புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, |
![]() இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜேர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்தாண்டு ஜேர்மன் முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவியது. இதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட் ஆகும்) இதன் மூலம் தற்போது நாட்டின் 50 சதவீத மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் பூர்த்தி செய்து ஜேர்மன் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து சூரிய சக்தி மூலம் 26 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் உலகிலேயே அதிக அளவு மின்சாரம் தயாரிப்பதாக ஜேர்மன் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இந்த நாட்டில் தான் மின் கட்டணமும் அதிகமாக உள்ளதாகவும், சூரியசக்தி, காற்றாலை மின்சாரங்கள் நாட்டின் மின் தேவையை முழு அளவு பூர்த்தி செய்யாது என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ![]() ![]() ![]() ![]() |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen