மலையகத்தில் பனிக்கட்டி மழை
மலையகப் பகுதிகளில் தற்போது அவ்வப்போது பெய்கின்ற மழையானது சில ஆச்சரிய
நிகழ்வுகளையும் கொண்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மற்றும் மடுல்சீமைப் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மழையுடன் பனிக்கட்டி மழை பெய்துள்ளது.
நேற்று பிற்பகல் பெய்த கடும் மழையை அடுத்து பண்டாரவளை நகரில் பிற்பகல் 2.50 மணியளவிலும் மடுல்சீமை பிரதேசத்தில் பிற்பகல் 4.10 மணியளவிலும் இந்த பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மழை பெய்த சந்தர்ப்பத்தில் மடுல்சீமை பிரதேசத்ததை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. ___
Tags :
வினோதங்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen