கோஸ் ரொட்டி எப்படிச் செய்வது


 

முழு கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - அரை கப்,
துருவிய முட்டைகோஸ் - 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
கோதுமை மாவு, கடலை மாவு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதைச் சப்பாத்தி
களாக இட்டுக் கொள்ளவும். மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பூரணம் தயாரிக்கவும்.

ஒரு சப்பாத்தியின் மேல் கொஞ்சம் பூரணத்தை வைத்து, மற்றொரு சப்பாத்தியால் மூடி, திரும்பவும் இடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து, சப்பாத்திகளை இரு புறமும் பொன்னிறமாக வாட்டி, சாஸ் அல்லது பச்சடியுடன் பரிமாறவும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.