ஆன்மீகம் என்றால் என்ன இது வெறும் தத்துவமா அல்லது அன்றாட வாழ்வில் அதைப் பயன்படுத்துவது நடைமுறையில் சாத்தியமா

ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தமானது. ஆனால் ஆன்மீகத்தில் கூறப்படுவது இறைவனைப்பற்றி மற்றும் சிறிய பெரிய 
தெய்வங்களைப்பற்றி. பக்தி மார்க்கத்தில் சென்று இறைவனைப் போற்றுவதும், தொழுவதும்,
மற்றவர்களுக்கு இறைவனுடைய பெருமையைக் கூறி, உணர்த்தி அவர்களை இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி மகிழ்வதும் ஆன்மீகமாக கருதப்படுகிறது. மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி 
இறைவன் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியே தானே 
கண்காணிப்பதும் அவர்களை வழிநடத்துவதும் இறைவனால் இயலாதக் காரியம் என்றே நான் நினைக்கிறேன் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், அவர்கள் தவறு 
செய்யும்பொழுது
 தண்டிப்பதற்கும் இறைவன் ஆன்மாக்களை உருவாக்கி இருக்கிறார். பல புதிய ஆன்மாக்களை இன்றும் அவர் உருவாக்கிய வண்ணம் இருக்கிறார். இந்த புதிய ஆன்மாக்களாலேயே பல புதிய முன்னேற்றங்கள் உலகத்தில் ஏற்பட்டபடி இருக்கிறது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் சில
 ஆவிகள் ஒரு மனிதனை பீடிக்கும்படிச் செய்கிறது. பீடித்த 
ஆவிகள் மேலும் மேலும் வளர்ந்து, உறுதிப்பட்டு அவன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்ல
 ஆவிகளுக்கும் தீய ஆவிகளுக்கும் இந்த குணம் இருக்கிறது. இந்த குணத்தாலேயே
 படிப்பவர்கள் மேலும் மேலும் படித்து பட்டம் பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள், குடிகாரர்கள் மேலும் மேலும் குடித்து குடிகேடர்களாக 
மாறி குடும்பத்தை குலைப்பவர்களாக ஆகிறார்கள். ஒரு மனிதனுடைய
 விதியை அவனுடன் இருக்கும் ஆவிகள் அவனுடைய அன்றாட செயல், பேச்சு மேலும் சிந்தனையிலிருந்தும் தீர்மானிக்கின்றன. உங்கள் கடந்த 
காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது, உங்களுடைய நிகழ் காலம் எதிர்காலத்தை
 தீர்மானிக்கிறது. இதையே கர்மா என்றும் கூறுகின்றனர்.
ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் தனிக்கூறுகள். மனிதனுக்கு 
ஆவியுடல் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பல 
ஆவிகளுடன் வாழ்ந்து க்கொண்டிருக்கிறான். அவைகள் அவன் பிறந்ததிலிருந்து 
ஒவ்வொன்றாக இணைந்தவை. அவை அறிவு, திறன்கள், உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் அனைத்தும் ஆகும். எண்ணங்களும்
 உங்களுக்குத்
 சொந்தமானதல்ல. உதாரணமாக, நீங்கள் ஒரு விஷயத்தில் ஒரு முடிவை 
எடுக்க விரும்பினால், ஒன்றன் பின் ஒன்றாக ஆவிகள் சிந்திக்கின்றன. அந்தச் சிந்தனைகளை ஆன்மாக்கள் உங்கள் மூளை வழியாக 
உங்கள் மனதிற்கு 
அனுப்புகின்றன. அவைகள் அனுப்பும் கருத்துக்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் பிறகு அதில் ஒன்றைத் தேர்வு செய்கிறீர்கள் அல்லது நிராகரிக்கிறீர்கள். மூளை என்பது உங்கள் மனதுடன் ஆவிகள் தொடர்புக்கொள்ள
 பயன்படும் ஒரு சாதனம். மனம் என்பது கணினியின் மனம். ஒரு கணினியை முற்றிலுமாக அழித்தபின் நீங்கள் அதன் மனதைப் பெற மாட்டீர்கள். மனிதர்கள் நிலை இதே
 நிலைதான். உயிர் என்பது ஒரு உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஒரு சக்தி. அது ஒரு ஆவியோ அல்லது வேறு எதுவோ 
இல்லை. அது ஆட்டோ மெக்கானிசம் போன்றது. மரணத்திற்குப் பிறகு ஒரு நபருடன் வாழ்ந்த 
அனைத்து ஆவிகளும் வெளியேறி புதிய உடல்களைத் தேடி வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இறந்த பிறகு யாரும் எந்த வடிவத்திலும் வாழ்வதில்லை. 
எல்லா மனிதர்களும் சதை மற்றும் எலும்புகளால் ஆன ரோபாட்கள், ஆவிகளுடைய விளையாட்டுகளுக்காக பயன்படும் பொம்மைகள்.
என்பதாகும்





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.