நல்லூர் கந்தசுவாமி கோவில் 2010 வருடாந்த மகோற்சவ சிறப்பு பார்வை

¨வரலாற்று சிறப்பும் சித்தர்களின் அருளும் நிறைந்த, யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் 2010 வருடாந்த மகோற்சவத்  திருவிழா 15.08.2010  ஞாயிறுக்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத் திருவிழாவிலும் தொடர்ந்து வரும் திருவிழாவிலும், பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து 
கொண்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் மகோற்சவத்  திருவிழா காண, நல்லூரை நோக்கி நாள் தோறும் விரைந்து வருகின்றனர்.  இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியம்,  யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளில் இருந்தும் கோவில் வளாகத்துக்கு
 சிறப்பு பேருந்து சேவையை நடத்தி வருகின்றது.கோவிலின் சுற்றுப் புறங்களிலும், வீதிகளிலும், பக்தர்கள் இளைப்பாறுவதற்கும், தாக சாந்தி செய்து கொள்வதற்குமான  பந்தல்கள்
 அமைக்கப்பட்டிக்கின்றன. அன்னதானத்திற்காக அன்னதான மண்டபங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் நன்மை கருதி  ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில்
 வாகனத் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாதணிகளை வைப்பதற்கான விசேட ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆலய வீதிகளில் யாழ். மாநகரசபையின் 
கண்காணிப்பில் மண் பரப்பப்பட்டு அடியவர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு ஏதுவாக பவுஷர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டதுடன், மேலும் சில செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆலய வீதிகளில் தொண்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் மற்றும் படையினரும் வீதிப் மறிப்புப்  பகுதிகளில் கடமைகளில்
 ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை,ஆலய வீதிகளில் பாதணிகளுடன் நடமாடுவதற்கு யாழ். மாநகரசபை தடை அறிவித்தல் விடுத்திருந்தபோதிலும்,  இதனை மீறி பலர் ஆலய வீதிகளில் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. அங்கப் பிரதிஷ்டை செய்யும் பகுதிகளில் இவ்வாறு பாதணிகளுடன் நடமாடுவதால் தொற்றுநோய்கள் பரவும் நிலைமை காணப்படுவதால் இதற்கு மாநகரசபை இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
 வேண்டியதும், கட்டாக்காலி நாய்களை நல்லூர் ஆலயத்தின் வீதிகளில் கட்டுப்படுத்துவதும் அவசியமானதாகும். மற்றும் ஆலயத்தின் வீதிகளில் தேவையற்று சுற்றி வரும் வாகனங்களையும் வீதிகளிற்கு வருவதை தடுக்கப் படவேண்டும், அத்துடன் நல்லூர் ஆலயத்தின்
 உட்பகுதிகளில் புகைபடம், வீடியோ எடுத்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்ட போதும் சிலர் அதனை மீறி செயற்படுகின்றனர் என்பது பல இணையத்தளங்கள் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு அத்துமீறி எடுக்கப்பட்டுள்ள புகைபடங்கள் ,வீடியோக்களை வெளியிட்டதை, வெளியிடுவதை நிறுத்துவதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மதிப்பை உலகிற்கு 
வெளிக்காட்ட முடியும்.
நல்லூர் முருகனுக்கு அலங்காரக் கந்தன் எனும் சிறப்புப் பெயருண்டு. இங்கே சுவாமிக்கு நடைபெறும் அலங்காரம் மிகப்பிரசித்தம். முதல் தினத்தில் முருகப்பெருமான் செந்நிற அலங்காரத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். இவ்வாறு எனைய
 தினங்களிளும் வெவ்வேறுநிற அலங்காரத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்தார். நல்லூர் கந்தன் திருவிழாக் காலங்கள் யாழ்ப்பாணத்தின்  சகல பகுதியிலும் பக்தி  உணர்வைத் தரும் காலம் என்பது
 குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த திருவிழா நடைபெறுகின்றது என்பது அனைவரும் அறிந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்த திருவிழா இருபத்தைந்து நாட்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்மஹோற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 31 ஆம் திகதி 
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கார்த்திகை திருவிழாவும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சந் தான கோபாலர் திருவிழாவும் மாலை 5 மணிக்கு கைலாச வாகன திருவிழாவும் 4 ஆம் திகதி
 சனிக்கிழமை காலை 7 மணிக்கு கஜவல்லி மஹா வல்லி திருவிழாவும் மாலை 5 மணிக்கு வேல்விமான திருவிழாவும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தண்டாயுதபாணி
 திருவிழாவும் மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு
 சப்பறத் திருவிழாவும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இரதோற்சவமும் 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவமும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை 
மாலை 5 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் மறு நாள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவமும்
 இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பிரசித்திபெற்ற இந்து ஆலயங்களுள் நல்லூர் கந்தசுவாமி கோவிலும் முக்கியமானது. திருவிழாக் காலங்களில் மாத்திரமன்றி எல்லா நாட்களிலும் ஏராளம் பக்தர்கள் நல்லூர் ஆலயத்துக்கு வந்து 
வழிபடுவது வழக்கம்.
திருவிழாக் காலத்தில் பக்தர் கூட்டத்தால் இப் பிரதேசம் நிறைந்துவிடும். நல்லூர் திருவிழா நாட்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் இந்துக்கள் அனைவரும் புனித நாட்களாகக் கருதுவார்கள். தென்னிலங்கையில் வாழும் இந்துக்களும் நல்லூர் திருவிழாவுக்காக வடக்கு நோக்கி வருவது வழக்கம். ஏன் கடல் கடந்த நாடுகளில் வாழும் யாழ்ப்பாண இந்துகள் கூட நம் பெருமானும் திருவிழாவிற்காக யாழ்நகர் நோக்கி
 வருகை தருவார்கள்.
திருவிழாக் காலங்களில் முன்னைய ஆண்டுகளைப் போலப் பக்தர்கள் வெள்ளம் கரைபுரள்கின்றது பிற இடங்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து 
காணப்படுகின்றது..
மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல, இந்தத் தடவை நல்லூர் திருவிழா களைகட்டுகின்றது. கொடியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே
 இப்போது பல தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் தனியார் பஸ்களில் கடந்த சில நாட்களாக நல்லூர் திருவிழாவுக்குச் வருபவர்கள்
 கணிசமான எண்ணிக்கையினராக உள்ளனர். பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் ஏராளம் தற்காலிக கடைகள் கோவிலை அண்டிய பிரதேசங்களில் அமைந்துள்ளன.
முன்னர் இருந்த எல்லாத் தடைகளும் நீங்கி வடபகுதி உட்பட நாடு வழமை நிலைக்குத் திரும்புகின்றது என்பதற்கு இந்த வருட நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா ஒரு எடுத்துக்காட்டு.
நல்லூர் மகோற்சவ காலம் பாடசாலை விடுமுறைக் காலமாக இருப்பதால், இலட்சக்கணக்கான தமிழ், சிங்கள மக்கள் நல்லூருக்கு வந்துசெல்கிறார்கள். கூடவே வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர்களும் நல்லூர் கந்தனின் திருவிழாவுக்கு வருவதைக் காணமுடிகின்றது.
 இவ்வாறு வருகின்றவர்களில் சிலர் நல்லூர் மகோற்சவத்தில் கலந்து கொண்டு விசித்திரமாக செயற்படுகிறார்கள் என்பது வருத்ததிற்கு உரிய விடையமாகும் எதுவாயினும் நல்லூர் மகோற்சவ காலத்தில் தெய்வீகத் தன்மையை நல்லூர்ப்பகுதியில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது மிகவும் 
அவசியமானதாகும்.
நல்லூர் திருவிழா காரணமாக நல்லூர் மாத்திரமன்றி யாழ்ப்பாணப் பிரதேசமும் களைகட்டி வருகின்றது.
இவ்வாரத்தின் இறுதி நாட்களில் பெய்து வந்த மழை காரணமாக களைகட்டி வந்த யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழாவில் கலந்து கொள்ளும் முருக பத்தர்களின் 
எண்ணிக்கை சிறிதளவு குறைந்து காணப்படுகின்றது. எனினும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழா குறித்த நேரந் தவறாமல் இனிதே சிறப்புடன் இடம்பெற்று வருகின்றது என்பது ஒரு முக்கிய விடயமாகும்.
மழை காரணமாக ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் பரப்பப்பட்டிருந்த  மண் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன் மழை நீரும் தேங்கிக் காணப்பட்டது. முன் எப்போதும் இல்லாதவாறு யாழ். மாநகரசபையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு தேங்கி நின்ற நீரை வெளியேற்றியதுடன் அடித்துச் செல்லப்பட்ட மண்ணிற்கு பதிலாக புதிய மண்கள் பரப்பப்பட்டு அடியவர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவராலும் வரவேற்கக்
 கூடிய விடயமாகும்.
முதல் திருவிழாக் காலங்களில்  நல்லூர் பிரதேசத்தில் அடக்கடி மின் தடைப்பட்ட போதும் இப்போது இது சீர்செய்யப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும்  நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருந் திருவிழா சிறப்புடன் நடைபெறும் என்பதில் எதவித 
ஐயமும் இல்லை.
உற்சவ காலங்களில் எற்படும் குறைபாடுகளை 0094212228888 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளமுடியும் என யாழ். மாநகரசபையினர் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.