பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20


யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்களின் பிறந்தநாள் 31-07-2020 இன்று  பிறந்தநாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா,
அன்பு அம்மா மற்றும்
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் நோர்வே யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிவயிரவர்  
இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்  சகல கலைகளும்  பயின்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது ஏன் தெரியுமா

ஸ்ரீ ராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன்  பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு 
சக்தி படைத்தவர்.
அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார். அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப்  பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில்  வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள்.
“இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்” என்றாள். வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற  வெற்றிலை மாலை சாத்துகின்றனர்.
திருமணங்களில் வெற்றிலை தாம்பபூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும்  என்பதற்காகத் தான்.
பலன்கள்:
வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசிர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக  நிறைவேறும் என்பது ஐதீகம்.
வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வணங்கினால் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வெற்றிலை மாலை சாற்றுவதால் சுபநிகழ்வுகளின் தடை  நீங்கும். தொழிலில் 
வெற்றி கிடைக்கும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


நல்லைக்கந்தனின் கொடியேற்ற உற்சவம் சிறப்பாக நடைபெற்றது 25-07-20

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.நாட்டில் கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தினை நடத்துவதற்கு 
அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.ஆலயத்தின் உட்புறத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டதோடு சமூக இடைவெளியைப் பின்பற்றக்கூடியவாறு ஆலய
 நிர்வாகத்தினரால் மக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதேபோல், ஆலயத்திற்கு
 வெளியிலும் பொலிஸாரினால் சமூக இடைவெளியைப் பின்பற்றி ஆலய உற்சவத்தை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கொண்டுவராதவர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.எனினும், 
வழமைக்கு
 மாறாக இம்முறை பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆலய உற்சவத்திற்கு பெருமளவில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.   பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு.
 ஆலயத்திற்கு வரும் அடியவர்களை சோதனைச் சாவடிகளில் சோதனையிடும் நடவடிக்கையினை பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுயன் சர்னிகா 25.07.20

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிட மாகக்கொண்ட  செல்வப்புதல்வி  சுயன்  சர்னிகாவின்  முதலாவது  பிறந்தநாள்   25.07.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பப்பா அப்பாம்மா 
மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் குடும்ப உறவுகள்  மற்றும் உற்றார்  உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் நோய் நொடி இன்றி 
சகல வளங்களும் பெற்று  
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


நல்லைக்கந்தன் வருடாந்த பெருந்திருவிழா 25-07.20.ஆரம்பம்.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா .25-07-20.இன்று சனிக்கிழமை,காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது.கொரோனா 
அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே 
நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.மேலும் 25 நாட்கள் நடைபெறும் குறித்த திருவிழாவில், 10 ஆம் நாளான ஓகஸ்ட் 3 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி
 சூர்யோற்சவமும் கார்த்திகை உற்சவமும் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து 13 ஆம் திகதி கைலாச வாகனமும், மறுநாள் வெள்ளிக்கிழமை
 வேல் விமானத் திருவிழாவும், 16 ஆம் திகதி 
சப்பைரதத் திருவிழாவும் 17 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 18 ஆம் திகதி 
தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த 
திருவிழாவில் பங்குகொள்வதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் அதிகளவானோர் வருகை தருகின்றமை வழமை. ஆனால் இம்முறை கொரோனா 
அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் பங்கேற்பு இருக்காது என்றே 
கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-20.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட . திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் பிறந்தநாள்.23.07.2020, இன்று நோர்வேயில் வெளிமாநிலத்தில்   நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.
அன்புப் பிள்ளைகள்
அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா சித்தி மார் 
சகோதர சகோதரிகள்  மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உற்றார் உறவினர் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய்
நோய் நொடி இன்றி  எல்லாநமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன்,தேவி 22.07.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும்.திரு திருமதி சந்திரன் தர்மதேவி  (தேவி ) அவர்ககின் பிறந்தநாள்..22.07.2020.இன்று இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்பு மகன்மார்  சகோதர 
சகோதரிகள் உற்றார்
 உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும்
போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு 
 பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>





திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ   தம்பதிகளின் இருபத்தி ஏழாவது 
 திருமண நாள்
22.07.2020.இன்று இவர்களை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா   
தம்பி மார் மச்சாள் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
தம்பதியினர்  நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று  
   பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென  மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.20.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின்
பிறந்தநாள் 19.07.2020.இன்று. இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்  இறை அசியடன்
நோய் நொடி இன்றி
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது.
அம்பாளின் ( முத்தேர்பவனி) தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், கற்பூரச்சட்டி .பால்குடம் .எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு 
நிகழ்வு இடம்பெற்றது,
ஐரோப்பாவில் மூன்றாவது  தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்பாள் துணை 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>













பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா 17.07.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு துரைராஜா .பாலையா
அவர்களின் பிறந்தநாள் இன்று 17..07.2020.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் வரலாற்றுச் சிறப்புக்கள்

உலகப் புகழ் பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை 
அறிந்து கொள்ளலாம்.
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும்
 கூறுகிறார்கள்
கோயிலின் சிறப்பு:இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படும். அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் இங்கு தங்கிச்செல்வோரே அதிகம். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.
வரலாறு:நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், 
தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற 
பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என
 உருமாற்றம் பெற்றன.
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் 
கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான
 வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து 
கிடக்கின்றது.
இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல 
எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர்.
மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.
விழாக்கள்:இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அழகிய சித்திரத்தேரில் பவனி வரும் ரதோற்பவமும் 5ம்திருவிழாவாக குடைத்திருவிழாவும்,7ம் திருவிழா அன்று 
வாயுபட்சணி என்ற சர்ப்பத்தில் வீதியுலாக்காட்சியும்,10ம்,13ம் திருவிழா கையிலைக்காட்சியும் 10ம்திருவிழா இரவு திருமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலாவும்,11ம்திருவிழா காலை ஆலயவரலாறுடன் தொடர்புடைய கருட/சர்ப்பபூசையும் அன்று இரவு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் வீதியுலாவும்,13ம்திருவிழா இரவு 
சப்பரத்திருவிழாவும்,
15ம்திருவிழாவாக அம்பாள் ஊர்மனையூடாக வெளியே காவிச்சென்று ஊரின் மேற்குப் பக்கமாக இருக்கும் கங்காதரணி தீர்தக்கேணியில் தீர்த்தமாடல் விழாவும்,16ம்நாள்விழாவாக அம்பாள் அழகிய மின்குமிழிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி
 கடலினிலே தெப்பத்திருவிழாவும்,மகோற்பவகாலங்களில் நடைபெறும் சிறப்பான விழாக்களாகும்.இங்கு அது மட்டுமல்லாது நவராத்திரி, கேதாரகௌரி விரதம், வரலட்சுமி விரதம் ஆடிப்பூரம்,கந்தசஷ்டி,பிள்ளையார் பெருங்கதை,திருவெம்பாவை போன்றன மிகச்சிறப்பாக 
செய்யப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்தநாள் வாழ்த்து செல்வி மதிவாணன் லதா 11-07-20

ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட 
அன்புப் புதல்வி  செல்வி  மதிவாணன் லதா 
அவர்களின் பிறந்த நாள் .11-07-2020..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் .கொண்டாடுகின்ரர்
இவரை.அன்புஅப்பா அன்புப் அம்மா சகோதர்கள் 
 மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று நோய்நொடிஇன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


நாட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் பிதிர் கடன்களை நிறைவு செய்ய அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலோரங்களை அண்டிய பகுதிகளில் பிதிர் கடன்களை நிறைவு செய்வதற்கு இலங்கையில் இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உள்ளதால் இலங்கையிலும் மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடித்த வண்ணம் தமது நாளாந்த நடவடிக்கைகளை
 முன்னெடுத்து வருகின்றனர்.இந்த 
நிலையில் குளங்கள் மற்றும் கடலோரங்களில் பிதிர் கடனை செலுத்துவதற்கு சுகாதாரத் தரப்பினர் அனுமதி மறுத்திருந்தனர்.இதனையடுத்து எதிர்வரும் 20ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் பிதிர் கடனை
 நிறைவேற்றல் தொடர்பில் சிக்கல் நிலை காணப்பட்டது.இது தொடர்பில் அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த 
விடயத்தை நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.இதன் பிரகாரம் குளங்கள் குறுகிய பரப்பை
 கொண்டுள்ளதால் கொரோனா தொற்று 
பரவும் சாத்தியம் அதிகம் காணப்படுகிறது.
எனவே, அதற்கு பதிலாக கடலோரங்களில் அத்தகைய கிரிகைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் (வண்ணம்) 07.07.120

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்களின்  பிறந்தநாள்.07.07.2020 ,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் 
குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று 
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல
சீரும்சிறப்புடன் நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மயூரன் அஜிரகன் 04-07-20

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும்கனடா ரொறன்றோவை  வதிவிடமாகக் கொண்ட 
திரு திருமதி மயூரன்&ஜெய்யந்திமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜிரகன் 
    அவர்களின் ஐந்தாவது  அகவை 04/07/2020/  இன்று  தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகின்றார் இவரை 
அன்பு அப்பா,அன்பு அம்மா,அக்கா  ,அம்மம்மா அண்ணா, மைத்துணர், மற்றும் உறவினர்கள்  
சுவீஸ்  தாத்தா  அப்பாம்மா மாமா மாமி மார் குடும்பத்தினர்கனடா சுவிஸ்  உறவுகள் வாழ்த்து கின்றனர்  இவர் ஓம் சக்தி !! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திருஅருளாலும் நோய்நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சீரும் சிறப்புடன் பல்லாண்டு
 பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம், ஓம்சக்தி!ஓம்சக்தி!ஓம்சக்தி !!!
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் 
வாழ்த்துகின்றன,,

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ரகு ( Raku ) துலாபா 04.07.20

யாழ் கோண்டாவிலை  பிறப்பிடமாகவம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி .ரகு  ( Raku )  துலாபா அவர்களின்  பிறந்தநாள்.04.07.2020 ,இன்று .இவரை .அன்பு மகன் மார் அத்தான் சகோதரர்கள் தங்கை அக்காமார்  அண்ணா அண்ணி பெறாமக்கள் 
பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி  குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நல்லூர் முருகன்  
 இறை அருள் பெற்று 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.