
புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,பேஸ்புக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் படங்களை அழித்த பின்னரும் அதன் நேரடி
யூ.ஆர்.எல் தெரிந்திருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் மீண்டும் பெற்றுக்
கொள்ளலாம்.
இதற்கு காரணம் பேஸ்புக் Profile-ல் படங்களை நீங்கள் அழித்து விட்ட பின்னரும்
கூட அவை பேஸ்புக் சேர்வரில் நீக்கப்படாமல் இருப்பதே.
இதற்கு தீர்வாக இனிமேல் நீங்கள் அழித்துவிடும் படங்கள் பேஸ்புக் சேர்வரிலிருந்து
முற்றாக நீக்கப்பட்டுவிடுமென தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
மேலும் அப்படங்களின் நேரடி முகவரி தெரிந்திருந்தாலும் அவற்றை பெற முடியாது
என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen