தெரிந்துகொள்ளுங்கள் நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுவதன் உண்மை கதை.

துர்கா தேவியைப் போற்றி வழிபடும் திருவிழாவான நவராத்திரி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தேவியின் ஒன்பது அவதாரங்களை போற்றுவது தான் இந்த 9 நாட்கள். அனைவரும் தங்கள் வீட்டிற்கு துர்கா தேவியை வரவேற்க மிகவும் உற்சாகமாக தயாராகி உள்ளனர். சக்தி என்றும் அழைக்கப்படும் துர்கா தேவியை போற்றி வழிபடும் நவராத்திரி பண்டிகை, இந்த ஆண்டு செப்டம்பர் 26, 2022 அன்று தொடங்கி, அக்டோபர் 5, 2022 அன்று முடிவடைகிறது. இந்த ஒன்பது நாட்களிலும், பக்தர்கள் துர்கா தேவியின் வெவ்வேறு வடிவங்களைப் போற்றி வழிபடுகிறார்கள். பத்தாம் நாளான விஜயதசமி அன்று நவராத்திரி கொண்டாட்டம் 
நிறைவடைகிறது.
9 நாட்கள் கடுமையான போருக்குப் பிறகு துர்கா தேவி மகிஷாசுரனை வதைத்தாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், நவராத்திரிக்கு ஒன்பது நாட்களுடன் தொடர்புடைய முழு கதையும் மற்றும் நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக தான் இந்த பதிவு. இப்போது நவராத்திரியை 9 நாட்கள் கொண்டாடுவதற்கான 
காரணத்தைப் பற்றி பார்ப்போம்.
நவராத்திரி ஏன் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது?நவராத்திரி பண்டிகையின் போது,​​மக்களை துன்புறுத்திய தீய மகிஷாசுரனை வதம் செய்து துர்கா தேவி பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாகவே ஆண்டுமோறும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
களிமண் வீடுகளுக்கு அதிகரிக்கும் வரவேற்புபுதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அக்டோபர் 02 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது…புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அக்டோபர் 02 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது.
சாகா வரம் பெற்ற அசுரன்மிகவும் சக்தி வாய்ந்த இந்து கடவுளான பிரம்மா, மகிஷாசுரனுக்கு சாகா வரத்தை அளித்தார். மகிஷாசுரன் ஒருபோதும் இறக்கமாட்டான் என்பதை பிரம்மா உறுதிப்படுத்தினார்.
 இருப்பினும், இந்த வரத்தை ஒரே ஒரு நிபந்தனையின் அடிப்படையில் பிரம்மா வழங்கினார். அதாவது, மகிஷாசுரனை
 வெல்லக்கூடியவர்
ஒரு பெண்ணாக மட்டுமே இருக்க முடியும். எந்தப் பெண்ணாலும் தன்னைக் கொல்ல முடியும் என்று நம்பிக்கையின் அடிப்படையில், 
மகிஷாசுரன் அந்த வரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். சில வருடங்கள் கடந்த பிறகு, மகிஷாசுரனும் அவனுடைய சீடர்களும் காலப்போக்கில் வலுப்பெற்றதால், பூமியில் மனிதகுலத்தைத் தாக்குவதையும், துன்புறுத்துவதையும் எந்த தெய்வத்தாலும், தேவர்களாலும் தடுக்க
 முடியவில்லை.
துர்கையின் தோற்றம்மகிஷாசுரனின் அட்டகாசங்களையும், அவனால் மனிதர்கள் துன்புறுவதையும் பார்த்த பிறகு, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து சக்தியின் ரூபமான துர்கா தேவியை உருவாக்க முடிவு செய்தனர். உலகிலேயே சக்தி வாய்ந்த ரூபமாக உருவாக்கப்பட்ட துர்கா தேவி, மகிஷாசுரனை போர்களத்தில் சந்தித்து போரிட்டார். மகிஷாசுரனை வதைப்பதற்காக தேவர்கள் அனைவரும் துர்கா தேவிக்கு ஏராளமான ஆயுதங்கள் கொடுத்தனர்.

அசுரனை தோற்கடித்த துர்கா தேவிவலிமை வாய்ந்த மகிஷாசுரன், துர்கா தேவியுடன் பத்து நாட்கள் வரை தாக்குபிடித்து தொடர்ந்து போரிட்டான். இந்த பத்து நாட்கள் துர்கா தேவிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. ஏனென்றால், இந்த நாட்களில், துர்கா தேவியை திசைதிருப்புவதற்காக மகிஷாசுரன் தொடர்ந்து தனது உருவத்தை மாற்றிக்கொண்டே இருந்தான். ஆனால், கடைசியாக அவன் தனது உருவத்தை எருமையாக மாற்றியபோது,​​துர்கா தேவி அவனை கொன்று வதம் செய்ய முடிந்தது. இந்த வழியில் தான், துர்கா தேவி மகிஷாசுரனை தோற்கடித்து அசுரர்களை வென்றாள்.

நவராத்திரி கொண்டாட்டம்நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சில பக்தர்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். விழாக்காலங்களிலும் கர்பா என்று நடனம் ஆடுவது ஏராளம். சிலர் நவராத்திரியின் போது தண்டியா 
ஆடுவார்கள்.
பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை, அனைவரும் இந்த ஒன்பது நாட்களும் நவராத்திரியை முழு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுபவிக்கிறார்கள். மகிஷாசுரன் மாதிரியான அரக்கனிடம் இருந்து மக்களை காப்பாற்றிய துர்கா தேவியின் சக்தியை போற்றி வழிபடும் இந்த நவராத்திரி வடமாநிலங்களில் தசராவாக வெகு விமர்சையாக 
கொண்டாடப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.