தெரிந்துகொள்ளுங்கள் நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுவதன் உண்மை கதை.

துர்கா தேவியைப் போற்றி வழிபடும் திருவிழாவான நவராத்திரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவது தான் இந்த 9 நாட்கள். அனைவரும் தங்கள் வீட்டிற்கு துர்கா தேவியை வரவேற்க மிகவும் உற்சாகமாக தயாராகி உள்ளனர். சக்தி என்றும் அழைக்கப்படும் துர்கா தேவியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு செப்டம்பர் 26, 2022 அன்று தொடங்கி, அக்டோபர் 5, 2022 அன்று முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும், பக்தர்கள் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களைப் போற்றி வழிபடுகிறார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று நவராத்திரி கொண்டாட்டம் 
நிறைவடைகிறது.
9 நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவி மகிஷாசுரனை வதைத்தாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், நவராத்திரிக்கு ஒன்பது நாட்களுடன் தொடர்புடைய முழு கதையும் மற்றும் நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த பதிவு. இப்போது நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடுவதற்கான 
காரணத்தைப் பற்றி பார்ப்போம்.
நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?நவராத்திரி பண்டிகையின் போது,​​மக்களை துன்புறுத்திய தீய மகிஷாசுரனை வதம் செய்து துர்கா தேவி பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாகவே ஆண்டுமோறும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
களிமண் வீடுகளுக்கு அதிகரிக்கும் வரவேற்புபுதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அக்டோபர் 02 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது…புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அக்டோபர் 02 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது.
சாகா வரம் பெற்ற அசுரன்மிகவும் சக்தி வாய்ந்த இந்து கடவுளான பிரம்மா, மகிஷாசுரனுக்கு சாகா வரத்தை அளித்தார். மகிஷாசுரன் ஒருபோதும் இறக்கமாட்டான் என்பதை பிரம்மா உறுதிப்படுத்தினார்.
 இருப்பினும், இந்த வரத்தை ஒரே ஒரு நிபந்தனையின் அடிப்படையில் பிரம்மா வழங்கினார். அதாவது, மகிஷாசுரனை
 வெல்லக்கூடியவர்
ஒரு பெண்ணாக மட்டுமே இருக்க முடியும். எந்தப் பெண்ணாலும் தன்னைக் கொல்ல முடியும் என்று நம்பிக்கையின் அடிப்படையில், 
மகிஷாசுரன் அந்த வரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். சில வருடங்கள் கடந்த பிறகு, மகிஷாசுரனும் அவனுடைய சீடர்களும் காலப்போக்கில் வலுப்பெற்றதால், பூமியில் மனிதகுலத்தைத் தாக்குவதையும், துன்புறுத்துவதையும் எந்த தெய்வத்தாலும், தேவர்களாலும் தடுக்க
 முடியவில்லை.
துர்கையின் தோற்றம்மகிஷாசுரனின் அட்டகாசங்களையும், அவனால் மனிதர்கள் துன்புறுவதையும் பார்த்த பிறகு, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து சக்தியின் ரூபமான துர்கா தேவியை உருவாக்க முடிவு செய்தனர். உலகிலேயே சக்தி வாய்ந்த ரூபமாக உருவாக்கப்பட்ட துர்கா தேவி, மகிஷாசுரனை போர்களத்தில் சந்தித்து போரிட்டார். மகிஷாசுரனை வதைப்பதற்காக தேவர்கள் அனைவரும் துர்கா தேவிக்கு ஏராளமான ஆயுதங்கள் கொடுத்தனர்.

அசுரனை தோற்கடித்த துர்கா தேவிவலிமை வாய்ந்த மகிஷாசுரன், துர்கா தேவியுடன் பத்து நாட்கள் வரை தாக்குபிடித்து தொடர்ந்து போரிட்டான். இந்த பத்து நாட்கள் துர்கா தேவிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. ஏனென்றால், இந்த நாட்களில், துர்கா தேவியை திசைதிருப்புவதற்காக மகிஷாசுரன் தொடர்ந்து தனது உருவத்தை மாற்றிக்கொண்டே இருந்தான். ஆனால், கடைசியாக அவன் தனது உருவத்தை எருமையாக மாற்றியபோது,​​துர்கா தேவி அவனை கொன்று வதம் செய்ய முடிந்தது. இந்த வழியில் தான், துர்கா தேவி மகிஷாசுரனை தோற்கடித்து அசுரர்களை வென்றாள்.

நவராத்திரி கொண்டாட்டம்நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சில பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். விழாக்காலங்களிலும் கர்பா என்று நடனம் ஆடுவது ஏராளம். சிலர் நவராத்திரியின் போது தண்டியா 
ஆடுவார்கள்.
பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவரும் இந்த ஒன்பது நாட்களும் நவராத்திரியை முழு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுபவிக்கிறார்கள். மகிஷாசுரன் மாதிரியான அரக்கனிடம் இருந்து மக்களை காப்பாற்றிய துர்கா தேவியின் சக்தியை போற்றி வழிபடும் இந்த நவராத்திரி வடமாநிலங்களில் தசராவாக வெகு விமர்சையாக 
கொண்டாடப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




எங்கள் குலதெய்வத்திற்கு மாதம் ஒரு முறை முக்கியம் செய்ய வேண்டியவை

<

நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறை முக்கியம்  
சென்று வரவேண்டும்.
ஒரு வேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரிய பணத்தை அனுப்பி விடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர் நட்சத்திரம், ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள் (பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்) நீங்கள் 
வருடத்துக்கு ஒரு முறை நேரில் சென்று பூஜை செய்து கொள்ள வேண்டும். குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களது மணிப்பர்சில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.ஒருவருக்கு குலதெய்வம் பத்ரகாளி அம்மன் என வைத்துக் கொள்வோம். அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அவர் தனது குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்து விட்டால் அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால் இந்த நிலை. எனவே தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திரு சுதாகரன்,செல்வி சபீஸ்னா 28.09.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா
அவர்களின்  பத்தாவது   பிறந்த நாள் ,
 28.09.2022  இன்று  இவர் தனது இல்லத்திற்கு அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுடன் தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா 
அன்பு அம்மாஅன்புத்  தாத்தா அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். நவற்கிரி அம்மன் சன்னதிமுருகன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




காத்திருக்கும் அதிர்ஷ்டம் நவராத்திரி ஆரம்பத்தில் இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர்

2022 ஆண்டின் சாரதா நவராத்திரி செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5 ஆம் தேதி முடிவடைகிறது. ஜோதிடத்தின் படி, கலசம் வைக்க சிறந்த நேரம் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 6.20 மணி முதல் 10.19 மணி 
வரை ஆகும்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படுகின்றன. நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து துர்கா தேவியை வழிபடுவதன் மூலம், வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சனைகளில் இருந்தும்
 விடுபட முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் துர்கா தேவி ஒவ்வொரு வாகனத்தில் பயணம் செய்வார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் துர்கா தேவி யானை மீது பயணிக்கிறார். ஜோதிடத்தின் படி, இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சிலருக்கு மோசமான பலனும் கிடைக்கலாம். இப்போது 12 ராசிக்குமான நவராத்திரி ராசிப்பலன்களைக் காண்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டும். ஆனால் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலம். இக்காலத்தில் செலவுகளை பார்த்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். துர்கா தேவியின் அருளால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு துர்கா தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். அனைத்து வேலைகளையும் பொறுமையாக முடிப்பீர்கள். வணிகர்களுக்கு அம்மனின் அருள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை 
வாய்ப்புக்கள் கிடைக்கும்
மிதுனம்மிதுன ராசிக்காரர்களும் துர்கையின் அருளைப் பெற்றிருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்நவராத்திரி காலத்தில் கடக ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். உங்கள் மாமியார்-மாமனாருடனான உறவு சமூகமாக இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால், அம்மனின் அருளால் அது நிறைவேறும். உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் மன அழுத்தம் உங்கள் வேலையை மோசமாக 
பாதிக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். வேலையுடன் குடும்பத்தையும் இக்காலத்தில் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். துர்கா தேவியின் அருளால் இக்காலத்தில் உங்களின் வேலைகள் அனைத்தும் சமூகமாக முடிந்து, புகழ் அதிகரிக்கும். காதலிப்பவர்களிடையே காதல் அதிகரிக்கும். உங்கள் உறவு இனிமையாகவும் 
வலுவாகவும் இருக்கும். இக்காலத்தில் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.
கன்னிகன்னி ராசிக்காரர்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நிறைய நேரத்தை செலவிடுவார்கள் மற்றும் அவர்களின் 
முழு ஆதரவைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை தேவைப்படுகிறது. 
திருமணமான தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஆனால், இக்காலத்தில் நிதி முடிவுகளை அவசரப்பட்டு 
எடுத்துவிடாதீர்கள்.
துலாம்துலாம் ராசிக்காரர்கள் துர்கா தேவியின் அருளால் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். துர்கையின் அருளால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை நேர்மறையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவைப் பேண அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும், வேலையில் சில சிக்கல்களை சந்திக்கலாம். உங்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது. துர்கா தேவியின் அருளால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவை வலுப்படுத்தி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள்.
தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு நவராத்திரி காலத்தில் மனக்கவலைகள் நீங்கி காரியங்கள் சுமூகமாக நடக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். சமூக தொடர்புகள் அதிகரிக்கும். உங்களின் இமேஜ் இக்காலத்தில் மேம்படும். துர்கா தேவியின் அருளால், இந்த காலத்தில் உங்கள் வீட்டில் மன அழுத்த சூழ்நிலைகளை எளிதில் கையாள முடியும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை 
எதிர்பார்க்கலாம்.
மகரம்மகர ராசிக்காரர்கள் நவராத்திரி காலத்தில் அம்மனின் அருளால் பல முன்னேற்றங்களைக் காண்பார்கள். நேர்மறை எண்ணங்களால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடனான உறவு
 நன்றாக இருக்கும்.
கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள்
 நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உங்களின் முதலீடுகளால் நிதி நிலைமை 
மேம்படும்.
மீனம்மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். துர்கா தேவியை வழிபட்டால் நேர்மறையாக இருப்பீர்கள். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்க விரும்புர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட 
வாய்ப்புள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா கொடியேற்றம் ஆரம்பமானது. 24.09.22

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்., வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன்
 24.09.2022 இன்று  வெகுசிறப்பாக ஆரம்பமானது.
கிரிஜைகள், வசந்தமண்டபப் பூஜை என்பன இடம்பெற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம் வந்தார்.
சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ஆம் திகதியும், தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ஆம் திகதி காலையும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>








கொலுக் காட்சியில் நவராத்திரியின் ஒன்பது படிகளின் படி தத்துவம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். மனிதன் படிப்படியாக உயர்த்திக் கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம்.
இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம்.
 முதலாவதுபடி:
ஓரறிவு உயிர்ப் பொருட்களான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
இரண்டாவதுபடி:
இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்
மூன்றாவதுபடி:
மூன்றறிவு உயிர்களான எறும்பு, ஊறும் உயிரின பொம்மைகள்
நான்காவதுபடி:
நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்
ஐந்தாவதுபடி:
ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள்
ஆறாவதுபடி:
ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்
ஏழாவதுபடி:
மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்
எட்டாவதுபடி:
தேவர்கள் உருவங்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக் பாலகர்கள் முதலிய பொம்மைகள்
ஒன்பதாவதுபடி:
பிரம்மா, விஷ்ணு, சிவன், மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி பொம்மைகள் (ஆதிபராசக்தி நடுவில்) இருத்தல் வேண்டும்.
இதன் விளக்கம் அளித்தவர் சிவஶ்ரீ சோமாஸ்கந்த குருக்கள்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



இடம்மாறும் சனி பெயர்ச்சி சிலருக்கு எதிர்பாராத அதிஷ்டம் சிலர் கவனமாக இருக்க வேண்டும்

சனிபகவான் 30 ஆண்டுகாலத்திற்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. அள்ளிக்கொடுக்கப்போகிறார் 
சனிபகவான். அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான சோதனைகளையும் தரப்போகிறார். சனிபகவான் பயணத்தால் யாரெல்லாம் பயணடையப்போகிறார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் 
என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யும் ராசிக்காரர்களுக்கும், அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியாக பயணம் செய்யும் ராசிக்காரர்களுக்கும் சில சோதனைகளையும் படிப்பினைகளையும் தரப்போகிறார். யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
கடகம்
கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. காதலிப்பவர்கள் கவனம். தேவையற்ற தொடர்புகள் ஏற்படும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி பாதிப்பு ஏற்படுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வண்டி வாகனம் வாங்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. ஏழரை சனி காலத்தில் சனிபகவான் கொடுத்த சோதனைகளையே தாங்கி விட்டீர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாதா? கடவுளை நம்புங்கள் நிச்சயம் கை கொடுப்பார்.
மகரம்
பொதுவாகவே ராசியில் இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமரும் போது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும். அதே நேரத்தில் ஏழரை சனியில் பாத சனி என்பதால் பதற்றம், பயத்தை குறைத்து மன நிம்மதியை தருவார்.
கும்பம்
பொதுவாகவே ராசியில் சனிபகவான் ஜென்ம சனியாக அமரும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ராசியில் அமரும் சனி ஜென்ம சனி உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.
மீனம்
12ஆம் இடம் விரைய ஸ்தானத்தில் சனி அமரும் போதே ஏழரை சனி ஆரம்பிக்கும். தேவையற்ற விரையங்களை கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். மீன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு முதல் ஏழரை ஆரம்பிக்கிறது.
மீன ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. தேவையற்ற விரையங்களைத் தருவார் சனிபகவான். சுப விரையமாக மாற்றுங்கள். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஏழை எளியவர்களுக்கு தானங்களை கொடுப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். யாருக்காவது அன்னதானம் கொடுப்பது நல்லது.
எதிர்பார்க்காத பண வரவு
கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனிபகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு 11வது வீட்டில் அமர்வது சிறப்பு. நிறைய பண வரவு வரும். செய்யும் தொழிலில் மிகப்பெரிய லாபத்தை தரப்போகிறார். தொழில் தொடங்கலாம். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருவீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் அற்புத பலன்களைத் தரப்போகிறார். பொருளாதாரத் தடை விலகும். சனிபகவான் அள்ளிக்கொடுக்கும் காலத்தில் ஆணவமாக நடந்து கொள்ள வேண்டாம்.
திடீர் ஜாக்பாட் யாருக்கு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விலகுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். எதிர்பார்க்காத திடீர் ஜாக்பாட் அடிக்கும். இழந்த செல்வம் திரும்ப வரப்போகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். கண்டச்சனி, அஷ்டம சனியை கடந்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித் தரப்போகிறார். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். திடீர் பண வரவும் வரும். துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி விலகி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் தொழில் வளர்ச்சியடையும் 
புது வீடு கட்டுவீர்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி ஆணவம் அழிக்கும் செவ்வந்திபூவின் மகிமை

செவ்வந்தியின் மகிமைகள்:கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவழிபாட்டில் பிற பொருட்களை காட்டிலும் பூக்கள் தான் முக்கிய பங்கு வகுக்கின்றன.பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லையெனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்தனை புனிதமானது.
புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது.
மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் 
அளிக்கப்படுகிறது.
ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும், வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா? என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க
 முடியாது. ஆனால் விஷ்ணுப்பெருமானுக்குமாலையாக
 கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது 
லட்சம் பொன் 
மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.அந்த வகையில், கடவுளுக்கு 
அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது 
செவ்வந்தி மலர் ஆகும்.
ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை யாதெனில், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்ற மலர்களை மரு உருவாக்கம் 
செய்ய முடியும்.
இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது. செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.
மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் 
செவ்வந்தி உள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது ஒன்பதாவது 
அகவை நாளை 12.09.2022. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் மற்றும் சகலதெய்வங்களின்   இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று வழ 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்   
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ......   ..
   வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு
என உளமார ..... வாழ்த்துகின்றோம்  ...... 
இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா
 ...வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா 24.09.22 ஆரம்பமாகவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 24-09-2022.ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய முன் ஏற்பாடு கூட்டத்தில் முடிவு 
செய்யப்பட்டுள்ளது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் அல்வாப்பிள்ளை சிறி தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற மகோத்ஸவ கால முன் ஏற்பாடு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முடிவில் ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ஊடக அறிக்கையில், “சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது
 அவசியம் என்று கருதப்படுகிறது மற்றும் பக்தர்கள் ஆசாரம் முத்திரையாக கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக் 
கொள்ளப்படுகிறார்கள்.
கோவில் வளாகத்தில் உணவு கையாளும் நிலையங்களை அமைப்பவர்கள், நாட்டின் எந்தப் பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட கேன்டீன் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
பதிவுசெய்யப்பட்ட கேன்டீன் அமைந்துள்ள பகுதிக்கான சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழை அனைத்து உணவு கையாளுபவர்களும் தங்களுடன் எடுத்துச் 
செல்ல வேண்டும்.
பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீரை மட்டுமே பயன்படுத்த 
வேண்டும்.
கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள இனிப்பு கடைகள் மற்றும் கச்சான் விற்பனையாளர்கள் இந்த இடங்களில் உற்பத்தி செய்ய முடியாது. விற்பது (கச்சான் வறுத்தல் மற்றும் இனிப்புகள் செய்வது) மட்டுமே செய்ய முடியும், அன்னதான கணிதத்தில் பணிபுரிபவர்கள் மருத்துவ சான்றிதழ்
 பெற்றிருக்க வேண்டும்.
கடை உரிமையாளர்கள் அனைவரும் தினமும் வரும் கழிவுகளை வெளியில் வீசாமல் சேகரித்து பிரதேச சபை வாகனம் மூலம் 
அப்புறப்படுத்த வேண்டும்.
கோயில் வளாகத்தில் பச்சை குத்துதல், காது குத்துதல் போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை, போதைப்பொருள், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி குருக்காட்டு விநாயகர் தரிசனம், 2-ஆம் தேதி வெண்ணெய் உற்சவம், 3-ஆம் தேதி துகில் உற்சவம், 4-ஆம் தேதி சர்ப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும் அக்டோபர் 5-ஆம் தேதி கம்சன் துறைமுகத் திருவிழாவும், 6-ஆம் தேதி வேட்டைத் திருவிழாவும், 7-ஆம் தேதி சப்பரத் திருவிழாவும், 8-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், 8-ஆம் தேதி சமுத்திரத் தேர்த் திருவிழாவும் ந
டைபெறவுள்ளது.
ஒக்டோபர் 8ஆம் திகதி காலை கேணித் தீர்த்த உற்சவமும், மாலையில் கொடியேற்றமும் நடைபெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> >



யாழ் தொண்டைமனாறுசெல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா09.09.22

ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி
 பூர்வமாக இடம் பெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியழித்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பல்வேறு காவடிகளும் கந்தனை நோக்கி வந்த 
வண்ணமிருந்தன.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் 
ஆரம்பமானது.
நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நாளை மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் இடம்பெறவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் ((ராஜன்) 09,09,22

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கோப்பாயில் வசித்தவரும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்  ராஜேஸ்வரன்(ராஜன்) அவர்களின்  பிறந்தநாள்.09.,09,2022. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள்  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா
 பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி   ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள்பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று .
 நோய் நொடி இன்றி  பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி 
வாழ்கவாழ்க வென நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,வாழ்த்துகின்றன 
வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



நாம் விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன என்ன

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது
2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும்
 பூச கூடாது
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் 
பார்த்து பூசவேண்டும்
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது
10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது
11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது
12.விபூதியை கீழே சிந்தக்கூடாது
13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் 
நின்று வாங்ககூடாது
14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாத
15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது
16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட 
கொடிய பாவசெயல்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேர்த் திருவிழா .07.09.22

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக 
இடம்பெற்றது.
இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை 
ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க, சர்வமங்கள ஆபரணங்கள் மினு மினுங்க அலங்கார நாயகியாக அழகிய பீடத்தில் உள்வீதியில் மெல்ல மெல்லத் திருநடனத்துடன் அசைந்தாடி வந்து காலை-9 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளினாள்.
சித்திரத் தேர் தடையின்றி வீதி வலம் வர சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டது. தொடர்ந்து அபிராமிப் பட்டர் அருளிய அபிராமி அந்தாதியும் ஓதப்பட்டது. ஆலய முன்றலில் குவிக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய்களும் உடைக்கப்பட்டன.
விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் சித்திரத் 
தேர்ப் பவனி ஆரம்பமானது.
ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து வடம் தொட்டிழுத்தனர். சித்திரத் தேர் பவனியின் பின்னே 200 இற்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், 150 இற்கும் மேற்பட்ட மாதர்கள் அடியளித்தும் துர்க்கை அம்பாளை மெய்யுருக வழிபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், சப்பாணிக் காவடி, செதில் காவடிகள் முதலான வகை வகையான காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளின் அருள்வேண்டித் துதி செய்தனர். அத்துடன் மங்கையர்கள் பலரும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும், பாற்காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளை நாடி வரங்கள் 
வேண்டினர்.
சித்திரத் தேர்ப் பவனியின் பின்னால் பல அடியவர்கள் அம்பாளின் புகழைப் போற்றிப் பஜனை பாடியவாறு கலந்து கொண்டனர். இவ்வாறு பஜனை பாடிய அடியவர்களில் பலரும் திடீரெனத் தம்மை மறந்து பரவச நிலையில் ஆடிய காட்சி பக்திப் பரவசத்தைப் பறைசாற்றுவதாய்
 அமைந்திருந்தது.
சித்திரத் தேர் முற்பகல்-10 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து பெருமளவான அடியவர்கள் அர்ச்சனை செய்தும் துர்க்கை அம்பாளை வழிபட்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள திருமுறை மடத்தில் சிறப்புப் பண்ணிசைக் கச்சேரியும் ஏற்பாடு 
செய்யப்பட்டிருந்தது.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த அடியவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினர், ஆலயத் தொண்டர்கள், சாரணர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தெல்லிப்பழைப் பொலிஸாரும் ஆலய வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் 
ஈடுபட்டிருந்தனர்.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலய நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கு விசேட அன்னதானம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அடியவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் 
செல்லும் வீதிகள் பலவற்றிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுக் குளிர்மைமிகு பானங்கள் பரிமாறப்பட்டன.
இன்றைய தேர்த் திருவிழாவில் யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டிருந்தனர்.
துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியைகளை சிறப்பாக ஆற்றினர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தது.
இதேவேளை, ஆவணி ஓண நன்னளான நாளை வியாழக்கிழமை(08.9.2022) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை-8.30 மணியளவில் துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் சிறப்பாக நடைபெறும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







Powered by Blogger.