நம்மில் பலர் அறியாத ஒன்று பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம்.
ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் 
ஒன்று உள்ளது.
எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபடவேண்டும் என்பது நாம் அறிந்ததே.
ஆனால் எந்த ஒரு செயலை முடிக்கும் முன்னரும் அனுமனை வணங்கவேண்டும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று.
அதை நினைவூட்டும் வகையில் சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலாசம் ஆலயத்தில் பாதி விநாயகராகவும், பாதி அனுமனாகவும் காட்சியளிக்கிறார் ஆதியந்த பிரபு.
பொதுவாகவே பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நாம் அறிவோம்.
இருவருமே பிரம்மச்சாரிகள், இருவருமே விலங்கின் ரூபம் கொண்டவர்கள், இருவரையுமே சனி பகவானால் பிடிக்க முடியாது.
இப்படி இருவருக்கும் பல்வேறு ஒற்றுமை இருக்கிறது.
சமநிலை மூர்த்திகளான இருவருக்கும் எண்ணற்ற கோவில்
களை நாம் காணலாம்.
ஆனால் இருவரும் ஒருசேர அருள்பாலிக்கும் ஒரு அற்புத உருவம் 
தான் ஆதியந்த பிரபு.
விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய இருவரும் நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இந்த கோயிலிற்கு சென்று ஆதியந்த பிரபுவை தரிசிப்பதன் மூலம் சனி தோஷம் உள்ளிட்ட நவகிரக தோஷங்கள் அனைத்திலும் இருந்து விடுபடலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.