நல்லைக்கந்தன் முதலாம் நாள் திருவிழா - மாலை வீதியுலா

 வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் முதலாம் திருவிழாவில் வள்ளி தெய்வயானை சமேதராக, நேற்று மாலை 6.10 மணியளவில் முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்தார். பெருமளவு அடியவர்கள் நேற்று மாலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
   
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு
 

நல்லைக் கந்தன் இன்று காலை கொடியேற்றம்!

 ஆரம்பமாகிறது. 25 நாள் பெருந்திருவிழா  வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா, இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்ச உற்சவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16ம் திகதி மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 17ம் திகதி மாலை கார்த்திகைத் திருவிழாவும்.20ம் திகதி காலை சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை கைலாச வாகன உற்சவமும், 21ம் திகதி காலை கஜவல்லி முஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை வேல் விமான உற்சவமும் நடைபெறவுள்ளன.
வரும் 22ம் திகதி காலை மாம்பழத் திருவிழா எனப்படும் தண்டாயுதபாணி உற்சவமும், அதே தினம் மாலை ஒருமுகத் திருவிழாவும், 23ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் இடம்பெறவிருக்கின்றன. இம்மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு இரதோற்சவமும், 25ம் திகதி காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் நடைபெறவிருக்கின்றன. தொடர்ந்து மறுநாள் 26ம் திகதி மாலை நிகழும் பூங்காவனத் திருவிழாவுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவு பெறுகிறது. மகோற்சவ காலத்தில் தினமும் மாலை 5.00 மணிக்கு முருகப் பெருமான் வெளிவீதியுலா இடம்பெறும்.உற்சவகாலத்தில், பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு .


ஆடிப்பூரம் ஆடி மாத வழிபாடுகள்

 1. ஆடி பூரத்தன்று அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். 2. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது. 3. ஆடி பூரம் அன்று கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 4. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
5. ஆடி பூரத்தன்று கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. 6. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 7. ஆடி பூரத்தன்று காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
 8. ஆடி பூரத்தன்று மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும். 9. ஆடி பூரத்தன்று முத்துமாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். 10. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள். 11. ஆடி பூரத்தன்று குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை
 .
  மற்றைய செய்திகள்
 

ஜாதகம் இல்லாதவர்கள் ராகு தோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?

குணம் மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது,
அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடிப்பது, விஷப்பூச்சிகளால் பாதிக்கபடுவது, கணவன் மனைவிக்குள் என்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால் அவருக்கு ராகுதோஷம் இருப்பதாக கொள்ளலாம்.
சாதாரணமாக இராகு-கேது வீற்றிருக்கும் இடம் சுபர் வீடாக இருந்தால் காலசர்ப்பயோகத்தின் சுப பலனும், அசுபர்கள் வீடாக இருந்தால் அசுப பலனும் உண்டாகிறது.
பெரிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் கால சர்ப்பதோஷம் அமையப்பெற்றுள்ளது. இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் வரலாற்றில் இடம் பெற்றார்கள்

மற்றைய செய்திகள்

தொல்லைகள் நீங்கும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்

ஆடி வெள்ளிக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும்.
இது கூடுதல் பலன்களை தரும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.
இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பாவையினால் சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.
சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்
மற்றைய செய்திகள்

மிதந்து பக்தர் வெள்ளத்தில் வந்த நயினை நாகபூசணி அம்மனின் தேர்! இரண்டாம் இணைப்பு

 வரலாற்றுப் பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை மணியளவில் இடம்பெற்றது. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலய மஹோற்சவத்தில் 14 ஆம் நாளாகிய இன்று
தேர்த்திருவிழா இடம்பெற்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இந்தத் தேர்த்திருவிழாவிற்காக வருகை தந்திருந்தனர். தேர் உற்சவத்தின் போது, காவடிகள், கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகியவற்றினை மேற்கொண்டு அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.




 

ஸ்ரீ நயினை நாகபூஷணி அம்மன் தேர் திருவிழா .

ஸ்ரீ நயினை நாகபூஷணிஅம்பாளின் 11..07.14.தேர் திருவிழா மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் படைசூழநடைபெற்ற திருக்கட்சியை கனதவர்க்கு நிழல்படங்கள்இணைப்பு அடியவர்களின் அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேர் வீதி வலம் வந்த அழகியதிருள் காட்சியைக்கண்டு அருள் பெறுவிரக ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி,,, 
இங்குஅழுத்தவும் விரிவான புகைப்படங்கள் இணைப்பு
 








 

டோட்முண்ட் சிவன் தேர்த்திவிழாவின் நிழல் படங்கள்

டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 05.07.2014 அன்று நடை பெற்ற திருவிழா நிழல்படங்கள் சில
தேர்திருவிழா பெற்றது பெரும் திரலான அடியார்கள் வந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்
தேர்வலம் இணைந்து செல்க
 தெய்தவத்திடம் குறையை சொல்க
 தீராத வினை தீர்க்கும் ஆதியன்
 பாராளும் உயிர் இனத்தின் வேதிகன்
 அடி தொழ அருள் சிறக்க வணங்குவோம் வாறீர்.
 
விரிவான நிழல் படங்கள் இணைப்பு
 
 
 

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம
 ஓம் ஏகதந்தாய நம
 ஓம் கபிலாய நம
 ஓம் கஜகர்ணாய நம
 ஓம் லம்போதராய நம
 ஓம் நாயகாய நம
 ஓம் விக்னராஜாய நம
 ஓம் கணாத்பதியே நம
 ஓம் தூமகேதுவே நம
 ஓம் கணாத்ய க்ஷசாய நம
 ஓம் பாலசந்த்ராய நம
 ஓம் கஜானனாய நம
 ஓம் வக்ரதுண்டாய நம
 ஓம் சூர்ப்ப கர்ணாய நம
 ஓம் ஹேரம்பாய நம
 ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
 இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்

மற்றைய செய்திகள்
Powered by Blogger.