| செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah. |
| இன்றைய
சூழ்நிலையில் எந்த நேரத்தில் யாருக்கு என்ன நேரும் என்று யாராலும் அறிய
முடிவதில்லை.
இதமாய் ஒரே லயத்தோடு துடித்துக் கொண்டிருக்கும் இதயம் திடீரென்று
நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்பு தான் மாரடைப்பு என்று அறியமுடிகிறது. மாறி வரும் உணவுப்பழக்கத்தினால் உடல் பருமன் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இதயத்தின் நலனை காக்க சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும் சிபிஆர்: மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். சிபிஆர் பயிற்சி பெற்றிருந்தால் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு சரியான முதலுதவி அளித்து அவர்களின் உயிரை பாதுகாக்க முடியும். எனவே உடனடியாக உங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளிலோ, பயிற்சி நிலையங்களிலோ சிபிஆர் பயிற்சி பெற்றுக் கொள்வதன் மூலம் நம் அன்பிற்குரியவர்களை பாதுகாக்கலாம். மதுவுக்கு குட்பை: தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் எளிதில் தாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதிகம் மது அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதனால் இதயநோய் அல்லது பக்கவாதம் நோய் ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள். மது அருந்துபவர்களுக்கு உடல்பருமன் ஏற்படுகிறது. இதுவே இதயநோய்க்கும் காரணமாகிறது. எனவே மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தினால் இதயநோய் ஏற்படாமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நல்லா நடங்க: இதயநோய் ஏற்படாமல் தடுக்க எளிமையான காசு செலவில்லாத சிகிச்சை எது எனில் நடப்பதுதான். காலையிலும், மாலையிலும் அரைமணிநேரம் நடங்கள். இதனால் இதய நோய் மட்டுமல்லாது உடல்பருமன், நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். காலையில் வாங்கிங் போவது மனதிற்கு உற்சாகத்தை தரும். நடைபயிற்சியைப் போல நீச்சலும் சிறந்த பயிற்சிதான் இதனால் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் அறிவுரை. கெட்ட கொழுப்புள்ள உணவு: ட்ரான்ஸ்பேட் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளில் ட்ரான்ஸ்பேட் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்த கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் இதயநோய், டைப் 2 நீரிழிவு, பக்கவாதநோய் ஏற்படுகிறது. எனவே டின்களில் அடைத்த உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்ப்பதன் மூலம் இதயநோயை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள் |
இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்
Tags :
செய்திகள்
விண்டோஸ் 8ல் மென்பொருட்களின் உதவியின்றி Screenshot எடுப்பதற்கு
| செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,BY.rajah. |
| இணையப் பக்கங்களையோ அல்லது
மென்பொருட்களின் தோற்றங்களையோ தேவை கருதி Screenshot செய்வதற்கு தனியாக
மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8
இயங்குதளத்தில் இவ்வசதியினை மென்பொருட்களின் பயன்பாடு இன்றி பெற்றுக் கொள்ள
முடியும். இதற்கு Screenshot எடுக்க வேண்டிய பகுதி மொனிட்டரில் தெரியும் போது PrtScn(Print Screen) எனும் பட்டனை அழுத்தினால் போதும். பின் Libraries எனும் பகுதியில் காணப்படும் Pictures இல் Screenshots எனும் பெயருடைய சுயமாக உருவாக்கப்பட்ட கோப்புறையினுள் குறித்த Screenshots ற்குரிய படம் காணப்படும். ![]() ![]() |
Tags :
தகவல்கள் புகைப்படங்கள்
யாழ்ப்பாணத்தார் காலத்தெழுந்த சுதேச மருத்துவ தமிழ் நூல்கள்
கி.பி. 12 - 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாண தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான நூல்கள் தோற்றம் பெற்றன. இவை யாவும் தொகுப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலே கூறப்பட்டுள்ள மருந்துகளில் பல தற்போதும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெருவழக்காயுள்ளன. கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டளவில் அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், பாதார்த்த சூடாமணி, சொக்கதாதர் தன்வந்திரியம் போன்ற நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நூல்கள் பலவற்றையும் யாழ்ப்பாணத்திலே வெளிவந்த வேறுபல சித்த மருத்துவ நூல்களையும் அச்சு வாகனமேற்றிய பெருமை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர் ஐ.பொன்னையாப்பிள்ளை அவர்களையே சாரும். அவை முன்னர் ஏட்டு வடிவிலே இருந்தன. செகராசசேகரம் நூலை அச்சுவேலியைச் சேர்ந்த ச.தம்பிமுத்துப்பிள்ளையும் அமுதகாரத்தை திருகோணமலையைச் சேர்ந்த ச.தம்பையாபிள்ளை என்பவரும் பதிப்பித்துள்ளளனர்.
சித்த மருத்துவ கலாநிதியும், கைதேர்ந்த சித்த வைத்தியரும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி சே.சிவசண்முகராஜா அவர்கள் குறிப்பிடும் சித்த மருத்துவ - சுதேசமருத்துவ நூல்களின் விபரம் வருமாறு :
‘அங்காதிபாதம், அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி, ஏட்டு வைத்தியம், கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு, சித்த ஔடத சங்கிரகம் , சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம், சுதேசவைத்திய அவுடதத்திரட்டு, சுதேசவைத்திய மருத்துவ மூலிகைக் கையகராதி, செகராச சேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம் , நயனவிதி குணமும் மருந்துமும், பரராசசேகரம், வைத்தியசிந்தாமணி, வைத்தியபூரணம்’ 1(2000 : 62)
சுதேசமருத்துவ இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக் காட்டும் ஆவணங்களில் இலங்கையிலே வெளிவந்த சித்த - சுதேசமருத்துவ நூல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படும் சுதேச - சித்த வைத்தியம் சம்பந்தமான ஏட்டுச் சுவடிகள் இங்கு ஈழத்திலே சுதேச மருத்துவம் ஒரு காலத்தில் செழிபுற்றிருந்ததை எடுத்து காட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டு ‘ஏட்டுவைத்தியம்’ என்னும் நூல் வைத்திய கலாநிதியும் இன்று பேராசிரியருமான சு. பவானி அவர்களினாலே ஆயுர்வேதத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
1980 இல் சித்த ஔடத சங்கிரகம் என்னும் சித்த மருந்துகளின் தொகுப்பு நூல் ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 1992 இல் திலகராகப் பணிபுரிந்த ஏழாலையைச் சேர்ந்த திரு. சி. முருகவேல் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்திலே காணப்பட்ட தமிழ் சுதேச வைத்திய ஏட்டுச் சுவடிகளின் பெயர் பட்டியலொன்றை (அப்போதைய பிரதம நூலகராக இருந்தபோது) வெளியிட்டார்.
சுதேச மருத்துவ நூலாக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பெரும் பணியாற்றியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் சி. ஆறுமுகம்பிள்ளை 1931 இல் ‘நோய் நிதானங்கள்’ என்னும் அரிய தமிழ் மருத்துவ நூலைத் தொகுத்து வெளியிட்டார். சித்த - சுதேச மருத்துவ நோய்நாடல் சம்பந்தமாக எமக்குக் கிடைத்த முதலாவது நூல் இதுவென்றே கூறலாம்.
ஆயுர்வேத வைத்தியத்தில் ‘மாதவன் நிதானம்’ போன்ற நோய் நிதான நூல்கள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் நோய் நிதானத்துக்கென்று தனியான நூல் எதுவும் இலங்கையிலே இல்லாதிருந்தது. அக்குறைபாட்டைப் போக்கும் நோக்கத்துடனேயே தாம் இதனைத் தொகுத்ததாக நூலாசிரியர் தமது முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். ‘அங்காதிபாதம்’ என்னும் பெயரில் இதே நூலாசிரியர் எழுதிய ஒரு நூல் இற்றைவரை கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. அதுபோலவே திருகோணமலையைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவர் 1906இல் எழுதிய ‘அற்காதிபாதம்’ என்னும் நூலும் கையெழுத்து பிரதியாகவே இருந்து வருகிறது.
ஆதி காலத்தில் சுதேச - சித்த மருத்துவமானது இலங்கை முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் மேலாதிக்கம், நட்புறவு என்பன இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் இவ்வைத்திய முறை புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கக் கூடும். பொலனறுவையிலமைந்துள்ள பொற்கல் விகாரையில் உள்ள சிலைகளில் ஒன்று சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவருடையது என்ற கருத்து இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது. 5ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய சிந்தாமணி பைசாஜ்ஜ சங்கரதும் என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும். இவை சிங்களவர் மத்தியில் சித்த - சுதேச மருத்துவத்துக்கிருந்த செல்வாக்கை நன்கு காட்டும். சித்த மருத்துவம் கூறும் சித்தர்களில் ஒருவரான ‘கோரக்கர்’ திருகோணமலையில் சித்தியடைந்தார்.
பதினெண் சித்தர்களிலே புலத்தியர், சட்டநாதர் ஆகிய இருவரும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் கருதத்தக்கது. ‘சிங்களம்’ என்பது இங்கு ‘இலங்கை’ எனும் நாட்டை குறிப்பதாக அமைகிறது. எனவே இத்தமிழ்ச் சித்தர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று சித்த மருத்துவ வளர்ச்சியில்ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
பரராசசேகர மன்னனின் சகோதரனான பரநிருபசிங்கன் என்பவன் சிறந்த சித்த மருத்துவராகத் திகழ்ந்ததுடன் கண்டியரசரின் மனைவிக்குச் சிங்கள வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்த வயிற்று வலியைக் குணப்படுத்தினான் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பாண அரசபரம்பரையினருக்குச் சுதேச - சித்த மருத்துவத்தில் இருந்த ஈடுபாட்டைக் காட்டுவதுடன் சித்த மருத்துவம் சிங்கள மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பயன்பட்டிருப்பதற்கும் சான்று பகர்வதாகவுமுள்ளது. தற்போது கூட சிங்கள பாரம்பரிய மருத்துவர்களிடம் தமிழ் ஏட்டுச்சுவடிகள் பல இருப்பதாகக் கூறப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. எனினும் பிற்காலத்தில் தமிழ் மருத்துவமானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது

தகவல்கள்
அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலமாகச்செல்ல முற்பட்ட 58 பேரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கொட்டோடை பகுதிக் கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திப்படகு ஒன்றில் செல்ல முற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துவந்த கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு , வடமராட்சி , முல்லைத்தீவுப் பகுதியைச்சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 58பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா நோக்கி வடக்கு , கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவர்களைக்கடற்படையினர் கைதுசெய்து சட்டநடவடிககை மேற்கொள்கின்றமையும்குறிப்பிடத்தக்கது
Tags :
இணைய செய்திகள்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நாடு முழுவதுமுள்ள 2803 மத்திய
நிலையங்களில் நடைபெறுகிறது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்
பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும்.
மலையக மாணவர்களும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் இன்று பரிட்சை
எழுதுவதற்கு தமது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் காலை எட்டு மணிக்கே பரீட்சை
நிலையங்களுக்கு வந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

.jpg)
.jpg)
பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும்.

.jpg)
.jpg)
|
|
Tags :
தகவல்கள் புகைப்படங்கள்
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்பது இதுதானா? (வீடியோ இணைப்பு)
26.08.2012.தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்றது என்று கூறுவார்களே இதுதானா ? அமெரிக்காவில் ஓலான்டோ மாநிலத்தில் ஒரு கடையைக் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் இருவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருந்திருக்கிறது. அவர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்டவேளை அங்கே வேலை செய்த ஊழியர் ஒருவரைப் பிடித்துவந்து மேசைக்குப் பின்னர் வைத்து சுட முற்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கியை எடுத்த திருடன் ஒருவன் அதனை அழுத்தி ஊழியரின் மண்டையில் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி வேலைசெய்யவில்லை!
Tags :
காணொளி
வாகன தரிப்பிட ஒழுங்கு கஸ்தூரியார் வீதியில் இறுக்கம்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை
|
யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதியில் சைக்கிள்
மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஒற்றை, இரட்டை நாள்கள் அறிவிப்பின்படி நிறுத்துதல்
வேண்டும். தவறுபவர்களுக்கு எதிராக யாழ்.பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு
வருகின்றனர்.
யாழ்.நகரில் போதனா வைத்தியசாலை வீதியிலிருந்து
ஆரம்பிக்கும் கஸ்தூரியார் வீதியின் வலப் புறமாக இரட்டை நாள்களில் சைக்கிள்,
மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இடது புறமாக ஒற்றை நாள்களில்
சைக்கிள், மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை நாள்கள் என்பது திங்கள், புதன், வெள்ளி
என்றும் இரட்டை நாள்கள் என்பது செவ்வாய், வியாழன், சனி என்றும் போக்குவரத்து
விதிமுறைகளில் உள்ளது போன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து இடையூறுகளைச்
சீர்செய்யும் முகமாக இந்த விதிமுறைகள் கஸ்தூரியார் வீதியில் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது.
தினமும் வீதியின் இரண்டு புறமும் சைக்கிள்,
மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டுவருவதனால் வாகனத்தில் பயணிப்பவர்கள் மட்டுமன்றி
பாதசாரிகள் கூட பெரும் இடையூறுகளை எதிர் நோக்கி வந்தனர்.
இந்த நடைமுறையை பின்பற்றத் தவறுபவர்களுக்கு
எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
|
Tags :
இணைய செய்திகள்
முழுமையாக மண் அகற்றாமையால் நல்லூர் வீதியில் போக்குவரத்துச் சிரமம்
|
26.08.2012.
நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாக் காலத்தில்
வீதியில் போடப்பட்ட மணல் முழுமையாக அகற்றப்படாமையால் வீதியால் செல்வோர் பெரும்
அவலங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர்.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு யாழ்.
மாநகர சபையால் ஆலயத்தைச் சுற்றியுள்ள "காப்பெற்' உட்பட எல்லா வீதிகளுக்கும் மணல்
போடப்பட்டது. அவ்வேளை அந்த வீதியூடாக வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தற்போது திருவிழா முடிவடைந்த பின்னர் இவ்வீதியூடாக கனரக வாகனப் போக்குவரத்து வழமை
போன்று இடம்பெறுகிறது.
இந்த நிலையில் போடப்பட்ட மணல் வீதியில் தற்போதும்
இருப்பதனால் இந்த வீதியால் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் சறுக்கி
விபத்துள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உடனடிக் கவனமெடுத்து இதற்கான
நடவடிக்கை எடுக்க உரியவர்கள் முன்வரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
|
Tags :
இணைய செய்திகள்
மின்னஞ்சல் ஒன்றினை விரும்பிய நேரத்தில் அனுப்புவதற்கு
சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுள் ஜிமெயில் நிறுவனமானது பல
வசதிகளுடன் கூடிய சேவையினை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

Tags :
தகவல்கள்
Powered by Blogger.

.jpg)