வினாயகர் சதுர்த்தி வழிபடும் முறை

வினாயக பெருமானை இல்லத்தி்ல் அமரவைக்கும் முன் இல்லம் முழுதும் சுத்ததம் செய்து வினாயகர் வைக்கும் இடத்தில் வெள்ளை துணி போட்டு அதன் மேல் ஒரு மனை போட வேண்டும் இரண்டு தீபம் ஏற்றி மனை முன்பு இரண்டு வெற்றிலை ஒரு கொட்டை பாக்கு வீதம்
 ஐந்து இடத்தில் வைக்கவும் அதன் மேல் ஒரு மஞ்சள் கொம்பு ஒரு உலர்ந்த பேரிச்சம் பழம் ஒரு ரூபாய் நாணயம் சிரிது அரிசி ஐந்து விதமான பழம் ஒன்று ஒன்று வைக்க வேண்டும் வினாயகரை மனை மீது அமர வைத்து வேட்டி துண்டு கட்ட வேண்டும் சந்தனம் குங்குமம் வைத்து 
அருகம்புல் மாலை எருக்கம்பூ மாலை சூற்ற வேண்டும் நெய்வேத்தியம் வைத்து ஒரு மஞ்சள் துணியில் அரிசி வெல்லம் ஒரு எலுமிச்ச பழம் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்து கட்டி வினாயகர் 
மடியில் வைக்கவேண்டும் பின்பு மங்களார்த்தி செய்து பிள்ளைகள் இல்லத்தில் இருப்பவர்கள் அமர்ந்து இந்த நாமத்தை கூற வேண்டும்
ஓம் ரீம் சிரிம் ரீம் ஹூம் ரீம் சுவாஹம்
ஓம் கணனாயகாய கணபதியே நமோ
ஓம் ரீம் ரீம் சிரிம் சுவாஹம்
ஓம் விக்ணாதிபதியே நமோ
ஓம் ரீம் ரும் ஹம் சுவாஹம்
ஓம் சித்தி வினாயகாய நமோ
சித்தம் புத்தம் ஞானம் வஸ்த்ரம் ஆரோக்யம் சகல சம்பத்தும் சுபம் வரதேவோ யாமி
ஓம் கம் கணபதியே நமக 
ஓம் சாந்தி சாந்தி சாந்தியே
என்று கூறி பிராத்தனை செய்து துளசி நீர் எடுத்து பழம் நெய்வேத்தியதிற்கு நீர் ஆராதனை செய்ய வேண்டும்
வினாயகனை நீரில் விடும் போது மஞ்சள் துணியில் கட்டிய பொருளில் எலுமிச்சபழம் ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கொண்டு மற்ற பொருள் அனையும் வினாயகர் இடுப்பில் கட்டி விடவேண்டும் எலுமிச்சபழம் வீட்டிற்கு திருஷ்டி சுத்தி போடவும் ஒரு ரூபாய் நாணயம் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும் நன்மை ஆகும்
இந்த நாமத்தை ஒவ்வெரு திங்கள் கிழமை இல்லத்தில் இருக்கும் கணபதிக்கு அருகம்புல் வைத்து பிள்ளைகள் கூறினால் நல்ல ஞானம் கிடைக்கும்
குருவே சரணம்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



நல்லூர் கைலாசவாகனத் திருவிழாவின் காணொளி

நல்லூர் முருகனின்  கைலாசவாகனத் திருவிழா 07.09.2015 திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. நல்லூரானின் கைலாசவாகனம் மிக்க அழகுடையது. 1950 ஆம் ஆண்டில் கீரிமலையைச் சேர்ந்த சிறாப்பர் சு.கனகசபை என்னும் பெயர் கொண்ட 
முருகபக்தரினால் நல்லூர் முருகனுக்கு மிகுந்த பொருட்செலவில் செய்து கொடுக்கப்பட்டதாம்.65 ஆண்டுகள் பழைமையான கைலாச வாகனத்தில் வேற்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நமக்கு வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்.

விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.

விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.

சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.

ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான்.வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை
 மட்டும பார்ப்பார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் .09.09.15

.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பத்தி இரண்டவது  பிறந்தநாள்.09.09.15. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
 வாழ்த்துகின்றன 
எண்ணத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தி னுள்ளிருந்து 
ஊற்றெடுக்குஞ் 
சிரிப்பாலே உருவாகுங் 
கன்னத்துவிருச்செழுமை, இனிமை.... 
உவகைதரும் நந்மொழியில் இனிமை..... 
உதிர்க்கின்ற நற்கவிதைச் 
சாற்றினிலே இனிமை... 
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை.... 
ஊற்றதுவாம் நெஞ்சத்து 
நட்பதுவும் இனிமை... 
பால்-வயது பாராமல் 
பாங்குடனே பழகுமுங்கள் 
பண்பதுவும் இனிமை.... 
உம் மலர்முகமும் இனிமை... 
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் 
உணர்வலையும்
இனிமை, இனிமை... 
எமது  இனிய பிறந்த 
நாள் நல் வாழ்த்துக்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வருத்தங்கள் பாவங்கள் நீக்கும் அஜா ஏகாதசி .விதரம் ???

இன்று (08.09.15) – அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும்.
இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, யுதிஷ்டிர மகாராஜாவிற்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கினார். அதனை இங்கே
 காண்போம்.
முன்னொரு காலத்தில், பிரபு ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் உலகின் மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர்.
நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது. ஆனால் விதிவசத்தால், நாளடைவில் அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதோடு, 
பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகவும் ஆக்கி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி.
ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை விடாது கடைபிடித்து வந்தான்.
பல காலங்கள் இப்படியே கடந்தன. ஒரு நாள் அவன், தனது நிலையை எண்ணி மிகவும் வருந்தியவனாய், “நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா ?” என்று மிகவும் வருந்தினான்.
அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினான். அவனது சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட அவர், அவனுக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார்.
அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது. எனவே இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு !! இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.
அதன்படி ராஜா அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான்.
மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தான் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.
அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா !! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள் !! எனக் கூறத் தொடங்கினார்.
இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.
மேலும் எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.
~~~ ஓம் நமோ பகவதே வாசுதேவாய ~~
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.15)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2015 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி பிள்ளைகள்   மாமி  அக்கா  ,அத்தான் ,அண்ணன்மார் ,அண்ணிமார் ,மைத்துனி மைத்துனர்மார்.
குடும்ப உறவுகள்  நண்பர்கள் இவரை 
நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு
நவக்கிரி .கொம் 
நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் 
இணையங்களும் 
வாழ்த்துகிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.15.

அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2015.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் மற்றும்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


இந்த கிருஷ்ணா' என்ற வார்த்தையில் என்ன இருக்கிறது???

ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான்.கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க
 கிருஷ்ண நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்."கிருஷ்ணா' என்ற இந்த வார்த்தையில் என்ன இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். ஆனால் அவனுக்கு விடை தெரியவில்லை.அங்கிருந்த பெரியவரிடம்,"கிருஷ்ணா! கிருஷ்ணா!''என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்துவிடும்?
 எனக்கு பசிக்கிறது? உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறுபோட முடியுமா?" என்று கத்தினான்.பெரியவர் அந்த இளைஞனிடம்,"கிருஷ்ண நாமத்தை சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்" என்றார்.இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும், அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ணநாமத்தை சொல்ல முடிவெடுத்தான்.ஊருக்கு அடுத்தாற்போல் இருந்த காட்டுப்பகுதிக்குச் சென்று
 தனியாக அமர்ந்தான்.
அவன் வாயில் "கிருஷ்ணா" என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.
திடீரென்று அந்தப்பக்கம் யாரோ வருவது போல சப்தம் கேட்டதும், ஒரு மரத்தின் மீது ஒளிந்து கொண்டான் இளைஞன்.ஒரு வழிப்போக்கன் அந்த மரநிழலில் அமர்ந்து கொண்டு வந்த கட்டுச் சோற்றை அவிழ்த்துச் சாப்பிட்டான். அசதியில் அப்படியே அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சிறிதுநேரத்தில் கண்விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்துவிட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான். ஆனால், வந்த வேகத்தில் அவன் அப்படியே நின்றுவிட்டான்.
எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றை சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை. உண்மையில் கிருஷ்ணநாமத்திற்கு மகிமை இருக்குமானால், இந்த சாப்பாட்டை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
திரும்பவும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். சூரியன் மறையும் வேளை வந்தது.
அப்போது காட்டுப் பாதையில் சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மரநிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர்.கள்வர் தலைவன், கிருஷ்ணன் குறித்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.
ஆனால், கள்வர் தலைவன், "இந்தச் சோற்றை நாம்
 சாப்பிடுவது கூடாது. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன்தான் வைத்திருப்பான். அந்தச் சோற்றை அவனுக்கே 
கொடுப்போம்!'' என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான்.
இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான். இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள், உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர்.இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடும் இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
"நம்பிக்கையில்லாமல் கிருஷ்ணநாமம் சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே" என்று எண்ணியவன், அழியாத செல்வம் கிருஷ்ணநாமம் தான் என்ற முடிவுக்கு வந்தான்.
காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்த பணத்தை உண்டியலில் போட்டான்.
"இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்" என்று அந்தக் கோயிலில் சத்தியம் செய்தான். அதன் பிறகு அவனுடைய உழைப்பால் பெரும் பணக்காரனும் ஆனான்.
இந்த கிருஷ்ணா' என்ற வார்த்தையில் என்ன இருக்கிறது???
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செல்வச்சந்நிதி முருகனின் 1984 ஆம் ஆண்டுத்தேர் (இன்று இல்லை )

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகனின் தேர் இலங்கையின் மிகப்பெரிய தேர் , உலகத்திலே சிறப்பு வாய்ந்ததில் ஒன்று ..,இது சிங்களப் படையினரால் 1985ம் ஆண்டு எரித்து அழிக்கப்பட்டது. ஆனால் இன்றும் அதன் புகழ் உள்ளது. பார்க்கக் கிடைக்காத அரிய இந்த தேர்க் காட்சி இதோ!! புகைப்படங்கள் கனோளிகள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




2
Powered by Blogger.