காரைக்கால் அம்மையார் புராணம்


 "பேயார்க்கும் அடியேன்" தந்தை தாய் இல்லாத பிறப்பிலியாகிய இறைவன் எம் அம்மை என்று சொல்லிய பெருமைக்கு உரியவர்  
 
காரைக்காலிலே வணிகர் தலைவராய் தனதத்தர் என்பவர் இருந்தார் . அவருக்கு பெண்மகவு பிறந்தது அக்குலம் தழைக்க வந்த அம்மகவுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர் தளிர்நடை பயிலும் நாள் தொட்டு பரமன் மேல் ஆராக்காதல் கொண்டு  விளையாடும் போதும் சிவநாமம் மொழிவார் திருத்தொண்டர்களை கண்டால் அன்போடு தொழுவார் இப்படி வளர்ந்து மங்கைபருவம் அடைந்தார்

 நாகையில் வணிகர் குலத்தில் நிதிபதி என்பவர் தனது புதல்வர் பரமதத்தனுக்கு அம்மையாரை மணம் பேசி முடித்தனர் எல்லாவகை சீரோடும் சிறப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது
தனதத்தர் தனது சம்பந்தியின் அனுமதியோடு தன் மகளுக்கு தன் மாளிகை அருகிலேயே தனிக்குடித்தனம் வைத்தார் பரமதத்தன்

வாணிபம் செய்து தன் திருமனைவியாருடன் இனிது வாழ்ந்தார் அப்படி வாழுங் காலத்தில் வாணிபஞ்செய்யுமிடத்தில் இருந்தபோது அவரை காண வந்தவர்கள் இரண்டு இனிய மாங்கனிகளை தந்தார்கள் அவர் அவற்றை பணியாட்கள் மூலம் இல்லத்துக்கு கொடுத்தனுப்பினார் அம்மையாரும்  அக்கனி களை வாங்கி வைத்தார் அவ்வமயம் ஒரு திருத்தொண்டர் அங்கு வந்தார் இறைஅடியவ ரைக் கண்டதும் அவருக்கு அமுதளிக்கும் பொருட்டு இருந்தார் அதற்கு சிறிது கால தாமதமாகும் என்று கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை படைத்தார் மூப்பும் பசியும் மிக்க அடியவர் உண்டு களித்து அம்மையாரை வாழ்த்திச் சென்றார்

பரமதத்தரும் உணவருந்தும் பொருட்டு உச்சி
வேளையில் வந்தார் அவருக்கு அம்மையார் அன்னத்தோடு பருப்பு நெய் மற்றும் மாங்கனி படைத்தார் அக்கனி உண்ட பரமதத்தர் அதன் சுவையில் விரும்பி இன்னொரு கனியை எடுத்து வருமாறு அம்மையாரிடம் கூறினார்
இதை கேட்டதும் அம்மையார் இன்னொரு கனியை அடியவருக்கு அளித்து விட்டோம் கணவர் கேட்கிறார் என்ன செய்வது என்று மனம் தளர்ந்தார் கலங்கினார் சிவபெருமானை நினைந்து தேவ தேவா உன்னடியார்க்கு ஒரு கனியைப் படைத்து விட்டேன் கணவர் இவ்வாறு மறு கனியை
கேட்பார் என்று எண்ணவில்லை என் செய்வேன் கருணைக்கடலே அடியார் அல்லல் போக்கும் அருட்கடலே என்று தம்மை மறந்து அவரை நினைந்துருகினார் இறைவன் திருக்கருணையினால் அவர் திருக்கரத்தில் அதிமதுரக் கனி ஒன்று வந்தது அதைக் கணவனுக்கு தந்தார் அவர் அதை உண்டு அமுதினும் இனிய சுவையை கண்டு
அம்மையாரிடம் நான் அனுப்பிய கனி இது அன்று. மூன்றுஉலகத்திலும் இப்படிப்பட்ட கனி கிடைப்பது அரிது இது எப்படி உனக்கு கிடைத்தது ? என்று கேட்டார்

 அம்மையார் திருவருளை வெளிப்படுத்து வதும் தவறு பொய் உரைப்பதும் தவறு என்று முன்னிலும் கலங்கினார் முடிவில் உண்மையை உரைப்பது என்று நடந்ததை கூறியருளினார் திருவருளை தெளியாத பரமதத்தன் அம்மையாரை நோக்கி சிவபிரான் அருளால் வந்தது உண்மையா யின் இன்னும் ஒரு கனி தருவித்து கொடு
என்றார் . அம்மையார் அரனாரை சிந்தித்து இன்னொரு கனி தாரும் இல்லையேல் எனது மொழி பொய்மையாகும் அருட்கடலே எனை ஆட்கொள்ளும் என்று வேண்டினார்
மணிகண்டர் திருவருளால் மாங்கனி வந்தது அதை கணவன் கையில்தந்தார் அவர் வாங்கியதும் அக்கனி மறைந்தது

இச்செயல் கண்ட பரமதத்தன் நடுநடுங்கி அம்மையாரை தெய்வம் என்று எண்ணி தன் சிறுமையை நினைந்து வருந்தினான்
தெய்வமாகிய அவர் தனக்கு தொண்டு செய்வதா என்று கருதி பிரிந்து வாழ்வதே தக்கது என்று முடிவெடுத்தான் கடல் கடந்து வாணிபம் செய்வதாகக் கூறி புறப்பட்டார் தான் தெய்வமாக எண்ணி மனதால் வழிபடும்
அம்மையாருக்கு மன வணக்கஞ் செலுத்தி கலமேறி புறப்பட்டான்

அயல்நாட்டில் வாணிபத்தில் பெறும் பொருள் ஈட்டி தாய்நாடு வந்து காரைக்கால் வராமல் பாண்டிநாடு சென்று தங்கி பண்டங்களை விற்று பெரும் தனவந்தனான் அவ்வூர் வணிகன் தன் மகளை மணம் செய்து வித்தான் பரமதத்தன் தனது புது மனைவி யுடன் வாழ்ந்தாலும் காரைக்காலில் உள்ள அம்மையாரிடம் அச்சம் கொண்டே இருந்தார் குபேரன் போல் அளவற்ற நிதி குவிந்தது இளைய மனைவி கருவுற்று பெண் மகவைப் பெற்றாள் அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரின் திருநாமம் சூட்டினார்

அங்கே காரைக்காலில் அம்மையாரின் உறவினர்கள் பரமதத்தன் பாண்டி நாட்டில் இருப்பதை அறிந்து அம்மையாரை அழைத்து கொண்டு கணவனுடன் சேர்க்கும் பொருட்டு சென்று ஒரு சோலையில் தங்கி அம்மையா ருடன் வந்திருப்பதை ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்கள் அச்செய்தி கேட்ட பரமதத்தன் தமது  இளைய மனைவியை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தார் கணவனை கண்டு இளம் பெண்மான் போல் நின்ற அம்மையின் அடியில் பணிந்து உமது திருவருளால் வாழ்வேன் இக்குழந்தைக்கு உமது திருநாமம் சூட்டியுள்ளேன் அருள் செய்யும் என்றான்

 அது கண்ட அம்மையார் ஒதுங்கினார் சுற்றத்தினர் பரமதத்த இது என்ன புதுமை மனைவியை வணங்குகிறாய் உன் செயலின் உட்பொருள் யாது என்று வினவினார்கள்
பரமதத்தன் ஐயன்மீர் இவர் மானுடமல்லர் இவர் நற்தெய்வமாகும் இதை நான் முன்னமே அறிவேன் அதனால் தான் என் மகளுக்கு இத்தெய்வத்தின் பெயரை சூட்டியுள்ளேன் ஆதலால் அடி பணிந்தேன்
நீவிரும் அடிபணியுங்கள் என்றான் சுற்றத்தினர் அதுகேட்டு அதிசயித்தனர்
அது கேட்ட அம்மையார் கொன்றை அணிந்த இறைவன் கழல் போற்றி ஒன்றிய சிந்தையுடன் உரைக்கின்றார் கணவனுக்காக சுமந்த இந்த அழகு தசைப்பொதியை கழித்து உன்பால் உள்ளவர்கள் போற்றும் பேய் வடிவம் எனக்கு அருளும் என்று இறைவனைத் துதித்தார் அப்போது அம்பலவாணர் திருவருளால் என்பு வடிவாகி விண்ணும் மண்ணும் போற்றும் பேயுருக் கொண்டார் மலர்மழை பொழிந்தது வான துந்துபி ஒலி உலகமுழுதும் நிறைந்தது சுற்றத்தினர் இந்த அற்புதம் கண்டு தொழுது அஞ்சி ஓடி விட்டார்கள் அம்மையார் ஒருங்கிணைந்த மெய்ஞான உணர்வுடன் உமாபதியை அற்புத திருவந்தாதி என்ற திருநூல் பாடித் துதித்தார் பொற் பதம் போற்றும் நற்கணங்களில் நானும்
ஒன்றானேன் என்று மகிழ்ந்தார் பின்னர் இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம் பாடியருளினார்

 முக்கண் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலையை சென்று நேரில் தரிசிக்க நினைத்தார் அம்மையாரின் பேயுருக் கண்டு வியந்து கண்டவர்கள் அஞ்சி ஓடுகின்றார்கள் அவ்வுரு கண்டவர்கள் தாங்கள் நினைத்ததை கூறுகின்றார்கள் அதை கேட்ட அம்மையார் அண்டர் நாயகர் என்னை அறிவார் அறியாத இம்மாக்களுக்கு நான் எவ்வுரு கொண்டிருந் தாலென்ன என்றார் மனவேகத்தினும் மிக விரைவாக கயிலை அருகில் சென்றார் பரமன் இருக்கும் மலையை பாதத்தினால் மிதிக்க அஞ்சி தலையால் நடந்து சென்றடைந்தார் . அம்பிகை அது கண்டு அதிசயித்து தேவதேவரே தலையினால் என்பு வடிவுடன் வரும் இவ்வுருவின் அன்பு தான் என்னே என்று வினவினார்

உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை. பெருமை மிக்க இவ்வடிவத்தை நம்பால் வேண்டிப்பெற்றனள் என்று கூறி அருகில் வந்த அம்மையாரை நோக்கி பிறப்பில்லாத புண்ணியர் "அம்மையே " என்று இந்த உலகம் உய்ய அழைத்தருளினார்

 அங்கணன் அம்மா என்று அழைத்ததும் அம்மையார் அப்பா என்று பங்கய பாதமலரின் மேல் பணிந்தார் அவரை நோக்கி இறைவர் " நம்பால் வேண்டுவது யாது? என்று அருள் புரிந்தார் அம்மையார் அடிபணிந்து கேட்கின்றார் அறவாழி அந்தணரே உம்மிடம் ஒருபோதும் நீங்காத இன்ப அன்பு வேண்டும் , பிறவாமை வேண்டும் ஒருக்கால் பிறப்புண்டேல் உம்மை ஒருபோதும் மறவாமை வேண்டும் என்று வேண்டினார் இறைவர் அவ்வரங்களை அளித்து தென் திசையில் தொண்டை வளநாட்டிலே பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் நமது திருநடனத்தினைக் கண்டு கொண்டிரு என்று கருணை புரிந்தார்

 கயிலையில் பெருமானிடம் விடை பெற்று திருவாலங்காடு அருகில் வந்து கால் வைக்க அஞ்சி தலையால் நடந்து சென்று பெருமானின் ஊர்த்துவ தாண்டவக்காட்சியை கண்டு இன்புற்று மூத்த திருப்பதிகங்கள் இரண்டு பாடியருளினார் இறைவன் திரு நடனம் என்றும் காணும் பேற்றை நடராஜர் அருகில் அம்மையாரை நாம் காணலாம்
 அம்மையப்பர் இல்லாதவரும் உலகுக்கே அம்மையப்பராகவும் உள்ள அரனார் அம்மையே என்று அழைக்க பெற்று அவருடைய திருநடனத் திருவடியின் கீழ் என்றும் இருக்க பெற்ற அம்மையாருடைய
பெருமையை அளக்க அகில உலகத்திலும் ஆளில்லை இதை சேக்கிழார் பெருமான்

மடுத்தபுனல் வேணியினார் அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பொற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா 
   
என்று கூறுகின்றார்
     பெருமையை அம்மையார் விரும்பவில்லை
பெருமை தானே  வந்து தான்  சிறப்படையும் பொருட்டு அம்மையாரை சார்ந்தது என்ற  அழகு உள்ளத்தை உருக்ககூடியது
     அம்மை அடிமலர் வாழ்க
அம்மையாரின் குரு பூசை அன்று ஆலயம்
சென்று அவர் பெற்ற அந்த  நற்பேறு நமக்கும் கிட்டும் பொருட்டு அரனார் பாதம் பணிவோம்
        போற்றி ஓம் நமசிவாய  திருச்சிற்றம்பலம்
                                              
                                 

பிறந்தநாள் வாழ்த்து:திரு.தியாகராஜா (01:04:14)

 
 சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு தியாகராஜா(நவற்கிரி தேவன்) அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இந்த இணையமும் சகோதர இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்.

பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ம் பங்குனி திங்கள் திருவிழா


மட்டுவில்அருள்மிகுஸ்ரீ பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 3ம் பங்குனி திங்கள் திருவிழா இன்று சிறப்பாக இடம் பெற்றது .புகைப்படங்கள் இணைப்பு,,,







சிவத்தொண்டா ? சிவத்தொழிலா ?

 சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள் 

1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூஜை நடத்துவது

2.ஆலய உழவாரப்பணி செய்வது

3.ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு

4.திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது

5.பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து  அடியார்களின் பெருமைகளை கூறுதல் 

6.ஐந்தெழுத்தின் மகத்துவம் பற்றிக் கூறி ஜெபிக்க சொல்வது

7.தீப ஒளி இல்லாமல் இருக்கும் ஆலயங்க ளில் விளக்கேற்ற்றுவது , அடியார்களை அப்பணிக்கு  தூண்டுவது தீப எண்ணை வாங்கித் தருவது

8.ஒரு கால பூஜை இல்லாத கோவில்களில்  பூஜை நடக்க ஏற்பாடு செய்வது

9.பூஜை செய்ய சிவாச்சாரியார் இல்லையா? அதற்கு ஏற்பாடு  செய்து  பூஜை  நடத்தலாம்  அவருக்கு ஊதியம்  வழங்க  மக்களிடம்  வீட்டுக்கு  50,100 என  கேபிள் T .V  செலவைப் போல என்று சொல்லி நம்  ஊர்  கோவிலில்  பூஜை நடந்தால்  நம் ஊர் செழிக்கும் என்று எடுத்துக்கூறி செயல்படுத்துவது

10.கோவில்களில் ஓதுவாமூர்த்திகள் இருந்தால் சிறு பிள்ளைகளுக்கு திருமுறை களை கற்றுக்கொடுக்க சொல்லலாம் அதனால் அவருக்கும் பிழைப்பு கிடைக்கும்

11.ஆலயம் வரும் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது

12.புண்ணியகாலம் உற்சவ காலங்களில் ஆலய தூய்மை செய்தல் தேர் வடம் இழுத்தல்

13.மதமாற்றத்தை தடுக்கலாம்

14.சைவ சின்னங்களான திருநீறு ருத்ராட்சம் அவைகளை அணியச் சொல்லி அதனால் வரும் பயன்களை எடுத்துக்கூறலாம்

15.மெய்கண்டசாத்திரங்கள் பற்றி சிறு சொற் பொழிவு போன்று உள்ளூர் தமிழாசிரியர்க ளை கொண்டு நடத்தலாம் நாம் அழைத்தால் போதும் அவர்கள் மறுக்க மாட்டார்கள்

16.கொஞ்சம் நல்ல ஒரு அணியாக இருந்தீர் களானால் 12 ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய குடமுழுக்கு நடத்தலாம்
17.கோ சாலை பசுக்களை பராமரிக்க உதவலாம்

மேற்சொன்ன இந்த சிவ கைங்கரியங்கள்  நடந்தாலே அந்த ஊர் செழிக்கும்.நம்முடைய   குழந்தைகளை மேற்சொன்ன செயல்களுக்கு  ஊக்குவிக்கலாம்
தமிழகம் இந்த ஆண்டு வறண்டு போக இதுவும் ஒரு காரணம் கடவுள் பக்தி மக்களி டம் குறைய குறைய வறுமை  தாண்டவ மாடும் எவ்வளவு கோயில்கள் பராமரிப் பில்லாமல் இருக்கின்றன இது நம் சொத்தில்லையா?  நம் மூதாதையர்
சேர்த்து வைத்ததில்லையா ? புதிய கோவில்கள் பாஸ்ட் புட்  கோவில்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்  இந்த ஜென்மத்தில் அது  போன்று ஒரு கோவில் நாம் கட்ட முடியுமா ?

சிவதொழில்

மேற்சொன்ன எல்லாப் பணிகளையும் தொழிலாக காசு பண்ணும் கூட்டம் இருக்கிறது அவர்கள் ஒரு 25 ரூபாய் சாமி  படத்தை 350 ரூபாய்க்கு விற்கிறார்கள் யாத்திரை வழி நடத்துவது  கட்டணத்துடன்   பயிற்சி வகுப்பு நடத்துவது  தனக்கென  ஒரு  குரூப் சேர்ப்பது அதற்கு செலக்ட் செய்ய  ஜாதகம் போட்டோ கேட்டு வாங்கி
பிளாக்மெயில்  செய்வது ஏதாவது ஒரு வழியில் கவர்ச்சியான அறிவிப்பு கொடுத்து நாங்கள் இப்படி செய்வோம்  அப்படி செய்வோம் என்று  கூறுவார்கள்  சிவனை மிஞ்சி  எவனும் இல்லை குரு என்பவர் உண்மையான ஆன்மீகம்
என்ன என்று எடுத்து கூறி வழிகாட்ட  வேண்டும் அதை விடுத்து மரத்தடி ஜோதிடர்  மாதிரி வழிநடத்துவது ஆன்மீகம் அல்ல  ஜோதிடர்களை குறை  சொல்வது நம் நோக்கம் அல்ல ஜோதிடம் என்பது வான சாஸ்திரம் அதை மக்களும் எதற்கு பயன் படுத்த வேண்டுமோ அதற்கு பயன்படுத்த வேண்டும் தொட்டது  தொண்ணூறுக்கும் ஜோதிடம் கேட்டால் அவர்கள் தெரிகிறதோ  இல்லையோ கதை ஒன்று உருவாக்கி காசு பார்ப்பார்கள் ஆன்மீகத்தை முழுநேர  தொழிலாக கொண்டவர்கள் இருக்கிறார்கள்

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 
ஆன்மீகத்தை தலைப்பாக கொண்ட ஒரு வலைப்பூவில் கடன் தரக்கூடாத நாட்கள் என்று அவர் குரு உபதேசம் செய்தார்  என்று எழுதப்பட்டிருந்தது இவ்வளவுக்கும் அவர்  ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர்  இந்த கடன் தரக்கூடாத நாட்கள் பற்றி நமது வாசன் பஞ்சாங்கத்திலும் மற்ற பஞ்சாங்கத்திலும் ஆண்டு தோறும் வருகிறது இதோ அந்த பாடல்

ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை,
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும் 
மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே

இது ஜோதிட கிரக சிந்தாமணியில் உள்ள பாடலாகும்

பரணி,கார்த்திகை,திருவாதிரை,ஆயில்யம்,
மகம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை,
பூரம், பூராடம்,பூரட்டாதி  இந்த 12 நட்சத்திரத்திலும் கடன் வாங்கியவர் மட்டுமல்ல கொடுத்தவரும் பயணம்
போனவரும் நோயில் படுத்தவரும் மீள மாட்டார் என்கிறது  இதையே கோளறு பதிகத்தில் சம்பந்த சுவாமிகள் 2 ஆவது பாடலில் ஒன்பதோடு ஒன்று ஏழு   பதினெட்டொடு ஆறும் உடனாய நாட்கள் என்று அருளியுள்ளார்
ஆனால் அவர் இந்த விஷயத்தை தன்  குருநாதர் கண்டுபிடித்து  சொன்னது  போல  அவர்  வெளியிட்டிருக்கிறார்  அப்படி என்றால் குரு எப்படி சிஷ்யன் எப்படி? எப்படி மக்களை திசை திருப்புகிறார்கள் என்று பாருங்கள்

மேலும் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார் என்கிறார்
மீண்டும் மீண்டும் அடியேன் வலியுறுத்துவது ஆன்மீகம் என்பது பரிகாரம் செய்வதோ பணத்திற்காக மந்திரம் ஜெபிப்பதோ அல்ல. ஆன்மா கடைத்தேற என்ன வழியை நால்வர் அருளி உள்ளார்களோ அதை பின்பற்றுவது தான் அதனால் தான்  நாலு பேர் போற வழியில் போங்கள் என்று பெரியவர்கள் சொன்னார்கள் அந்த நால்வர் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் சுவாமிகள்
ஆன்மீக தொண்டுக்கு உதாரணம்
1.சிவாயநமஹ என்ற திருப்பெயர் கொண்ட திரு .லட்சுமி நாராயணன் அவர்கள்  தீபம் திருக்குழு என்ற அமைப்பின் மூலம் விளக்கெரியாத கோவில்களை கண்டு பிடித்து அங்கு தீபம் ஏற்றி வைக்கிறார் பிரதிபலன் ஒன்றும்  எதிர்பார்க்காமல் நமிநந்தி அடிகள் போல அவருடைய  செல் எண்  9884126417 அவர் பணியில்
உங்களையும் இணைத்து கொள்ளுங்கள்

மக்கள் கேட்டு பயனுற வழங்குகிறார்
இதுபோல உண்மையான இறைஅடியார்கள் இன்னும் வருவார்கள் 
  போற்றி  ஓம் நமசிவாய   திருச்சிற்றம்பலம்
 
 
 

பிறந்தநாள் வாழ்த்து சாருகா (25 -03 -2014)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 12வது
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (25 -03 -2014)  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch
நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.

                           

ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது


 1.நமசிவாய - தூல ஐந்தெழுத்து 
2.சிவாய நம - சூக்கும ஐந்தெழுத்து
3.சிவயசிவ  - அதி சூக்கும ஐந்தெழுத்து
4.சிவசிவ    - காரண ஐந்தெழுத்து
5. சி - மகா காரண ஐந்தெழுத்து

ஓம் சிவசிவ ஓம் ஜெபம் பண்ண சொல்பவர் கள்  அதற்கு கொடுக்கும் பிரமாணம் என்ன ? ஏதாவது திருமுறைகளிலோ அல்லது மெய் கண்ட சாத்திரங்களிலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எதை வைத்து அதை நம்புவது ?

ஓம் நமசிவாய ஜெபம் பண்ண தீட்சை பெற வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வாதம் வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்றால் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அதை விடுத்து காவலர்கள் இல்லாத வழியில் அழைத்து செல்கிறேன் என்பது போல் உள்ளது இவர்கள் செய்யும் இச்செயல் நம் முன்னோர் சமயகுரவர்கள் நால்வர் சம்பந்தர்பெருமான் அப்பர்சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசக சுவாமிகள் மற்றும் சந்தான  குரவர்கள்  நால்வர் மெய்கண்டார் , அருள்நந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர் உமாபதிசிவம் ஆகியோர் அருளியது பொய்  என்று சொல்லுவது போல் உள்ளது இவர்கள் வாக்கினை எனதுரை தனதுரையாக சிவபெருமானே ஏற்றுக்கொண்டுள்ளார் நமது சமயத்தில் இவர்கள் அருளியது சிவபெருமான் அருளியது போலவாகும் இவர்கள்  வாக்கே பிரமாணம் ஆகும் .
வேதத்தையும்  பதினென் புராணங்களையும் நமக்கு தொகுத்தளித்த  வியாச மாமுனிவர் வார்த்தைகளே நமக்கு நம் சைவத்தில் பிரமாணம் இல்லை .அப்படி இருக்கும் போது அவர்களை மிஞ்சிய ஞானிகள் யார் உளர் ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண சமய தீட்சை ஒன்றே போதும் ,சிவாயநம ஜெபிக்க அடுத்த கட்டமான விசேட தீட்சை பெற வேண்டும், சிவயசிவ ஜெபிக்க அதற்கும் அடுத்த கட்டமான நிர்வாண தீட்சை பெற்று ஜெபிக்கவேண்டும்,சிவ சிவ ஜெபம் செய்ய ஆச்சார்யா அபிசேகம் பெற்ற மகான்களால் மட்டுமே முடியும் .ஏனெனில் அது முக்தி பஞ்சாட்சரம் எனப்படும் .அதாவது துறவு நிலை உள்ளவர்களும் இனி உலக வாழ்க்கையில் கடமை இல்லை என்பவர்களும் ஜெபிக்க வேண்டிய மந்திரம், சிவசிவ மந்திரத்திற்கு ஓம் எனும் பிரணவம் சேர்க்க வேண்டியதில்லை .
ஓம் சிவ சிவஒம்  நூற்றுக்கணக்கில் ஜெபிக்க வேண்டுமாம் ஆனால் ஓம் நமசிவாய 108 முறை ஜெபித்தால் போதும் ,ஏனெனில் நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கின் றோம் அதில் இரவு உறக்கம் போக பாதி நாளுக்கு 10800 முறை சுவாசிக்கின்றோம் எனவே அதில் 100  மூச்சில் ஒரு மூச்சு என  108 முறை ஜெபித்தால் போதும் அதற்கு மேல் இல்லறவாசிகளுக்கு தேவையில்லை என்பதே பெரியோர்கள் வாக்கு .
ஏக ருத்ராட்சம் (ஒன்று ) எப்போதும் அணியவேண்டும்  சிவசின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் அணிந்து எப்போதும் உடலில் இருக்கவேண்டும் .கையில் ஜெபம் செய்து வீட்டில்  எடுத்து வைப்பது தவறு .
மந்திர ஜபம் என்பது நம் பாவமாகிய வினை தீர்க்கவும் அடுத்து  பிறவி இல்லா நிலை பெற்று முக்தி எனும் வீடுபேறு அடையவும் இருக்கவேண்டும். காசுக்காகவோ கடன் கட்டவோ கார் வாங்கவோ அல்ல ,ஆன்மிகம் என்பது ஆன்மா நற்கதி பெறவே .

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
 ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
 வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
 நாதன் நாமம் நமச்சிவாயவே      -     சம்பந்தர்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.  -     அப்பர்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
 பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
 கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
 நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும்நா நமச்சி வாயவே.                                                              -   சுந்தரர்                

போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி
                                                                        -மாணிக்கவாசகர்
இது போன்று  காரண பஞ்சாக்கரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
எவ்வளவோ காரணங்களை முன்னிட்டு மக்கள் எதிர்பார்ப்புகளோடு பிரார்த்திப்பார்கள் சரியான படி நிரூபணம் இல்லாத பிரமாணம் இல்லாத ஒரு மந்திரம் கண்டுபிடித்து ஆளாளுக்கு தான் பேர் வாங்க இது ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு அல்ல இறை நம்பிக்கை மக்களின் நம்பிக்கை ஆன்மீகம் என்பது மக்களின் ஆன்மாவோடு ஒன்றியது நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடாத உதாரணம் யூத மதத்தில் பிறந்த இயேசு புது மதம் உருவாக்கியது போல் உள்ளது
சிவஞானபோதம் 9 ஆம் சூத்திரம், சிவஞான சித்தியார் சிவபிரகாசம் திருவருட்பயன் என 14 சாத்திரங்களுமே பஞ்சாக்கரத்தின் மேன்மையை எடுத்து கூறுகின்றன
முதல் வகுப்பு படிக்காமல் ஆராய்ச்சி படிப்பு போல் உள்ளது மக்கள் போலி சாமியார்கள் பிடியில் இருந்து தப்பி பிழைப்பதே அரிதாக உள்ள நிலையில் தவறான மந்திரமே அலைக் கழிக்கும் .
நமசிவாய என்பது 36 தத்துவங்களையும் கடந்த சதாசிவமூர்த்தியின் மூலமந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனை அதிதெய்வமாக கொண்டது
 மேற்சொன்ன காரணங்களால் தான் ஓம்சிவசிவஓம் என்பது நம்பிக்கைக்கு உகந்த மந்திரம் அல்ல அது முடிவான முடிவை கொண்ட சைவ சமயத்தின் சிவபெருமானின் மந்திரம் அல்ல
                          போற்றி ஓம் நமசிவாய     திருச்சிற்றம்பலம்

சிவ சிவ என்னும் திருமந்திரம்


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
 சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
 சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
 சிவ சிவ என்னச் சிவகதி தானே---
 

9 வது பிறந்தநாள் வாழ்த்து ஹரிசன் [19.03.14]

 நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
 ஹரிசன் தனது ஒன்பதாவது.
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று(19.03.14) கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch/2013/03/8.html
 நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.
{ காணொளி, ,,,,,

                     
 

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்

கல்வி கணபதி: இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்காமல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக வருந்திய சிவன், இந்த விநாயகரை வழிபட்டார். அவரே வல்லபகணபதியாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இப்பெருமான் செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணமும், மகுடம், கேயூரம் ஆகிய அணிகலன்களும், பத்து கைகளுடனும், பழம், கரும்பு, நெற் கதிர், தந்தம் ஏந்தியும்

காட்சியளிக்கிறார். வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற இவரை வணங்குகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி தினங்களில் இந்த வழிபாடு விசேஷம்.
காஞ்சிப்பெரியவர் வருகை: இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதிலமடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள முக்தி மண்டபம் சிறப்பு மிக்கது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது
தல வரலாறு:
தசரத குமாரரான ராமர் வனவாசம் சென்ற காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் உதவியுடன் ராமர் சேதுக்கரையில் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார். ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்தார். அப்போது காட்சிஅளித்த சிவன், மோட்சபுரிகளில் ஒன்றான

காஞ்சியிலும் தன்னை வணங்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, ராமர் காஞ்சிபுரத்தில் வழிபட்ட தலம் இது. ராமரின் பெயரால் சுவாமிக்கு ராமநாதர் என்று பெயர் வந்தது. இவரை தேவர்கள், பூதகணங்கள் மட்டுமின்றி, மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்களும் வணங்கி முக்திபெற்றனர். ராமேஸ்வரத்திற்குரிய புனிதமும் பெருமையும் இத்தலத்திற்கும் உண்டு
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தின் வடக்கு ராமேஸ்வரமாக இது கருதப்படுகிறது
 



 
Powered by Blogger.