ஒருசமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானை சந்திக்கச் சென்றார். அவர் சுந்தரருக்கு சில பரிசுகளை கொடுத்தார். அப்பொருள்களுடன் சுந்தரர் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் விளையாட எண்ணிய சிவன், பூதகணங்களை அனுப்பி அவரிடமிருந்த பொருட்களை கவர்ந்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் சுந்தரரிடம், தனது தந்தைதான் அவரது பொருட்களை திருடச் செய்தார் என்று சொல்லியதோடு, அவர் மறைந்திருந்த இடத்தையும் காட்டினார். அதன்படி சிவன் மறைந்த இடத்திற்கு சென்ற சுந்தரர், தன் பொருளைக் கவர்ந்த சிவனை திட்டி பதிகம் பாடினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, அவரிடமே பொருட்களை திருப்பிக் கொடுத்தார். இந்த நிகழ்வு திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டி தலத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் இக்கோயிலில் சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகபாவனைகளுடன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள சிவனை முருகன் வணங்கியதால், திருமுருகநாதர் எனப்படுகிறார். பொருளை திருட்டுக் கொடுத்தவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால், திரும்பக் கிடைப்பதாக நம்பிக்கை.
சிவனைப் பாடியே திட்டியவர்!

Tags :
ஆன்மிகமும் ஜோதிடமும்
அருகம்புல்லும் பிள்ளையாரும்!
சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னாட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கில் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார். வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும்,
கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார். மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடைந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக்குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது. மன்னரைப் பார்த்து, ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய் ! என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான். தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய் ! என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார். கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசியாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.
புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழைந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி. அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர். அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அருளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது.
பெருங்கூட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது. பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார். அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளித்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடைத்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்சனை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை.
Tags :
ஆன்மிகமும் ஜோதிடமும்
ஒரே நேரத்தில் நான்கு தீர்தோற்சவம்சாமிகள் காணொளி
பொலிகண்டி சல்லிபிள்ளையர் ஆலய தீர்தோற்சவம் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்றாகும். மாசி மக நாளில் சல்லிபிள்ளையார் தீர்த் தோற்சவமும் வருவதால் பொலிகண்டியில் அமைந்துள்ள ஆலயங்களான உப்புத்தண்ணிர் பிள்ளையார், சல்லி பிள்ளையார், பத்ரகாளி அம்மன் மற்றும் கந்தவனக்கடவை முருகப்பெருமான் ஆகிய ஆலயங்களில் இருந்து பொலிகண்டி சந்தியில் அமைந்துள்ள தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தமாட வரும் காட்சிகள்.
Tags :
ஆலய நிகழ்வுகள்
சகல சௌபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம்
சகல சவுபாக்கியம் தரும் தை அமாவாசை சூல விரதம் தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தை அமாவாசையையொட்டி நடைபெறும் சூலவிரத சிறப்பு வழிபாடு பிரசித்தி பெற்றது ஆகும். சூலவிரத மகிமை குறித்து கந்தபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சகல விதமான சவு பாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூலவிரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.
அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய
சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்து கொண்டு அபஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.
பிறகு மதியம் வேளையில் திருநீறு, ருத்ராட்ச மாலைகளை தரித்த சிவ பக்தர்களுக்கு தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான தர்மம் செய்ய வேண்டும். அதன் பின் சிவாலயத்திற்கு சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து திருக்கோவிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி இறைவனை வணங்க வேண்டும்.
பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். இப்படி இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்க ஆயுள், புத்திர செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அடைந்து சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள்.
முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மகா விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலி நீங்க பெற்றார். மேலும் கொடிய அசுரனான காமநேமியை சம்ஹாரம் செய்தார். ஜமத்கனி முனிவரின் புதல்வனும், மிக பல சாலியுமான பரசு ராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும், ராவணனை மிஞ்சும் பராக்கிரம சாலியான கார்த்தவீர்யாஜூனனைக் கொன்றார்.
பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்று வலி நீங்க பெற்றார். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடை பிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பெளத்திரர்களை பெற்றெடுத்து அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான்.
இவர்களை போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப் பெற்று இறுதியில் திருக்கயிலாயத்தையும் அடைந்தனர். இந்த சூல விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்கள் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களிலிருந்து நீங்கியும், மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
தோஷ நிவர்த்தி பெறுவார்கள். இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமை பற்றி மகாபலட்டரான வீர பத்திரர் சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்கு கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்கிறார்– சூதமா முனிவர்.
ஆகையால் தவ சீலர்களே சகல பாவங்களையும் வேரோடு அழிக்க வல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பை பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு மிருத்யுவின் (மரணத்தின்) பயம் இராது.
கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்று பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால் வெகு சமீபத்தில் உள்ள சூல மங்கலம் என்னும் இவ்வூர் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்கார வள்ளி உடனுறை ஸ்ரீ கிருத்திவாசேஸ்வரர் திருக்கோவிலே சூல மங்கை என்பதாகும்.
சூல மங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று. இப்போது மருவி சூலமங்கலம் என்று விளங்குகிறது. இக்கோவில் தலம் (சூலமங்கை) மூர்த்தி (கிருத்திவாசர்) தீர்த்தம் (சூல தீர்த்தம்) என்னும் 3–ம் கொண்டுள்ளது.
அஸ்திரதேவர் (சூல தேவர்) வழிபட்டு திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்க தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம். சப்த மங்கையரில் சூல மங்கை வழி பட்ட தலம். பெரிய சிவாலயம், கல் திருப்பணி, ஊரின் பெயருக்கேற்றவாறு கோவில் வெளி வாயிலின் புறத்தில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார்.
அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று இத்திருக்கோவிலில் விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை மெழுகிட்டு கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னம் பாலித்தல், தான தர்மங்கள் செய்தல்,
திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், தினசரியோ, வார நாட்களிலோ தவறாது திருக்கோவிலுக்கு செல்லுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்தல் போன்ற திருப்பணிகளை செய்வோமாயின் உலகத்தில் யாவரும் செய்திராத தவப்பயனும்,
ஒப்பற்ற யாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிட்டுவதுடன், சிவ பெருமானின் அனுக்கிரக பார்வையில் நாம் இருந்து அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று சிவானந்த பெரு வாழ்வு வாழலாம் என்பது திண்ணம்.
Tags :
ஆன்மிகமும் ஜோதிடமும்
முருகன் பிறப்பு வித்தியாசமான கதை
பத்மபுராணம் என்ற நூலின், 41வது சர்க்கத்தில் உள்ள 100 ஸ்லோகங்கள், முருகனின் பிறப்பு பற்றியும், அவருக்கு ஆறுமுகம், 12 கை என மாறுபட்ட உருவம் அமைந்தது குறித்தும் வித்தியாசமான தகவல் உள்ளது. ஒருமுறை பார்வதியையும், பரமேஸ்வரனையும் ஆயிரம் ஆண்டுகளாக எங்கும் காணவில்லை. அவரைக் காணச் சென்ற தேவர்களை, வீரகன் என்ற கணநாதன் தடுத்து விட்டான். தேவர்கள், அக்னியை அனுப்பி அவர்களைத் தேடச் சொன்னார்கள்.
அவன் கிளி வடிவெடுத்து அவர்கள் தங்கியிருந்த அறை பக்கம் சென்றான். சாளரம் (ஜன்னல்) வழியாக எட்டிப் பார்த்த போது, அங்கே இருவரும் தனிமையில் இருந்ததைக் கண்டான்.
சிவன் கிளியைப் பார்த்து விட்டார். ""அக்னியே! எனது வீரியம் வெளிப்படும் வேளையில், இங்கு வந்து பார்த்தாய். எனவே, இதன் ஒரு பகுதியை நீயே ஏற்பாய்,'' என்று சாபமிட்டார்.
இதையடுத்து அக்னி அதை ஏற்றான். அது ஒரு குளமாகப் பெருகியது. பார்வதி தேவி அந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் அந்த குளத்து நீரை பருகினர். அந்த நீரை ஒரு தாமரை இலைக்குள் அடக்கியெடுத்து கொண்டு போக முயன்றனர்.
பார்வதி அவர்களைத் தடுத்தாள். ""இது என் கணவருக்குரியது. இதை நீங்கள் கொண்டு போகக்கூடாது,'' என்றாள்.
அந்தப்பெண்கள் பார்வதியிடம்,"" எங்களை தடுத்த உனக்கு குறையுள்ள ஒரு பிள்ளையே பிறக்கும். நாங்கள் இந்த குளத்து நீரைப் பருகி விட்டதால், அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையாவது எங்களுக்கு தர வேண்டும்,'' என்று உரிமை கொண்டாடினர். இதற்கும் பார்வதி மறுத்தாள்.
"" இதற்கு நீங்கள் உரிமை கொண்டாட முடியாது,'' என்றவள், அவர்கள் எடுத்துச் சென்ற நீரை திரும்பவும் வாங்கி பருகி விட்டாள். இதையடுத்து அந்தப் பெண்கள்,""உனக்கு பிறக்கும் குழந்தை குறையுடையதாகப் பிறக்கட்டும்,'' என்று சாபமிட்டு சென்றனர்.
அதன்படி, வலது விலா வழியாக குமாரர் என்ற குழந்தையும், இடது விலா வழியாக ஸ்கந்தர் என்ற குழந்தையும் பிறந்தது. இவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்டதாகத் திகழ்ந்தது.

12வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா [19.01.14]
பன்னிரன்டாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2014. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நல்லைகந்தன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர் {காணொளி}
Tags :
வாழ்த்துக்கள்
திருமண நாள் நல் வாழ்த்து லோவி ரஜீ [19.01.14]
இரண்டாவது திருமணநாள் லோவி ரஜீ இன்று 19.01.2014 நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு மகள் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் >இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர் {காணொளி}
Tags :
வாழ்த்துக்கள்
இன்று தைப்பூசம்: செல்லப்பிள்ளையை வணங்குவோமா!
போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவர் சிவபார்வதிக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார். இந்நாளில், இவரை இருந்த இடத்தில் இருந்தே சிந்தித்தாலே போதும். இப்பிறவிக்கு வேண்டிய பொருளும், மறுபிறவி இல்லாமலும் செய்து விடுவார். சித்தர்களுக்கெல்லாம் தலைமைச் சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து
ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் "பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால் ராஜாங்க அலங்காரத்தில் பட்டுபீதாம்பரதாரியாக கிரீடத்துடன் ராஜாவாக வழிபாடு
செய்வதையே விரும்புகின்றனர். பழநியப்பன் முருகபக்தர்களின் செல்லப்பிள்ளை அல்லவா! இதனால் இப்படி ஒரு அலங்காரம்! மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இரவுபகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. ஆனால், மனம் ஒருபோதும்
தடுமாறக்கூடாது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் நல்லதையே சிந்திக்க வேண்டும். அதற்கான நல்லறிவைத் தரும் ஞானபண்டிதனாக முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பகைவனுக்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர் அவர். அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று பழநி தலபுராணம் கூறுகிறது. ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம்
இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார். அதனால் தான் பழநி சென்று
வழிபடுபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். தைப்பூச நன்னாளில் ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்த பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியமும் பெறுவோம்.

Powered by Blogger.