மகா கும்பாபிஷேகம் கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின்

  கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று 29.01.2018 இடம்பெற்றது.
கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பி. திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.

அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வழிபாடுகளில் 
கலந்து கொண்டனர்.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்தம்பி சபேசன் .28.01.18

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது
 கனடா நாட்டில்வசிக்கும்
திரு  சின்னத்தம்பி  சபேசன் அவர்களின் பிறந்த நாள் .28.01.2018.  இன்று 
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறைஅருள் பெற்றுசகல நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம் .23.01.18

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்  
கிளிநொச்சி. கந்தபுரத்தை
 வாழ்விடமாகவும்தற்போது              
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ) 
அவர்களின்  பிறந்த .  23.01.2018  இன்று 
 இவரை  அன்புக்கணவர்  அன்பு பிள்ளைகள்  அன்புள்ள  அம்மா  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்ரை  இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
              நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
   நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
          இணையங்களும்  
            வாழ்த்துகின்றன. 
                   வாழ்கவளமுடன் ..

¨ இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு .துரைராஜா சந்திரன். 23.01.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் தற்போது   ஜெர்மனியில் வசிக்கும் 
 திரு .துரைராஜா .சந்திரன்(குட்டி) அவர்களின் பிறந்தநாள்.23.01.2018 இன்று 
 இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து,இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு .... 
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் .... 
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன்
 எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையங்களும்வாழ்த்துகின்றன  
வாழ்க வளமுடன்
¨ இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்த நாள்வாழ்த்து,திரு .கந்தசாமி . 22.01.18

யாழ்  மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும்  கொழுப்பு.தற்போது  சுவிஸ்  சூரிச்சில்    வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ் 
கலைஞர் அவர்களின் 
 பிறந்தநாள்  22.01..2018. இன்று .இவரை
அன்பு மனைவி அன்பு  பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும்  
மானிப்பாய் மருதடிப்  பிள்ளையார்
   இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
¨ இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலசுந்தரம் 21.01.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார்க் நோர்வெ  நாடுகளில் வசித்தவரும் தற்போது ஓட்டுமடத்தை வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி  பாலசுந்தரம்   பூபாக்பாக்கியலச்சுமி  (கிளி )    
அவர்களின் எழுவதாவது  பிறந்த நாள்  ,21.01.2018.இன்று .தனது பிறந்தநாளை பிரமாண்ட மான திவ்ய  மஹால்  மண்டபத்தில்.கொண்டாடுகின்றார்   
இவரைஅன்புப்பிள்ளைகள் மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
 குறிப்பு .மண்டபத்திற்கு வரும்வழி   திவ்ய  மஹால் 
இல. 1001.வண்ணார்பண்ணை கே .கே .எஸ்.வீதி . 
 யாழ்ப்பாணம் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் .19.01.18

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட 
திரு திருமதி  அருளானந்தம்  (றதி) அவர்களின் 
 பிறந்த நாள்  ,19.01.2018.இன்று ..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார்
 உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி பிள்ளையார் இறை அருள் பெற்று 
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   இறை அருள் பெற்று  மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள - இன்று  இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
நவக்கிரி .கொம் .
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்து கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா .19.01.2018

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
 திரு திருமதி  தயாவரன் ( தயா . சுசி) தம்பதிகளின் 
செல்வப்புதல்வி  ஜெனிஷா  .
அவர்களின் பிறந்தநாள் 19.01.12018 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு
சிறப்புறவாழ்வாய்
உலகமும் உறவுகளும் போற்ற 
சகல பல் கலைகளும் கற்று 
நித்தம் ஒளியோடு
நிறைந்த வாழ்வோடு
வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க!
 பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் நவற்கிரி இணையமும் http://lovithan.blogspot.ch/ 
இணையமும். நிலாவரை இணையமும்
 வாழ்த்துகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திருமண நாள் வாழ்த்த8 திரு திருமதி. நற்குணகுலசிங்கம்19.01.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2018.இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும் 
இவரை நவக்கிரி மாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று
தம்பதியினர்   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்   
  உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம் 
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய    பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.18.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2018.இன்று  .பதின்ஆறாவது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
                          நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
              இணையங்களும்  
                       வாழ்த்துகின்றது 
திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமோ அல்லது நாமே பார்த்து தீர்மானித்துக் கொள்ளும் காதல் திருமணமோ நமக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது ஒரு ஆச்சர்யம் கலந்த அதிசயம் தான்.
                       .வாழ்க வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.18.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ஆறாவது  திருமண நாள்  19.01.2018..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
வாழ்த்துகின்றனர்
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினர்   நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்  சிறப்புடன் வாழ்கவென பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள்வாழ்து கலைஞர் திரு தயாநிதி 18.01.18

  திருவாளர் தயாநி  நடிகர் எழுத்தாளர் என  பணியாற்றிவரும் மூத்தகலைஞர் மதிப்புக்குரிய திரு  தயாநி அவர்களின் பிறந்தநாள் 18.01.2018  இன்று இவரை குடும்பத்தினர்  உற்றார், உறவினர் ,நன்பர்கள் 
,கலையுக நண்புர்கள்   இவரை 
   இறை அருள்  பெற்று
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  நோய்   நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமணவாழ்த்து திரு திருமதி மன்மதன் தம்பதியினர்களின் 18.01.18

 திரு திருமதி மன்மதன் தம்பதியினர்  கலையுலகில் சிறக்க வழிதேடி நன்னை ஓர் நிலைப்படுத்தி நிற்கின்ற  நடிகர் இயக்குனர் என பல்துறையில் சிறந்து தனது நடிப்பின் மூலம் சிறந்து நின்று வந்த பாகிஸ்கி   தம்பதியினரது (3வது) திருமணவாழ்த்து 18.01.2018 இன்று   இவர்களை   குடும்ப  உறவினர்கள்   உற்றார் உறவினர்  நண்பர்கள்   வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  தம்பதியினர்   இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி இனை பிரியாது  அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாம் சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது .?

சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு 
ஆளாக நேரிடும்.
முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால் தான் மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிவலிங்கத்தை எடுத்து வைப்பதற்கு முன்பாக சிவலிங்கத்தின் காலடியில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் அதனை கங்கை நீர் கலந்த சுத்தமான நீரில் முக்கி எடுக்க வேண்டும். கல் வடிவில் இருந்தால் அதன் மீது கங்கை நீர் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட பாலை சிவலிங்கத்திற்கு ஊற்றி பூஜை செய்யக் கூடாது. ஐஸ் பாலில் தான் பூஜை செய்ய வேண்டும்.தினசரி சிவலிங்க வழிபாட்டிற்கு முன்பு 3 வரி சந்தன பட்டையை லிங்கத்தின் மீது பூசவும்.சிவலிங்கத்தை வீட்டில் வைக்க வேண்டும் என்றால், தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் செய்த நாகயோனி நிழலில் வைக்க
 வேண்டும்.
வீட்டில் சிவலிங்கத்தை தண்ணீர் ஊற்றிருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லிங்கத்தின் மீது தண்ணீர் படவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிவலிங்கத்தை 
மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது. அத்துடன் கௌரி அல்லது விநாயகரின் களிமண் சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவலிங்கத்திற்கு பூஜை செய்த எந்த ஒரு பொருளையும் பிரசாதமாக உண்ணக் கூடாது.
எப்போதும் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்ய்யுங்கள்.தினமும் சிவலிங்கத்தை துடைத்து சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை தவறாமல் செய்தால் 
சிவனின் அருள் கிட்டும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழா

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருவாசக விழாவின் போதான சில காட்சிகளை இங்கு இணைத்துள்ளேன்.
திருவாசகம் என்னும் தேன் என்ற பொருளில் எனது தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் போது உவா வெல்லச 
பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் 
இ.சர்வேஸ்வரா, உடுவில் மகளில் கல்லூரி ஆசிரியா் செந்தூர்ச்செல்வன், நவக்கிரி அ.மி.த.க. பாடசாலை ஆசிரியர் சைவப்புலவர் சசிலேகா ஆகியோர் கருத்துரைகளை
 வழங்கினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு பாக்கியராஜா கணேசலிங்கம்,17.01. 18

யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  அவர்களின்  
 பிறந்தநாள்  17.01..2018. இன்று .இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு  மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்இவரை 
  வாதரவத்தைப்பிள்ளையார் இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




உழவர்களின் மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 மாட்டுப் பொங்கல்  உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்குவெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில்
 பயன்படும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை 
கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம்,
 குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்புசெட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த 
பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலே' பொங்கல் மாட்டுப் பொங்கல் " என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோசித்து குதூகலிப்பார்கள்
. தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி
 கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக " கொண்டடுகின்றனர். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச்சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத் தெருவாக 
விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும்
 சமாச்சாரமாயிற்றே
உழவர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தைத் பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் 
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் 
மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் 
விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் 
நீங்குக கயமை நிலவுக வாய்மை 
நல்குக வெற்றி நலிக தீதென்றும் 
நிறைக நிம்மதி நீடுக ஆயுள் 
நிலமே செழித்து நீர்வளம் பெருகுக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ 
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்! 
சூரியப் பொங்கல் 
தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரிய பகவானை போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திரு நாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மெருகோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.
 பெண்கள் தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( நான் 126 புள்ளி வச்சு இல்ல கோலம் போட்டேன் போன்ற பறைசாற்றல்களும் கூட இருக்கும். ) தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டுவந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள். 
பின்னே இதெல்லாம் ஏனோதானோவென செய்யமுடியாது இல்லையா ? வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசனிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா என தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்து முத்தாக 
நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல் மென்மையாகப் பறித்துக் கொண்டு வந்து சாண உருண்டைகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுது புலராத வேளையில்தான். 
பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியை கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக் கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம் உள் அறை, மாடிப்படி, மொட்டை மாடி, முற்றம் 
என வீட்டில் ஒரு இடம் பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளை காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் 
என்ன குதூகலம்! 
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறான். அதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும். 
''பரியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்குமீசைக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப் படுத்தி வணங்குதல் கடைப் பிடிக்கப்படுகிறது.
 எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சளைத் தரவும் வேண்டி
 பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள். 
downloadசூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில் தான் பெரும்பாலும் அப்படி… நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் தான்.) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறி போல தோகையுடன் கூடிய கரும்புகளை 
நிறுத்தி இருப்பார்கள். அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு, கரும்புச் சாறில் செய்தவெல்லம் இட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க
… ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய " பொங்கலோ பொங்கல் " என்ற உற்சாக குரல்கள் பீறிட பொங்கல் தயார். குடும்பமே கூடிநிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து,
 கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல்செய்து வணங்குவார்கள்
. எண்சாண் உடம்பும் பூமிதனியில்பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி 
உண்டு மகிழ்வார்கள். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தமிழறிஞர் யாழ் ந.சி.கந்தையா பிள்ளையின் திராவிடமென்றால் என்ன

மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய
 இலக்கியங்களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்று வந்தது? அதன் ஆதிப் பொருள் யாது?
இப்பெயர் முதல் முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகிறது. அவர் தென்னிந்தியாவின் கிழக்குக் கரையில் 
வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக் குறிக்க ‘ஆந்திர திராவிட பாஷா ’
எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியாவின் தெற்கே வழங்கும் கன்னடம், மலையாளம் என்னும் பெயர்ப் பொருள்களைப் பற்றியும் நாம் 
ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று ‘பிரிகற் சம்கிதை’யில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்து
 வளர்வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலைநாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
 மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது. ஆகவே கன்னடம், மலையாளம் என்னும் பெயர்கள் இடங்களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது’.
ந.சி.கந்தையா பிள்ளை தொடருகிறார்....
"அசோகரின் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத்தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர
 மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்புபடுத்தியுள்ளார். தமிழர் தெலுங்கர் என்பதை தெலிங்கர் என்றும், 
அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் 
குறிக்கவும் வழங்கும்.
அசோகப் பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலை நாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் 
குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத் தொடருக்குக் கலிங்க மலைத் தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத் தொடர்பாக 
வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாக மாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய 
ஓர் இடமாகலாம்.
தெலுங்கு அல்லது கலிங்க நாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலை களிலிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலை எட்டும் வரையில் -கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில் - தட்டையான சமபூமி காணப்படுகிறது. இவ்விடங்கள் 
கரைப்போக்கு என்னும் பொரு ளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும்
. இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்றவைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி தீவைக் குறிக்கும். இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகிறது.
குமாரிலபட்டர் திராவிட என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் 
நாட்டுக்கும் மொழிக்கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களையும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம், கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் 
சென்றிருக்கலாம்.
ஒரிசா மலைகளிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான தட்டையான சமபூமி என்ற பகுதி கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். திராவிட என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய
 மயிலாபுரியைக் குறிக்கிறது"
என்றெல்லாம் ந.சி.கந்தையா பிள்ளை ஆய்வு நோக்கில் கூறிவிட்டார்.
‘தமிழ்’ என்ற சொல் எவ்வாறு ‘தமிள’ என்று 
ஆயிற்று என்பதையும் ‘திரமிட’ என்று மாறியதையும் விளக்குவதற்கு அடிப்படையாக ‘ழகரம்’ என்பதைப் பற்றி தமிழறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை பின்வருமாறு
 கூறுகிறார்:
"ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகிறது. தமிழன் என்பதன் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை, தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகிறது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத்
 தெரிகின்றது.
புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களை கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிருதத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள என்றும், 
வராகமிகிரரின் சில கையயழுத்து நூல்களில் (கி.பி.6 ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சில வற்றில் திராமிட மென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்தமாகவும் உள்ள 
பழைய மலையாள மொழி பெயர்ப்புகளிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ், திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக்குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டு வந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயின வென்றும்
 புலனாகின்றன"
என்றும் நடுநிலையில் நின்று ஆய்வு செய்திருக்கிறார்.
இந்திய நாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்று கூறி அதிர வைக்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள். அவர் தனது திராவிட இந்தியா என்னும் நூலில்,
"சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இன மக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது
 அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் 
சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் செற்கள் பல இருப்பதும் பிறவுமென 
ஆராய்ச்சியாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளார்கள். ஆரியர் வருகைக்கு பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற்றெனத் தெள்ளிதில் அறியக் கிடக்கின்றது.
புதிய மக்களுக்கும் வடக்கே வாழ்ந்து கொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதப் பாடல்களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்று விளங்கினார்கள் எனத் தெரிகின்றது. நாகரிகத்தில் 
உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரிய மக்களுக்கு இயலாததாக விருந்தது. நாளடைவில் இரு சாதியாருக் கிடையில் திருமணக் கலப்புகளால் தொடர்புகள் உண்டாயின. 
திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறையினது. ஆரியருடைய சமூகம் தந்தை ஆட்சி முறையினது..
.. இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்திய மலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச் சிறிதே காணப்பட்டன.
மக்களிடை கலப்பு உண்டான போது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன.
.... பாரசீகர் வடநாட்டின் சில பகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் முதலிய பல
 சாதியினர் வடநாட்டின் மீது படையயடுத்து வந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்களோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படையயடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின."
திராவிடர் என்ற இனம் இல்லை; திராவிடம் என்பது மாயை என்பதையெல்லாம் தவிடுபொடியாக்கிய ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் திராவிட நாகரிக‌த்தின் தொன்மையையும் பின்வருமாறு
 விளக்குகிறார்.
"திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப் பற்றி மொகஞ்சதரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப்பட்ட பழம் பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில்
 அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் 
அமைக்கப் பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன.... ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்கு மறையும் இருந்தன. கழிவு நீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்களில் செங்கற் பதிக்கப் பட்டிருந்தன."
திராவிட மக்களின் நாகரிகச் சிறப்பை ந.சி.கந்தையா பிள்ளை விளக்கியவுடன் தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கும் பேராசிரியர் செயராமன் அவர்களுக்கும் கண்ணைக் கட்டுகிறது.
 எனினும் பேராசிரியர் செயராமன் அவர்கள், ‘தொன்மங்கள் (புராணங்கள்) மிகைப்படுத்தப்பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவை யாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, திராவிட என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது என்றும் அது தென்னகப் பகுதியைக் குறிக்கிறது என்றும் சுவர் எழுப்புகிறார். இதற்கு ந.சி. கந்தையா 
பிள்ளை அவர்கள்,
"திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமாயணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப் பற்றியும் தென்னாட்டைப் பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத்துக்குக் காலம் எழுதிச்
 சேர்க்கப் பட்டனவாதலின் அவைகளிற் கூறப்படுவன சிறந்த வரலாற்றுச் சான்று களாக மாட்டா. மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைய நூல்கள் எனக் கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும்
 உண்டாகின்றது. அவைகளில் கூறப் படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு.நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தன வென்று கொள்ள லாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. 
அவைகளை எல்லாம் இந்தியப் படமொன்றில் ஒழுங்குப்பட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போக வில்லை. பழைய பெளத்த இலக்கியங்கள் விந்தியத்திற்குக் கீழே உள்ள 
நாடுகளைப் பற்றி அறியா.
பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றி தெரியாது....பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின்
 காலம் கி.மு.350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு.7 ஆம் நூற்றாண்டில் விளங்கினார். அக் காலத்தில்
 வட நாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந் தியாவைப் பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப் பட்டுள்ளன"
என்று விவரிக்கிறார்.
பெரியார் மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடினார் என்றால், அவருக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாசர் மூடநம்பிக்கைகளை தோலுரித்துள்ளார் என்றும், தமிழ்நாடு தமிழருக்கே கோரிக்கையை பெரியார் எழுப்பினார் என்றால் அதற்கு முன்பே நாவலர் சோமசுந்தர
 பாரதியார் தான் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கையை எழுப்பினார் என்றும் குறுக்கு சால் ஓட்டும் போலித் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடர் என்ற அடையாளக் குறியீட்டுச் சொல் பழைய
 இலக்கியங்களிலும், தமிழறிஞர்களும் பண்டிதர் அயோத்திதாசர் போன்ற சமூகப் போராளிகளும் பயன்படுத்தியுள்ளனர்; அதை தான் பெரியார் வலிமையாக்கினார் என்று கூற 
மறுக்கின்றனர்.
திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததில்லை என்ற தோழர் பெ.மணியரசன் அவர்களுக்கு மறைமலையடிகளும் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களும் விரிவாக அறிவியல் முறைப்படியும் வரலாற்றுச் சான்று அடிப்படையிலும் விளக்கம் கூறியுள்ளனர்.
(தொடரும்)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
தமிழறிஞர் யாழ் ந.சி.கந்தையா பிள்ளையின் திராவிடமென்றால் என்ன

.பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.18

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  அவர்களின்   பிறந்தநாள் .11.01.2018..இன்று. இவரை அன்பு அப்பா அம்மா ,
தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில்உற்றார்.
உறவினர்களுடன்  இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று   இவரை  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும்  நோய் நொடிகளின்றி   மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில்சகல வளங்களும்  பெற்று  
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
வாழ்த்துகின்றன  .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் . கனகலிங்கம் 06.01.17

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்விகள்   அஜித்தா , அனித்தா.
அவர்களுடைய  பிறந்தநாள். 06.01.2018.இன்று மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில்கொண்டாடுகின்றார்  
பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அண்ணாஅப்பப்பா  அப்பம்மா அம்மம்மா  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்  இறை ஆசியுடன் பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும் 
சந்தோசமாக   சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.