திருமணவாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன் 11.11.19

யாழ் கோப்பாயைப்  பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியில் வசித்து
   தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி ராஜேஸ்வரன்.
(ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் .11.11.2019. இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில் 19வது திருமணநாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கை தம்பிமார்  குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள்  நண்பர்களும் 
, இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர். நல்லூர்கந்தன் அருள் பெற்று  
பதினாறு ஆண்டுகால அனுபவத்தில் 
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை.. 
வாழ்க்கை வானில் சேர்ந்து 
பறக்க சிறகை விரிக்கும் 
வானம்பாடி பறவைகள் நீங்கள் ... 

வரும் காலமும், வரப்போகும் காலமும் 
சுற்றத்தோடும் நட்போடும் அமைய 
நம்பிக்கை சிறகுகள் முளைத்து 
வானம் தாண்டி பறந்து செல்லும் 
வெற்றி பறவைகள் நீங்கள் ... 

உனக்காக உன்னவனும் 
என்று தொடங்கி 
நமக்காக நாங்கள் 
என்று நினைவு கூறும் 
இன்னாள், நன்னாள் 
பொன்னாள்... 
ஆம் இது உங்கள் திருமண நாள் ... 
இந்நாள் போல 
எந்நாளும் மலர்ந்து  
 தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை. 9.11.2019 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
ஸ்ரீ நவற்கிரிமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று
நோய் நொடி இன்றி
அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்

எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நீ வாழிய வாழியவே பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்


பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  ஜெர்மனியை வசிப்பிடமாகக்கொண்ட . திரு திருமதி சந்திரன்-(குட்டி .தேவி ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அதிர்சனின் (நிலா) அவர்களின்
இருபதாவது  நாள் .பிறந்தநாள் .08.11..2019, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா மார் பெரியப்பா பெரியம்மா அக்கா அத்தான் மார் அம்மம்மா மருமகள் மருமகன் போறமகக்கள்  அண்ணா அண்ணி தம்பி ,மற்றும்
 சகோதர சகோதரிகள் 
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவி அண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் நீ உன் தாய் தந்தைக்கு கிடைத்த
அழகு முத்தாரம்!
தவமிருந்து பெற்றுக்கொண்ட
அமுதக் கிண்ணம்!
உன் அன்னையின் துயரம் நீக்கிய
குட்டி அரசன்! !
உன் கல்வி சிறக்க
உடல் உள நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆஞ்சநேயரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய சனிபகவான் நடந்தது என்ன

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.’ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு
 போய்விடுகிறேன்’ என்றார்.கடமையை செய்து கொண்டு இருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து 
கொள்’ என்றார்.சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் 
சனிபகவான் அலறினார்.
‘சொன்ன சொல் தவறக்கூடாது.
இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்’ என்றார் அனுமன்.அதன் படி சனியும் அமர்ந்தே இருந்தார்.2 1/2 மணி நேரம் முடிந்த பிறகே இறக்கிவிட்டார்.ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

                            ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம்.ஜெய்ஸ்ரீராம்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.19

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள
 திரு.கி .தயாவரன்-அவர்களின் 
 பிறந்தநாள். 06.11.2019.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  சகோதரர்கள்  மற்றும் 
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார்   ..
.புத்துர். உறவினர்கள். நண்பர்களும்...இவரை 
   ,புத்தூர் குருநாதர்  அருள் பெற்று    பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இவரை  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திரு மண நாள் வாழ்த்து..திரு திருமதி பரம்சோதிராஜா, .05.11.19

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி  பரம்சோதிராஜா (பரம் &நங்கை ),தம்பதிகளின்  திருமணநாள் .05.11.2019..இன்று  தனது இல்லத்தி கொண்டாடுகின்ற்றர்  இவர்களை 
   அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் 
திருமண நாளின்று... எம் நெஞ்சுக்குள் நெகிழ்ந்தாடும்... சொந்தங்களின் திருமண நாளின்று... இரு வரிக்குறலாய் இலட்சிய உறவாய் புரிதலின் அறமாய் புன்னகை வரமாய் வாழ்வாங்கு வாழும் வல்லமைகளின் திருமண நாளின்று... முகம் சிரிக்கும் மலர்களாய் அகம் சிரிக்கும் மனங்களின் சுகம் கோடி பெற வாழ்த்தி சுரம் பாடு பூங்காற்றே... உல்லாச வானில் ஜோடிப் புறாக்கள் சேர்ந்து பறக்கட்டும்... ஆயுள் வரை இந்த அன்பு சேர்ந்து சிறக்கட்டும்... கோடி சுகம் தேடி வந்து வாசல் திறக்கட்டும்... வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வசந்தம் பிறக்க எம் இனிமையான 
வாழ்த்துக்கள்
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  வாழ்கவளமுடன்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்- 05.11.19.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்
 ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன் (மோகன்) அவர்களின் 
 பிறந்தநாள். 05.11.2019.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை  மற்றும் சகோதரர்கள்
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ..
.கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறை அருள் பெற்று   இவரை  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சுவிஸ் சூரிச் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.19

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு  
ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தான சூர சங்காரம். 02.11.2019 
சனிக்கிழமை  மிகவும் 
சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர். தவில் நாதஸ்வரம் முழங்க, அடியவர்கள்   தீச்சட்டி ஏந்தி பால்குடபவனிவர எம்பெருமான் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய  உள்வீதி வலம் வந்து பின்னர்  வெளிவீதியில்  
பக்த்தர்ள் படை சூழ  சூர சங்காரம் மிகச்சிறப்பாக   நடைபெற்றது ஆறுமுகப்பெருமான்  அடியவர்களுக்கு 
அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>















முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி சூர சங்காரம் எதிர் வரும் 02.11.19.அன்று

 முருகன் அடியார்களே , கந்த சஷ்டி .02.10.2019..சனிக்கிழமை அன்று தான் 
முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் எண்ணப்படுவது 
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது,  வெகு விமரிசையாக முருகன்ஆலயங்களில்  நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார். விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் 
கொள்கின்றனர்!
தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை! எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை ப்லம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை 
அனுப்பி வைக்கிறான்.
மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் 
அஸ்திரம் அளிக்கின்றார் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





Powered by Blogger.