உலகின் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை பெற்ற தாய் 64 வயதில் காலமானார்

உலகில் முதல் சோதனைக்குழாய் குழந்தை பெற்ற தாய் 64 வயதில் காலமானார்.

பிரிட்டனைச் சேர்ந்த லெஸ்லி ப்ரெளன் (64). இவருக்கு முதல்முறையாக கடந்த 1978ஆம் செயற்கை கருவூட்டல் மூலம் சோதனை குழாய் குழந்தைக்கான சோதனை செய்யப்பட்டது.

டாக்டர்கள் ரூபர்ட்எட்வர்ட், பேட்ரிக் ஸ்டெப்டேயே ஆகியோர் சோதனைக்குழாய் மூலம் லண்டன் பிரிஸ்டல் மருத்துவமனையில் லெஸ்லி ப்ரெளனுக்கு வெற்றிகரமாக பிரசவம் செய்தனர்.

1978ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி லெஸ்லி ப்ரெளன், லூயிஸ்பிரெளன் என்ற பெண் குழந்தை பெற்றார். தற்போது சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ்ப்ரெளனுக்கு 34 வயதாகிறது.

இந்நிலையில் சோதனைக்குழாய் குழந்தையை பெற்ற தாயார் லெஸ்லி ப்ரெளன் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார். தனக்கு பிரசவம் நடைபெற்ற பிரிஸ்டல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லெஸ்லிப்ரெளன் கடந்த 6ஆம் திகதியன்று இறந்ததாக அவரது மகள் லூயிஸ்ப்ரெளன் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.