நுரைச்சோலை அனல்மின் நிலையம் இதுவரையில் 12 தடவைகள் பழுதடைந்துள்ளது

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,சீன நிதியுதவியுடன் நுரைச்சோலையில் நிர்மானிக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையம், இயங்க ஆரம்பித்ததில் இருந்த 12 தடவைகள் பழுதடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார துறை அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஜே வி பியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அனல் மின்னிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இயங்க ஆரம்பித்தது.
இந்த காலப்பபகுதியில் மாத்திரம் 12 தடவைகள் பழுதடைந்துள்ளது.
இதேவேளை ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களை விட இந்த மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறைந்த செலவே செல்கிறது.
எவ்வாறாயினும் தொடர்சியாக இந்த மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்து வரும் நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின்னுற்பத்தி நிலையில் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.