெரும் நாற்றமாகும். மண்ணுக்கோ அல்லது நெருப்புக்கோ இரையாக்கிவிடவேண்டியதுதான். ஆனால், எந்தக் 
காலத்துக்கும் கேடில்லாத சீரான உள்ளத்தை, அதாவது உன்னை நினைத்து நெறியாக வாழும் உள்ளத்தை, ஏரகம் என்னும் சுவாமிமலையில் இடங்கொண்ட முருகனே, நீ அருள்புரிந்தால், அதன்பின் இந்த உடம்பைப் பற்றி 
எனக்குக் கவலையில்லை. இதுவே பாடல் உணர்த்தும் மறைபொருள்.அன்பைப் பணமாகப் பெற்று அருளை வழங்கும் வணிகனாக – செட்டியாராக முருகப் பெருமான் உள்ளார். அவர் இருக்கும் அழகிய இடம் திருவேரகம் என்னும் சுவாமிமலை. அவனைச் 
சரணடைந்தால், நமக்கு சீரான அகத்தை – மாசற்ற, கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தை அருள்புரிவார். எனவே, திருவேரகப் பெருமானை நாளும் பொழுதும் தியானித்து, நல்ல எண்ணங்களால் நிரம்பப் பெற்ற உள்ளத்தைப் பெற்று, நலமும் வளமும் பெற்றுச் 
சிறப்புற வாழ்வோம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

     ஆடி அமாவாசை தினத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற   கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.இன்று (புதன்கிழமை) காலை 
தம்ப பூஜை, மூலமூர்த்திக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்
டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.அதனையடுத்து சுவாமி சிவபார்வதி, விநாயகர் ஆகியோர் எருது வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக சென்றனர்.ஹனுமனின் வால் நனைத்த
 இடமாகவும் இராமபிரானால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தக்கேணியாகவும் பிதிர்க்கடன் தீர்க்கும் இடமாகவும் உள்ள மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜைகள் நடை
பெற்றன.அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ தீர்த்தக்கேணியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜா குருக்கள் தலைமையில் $தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  இந்த தீர்த்தோற்சவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் 
தீர்த்தக்கரையோரங்களில் நடைபெற்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியன ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்ததுடன், நேற்று ரதோற்சவம் இடம்பெற்றிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.