யாருமே அறிந்திராத யாழில் விசித்திர அம்மன் கோவில்.1500 பழமை வாய்ந்த கூழாமரம்

அருட்பெருமையும் இதன் தொன்மையும்  தலவிருட்சமான கூழாமரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும் இதுவே கோயிலின் தோற்றத்தையும் மகிமையையும் குறிப்பாகக் காட்டி நிற்கும் ஆயிரத்து ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன் ஒரு மர ஆய்வாளர் இக்
கூழாமரத்தைப் பார்வையிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது இக் கூழாமரம் 1500 பழமை வாய்ந்ததுடன் உட்பிரகாரத்தில் 45 அடிக்கு மேலே சுற்றளவுள்ள மிகப் பெரியதாக உயர்ந்து விசாலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது
இம் மரத்தின் மரப் பொந்துகளில் வெண்மை நிறமுடைய நாகபாம்புகள் இருக்கின்றன அவை சில காலங்களில் வெளிப்பட்டு பூசகரும் அடியார்களும் நைவேத்தியம் செய்யும் பாலை அருந்திச் சொல்வதுண்டு 
என்றும் அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்றும் 
கூறப்படுகின்றது பூஜை காலங்களில் இக்கூழாமரத்தடியில் 
விசேட பூஜைகள் பிரார்த்தனைகள் நடைபெற்று 
வருகின்றன ஆரம்பத்தில் இம்மரத்தடியிலேயேதான் கண்ணகை அம்பாள் விக்கிரகம் இருந்ததாகவும் பின் இவ் விக்கிரகமே மூலஸ்தான கண்ணகை விக்கிரகமாக இடமாற்றப்பட்டு இன்றும் விளங்குகிறது இவ் விக்கிரகம் கருங்கல்லால் ஆனது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.