யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு30-07-2024.அன்று  காலை இடம்பெற்றது.
 ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது.
 அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி
 கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும், பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு 
இடம்பெற்றது.
 நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை என்பதாகும்.




ஆன்மீகம் என்றால் என்ன இது வெறும் தத்துவமா அல்லது அன்றாட வாழ்வில் அதைப் பயன்படுத்துவது நடைமுறையில் சாத்தியமா

ஆன்மீகம் என்பது ஆன்மா சம்பந்தமானது. ஆனால் ஆன்மீகத்தில் கூறப்படுவது இறைவனைப்பற்றி மற்றும் சிறிய பெரிய 
தெய்வங்களைப்பற்றி. பக்தி மார்க்கத்தில் சென்று இறைவனைப் போற்றுவதும், தொழுவதும்,
மற்றவர்களுக்கு இறைவனுடைய பெருமையைக் கூறி, உணர்த்தி அவர்களை இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி மகிழ்வதும் ஆன்மீகமாக கருதப்படுகிறது. மக்களுடைய இறை நம்பிக்கையைப் பற்றி 
இறைவன் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியே தானே 
கண்காணிப்பதும் அவர்களை வழிநடத்துவதும் இறைவனால் இயலாதக் காரியம் என்றே நான் நினைக்கிறேன் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்கும், வழிநடத்துவதற்கும், அவர்கள் தவறு 
செய்யும்பொழுது
 தண்டிப்பதற்கும் இறைவன் ஆன்மாக்களை உருவாக்கி இருக்கிறார். பல புதிய ஆன்மாக்களை இன்றும் அவர் உருவாக்கிய வண்ணம் இருக்கிறார். இந்த புதிய ஆன்மாக்களாலேயே பல புதிய முன்னேற்றங்கள் உலகத்தில் ஏற்பட்டபடி இருக்கிறது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் சில
 ஆவிகள் ஒரு மனிதனை பீடிக்கும்படிச் செய்கிறது. பீடித்த 
ஆவிகள் மேலும் மேலும் வளர்ந்து, உறுதிப்பட்டு அவன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்ல
 ஆவிகளுக்கும் தீய ஆவிகளுக்கும் இந்த குணம் இருக்கிறது. இந்த குணத்தாலேயே
 படிப்பவர்கள் மேலும் மேலும் படித்து பட்டம் பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள், குடிகாரர்கள் மேலும் மேலும் குடித்து குடிகேடர்களாக 
மாறி குடும்பத்தை குலைப்பவர்களாக ஆகிறார்கள். ஒரு மனிதனுடைய
 விதியை அவனுடன் இருக்கும் ஆவிகள் அவனுடைய அன்றாட செயல், பேச்சு மேலும் சிந்தனையிலிருந்தும் தீர்மானிக்கின்றன. உங்கள் கடந்த 
காலம் நிகழ் காலத்தை தீர்மானிக்கிறது, உங்களுடைய நிகழ் காலம் எதிர்காலத்தை
 தீர்மானிக்கிறது. இதையே கர்மா என்றும் கூறுகின்றனர்.
ஆன்மாக்கள் அல்லது ஆவிகள் தனிக்கூறுகள். மனிதனுக்கு 
ஆவியுடல் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் பல 
ஆவிகளுடன் வாழ்ந்து க்கொண்டிருக்கிறான். அவைகள் அவன் பிறந்ததிலிருந்து 
ஒவ்வொன்றாக இணைந்தவை. அவை அறிவு, திறன்கள், உணர்வுகள், ஆர்வங்கள் மற்றும் அனைத்தும் ஆகும். எண்ணங்களும்
 உங்களுக்குத்
 சொந்தமானதல்ல. உதாரணமாக, நீங்கள் ஒரு விஷயத்தில் ஒரு முடிவை 
எடுக்க விரும்பினால், ஒன்றன் பின் ஒன்றாக ஆவிகள் சிந்திக்கின்றன. அந்தச் சிந்தனைகளை ஆன்மாக்கள் உங்கள் மூளை வழியாக 
உங்கள் மனதிற்கு 
அனுப்புகின்றன. அவைகள் அனுப்பும் கருத்துக்களை நீங்கள் கவனிக்கிறீர்கள் பிறகு அதில் ஒன்றைத் தேர்வு செய்கிறீர்கள் அல்லது நிராகரிக்கிறீர்கள். மூளை என்பது உங்கள் மனதுடன் ஆவிகள் தொடர்புக்கொள்ள
 பயன்படும் ஒரு சாதனம். மனம் என்பது கணினியின் மனம். ஒரு கணினியை முற்றிலுமாக அழித்தபின் நீங்கள் அதன் மனதைப் பெற மாட்டீர்கள். மனிதர்கள் நிலை இதே
 நிலைதான். உயிர் என்பது ஒரு உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஒரு சக்தி. அது ஒரு ஆவியோ அல்லது வேறு எதுவோ 
இல்லை. அது ஆட்டோ மெக்கானிசம் போன்றது. மரணத்திற்குப் பிறகு ஒரு நபருடன் வாழ்ந்த 
அனைத்து ஆவிகளும் வெளியேறி புதிய உடல்களைத் தேடி வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. இறந்த பிறகு யாரும் எந்த வடிவத்திலும் வாழ்வதில்லை. 
எல்லா மனிதர்களும் சதை மற்றும் எலும்புகளால் ஆன ரோபாட்கள், ஆவிகளுடைய விளையாட்டுகளுக்காக பயன்படும் பொம்மைகள்.
என்பதாகும்





பிறந்த நாள் வாழ்த்து திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி) 23.07.24

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஒஸ்லோவில் வசிக்கும் திருமதி பாலமுரளி தர்மசாந்தி(சாந்தி ) 23-07-2024 இன்று அவர்களின்  பிறந்த நாள்  இன்று தங்கள்  இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  அப்பா வயிரவர் ஒஸ்லோமுருகன்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்  இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று 
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன்


பிரம்ம முகூர்த்த நேரத்தில் நல்ல விடயங்களை ஏன் செய்கிறார்கள்

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த நேரமாகப் பிரம்ம முகூர்த்தம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
 காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான
 நேரத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைக்கக்கூடிய பிரம்ம தேவனின் மனைவியான சரஸ்வதி தேவி கண்களுக்குச் செயல்படும் நேரமாக இந்த பிரம்ம 
முகூர்த்தம் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த நேரத்திற்குச் சரஸ்வதி யாமம் என்ற பெயரும் உள்ளது. மனதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நீக்கவும், இறைச் சிந்தனையை மனதில் நிறுத்தவும் இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான நேரமாக இந்த பிரம்ம முகூர்த்தம் கூறப்படுகிறது.  
இந்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. இந்த
 நேரத்தில் சிவபெருமானை வழிபட்ட தான் பிரம்மதேவன் பல வரங்களைப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. அதற்காகவே இந்த நேரத்திற்குப் பிரம்ம
 முகூர்த்தம் எனப் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் நாமும் கண்விழித்து நீராடி நினைத்த காரியங்களைத் தொடங்கினால் அது வெற்றியில் முடியும் எனக் கூறப்படுகிறது. 
ஒருவேளை குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி விட்டு கை கால்களை மட்டுமாவது சுத்தப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் நேரம் பற்றி சில குறிப்புகளை இங்கே காணலாம். சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் நேரம் ஆரம்பமாகிறது. 
இது மிகவும் சுப முகூர்த்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்வது, வீட்டு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றால் வீட்டில் சுபத் தன்மை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் இந்த
 நேரத்தில் நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது அந்த நேரம் எப்போதும் சுப வேலை தான் எனக் கூறப்படுகிறது.  
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு மற்ற 
காரியங்களைச் செய்தால் அன்றைய தினம் உற்சாகத்துடன் இருக்கும். உச்சக்கட்ட சுப நேரமான
 இந்த பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் அனைத்து சகல சௌபாக்கியமும் பெறலாம் 
என்பது ஐதீகமாகும்.




பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா ( பாலா )17.07.2024

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட
  திரு துரைராஜா .பாலையா(பாலா )
அவர்களின் பிறந்தநாள்  17..07.2024.இன்று.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து
 இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி மாயப்புலத்து அம்மன் மறுகன்புலத்து வீரபத்திரர் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் 
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   இனிக்கும் இந்த பிறந்த நாளில் ஏமாற்றங்கள் நீங்கி 
எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய அன்பிலும் அறத்திலும்
 நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்  வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும்
 சிறந்து விளங்கி 
 பிறந்த தினமான இன்றும்  என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.வாழ்கவளமுடன் 



ஏன் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் வைப்பதில்லை

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு அது 
ஒரு நாளாகும். 
அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில் விழாக்களும், விசேஷங்களும் ஏராளமாக வருவதுண்டு.  
ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள் வைப்பதில்லை? 
ஏன் ஆடி மாதத்தில் திருமணம், சுப காரியங்கள்
 வைப்பதில்லை? ஆடி மாதத்தில் திருமண போன்ற வைபவங்கள் வைக்கக்கூடாது. அது சுப காரியத்துக்கு ஏற்ற மாதமில்லை என்ற கருத்து நிலவுகிறது. 
ஆனால் உண்மை அது அல்ல. உண்மையில் ஆடி மாதத்தில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்கள், கோயிலுக்கு செல்வது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்த்தனர்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் வைப்பதால், தெய்வ சிந்தனை மாறுவதோடு, தெய்வங்களை தொந்தரவு செய்வதாக மாறும். அதோடு தெய்வங்களின் ஆசீர்வாதம், அனுக்கிரகம் இரண்டுமே பரிபூரணமாகக் கிடைக்காது. இதன் காரணமாக தான் ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் வைப்பதில்லை. 
அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் கரு தரித்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதாலும் புதுமண தம்பதிகளைப் பிரிக்கின்றனர். ஆடி அமாவாசை 2022 எப்போது? - தர்ப்பணம் கொடுக்க 
சரியான நேரம் தெரிந்து கொள்வோம்​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா?​ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா? ஆடி மாதத்தில் வீடு குடியேறுதல் செய்யலாமா?
ஆடி மாதத்தில் வீடு, நிலம் சார்ந்த விஷயங்களை தாராளமாக செய்யலாம் என்பதற்காகவே வாஸ்து புருஷன் நித்திரை விடுவதால் தாராளமாக கிருஹப்ரவேசம், வேறு வீடு குடியேறுதல், புதிய
 நிலம், வீடு வாங்குதல் போன்ற விஷயங்களை செய்யலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் தான் வாஸ்து பூஜை, வீடு க்ருகபிரவேசம் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரம் உரைக்கிறது. மற்றபடி ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் தாராளமாக மேற்கொள்ளலாம்.
என்பது குறிப்பிடத்தக்கது 




 

உங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் பெற இந்த விரதங்களை கடைப்பிடியுங்கள்

உங்களுக்கு  திருமண வயது பூர்த்தியடைந்தும் ஏதோ ஓர் காரணத்திற்காக திருமணம் தள்ளிபோகலாம். அல்லது உரிய வரன் கிடைக்காமல் போகலாம். இவை என்ன செய்தாலும் மனதிற்குள் ஏதோ ஓர் குறை 
இருந்துகொண்டே இருக்கும். 
இவ்வாறான சங்கடங்கள் தீர்க்க ஆன்மீகத்தில் சில
 விரத வழிப்பாட்டு முறைகள் இருக்கின்றன. அவற்றை மானசீகமாக மேற்கொள்ளும் போது அதற்குறிய பலன்களை நாம் பெறலாம். அவ்வாறான இரு விரத முறைகளை சுருக்கமாக தருகிறோம்.
சுக்ர வார விரதம்: 
நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும் .
தெய்வம் : பார்வதி தேவி 
விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்
 பலன் : மாங்கல்ய பாக்கியம்
 நவராத்திரி விரதம் 
நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை 
தெய்வம் : பார்வதிதேவி 
விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம்.
 பலன் : அனைத்து விதமான சுகங்களும் கிடைக்கும்





 

Powered by Blogger.