பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம்!

சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது.சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது. மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை 6 முதல் 11 மணி வரை உப்புமா, கடலைக்கறி, காபி வழங்கப்படுகிறது. மதியம் 3 மணி வரை சோறு, சாம்பார், அவியல், ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின் மாலை 5 மணி முதல் இரவு வரை கஞ்சி, பயறு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின்பும் கூட்டம் வந்தால் உப்புமா வழங்கப்படும். 125 ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் தினமும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.