கருணை பொழியும் பெருமாள்

Jun 2012 12:
கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்ற ராஜேந்திர சோழன், சோழ மண்டலம் திரும்பும் வழியில் கோயில்கள் பல எழுப்பினான். அவற்றில் ஒன்று கூழமந்தல் ஸ்ரீ பேசும்பெருமாள் திருக்கோயில்.
தனது குருவின் விருப்பப்படி, இவ்வூரின் ஈசான்ய திசையில் கங்கை கொண்ட சோழீஸ்வரர் என்ற சிவன் கோயிலை கட்டிய ராஜேந்திரன், மேற்குத் திசையில் பெருமாள் கோயிலை அமைத்தான். கருணை பொழியும் திருக்கோலத்தில், புன்முறுவலுடன், நம்மிடம் பேசுவது போலவே தோன்றும் பெருமாளுக்கு என்ன திருநாமம் சூட்டலாம் என்று யோசித்தான் மன்னன். அவனது கனவில் தோன்றிய பெருமாள், "பேசும்பெருமாள்' என்றே அழைக்குமாறு கூறினாராம்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பேசும்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். சங்கு சக்கரங்களுடன், வரத ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார்.
இடது கையைத் தொடையில் வைத்தபடி கம்பீரமான தோற்றம். பெருமாள் ஆலயங்களில் பொதுவாக, ஒரு தேவி வலது கையிலும் மற்றவர் இடது கையிலும் தாமரை மலரை ஏந்தியிருப்பார்கள். ஆனால், இங்கே இருவருமே தங்கள் வலது கையில் தாமரை மலரைப் பற்றியிருக்கிறார்கள். எனவே, அடியவர்களுக்கு பெரும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் இவர்கள் வழங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
தற்போதும் பழமை மாறாமல் திகழும் இக்கோயிலுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா வரும் 29.06.12ம் தேதி நடைபெறுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரத் திருப்பணி முடிந்துள்ள நிலையில், மகாமண்டபம், தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி ஆகியவற்றுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன
22 Jun 2012 12

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.