
21.08.2012.நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் ஒரு கப் கொக்கோ பானத்தை சூடாக தினமும்
அருந்திவந்தால், வயது முதிர்ந்தவர்களுக்கு காணப்படும் நினைவாற்றல் குறைபாட்டை
நிவர்த்தி செய்து அதிகரிக்கச் செய்ய உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கொக்கோ பானத்தை அருந்துவதால் மூளை சிறப்பாகச் செயல்படுகின்றது எனவும், இதனால்
உடனடியாக மேற்கொள்ளப்படும் பரீட்சைகளில் உயர்ந்த மதிப்பெண் பெற முடியும் எனவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைவாற்றல் பிரச்சினை உடைய 90 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில்
இத்தகவல் வெளியாகியுள்ளதுடன், குருதியில் குளுக்கோசு மட்டத்தை சிறந்த நிலையில் பேணி
சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொக்கோ பானத்திற்கு உண்டு எனவும் இவ்
ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen