பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2024..இன்று தனது இல்லத்தில்
குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச்சகோதரர்கள்
அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார்  உற்றார் உறவினர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவற்கிரி அப்பா வயிரவர் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று இவ்வருடத்தின் எல்லா நாட்களும் ஒன்று கூடி இந்நாளில் உன்னை வாழ்த்தும் உறவுகள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்.
ஈடில்லா இந்நாளில் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு
நோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று
 பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து , நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/  இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன்.





ஆன்மீக பழக்கங்களில்நாம் நம்பிக்கை வைத்தால் நலனையே எதிர்பார்க்கலாம்

நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.
இதில் சில நம்பிக்கைகள்....
 நாம் வாங்கும் மளிகைப்பொருட்களில் உப்பை மாத்திரம் வெள்ளிக்கிழமை வாங்கினால் வீட்டில் செல்வம் செழிக்கும்.
அஷ்டமி, நவமிகளில் துளசிச் செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கி பின் நமது வெளிக்காரியங்களைச் செய்தால் 
அது கைகூடும்
 பௌர்ணமி, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் குத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டிலே மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
உப்பு, வெந்தயம், எள்ளு (கருப்பு) என்பவற்றின் சிறிய அளவை 
எடுத்திடித்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வீட்டின் 
தென்மேற்கு மூலையில் வைத்துவிட்டால் சேரவேண்டிய செல்வம் விரைவில் வந்து சேரும். இந்த வெள்ளைத்துணியை 48 நாட்களிற்கொரு 
முறை மாற்றிக் கொள்ளலாம். மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 




 

நம் முன்னோர் பிள்ளையார் சுழியை ஏன் போடார்கள் அறிந்துடுவோம்

நம் முன்னோர் எதை எழுதினாலும் அங்கு தொடக்க பக்கத்தின் உச்சியில் ஒரு சுழியை இட்டிருப்பார்கள். அதென்ன என்று இக்காலத்தில் அவற்றை 
படிப்போர் கேட்கலாம். 
அதொன்றும் சும்மா சுழியல்ல பிள்ளையார் சுழி இந்த சுழியை வளைவு “வக்ரம்” என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால் அவரை “வக்ரதுண்டர்” என்றும் 
அழைப்பதுண்டு.
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை”  
 வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும் ஆனைமுகத்தானை வணங்குபவருக்கு
 கிடைக்கும்ன்னு சொல்வாங்க. இப்படி எதை செய்தாலும் ஆனைமுகத்தானை வணங்கி செய்வது நம் வழக்கம்.  ஆகையால் இந்த சுழியை தொடங்கும் எக்காரியத்திற்கும் இந்துக்கள் இடுவது வழக்கம்.
அந்த பழக்கம் செயலில் மட்டுமில்லை. எழுதுவதிலும் உண்டு. எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவது வழக்கம். பிள்ளையார் சுழியை “உ” என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது.
விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை 
குறிக்கிறது. இதற்குள் பலவித உலகங்களும், வான் மண்டலமும் அடங்கியுள்ளது
. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.
 “உ” எனும் வட்டத்திற்குப் பிறகு ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், “ஆர்ஜவம்” என சொல்வர். இதற்கு
 “நேர்மை” எனப்பொருள். வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதே என்பதே இந்த
 பிள்ளையார் சுழியின் தத்துவம். இவ்வுலகில் வாழும்
 அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி 
உணர்த்துகிறது. 
நாம் வாழும் டிஜிட்டல் உலகில் இந்த ”உ” எங்கேயிடுவது என்ற கேள்வி எழலாம். பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்க்கை நடைமுறையை பார்த்தால் தற்போது இது மறைந்துள்ளது என்றாலும் சாதனை படைத்தவர்களின் நடைமுறையில் இது அவரவர் பாவிக்கும்
 உபகரணங்களில் காணலாம்.
 அதேப்போல, வியாபாரத்தில் “உ” பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னு எழுதுவாங்க. இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள். முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார். எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.என்பதாகும் 




நீங்கள் அயோத்தி ராமர் பற்றி அறியாதவைகள் ஆச்சரியம் ஆனால் உண்மை

அயோத்தி ராமர் கோயிலின் மொத்த பரப்பளவு 70 ஏக்கர்கள் கொண்டது. இதில் 70% பச்சை பசேல் என்ற பகுதியாகும். 
ஆலய வளாகம் 2.77ஏக்கர்கள். கோயிலின் நீளம் 380 அடிகள். அகலம் 250 அடிகள். உயரம் 161 அடிகள். கோயிலானது இந்திய நகர கட்டிடக் கலை பாணி இந்திய ஸ்டைலில் கட்டப்பட்டுள்ளது. 
கோயிலில் 392 தூண்கள் உள்ளது.44கதவுகள் உள்ளது. எல்லாம் சிற்பங்களுடன் செதுக்கள்களுடன் உள்ளது.இக்கோயில் நவீன காலம் மார்வலாக இருக்கும் .
உள்கட்ட அமைப்புகளை பார்க்கலாம்.
1.கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
2.குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
3.தீயணைப்பு சேவைகள் உள்ளது.
4.மின் நிலையம் உள்ளது.
5.யாத்திரிகர்களுக்கு மருத்துவ வசதிகள் உண்டு.
6.லாக்கர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
7.25 ஆயிரம் பேர் யாத்திரிகர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
8.யாத்திரிகர்கள் குளிப்பதற்கான வசதிகள் உண்டு.
9.நிறைய வாஷ்பேஷின்கள் உண்டு.
10.தனித்தனியாக குழாய் வசதிகள்.
11.இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும்200 KW.கட்டிடம் முழுவதும் வைக்கப்படும்.
12.ராமர் /ராமாயணம் தொடர்பான கலைப் பொருட்கள் மற்றும் நூல்களுடன். அருங்காட்சியகமும் உள்ளது.என்பதாகும்




 


 

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )07.02.24

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 07.02.2024. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள் 
 பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா 
 சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.





உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

 வீட்டில் வருடத்துக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? 
 வீட்டில் அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதனால் குடும்பத்தில் அல்லது 
நிறுவனத்துக்கு
 நோய்கள், தொழிலில் தடைகள், மனக் குழப்பம், எதிர்மறை
 எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பதில் ஐயம்
 ஏதும் இல்லை. 
 கணபதி ஹோமம் விநாயக பெருமானை நோக்கி தவ்ச்ம் செய்வது போன்றது. இக்கலி யுகத்திலும் கேட்டதும் காட்சி கொடுத்து உடனடியாக 
வசியமாகி அருளும் தெய்வம் என்றால் வினாயகர் என்பதனால் தான் எப்பொழுதும் அவரை வணங்கி அனைத்தையும் 
ஆரப்பிக்கிறோம்.
கவனிக்கவேண்டியவை:- 1- விநாயகர் ஹோமம் செய்ய ஒரு புரோகிரையோ, தமிழ் அர்ச்சகரையோ அழைக்கும்பொழுது அவர்கள் அமைதியாக பணத்துக்கு மட்டுமல்லாது ஹோமத்தை சரியாக வெறும் மந்திரம் அல்லாது விநாயகருக்கான தேவாவரங்கள், போற்றிகள், 
பஜனைகள் 
செய்து, அதிக மந்திரங்கள் ஓதி விநாயகர் ஹோமத்தில் இறங்கி நடமாடும் படி நல்ல ஆச்சாரத்தோடு செய்தால் மிக மிக சிறப்பாகும்.
அதுவே சரியான கணபதி ஹோமம் ஆகும். சரிதாக 
ஹோமம் செய்தால் அன்றிரவு கனவில் பிள்ளையார் அல்லது யானைகள் காட்ச்சி கொடுக்கும். இது இக்கலி யுகத்திலும் சாத்தியமாகும். ஏற்படும் நன்மைகள்:-
 கணபதி ஹோமம் செய்வதனால் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மேலும் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், 
செல்வ செழிப்பும் வந்து சேரும்.
 ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி புத்துணர்வு 
அடைய செய்யும். 
 குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். படிப்பது மனதில் நிற்கும். இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை
 எளிமையாக்கும். 
 ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும். கணபதி ஹோமம் செய்வதினால்
 பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றமும் ஏற்படும். ஒரு ஆண்டுக்கு ஒருமுறை 
கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் சந்தோஷம் நிறைந்ததாக
 இருக்கும்.
அத்துடன் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக சாதக சக்திகள் அதிகரிக்கும். கணபதி ஹோமத்தை எப்பொழுது செய்வது சிறப்பு? 
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால்
 பிள்ளையார் என்பார்கள்.
 அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
 ஆம் கணபதி ஹோமம் செய்யுங்கள் நீடூளி வாழுங்கள்.
 



 

Powered by Blogger.