இந்த ராசிக்கு 2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி அள்ளிக் கொடுக்கும்ராஜயோகம் …

 புதிய  2020ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ளது.இந்த வாரம் முழுவதும் புதிய வருடத்தின் ஆரம்பம் யார் யாருக்கு அதிர்ஷ்டம். யாருக்கு நஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இதனை படிங்க.
மேஷம் ராசிக்காரர்களே புத்தாண்டை கொண்டாட தயாராகியிருப்பீர்கள். உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும் போது புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் சனி உள்ளிட்ட 5 கோள்கள் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றன.நீங்க நினைத்தது 
நடக்கும். பிசினஸ் ரீதியான பயணம் உங்களுக்கு மனதில் உற்சாகத்தை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கதவை தட்டும் அன்பான நபர்களை சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான வாரம் உங்களின் தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும்.காதலிப்பவர்களுக்கு அன்பின் ஆழம் அதிகரிக்கும். உங்க அன்பானவருடன் நீங்கள் போகும் பயணம் சந்தோஷத்தை கொடுக்கும். பெண்களுக்கு இது சந்தோஷமான வாரம். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை,அதிர்ஷ்ட எண்: 15,அதிர்ஷ்ட நாள் : 
திங்கட் கிழமை
ரிஷபம்:இந்த வாரம் உங்க நண்பர்களுடன் புத்தாண்டினை கொண்டாட தயாராகுங்கள். உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். உங்களின் மனதிற்கு பிடித்த நபர்களுடன் நீங்க உங்களுக்கு பிடித்த உணவுகளைப் சாப்பிடுவீர்கள்.இந்த வாரம் எதிர்பாராத
 சிறப்பு விருந்தினர்களின் சந்திப்புகள் நிகழும். உங்களின் சந்தோஷத்திற்கு நண்பர்கள் துணையிருப்பார்கள். இந்த வாரம் ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரனும், அஷ்டம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களும் கூடியுள்ளன. எதையும் நிதானமாக யோசியுங்கள்.புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கவனமாக இருப்பது 
அவசியம் இல்லாவிட்டால் புத்தாண்டு சோகமாக முடிந்து விடும். எதையும் உணர்ச்சிப்பூர்வமாக யோசிக்காதீர்கள் கோபத்தை 
விட்டுத்தள்ளுங்கள் தன்மையாக பேசுங்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள்.அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்,அதிர்ஷ்ட எண்: 11,அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை.
மிதுனம்:2020 புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். உங்கள் நண்பர்களின் பார்வை எல்லாம் உங்கள் மீதே இருக்கும். வீட்டில் உங்களை டென்சன்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறலாம் கவனம் தேவை. பணம் இந்த வாரம் தாராளமாக வரும் அதே போல செலவுகளும் கட்டுக்கடங்காமலேயே இருக்கும்.
பயணங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். பண விவகாரங்களில் நீங்க கவனமாக இருங்க, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. கண் கோளாறுகள் வரலாம் மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.வெளிநாடு
 பயணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் 2020ஆம் ஆண்டு அதற்கான பயணம் வெற்றிகரமாக முடியும். ஏதாவது ரகசியம் தெரிந்தாலும் நீங்க அதை வெளியில சொல்லாதீங்க ரொம்ப நல்லது. உங்க லட்சியத்தை நோக்கிய பயணம் தொடங்குகிறது. வாக்கு கொடுக்காதீங்க அதை காப்பாத்த முடியலையே என்ற பிரச்சினை ஏற்படும். ஏழாம் வீட்டில் புதன் குரு, சூரியன் இணைந்திருப்பது சந்தோஷம்,அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு,அதிர்ஷ்ட எண்: 30,அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை
கடகம்: ராசிக்காரர்களுக்கு சூரியன் உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பேச்சில் கவனமாக இருங்க. பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் இந்த வாரம் ரொம்ப சுமாராக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். குடும்ப வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்க கல்யாண வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிப்பீங்க.
உங்க வாழ்க்கை அல்லது காதல் துணையை ரொம்ப சாப்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க. நண்பர்கள், உறவினர்களிடம் பேசும் போது கவனமாக இருங்க.ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பிள்ளைகள் மீதான கோபத்தை கட்டுப்படுத்துங்க. உங்க லட்சிய கனவுகளை நோக்கி பயணப்படுங்க. இந்த வாரம் உங்க சந்தோஷம் அதிகரிக்க நீங்க எதிரிகள் மேல கவனமாக இருங்க முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுங்க. வீட்ல சுப செலவு நடக்கும். யார் கிட்டையும் ஏமாந்து போயிராதீங்க. வார துவக்கத்தில கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்,அதிர்ஷ்ட எண்: 9,அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை
சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்தாண்டு பிறக்கப் போகிறது. உங்க முன்னேற்றத்தை நோக்கி பயணப்படப்போறீங்க. சொத்துக்கள் வாங்கலாம். வீட்ல இருந்த பிரச்சிரனைகள் தீரும் பணத்தேவைகள் தீரும்.
எந்த பிரச்சினையையும் நீங்களே 
சமாளிங்க அடுத்தவங்களை நம்பாதீங்க. இந்த வாரம் உங்களுக்கு சிக்கல்கள் தீரும் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் மனைவி பிரச்சினைகள் வந்து போகும்.பணம், நகைகளை பத்திரமாக வச்சிக்கங்க. வேலைக்கு போறவங்க கவனமாக பண்ணுங்க. செய்யிற 
வேலையை அப்பப்ப கவனமாக முடிங்க. இந்த வாரம் கல்யாண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்,அதிர்ஷ்ட எண்: 36அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை
கன்னி:இந்த வாரம் உங்களுக்கு தைரியமான வாரம், சிக்கல்கள் எல்லாம் தீரும் எதிரிகளை வீழ்த்தலாம். செவ்வாயினால் நன்மைகள் அதிகமாகும். உங்க துணிச்சலுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்புகள் வெற்றிகரமாக முடியும்.பெண்களுக்கு இது சந்தோஷமான
 வாரம் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகமாகும். குழப்பங்கள் நீங்கும் போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அது தீரும் வண்டி வாகனத்தில கவனமாக இருங்க. உங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. திடீர் திருமண யோகம் வரும். வெளியூர் பயணங்கள் வரும் கவனம் தேவை. வியாபாராத்தில அதிக லாபம் வரும் முதலீடுகளை அதிகமாக செய்யாதீங்க. இருக்கிற தொழிலை சிறப்பாக பண்ணுங்க.அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ,அதிர்ஷ்ட 
எண்: 45,அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு
துலாம்:இந்த வாரம் நீங்க ஒரு முக்கியமான நபரை சந்திப்பீங்க அது உங்க வாழ்க்கை பயணத்தை மாற்றக்கூடியதாக இருக்கும் பிறக்கப்போகிற புத்தாண்டு உங்களுக்கு நல்ல தொடக்கத்தை தரப்போகிறது. சனியோட கேது இருப்பதால வீட்ல வயதானவங்கள் உடம்புல அக்கறை காட்டுங்க. பணப்பிரச்சனை நீங்கும்.
சொந்தக்காரங்க கிட்ட கோபமாக பேசாதீங்க. அரசியல்வாதிகள் கவனமாக இருங்க அவசரப்படாதீங்க. பல பிரச்சினைகள் நீங்கும். சொந்தக்காரங்களோட பயணம் செய்வீங்க. புத்தாண்டு கொண்டாட்டங்கள் சந்தோஷமாக முடியும். உங்க லட்சிய பயணம் ஆரம்பமாகிறது.அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்,அதிர்ஷ்ட எண் 8
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை.
விருச்சிகம்:இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கு. புதன் சூரியன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில
 இருப்பதால பண வரவு அதிகமாக கிடைக்கும். இந்த வாரம் உங்க வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சுக்கிரனால் உங்களோட 
உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.உங்க வாழ்க்கைத்துணையோட ஆரோக்கியத்தில கவனமாக இருங்க மனைவியோட பாசமாக இருங்க. சந்தோஷமாக நீங்க பயணங்கள் போகலாம் நல்ல சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். பேச்சில நிதானமாக இருங்க கோபம் வேண்டாம் காரணம் சூரியன் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்களுக்கு நல்லது நடப்பதற்கான காலம் வந்து விட்டது.அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு,அதிர்ஷ்ட எண்: 3,அதிர்ஷ்ட நாள் :
 வெள்ளிக் கிழமை.
தனுசு:பிறக்கப்போகிற புத்தாண்டின் முதல்வாரம் நல்ல தொடக்கமாக அமைய நீங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருங்க. உங்க வேலையில கவனமாக இருங்க எந்த வேலையும் பெண்டிங் வைக்காதீங்க. அப்புறம் அதுவே சிக்கலாகும். உங்க ராசியில் இருக்கிற
 குரு ஏழாம் வீட்ல இருக்கிற ராகுவை பார்க்கிறார். பண வருமானம் அதிகமாக இருக்கும் சிக்கல்கள் நீங்கும். மனக்குழப்பம் தீரும். சனியால் அதிர்ஷ்டம். சொத்து வாங்க முயற்சி பண்ணலாம். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புத்தாண்டு மலர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ,அதிர்ஷ்ட எண்: 22,அதிர்ஷ்ட
 நாள் : சனிக்கிழமை
மகரம்:சந்திரன் இந்த வாரம் சந்தோஷத்தை தரப்போகிறார். உங்களுக்கு பணம் பல வகையில வரும். அதே வேகத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த புத்தாண்டை நீங்க கொண்டாடப்போறீங்க. உங்க சந்தோஷம் அதிகமாக இருக்கும்.உங்க 
உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. பிரச்சினை தீரும். உங்க முக்கிய முடிவுகள் சந்தோஷமாக இருக்கும். சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்டும் வேலைக்காக முக்கிய முடிவுகளை எடுங்க. உங்களுக்கு பதவிகள் தேடி வரும் அதிகமாக அகலக்கால் வைக்காதீங்க. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை,அதிர்ஷ்ட எண்: 17,அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை.
கும்பம்:லாபமான வாரம் இது உங்களுக்கு நிறைய பணம் வந்து பாக்கெட் நிரம்பும். உங்க குடும்பத்தில சந்தோஷமான காரியங்கள் அதிகமாக நடக்கும். பதவிகள் கிடைக்கும். பேசும் போது நிதானமாக பேசுங்க முன்னெச்சரிக்கையா இருங்க. நீங்க எடுக்கிற முயற்சியில வெற்றி கிடைக்கும். சொந்த நிலம் வாங்கும் யோகம் அமையுது. கார், பைக் வாங்க முயற்சி பண்ணலாம். உங்க லட்சிய பயணம் இந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்குது. திடீத் திருமண யோகம் அமையும். பழைய கடன்கள் நீங்கும். புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடுங்க. மகிழ்ச்சியான வாரம் இது.அதிர்ஷ்ட நிறம் : பீச்,அதிர்ஷ்ட எண்: 7,அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்
மீனம்:2020ஆம் ஆண்டின் முதல் வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக அமையப்போகிறது. மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடி வரும். காதல் நிறைந்த வாரம் இது. ரொமான்ஸ் அதிகரிக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில கிரகங்கள் இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உங்கள்
 தொழிலில் லாபம் அதிகம் வரும். பெண்களுக்கு 
நல்ல வாரம் திருமணம் நடைபெறும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். நினைத்த காரியம் கைகூடி வரும். புத்தாண்டினை புது மலர்ச்யோஅதிர்ஷ்ட நிறம் : மெரூன்,அதிர்ஷ்ட எண்: 28,அதிர்ஷ்ட நாள் : 
செவ்வாய் கிழமை,

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜாதுர்ஷா 31.12.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் ( தயா &சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜாதுர்ஷா .
அவர்களின் பிறந்தநாள் 31.12.12019 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடினார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  நோய் நொடி இன்றி  சகல கலைகளும் கற்று  சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாஇன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்ழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆண்மீகன் 30.12.19

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆண்மீகன் அவர்களின் ஐந்தாவது பிறந்தநாள்.30.12. 2019. இன்று இவரை அன்பு அப்‌பா அன்பு அம்மா அன்பு அக்கா
அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள்மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் 
தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும்
 உறவுகளும் போற்ற
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்ற
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுதாகரன் யாழவன் 29.12.19

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன் (சுதா ,யசோதா)  தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின் பதின்  மூன்றாவது  பிறந்தநாள் 
.29.12.2019 .இன்று  
 இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  பல்கலைகளும் கற்று,நோய் நொடிகளின்றி  
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை வர வழைக்க செய்யவேண்டிய வழிகள்

வீடு சிறியதாக இருந்தாலும், அதில் சந்தோஷம், நல்ல சிந்தனை, அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எந்தவித தங்குதடையும் இன்றி சுமூகமாக பயணிக்க முடியும்.
அதற்கு மாறாக வீட்டில் அடிக்கடி பிரச்னை, நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், பதற்றம் இவ்வாறு தொடர்ந்து ஏ
ற்பட்டால், அந்த வீட்டில் ஏதோ எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளதாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜோதிட ரீதியாக நேர்மறை சக்திகள் (positive energy) நம் வீட்டிற்குள் கொண்டுவருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் 
$என்பதைப் பார்ப்போம்.
நேர்மறை சக்திகளை எப்படி வீட்டிற்குள் கொண்டுவருவது? வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே
 சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடலாம்.உதாரணமாக.. சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலிலும் உள்ள கர்ப்பகிரஹத்தில்
 செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில்
 துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோயிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும், மஞ்சள் பொடியும்
 கலந்திருக்கும்.இவ்வாறு நாம் வசிக்கும்
 வீட்டினுள் தினமும் செய்துவந்தால் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாகும். தினமும் இதைச் செய்து பாருங்கள் வித்தியாசத்தை
 நீங்களே உணர்வீர்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.19

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் றிசிகீர்த்தன் அவர்களின் பிறந்த நாள் .26.12.2019 .இன்று
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள்  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரநாகா  
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி சத்தியசீலன் சானுஜா 26.12.19

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி சத்தியசீலன்.(சீலன்-மாலினி)   தம்பதிகளின்  செல்ப்புதல்வி  சானுயா (சானு)  அவர்களின்   பிறந்த நாள்  26,12.2019.இன்றுதனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் .இவரை அன்பு  அப்பா  அம்மா அப்பம்மா அம்மம்மா 
அக்கா சகோதரர்கள்     
மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர்
 தோப்பு போதிப்பிள்ளையர்  ஆசியுடன் நோய் நோய் நொடி இன்றி
  பல்கலைகளும் கற்று,
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழில் பெருமை தரும் சிவபூமி திருவாசக அரண்மனை ஆலயம்

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள
 யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.
திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் கவின் மிளிரக் காட்சி தருகின்றன.
சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த தேருக்கு மேலாகச் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய 
நந்தி அமைந்துள்ளது.
திருவாசக அரண்மனைக்குச் செல்லும் அனைத்து அடியவர்களதும் கண்கள் முதலில் கண்டு வழிபடும் வகையில் இந்தத் தெய்வீகக் காட்சிகள் அமைந்துள்ளன.
சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இரு மருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658 திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வேறெங்கும் காண 
முடியாத அற்புதக் காட்சியாகும்.
அதுமாத்திரமன்றி கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி சிவலிங்கங்களுக்கு அடியவர்கள் தங்களின் கரங்களால் அபிஷேகம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் மூன்றடி உயரமும், இரண்டரை 
அடி விட்டமும் கொண்டவை.
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.இந்தத் திருப்பணி முழுவதும் நிறைவேறுவதற்குச் சுமார் ஒன்றரை வருட காலங்கள் சென்றுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரான புருசோத்தமனும் அவரது குழுவினரும் திருவாசக அரண்மனை வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயரத்திலான கருங்கற் தேர், சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் 
சிற்பங்களையும் நிறுவியுள்ளார்.
யாழ்.ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் குழுவினர் திருவாசக அரண்மனைக் கட்டடத்துக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சிவபூமி-திருவாசக அரண்மனை
அமைவதற்கு வித்திட்ட காரணி
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவெண்ணாமலை கோயில் வீதியில் இடம்பெற்ற திருமுறை மாநாட்டில் பங்கெடுத்துச் சிறப்புரையாற்றிவிட்டுத் திரும்பிய போது சித்தரொருவரைச் சந்தித்தார். அவர் கலாநிதி ஆறு. திருமுருகனை நோக்கி 'ஈழத்தில் திருவாசகத்தைக் காப்பாற்றுங்கள்... திருவாசகம் உங்களைக் காப்பாற்றும்' எனக் கூறினார்.
அத்துடன் திருவாசகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்கு...எல்லாம் நன்றாக நிறைவேறும் எனவும் குறிப்பிட்ட சித்தர் கூறினார். சித்தரின் கூற்றைத் தெய்வ வாக்காகக் கருதிய கலாநிதி ஆறு.திருமுருகனின் எண்ணத்தில் ஒளிபெற்றதே இந்தத் திருவாசக அரண்மனை.
திருவாசக அரண்மனை உருவாகுவதற்கு உதவியோர்
புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழும் தெல்லிப்பழையைச் சேர்ந்த இதய வைத்திய நிபுணர் மனமோகன் மற்றும் அவரது பாரியாரான வைத்தியகலாநிதி- சிவகெளரி ஆகியோர் திருவாசக அரண்மனை நிர்மாணிப்பதற்கான நிலத்தையும், நிதியையும் வழங்கியுள்ளனர்.
புலம்பெயர்ந்து அமெரிக்கா நாட்டில் வாழும் அராலியைச் சேர்ந்த பொறியியலாளரான அரவிந்தன் கைலாசபிள்ளை குடும்பத்தினர் கருங்கற் தேர் நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கியுள்ளதுடன், கருங்கல்லில் திருவாசகம் முழுவதையும் பதிப்பிப்பதற்கு இதய வைத்திய நிபுணர் மனமோகனின் பெரும் நிதிப் பங்களிப்புடன் இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து
 வாழும் அன்பர்களின் நிதியுதவி மற்றும் கலாநிதி- ஆறு. திருமுருகன் வெளிநாடுகளுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதற்குச் சென்ற போது கிடைத்த நிதி அன்பளிப்புக்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.
சிவபூமி- திருவாசக அரண்மனைக்குச் சிறப்புச் சேர்த்துள்ள விடயங்கள்
திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புக்கள் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நிலையத்தில் திருவாசகம் தொடர்பாக வெளிவந்த அனைத்து நூல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
திருவாசக ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் தங்கி நின்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கேற்ற விடுதியறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாசக அரண்மனைத் திறப்பு விழாUntitled-1.jpg
யாழ்ப்பாணம் நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமி- திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04 மணிக்குத் திறப்பு விழாக் காண்கிறது. மேலும் இந்த வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை-09.45 மணி முதல் முற்பகல-10.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறும்.
பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் பக்திச் சுவை நனி சொட்டும் வகையில் மாணிக்கவாசக சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு.
இவ்வாறான பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்கள் திருவாசகத்திற்கு வழங்கிவரும் உயர் கெளரவத்திற்குத் தக்க சான்று என்றால் அது மிகையில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய வருடாந்த இலட்சார்ச்சனைப் ஆரம்பம்

யாழ் இணுவில் மருதனார்மடம் சுன்னாகம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில் ஹனுமந் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா விகாரி வருஷம் கார்த்திகை மாதம் 28ம் நாள் (14.12.2019) சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி மார்கழி மாதம் 10ம் நாள் (26.12.2019) வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி தினம் வரையான 13 தினங்கள் பெருவிழா நடைபெறும்.ஆரம்பம் 14.12.2019 காலை 8.00 மணிக்கு கணபதி ஹோமம்.
தினமும் காலை8.00 மணிக்கு அபிஷேகம்
9.30 மணிக்கு பூஜை, அர்ச்சனை, ஹோமம்
11.00 மணிக்கு இசை ஆராதனை
தினமும் மாலை: 4.00 மணிக்கு அபிஷேகம்
5.00 மணிக்கு பூஜை, அர்ச்சனை, ஹோமம்
24.12.2019 செவ்வாய்க்கிழமை இலட்சார்ச்சனை
 பூர்த்தி விழா
25.12.2019 புதன்கிழமை தேர் திருவிழா
காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை
காலை 9.00 மணிக்கு தேர்பவனி
பகல் 11.00 மணிக்கு இசை ஆராதனை
மாலை 4.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேட அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை
26.12.2019 வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி
காலை 6.00 மணிக்கு காலைப்பூஜை
மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்
பிற்பகல் 3.00 மணிக்கு 108 கலச அபிஷேகம்
மாலை 5.00 மணிக்கு சந்தன 
அலங்கார பூஜை

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மதேவன் தர்மிகா.14.12.19

கனடா மொன்றியாலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருதிருமதி தர்மதேவன் தம்பதிகளின்
 செல்வப்புதல்வி தர்மிகாவின்
பிந்தநாள் இன்று 14.12.2019 .இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் மார் மற்றும் உறவினர்கள் இவரை எல்லாம் வல்ல நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சகல சசகல கலைகளும் பெற்று இன்று போல் என்றென்றும் சந்தோஷ மாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும்குருப்பெயர்ச்சி..2019 தேடி வரும் அதிஷ்டம்

சிம்மம்: 05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக மேம்பாட்டையும். சிறு சிறு உபாதைகளும் அறவே மறைந்து தெளிவாகக் காணப்படுவீர்கள். அனைத்து விஷயங்களும் நீங்கள் எதிர்பார்த்தது போலவே நடக்கும். செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதாரம் உயர்ந்து
 காணப்படும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள்.பங்காளிகளுடன் சுமுக உறவு உண்டாகி பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பங்கு கிடைத்துவிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் சமாதானப் போக்கைக் கடைபிடிப்பார்கள். அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்குவீர்கள். அரசாங்க
 உதவிகளைப் பெறுவதற்கு ஏற்ற காலமாக இது அமைகிறது. நீண்ட காலமாக தள்ளிக்கொண்டே சென்ற தீர்த்த யாத்திரைகளை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். மறைமுக நேர்முக 
எதிர்ப்புகள் அனைத்தும் செயலற்றதாகிவிடும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடந்தேறும். பெற்றோர் வழியில் இருந்த உடலுபாதைகள் தீர்ந்து மருத்துவச் செலவுகளும் குறையும்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்று சேர்வார்கள். முன்போன்ற எதிரும் புதிருமான முரண்பாடு குடும்பத்தில் இராது. பழைய தொழிலை சிரமப்பட்டு மறுபடியும் நடத்தத் தொடங்குவீர்கள். பணமுடை என்று பெரிதாக 
இல்லாவிட்டாலும் சிறிது கடன் வாங்கி செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் பழைய அனுபவங்கள் இந்த காலத்தில் கைகொடுக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்திலும் ஓரளவு மறைமுக
 எதிர்ப்புகள் இருக்கும். ஆலய திருப்பணிகளுக்கான முன்னோடி திட்டங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அரசாங்க உதவிகளும் கைதூக்கி விடுவதாக அமையும். நெருங்கிய நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனாவசிய
 நெருக்கமும் கூடாது
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் சிறப்பாக நடக்கும். பரபரப்பாக காணப்படுவீர்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். மறைமுகப் போட்டியாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். அசையும் அசையாச் சொத்து ஆகியவைகளை வாங்குவீர்கள். இதுவரை
 செய்யாதிருந்த முயற்சிகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்துகளின் மூலம் குறைவின்றி வருவாய்ப் பெருக்கம் வரத் தொடங்கும். சிலர் கடல் கடந்து சென்று வரும் யோகத்தையும் பெறும் காலகட்டமிது 
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள். விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலைகளைத் திட்டமிட்டதுபோல் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சுற்றுலா சென்று
 வரும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். அலைச்சல் திரிச்சல் எதுவும் இல்லாமல் சுலபமாக வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். பழைய நிலங்களை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தில் புதிய நிருக்குலத்தை
 வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். செயல்களை நன்றாக யோசித்து கட்சி வேலைகளை நிதானத்துடனும் தொண்டர்களின் ஆதரவுடனும் செய்தால்தான் முடிவு விருப்பப்படி அமையும். புதிய யுக்தியுடன் பணியாற்றுவார்கள்.கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடத்தொடங்கும். திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்.
பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளவும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் பாடங்களைப் புத்துணர்ச்சியுடன் படிக்கவும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எந்த முடக்கமுமின்றி சீராக நடக்கத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். முன்போல 
பட்டதும் படாததுமாகப் பேசி வந்த நிலை இப்பொழுது இருக்காது. வெல்லும் சொல்லும், வாக்கு பலிதம் போன்ற எல்லாம் கணீரென்று உங்கள் வாயிலிருந்து வந்து விழும். நாணயம் சிறந்து விளங்கும்.
செல்வாக்கு சொல்வாக்காக 
மாறும். கடனில் செய்து கொண்டிருந்த செய்தொழில் கைமேல் பணம் என்ற முறையில் நடக்கும். புதிதான அனுபவங்கள் பல முனையிலிருந்தும் உண்டாகும். திருமணம் பலமுறை தட்டிச் சென்றவர்களுக்கு அவசரத் திருமணமாகக் கூடிவரும். வேலை இல்லை என்று சோம்பிக்கிடந்தவர்களுக்கு நேரம் போதவில்லை என்கிற அளவுக்கு 
வேலை வரத் தொடங்கும்.
அசையாச் சொத்து விஷயத்தில் இருந்து வந்த கஷ்ட நஷ்டங்களும் இழப்பும் இனி தொடராது. இல்லத்திற்குக் தேவையான நவீன ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து உயர்ந்து
 காணப்படும் காலகட்டமிது.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ஓர் உயர்நிலையை எட்டுவீர்கள். பாராட்டும் பணவரவும் பலவழிகளிலிருந்து வந்தவண்ணமாகவே இருக்கும். செயற்கரிய சாதனைகளில் இறங்கி முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். பத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்றதெல்லாம்பழுதில்லை என்கிற நிலைமை ஏற்படும். தற்காலிகமாகச் செய்து வந்த காரியங்களை நிரந்தரமாக்கி விடுவீர்கள். குடும்பத்தினர் அனைவருக்கும் இருந்த நோய்நொடிகள் முழுமையாகக் குணமாகிவிடும். வழக்குகளில் சிக்கித் தவித்தவர்கள் தெய்வனுகூலத்தினால் விதிவிலக்கு கிடைக்கப்பெற்று முழுமையாக 
விடுபட்டுவிடுவார்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்பாளர்களிடமிருந்து வெகு சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். கைவிட்டுப்போன வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும். உடன்பிறந்தோரின் பாசத்தினால் திக்குமுக்காடிப் போவீர்கள். 
வாராக்கடன் என்று நினைத்திருந்த கடன் திரும்ப கைவந்து சேரும். குழந்தைகளின் வகையில் கடமைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதால் தலைச்சுமை இறங்கிவிட்டது போன்ற 
உணர்வைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க அடித்தளமிடுவீர்கள். குடும்பத்துடன் தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். கடந்தகால இழப்புகளை சரிகட்டும் காலமாக இது அமைகிறது 
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பளு குறையும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே செயல்பட்டால்தான் பயிற்சிகளைத் தவிர்க்கலாம். இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வும் இந்த குருபெயர்ச்சியில் 
உங்களைத் தேடி வரும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் புகுத்துவீர்கள். வண்டி வாகனங்களுக்குச் சிறிது பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். விவசாயிகள் விளைச்சலில் இந்த சிக்கல்கள் மறைந்து மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். சிலருக்கு வழக்குகளில் மன உளைச்சல் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் புதிய பூமி 
வாங்கும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை வராது என்றாலும் கவனமாக இருக்கவும். பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக பேசவும். கலைத்துறையினருக்கு திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் கைநழுவிப்போன வாய்ப்புகள்
 மீண்டும் தேடி வரும்.
பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்ட திருமணம் சிறப்பாக நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். கணவரிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவமணிகள் தன்னம்பிக்கையை கூட்டிக் கொண்டு செயலாற்றும் காலகட்டமாக இது அமையும்.
பரிகாரம்: திருவேங்கடமுடையானை வழிபட்டு வரவும்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள 
காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு உங்களாலான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் புதிய பிரச்னை என்று எதுவும் ஏற்படாது. எடுத்த காரியங்களை விடாபிடியாக பிடித்து அதிக முயற்சி செய்து வெற்றி பெற்று விடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பணத்தட்டுப்பாடு வருவதற்கு இடம் இல்லை. சோம்பல் அறவே நீங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள்.
முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்படையும். குழந்தை இல்லை என்று எண்ணி நீண்ட காலமாக சாந்தி பரிகாரம் செய்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புத்திரப்பேறு ஏற்படக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாயத்தில் கௌரவம், அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் முழுமையான பயிற்சி, ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். உடன்பிறந்தோரின் முன்னேற்றமும் பதவிகளையும் பெறக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். குடும்ப உயர்வு உண்டாகும். பகைமையும் பிரச்னையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். சிலர் வெளிநாடு சென்று வரும் 
பாக்கியத்தையும் பெறுவீர்கள்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் தொழில் வழி வெற்றிகளால் லாபம் அதிகரிக்கும். மற்றவர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான அனைத்து நவீன உபகரணங்களையும் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். சத்தான ஆகாரங்களை உண்பீர்கள். சிலர் புதிய வண்டி வாகனங்களை வாங்குவார்கள். ஆடம்பரமான வீட்டிற்கும் மாற்றம் செய்வார்கள். உடல்ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். சிலர் வெளியூர் சென்று புதிய பயிற்சிகளை அறிந்து கொள்வார்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் நேர்முக மறைமுக எதிர்ப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்தும் உதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். பெற்றோர் உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த தக்க பயணங்களைச் செய்வீர்கள். புதிய சாதனைகளையும் செய்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனைகளையும் 
நிறைவேற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் 
வகையில் நடந்து கொள்வீர்கள்.
பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் தங்கள் பொருள்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
 நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளை பராமரிப்போருக்கு பால் மற்றும் பால் பொருள்களால் நல்ல
 வருமானமும் உண்டாகும்.
அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவார்கள். பொறுப்புகளை சரியாக உணர்ந்து செயல்படுத்துவார்கள். முக்கிய பிரச்னைகளில் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். மாற்றுக் கட்சியினரால் எந்த கௌரவக் குறைச்சலான விஷயங்களும் ஏற்படாது. உங்கள் அந்தஸ்துக்கு குறைவான விஷயங்களில் ஈடுபடுவதைத் 
தவிர்க்கவும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவார்கள். வருமானமும் நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிறு சிறு நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். கணவரிடம் நிலவி 
வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு சீராகும். சிக்கனமாக இருந்து வீண் செலவுகளைத் தவிர்க்கவும். இல்லத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விரும்பியத்துறையில் முன்னேறலாம். விளையாட்டுத் தனத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். பெற்றோருக்கு பெருமை சேர்ப்பீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல்
 அனுஷம், கேட்டை முடிய)
05.11.2019 முதல் 29.03.2020 வரை உள்ள காலகட்டத்தில் முற்றுப்பெறாமல் நீடித்துக் கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் திக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகி விடுவார்கள். மனத்தடுமாற்றங்களும் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு சமூகச் சீர்கேடுகளைக் களைய முயல்வீர்கள். நண்பர்கள் உங்களுடன் தோளோடு தோள் சேர்த்து சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள். தவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும் சோதனையும் தீர்ந்து வாழ்க்கை தெளிவாகவும் நேராகவும் நடக்கத் தொடங்கும். பாதகமான கோர்ட் விவகாரங்கள் உங்களுக்குச் 
சாதகமாக தீர்ப்பாகும்.
30.03.2020 முதல் 29.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் பழைய தவறுக்ளைத் திருத்திக் கொள்வீர்கள். தீயவர்களின் நட்பை விலக்கி விடுவீர்கள். இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையும் வளரும். செயலில் உறுதி கூடும். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி 
பெற்றுவிடுவீர்கள். வயதில் மூத்தவர்களைப் பணிந்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மிக தர்மகாரியங்களில் ஈடுபடுபவர்களுடன் நட்பை உண்டாக்கிக் கொள்வீர்கள். மக்களிடையே ஆன்மிக நெறிகளைப் பரப்புவீர்கள். முடங்கிக் கிடந்த காரியங்களைச் செய்து வெற்றியடைவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான 
உதவிகளைச் செய்வீர்கள்.
30.06.2020 முதல் 20.11.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய மனவலிமையை பெறுவீர்கள். குற்றம் குறையற்று நீதி நேர்மை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வலம் வரத் தொடங்குவீர்கள். அரசு 
வழியில் உங்கள் தொழிலுக்கு உதவிகளும் சலுகைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் சுமுகமான நிலைமை கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சமுகமான பாகப்பிரிவினைகள் நடக்கும்.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில்
 நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகத் தீர்ப்பாகி அதன் மூலம் நிம்மதியடைவீர்கள். வருமானத்தையும் பெறுவீர்கள். உங்கள் குறைகளை நேரடியாக ஏற்றுக்கொண்டு உங்கள் செயல்களை மாற்றிக் கொள்வீர்கள் 
என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். சிலருக்கு விரும்பி இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புண்டாகும். இந்த காலகட்டத்தில் வேலைகளை 
முறைபடுத்தி செய்யவும்.
வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நடந்து கொள்ளுங்கள். போட்டியாளர்களின் தொல்லைகள் இராது. அவர்களின் தொழில் ரகசியங்களையும் அறிய வாய்ப்புண்டாகும். விவசாயிகளுக்கு முயற்சிகளின் அளவுக்கு ஏற்பவே லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் இந்த குருபெயர்ச்சியில் அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்பட்டு காரியமாற்றுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். அதோடு 
புதிய பொறுப்புகளையும் அளிக்கும்.கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்த பின்னர் செயல்படுத்தவும். உங்கள் செயல்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வேலையில் ஒழுங்கு முறையை கடைபிடிக்கவும். ரசிகர்களின் ஆதரவு தொடரும்.
பெண்மணிகளுக்கு சில நேரங்களில் மனக்குழப்பங்களும் கவலைகளும் உண்டாகலாம். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் முழுமையாக ஈடுபடவும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்தினால் மேலும் நன்மை அடையலாம்.
பரிகாரம்: பார்வதி தேவியை
 வழிபட்டு வரவும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நல்லைக் கந்தனின் குமாராலய தீப உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம் பெரும் திரளான பக்த அடியவர்களின் அரோஹரா கோஷத்துடன் சிறப்பான முறையில் இடம்பெற்றது.வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி 
வந்தார்.அதனைத் தொடர்ந்து பிற்பகல் 05.30 மணியளவில் முருகப் பெருமான் வெளிவீதியை நோக்கி எழுந்தருளினார்.கைலாச வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியதைத் தொடர்ந்து,
 ஆலயத்தின் முன்பாகப் பாரியளவில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு ஆலய பிரதம சிவாச்சாரியாரால் தீபமேற்றப்பட்டது.
இந்தத் தீபவொளி பாரியளவில் ஒளிவீசிப் பிரகாசித்தது.   சொக்கப்பனை எரிவுற்று முடிவுற்றதைத் தொடர்ந்து 
அக்கினியில் சங்கமமான சொக்கப்பனையின் எஞ்சிய பாகங்களை எடுத்துச் சென்றதுடன், நெற்றியில் வைத்தும் பூசித்தனர்தொடர்ந்து வள்ளி,தெய்வயானை சமேத முருகப் பெருமான் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கைலாச 
வாகனத்தில் அலங்கார நாயகனாக வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முருகப் பெருமான் வீதி வலம் வந்த போது அடியவர்கள் முருக நாம பஜனை பாடித் துதி செய்தனர்.இதில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்தநாள் வாழ்த்து திரு. இராசரத்தினம் கனகலிங்கம்.12.12.19

யாழ். நவற்கிரி  புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,இராசரத்தினம் 
கனகலிங்கம் (லிங்கம் )அவர்களின் பிறந்த நாள் .12.12.2019 .இன்று
 இவரை அன்பு மனைவி அப்பா  அம்மா மகள்மார் மகன் சகோதரர்கள் சகோதரிகள்   மாமி மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனி மைத்துனர் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை  
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்று என்றும் இன்பமாய்    எல்லாநலமும்  பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

பிறந்த நாள் வாழ்த்து. திரு.வீரகத்தி கனகரத்தினம்-11.12.19

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் (ரத்தினம்)அவர்களின் 66,வது பிறந்த நாள் .11.12.2019 .இன்று தன து இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  
 மிக சிறப்பாகக்கொண்டாடுகின்றார்  
 இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்  
இறை அருள்ளுடன்   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



இப்படித் தான் கார்த்திகை தீப விரதத்தை கடைப்பிடிப்பது தெரிந்து கொள்ளுங்கள்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை 
விளக்குகள் ஏற்படுகின்றன.
பெண்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் கார்த்திகைத் திருநாளன்று விரதம் மேற்கொள்கின்றனர்.இதன்போது விரதம் இருந்தால் நம் வீட்டுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.அந்தவகையில் தற்போது காரத்திகை தீப விரதம் எப்படி இருப்பது என பார்ப்போம்.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் 
கோலம் இடவேண்டும்.
மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு 
விளக்கேற்றி விழிபட வேண்டும்.
கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம்.
அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவில், பால் பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.மறுநாள் கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து குளித்து
 பூஜையின்போது முருகன் துதிகளை அல்லது நமசிவாய மந்திரத்தை 12 முறை ஜெபிக்கவேண்டும்.
மாலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனமுருகி வேண்டிக்கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை முடிக்கவேண்டும்.ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு 
கஞ்சி இவற்றை உண்ணலாம்.
விளக்கேற்ற வேண்டிய நேரம்:கார்த்திகை தீபத்திருநாளன்று மாலை வேளையில் 5:30 மணிக்குமேல் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.வாசனையுள்ள மலர்களைத் தொடுத்து அதை இறைவனுக்கு சமர்பித்து வணங்கவேண்டும்.

இந்த ராசிக்காரர்களுக்கு வரப் போகும் சனிப் பெயர்ச்சி இனி பேரதிஷ்டமாம்

2020ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? எந்த திகதியில் வருகிறது? எனப் பல குழப்பங்கள் நிலவி வருகின்றது. இதைவிட, விரைவில் விடிவுகாலம் வராதா என்று ரிஷபம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.வாருங்கள், சனிப்பெயர்ச்சி எப்போது என்று சரியான திகதியை தெரிந்து கொள்வோம். சனி பகவானை பற்றி  உங்களுக்கு 
தெரியாத சில தகவல்கள்..
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் யாருமில்லை.சனி கொடுத்தாலும் சரி, 
கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான நவக்கிரகமாகக் கருதப்படும் சனிபகவான் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்துவிடுவார். அப்படிப்பட்ட சனி அவரவர் ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதை
 ஜென்ம சனி என்றும், இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் சொல்லப்படுகிறது. ஏழரை ஆண்டு 
சனி காலத்தில் இது வரும்.அனைத்து பெயர்ச்சிகளை விடவும் அதிகம் பயப்படுகின்றார்கள் என்றால் அது சனிப்பெயர்ச்சிக்கு மட்டும்தான். ஏனென்றால் சனி
 ஒரு ராசியில் 21/2 ஆண்டு காலம் சஞ்சாரம் செய்கின்றார். இந்த காலகட்டத்தில் வாழ்க்கை என்ற பாடத்தை நமக்குக் கற்றுக்கொடுத்து விட்டுச் செல்கின்றார். அதிலும், ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்? ஒருவர் வாழ்வில் அதாவது, தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டுச் செல்வார் என்றே சொல்லலாம்
சனிப்பெயர்ச்சி எப்போது?  நம் ஜோதிடப்படி இரண்டு வகையான பஞ்சாங்கத்தைப் பின்பற்றி நாம் பலன்களை கணித்து வருகிறோம். ஒன்று திருக்கணித பஞ்சாங்கம், மற்றொன்று வாக்கிய பஞ்சாங்கம்.அந்தவகையில் முதலில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படியே சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. விகாரி வருடம் தை மாதம் 10ம் திகதி அதாவது 2020 ஜனவரி 24ம் திகதி சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது.
அடுத்ததாக வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2020 டிசம்பர் 26ம் திகதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு பஞ்சாங்கத்திற்கு ஒரு மாத கால இடைவெளி வரும் சரி.. ஆனால் இந்த வருடம் நிகழ உள்ள சனிப்பெயர்ச்சி 
மட்டும் 11 மாத கால இடைவெளி ஏற்படுகிறது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.வாக்கிய பஞ்சாங்கமோ, திருக்கணித பஞ்சாங்கமோ 
எதுவாக இருந்தாலும், சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார் என்பது மட்டும் உண்மை. ஆக, தனுசு, மகரம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறும்.கடந்த ஏழரை வருடமாக சனிபகவான் பிடியில் சிக்கி அல்லல்பட்டு வந்த
 விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஏழரை சனி முடிவடையும் ஆண்டாக இருக்கும். வாழ்வில் அனைத்து விஷயத்திலும் புதுவித திருப்பத்தையும் ஏற்றத்தையும் காணப் போகிறார்கள் விருச்சிக ராசிக்காரர்கள் என்பது மட்டும் உண்மை.

Powered by Blogger.