சிவ சிவ என்னும் திருமந்திரம்


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
 சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
 சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
 சிவ சிவ என்னச் சிவகதி தானே---
 

9 வது பிறந்தநாள் வாழ்த்து ஹரிசன் [19.03.14]

 நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
 ஹரிசன் தனது ஒன்பதாவது.
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று(19.03.14) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch/2013/03/8.html
 நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{ காணொளி, ,,,,,

                     
 

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்

கல்வி கணபதி: இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்காமல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக வருந்திய சிவன், இந்த விநாயகரை வழிபட்டார். அவரே வல்லபகணபதியாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இப்பெருமான் செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணமும், மகுடம், கேயூரம் ஆகிய அணிகலன்களும், பத்து கைகளுடனும், பழம், கரும்பு, நெற் கதிர், தந்தம் ஏந்தியும்

காட்சியளிக்கிறார். வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற இவரை வணங்குகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி தினங்களில் இந்த வழிபாடு விசேஷம்.
காஞ்சிப்பெரியவர் வருகை: இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதிலமடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள முக்தி மண்டபம் சிறப்பு மிக்கது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது
தல வரலாறு:
தசரத குமாரரான ராமர் வனவாசம் சென்ற காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் உதவியுடன் ராமர் சேதுக்கரையில் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார். ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்தார். அப்போது காட்சிஅளித்த சிவன், மோட்சபுரிகளில் ஒன்றான

காஞ்சியிலும் தன்னை வணங்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, ராமர் காஞ்சிபுரத்தில் வழிபட்ட தலம் இது. ராமரின் பெயரால் சுவாமிக்கு ராமநாதர் என்று பெயர் வந்தது. இவரை தேவர்கள், பூதகணங்கள் மட்டுமின்றி, மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்களும் வணங்கி முக்திபெற்றனர். ராமேஸ்வரத்திற்குரிய புனிதமும் பெருமையும் இத்தலத்திற்கும் உண்டு
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தின் வடக்கு ராமேஸ்வரமாக இது கருதப்படுகிறது
 



 

நான்கு ஜாம விரதபூஜை முறை

காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, வீட்டில் சிவபூஜை செய்வதுடன் சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அந்த வேளையில் சிவனை போற்றும் மந்திரங்கள் உச்சரிப்பது மிகவும் சிறப்பானது.
வசதியானவர்கள் மாலையில் ஆலயத்துக்குச் சென்று நான்கு ஜாம பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது வீட்டில் பூஜை செய்து, நித்திரை களைந்து, சிவ தோத்திரம் பாராயணம் செய்து, மறுநாள் காலையில் புனித நீராடி சூரியன் உதிக்கும் ஆறு நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும்.
சிவராத்திரி அன்று பகல் பொழுதை சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ கழிக்க வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்து, பால், பழம் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.

இந்த விரதத்தை உணவு உண்ணாமல் இருந்து அனுஷ்டிக்க முடியாதவர்கள், முதல் ஜாம பூஜையின் பின் கொஞ்சம் நீரோ, பாலோ அருந்தலாம். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரையில் உள்ள 12 மணி நேரக் காலப்பகுதியைக் குறிக்கும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்.
நான்கு ஜாம பூஜை முறை :

முதல் ஜாமம்:– பஞ்சகவ்யம் என்று சொல்லப்படும் பால், தயிர், நெய், கோமியம், கோசலம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் வில்வம் சாத்தி, தாமரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்து, பயத்தம் பருப்பு சேர்ந்த பொங்கலை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். ரிக் வேதம் ஓத வேண்டும்.

இரண்டாம் ஜாமம்:– பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, சந்தனமும், தாமரைப் பூவும் சாத்தி, துளசியால் அர்ச்சித்து, பாயசம் நிவேதனம் செய்து, யஜூர் வேதம் ஓதி வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாமம்:– தேனால் அபிஷேகம் செய்து அரைத்த பச்சைக் கற்பூரத்துடன் சாதிமுல்லைப் பூவை சாத்த வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து அன்னம் நிவேதனம் படைத்து சாம வேதம் ஓத வேண்டும்.

நான்காம் ஜாமம்:– கரும்புச் சாற்றால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப்பூவுடன் நந்தியாவட்டைப் பூவும் சாத்தி, நீலோற்பலப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் அன்ன நிவேதனம் செய்து அதர்வண வேதம் ஓதி வழிபட வேண்டும்.

பிறந்தநாள் வாழ்த்து:எஸ்.தேவராசா(06.03.14)

theva
 யேர்மனியில் டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இவரை இந்த நவற்கிரி இணைய உறவுகளும்,இவரது கலைக்குடும்ப இரத்த உறவுகளும்நவற்கிரி இணையங்களும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும்,நவற்கிரிஒன்றியத்தினரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரும்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய அங்கத்தவர்களும் வாழ்த்துகின்றனர் , இசை ,கவி, பாடகர்,நடிகன் மட்டும் அல்லாது பழகும் பண்பும் பொது நலனில் முன்வந்து செயல்படும் பாங்கு நிஜத்தில் நடிக்கதெரியாத இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களுக்கு இந்த இணைய பதிப்பின் மூலமாக எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்து கொள்கின்றோம்.

சிவனைப் பாடியே திட்டியவர்!


ஒருசமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானை சந்திக்கச் சென்றார். அவர் சுந்தரருக்கு சில பரிசுகளை கொடுத்தார். அப்பொருள்களுடன் சுந்தரர் சென்று கொண்டிருந்தார்.  அப்போது, அவரிடம் விளையாட எண்ணிய சிவன், பூதகணங்களை அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை கவர்ந்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் சுந்தரரிடம், தனது தந்தைதான் அவரது பொருட்களை திருடச் செய்தார் என்று சொல்லியதோடு, அவர் மறைந்திருந்த இடத்தையும் காட்டினார். அதன்படி சிவன் மறைந்த இடத்திற்கு சென்ற சுந்தரர், தன் பொருளைக் கவர்ந்த சிவனை திட்டி பதிகம் பாடினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, அவரிடமே பொருட்களை திருப்பிக் கொடுத்தார்.  இந்த நிகழ்வு திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி தலத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் இக்கோயிலில் சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகபாவனைகளுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.  இங்குள்ள சிவனை முருகன் வணங்கியதால், திருமுருகநாதர் எனப்படுகிறார். பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால், திரும்பக் கிடைப்பதாக நம்பிக்கை.

அருகம்புல்லும் பிள்ளையாரும்!


சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னாட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கில் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார். வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும்,

கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார். மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடைந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக்குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது. மன்னரைப் பார்த்து, ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய் ! என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான். தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய் ! என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார். கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசியாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.

புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழைந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி. அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர்.  அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அருளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது.

 பெருங்கூட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது. பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார். அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளித்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடைத்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்சனை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை.

சல்லி பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா

பொலிகண்டி சல்லியம்பதி விநாயகப் பெருமானுடைய தேர் திருவிழாவானது புதிய சித்திர தேரில் நடைபெற்றது அதன் காணொளி

ஒரே நேரத்தில் நான்கு தீர்தோற்சவம்சாமிகள் காணொளி

பொலிகண்டி சல்லிபிள்ளையர் ஆலய தீர்தோற்சவம் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்றாகும். மாசி மக நாளில் சல்லிபிள்ளையார் தீர்த் தோற்சவமும் வருவதால் பொலிகண்டியில் அமைந்துள்ள ஆலயங்களான உப்புத்தண்ணிர் பிள்ளையார், சல்லி பிள்ளையார், பத்ரகாளி அம்மன் மற்றும் கந்தவனக்கடவை முருகப்பெருமான் ஆகிய ஆலயங்களில் இருந்து பொலிகண்டி சந்தியில் அமைந்துள்ள தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தமாட வரும் காட்சிகள்.


Powered by Blogger.