இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கிய அசத்தும் பெண் ரோபா

20.07.2012
ஒரு பெண்ணின் அசலான முக பாவணைகள், சிரிப்பு, கோபம், பயம் என சில உணர்வுகளை உள்ளட்டக்கிய சூப்பர் ரோபா ஒன்றை இத்தாலிய விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் நிகோல் லாசரியின் தலைமையிலான குழுவினர் உருவாக்கியுள்ள இந்த பெண் ரோபோவுக்கு ஃபேஸ் என பெயரிட்டுள்ளது.
பொதுவாக ரோபோ என்றால் மெட்டல் முகத்துடன்தான் இருக்கும். ஆனால் இது ஹியூமனாய்டு வகையை சேர்ந்தது என்பதால், பிளாஸ்டிக், ரப்பர், கிளாஸ் பைபர் போன்றவற்றை பயன்படுத்தி மனித தோல் போலவே இந்த பெண் ரோபோவை வடிமைத்துள்ளனர்.
இந்த பெண் ரோபோ, ஆச்சரியம், மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம் என பலவிதமான உணர்ச்சிகளை, முகபாவங்களை வெளிப்படுத்துதான் இதன் சிறப்பம்சம் ஆகும்.
இதுபற்றி பைசா ஆய்வுக்குழு தலைவர் நிகோல் லாசரி கூறியதாவது: உலகம் முழுவதும் ஹியூமனாய்டு ரோபோக்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இதில் வித்தியாசமாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தோம்.
30 ஆண்டுகளுக்கு பின்பு, எங்கள் எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளது.
‘ஃபேஸ்’ ரோபோ தன் முகத்தில் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். நெற்றியை சுருக்கி கோபப்படும். வாயை அகல விரித்து சிரிக்கும். இதற்காக ரோபோவின் முகத்தில் 32 மினி மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
“ஹைப்ரிட் இன்ஜின் ஃபார் பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ் சிந்தசிஸ்” என்ற சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளோம். எந்த முகபாவத்தை வெளிப்படுத்த எந்த மோட்டார் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு, இந்த சாப்ட்வேர் உதவியுடன்தான் செயற்படுத்தப்படுகிறது.
கோபம், மகிழ்ச்சி போன்ற முகபாவங்கள் மட்டுமின்றி லேசாக வருத்தம் கலந்த மகிழ்ச்சி, வெறுப்பு கலந்த சிரிப்பு போன்ற முகபாவங்களையும் ஃபேஸ் ரோபாவால் வெளிப்படுத்த முடியும்.
எங்கள் குழுவில் உள்ள ஒருவரது மனைவியை முன்னுதாரணமாக வைத்து ‘ஃபேஸ்’ ரோபோவை உருவாக்கியுள்ளோம் என்றார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.