
இலட்சக்கணக்கான மக்களிற்கு மத்தியில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது. அத்துடன் இலங்கை விமானப்படையின் ஹெலிகப்டர் வழமைபோன்று மலர் சொரிந்து வட்டமிடுகின்ற காட்சி சிறப்பாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமான் ஆரோகணித்திருக்கும் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்சணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர். இத் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. நேரடி விவரணங்களை வசந்தா வைத்தியநாதன், நடேச சர்மா ஆகியோர் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். புகைப்படங்கள் இனைப்பு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen