பலரும் எதிர்பார்த்த வசதி தற்போது குரோமில்

16.07.2012  உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே.

இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது.

இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம்.

இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection போன்ற வசதிகள் உள்ளன.


ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பாவனையாளர்கள் உபயோகிக்கும் இந்த வீடியோ சாட்டிங் வசதி குரோம் உலாவியில் சேர்க்கப்பட்டுள்ளமையானது பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த பீட்டா வெர்சனில் பிரிண்டிங் விண்டோவில் உங்களின் கிளவுட் பிரின்டர்களை டிபோல்டாக இணைத்துள்ளது. ஆகவே நீங்கள் சுலபமாக கிளவுட் பிரிண்டர்களில் பிரின்ட் செய்ய முடியும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.