இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 27.வது திருமண நாள் .29-05-21

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 27வது திருமணநாளை29-05-2021-இன்றுகொண்டாடுகின்றனர்
இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்
இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்று வாழ உறவுகளுடன்
வாழ்த்துவோம்
 மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்துதம்பதியினர் 
சிறுப்பிட்டிஅம்மன்  யேர்மன் சிவன் இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் சகல சீரும்சிறப்பும் பெற்று நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நமக்கு குறைவற்ற வாழ்வருளும் கங்காஜடாதீஸ்வரர்

பக்தர்களின் குறைகளை போக்கி, பக்தவத்சலனாக, சிவபெருமான் எழுந்தருளும் இப்பூவுலகத் திருத்தலங்கள் எண்ணற்றவைகளுள் ஒன்றாக திகழ்வது கோவிந்தபுத்தூர். ஒரு காலத்தில் இவ்வூர் காடாக இருந்தது. இங்குள்ள வில்வ மரம் ஒன்றின் அடியில் இருந்த புற்றில் இருந்து 
தோன்றிய சிவலிங்கத்தின் மீது தேவலோகப் பசுவான காமதேனு பாலைப் பொழிந்து வழிபட்டதால் கோசுரந்தபுற்றூர் என்றிருந்து, 
கோகரந்தபுற்றூர் ஆகி, தற்போது கோவிந்தபுத்தூர் என்று
 அழைக்கப்படுகின்றது. முகாசுர வதத்தின்போது
 சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை ஏற்பட்டு, அர்ஜுனன் ஈசனை வென்று, ஈசனது திருவருளால் பாசுபதாஸ்திரத்தை பெறுகின்றான். அதை இத்தலத்தில் பெற்றதால் ஆதியில் இத்தலம் விஜயமங்கலம் என்றும் விஜயமங்கை என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
இதை, ‘‘கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கை” என்று சம்பந்தரும், கொள்ளிடக்கரை கோவிந்தப்புத்தூரில் வெள்விடைக்கருள் செய் விசயமங்கை என்று 
திருநாவுக்கரசரும் மெய்ப்பித்துள்ளனர். மேலும், அப்பர், அர்ஜுனன் இங்கு வழிபட்டதை. “பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங்கொள் விஜயமங்கை” என்றும் போற்றுகின்றார். இதன் வாயிலாக கோவிந்தபுத்தூரே தேவாரத்தலம் என்பது ஊர்ஜிதமாகிறது. 
மேலும், சோழர்களின் பல கல்வெட்டுகள், இத்தலமே தேவாரத் திருத்தலம் என்பதற்கு பிரதான சான்றாக திகழ்கிறது. இதை விடுத்துப் பலர் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள தலமே விஜயமங்கை என்றும் 
கூறிவருகின்றனர். அது தவறு என்பது கல்வெட்டு ஆய்வாளர்கள் பலரின் தீர்மானமாகும். சோழநாட்டின் 
காவிரி வடகரையின் 63 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுல் 47வது தலமாக இந்த கோவிந்தபுத்தூர் போற்றப் பெறுகின்றது. சம்பந்தர் பாடிய பாடல் கல்வெட்டாக பொறிக்கப் பெற்றிருப்பதும், அவர் பெயரால் மடம் 
இருந்ததும், இவ்வூர் மற்றும் இக்கோவில் அவரால் பாடப் பெற்றது என்பதை 
உறுதிப்படுத்துகின்றன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இக்கோவில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், கி.பி. 929ஆம் ஆண்டு பராந்தகச் சோழனால் முழுதும் செங்கற்தளியாக மாற்றப்பட்டது. அதன்பின் கி.பி. 980ம் ஆண்டு 
உத்தமச் சோழனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. உத்தமச்சோழனின் தலைமை அதிகாரியாக விளங்கிய அம்பலவன் பழுவூர் நக்கனால் இக்கோயில்
 முழுவதும் கற்றளியாகக் கட்டப்பெற்றது. அதோடு இவர் இக்கோயிலில் நடராஜர் மற்றும் சிவகாமியை எழுந்தருளச் செய்து 
ஆபரணங்களையும் அளித்துள்ளார்.பராந்தகச் சோழன் தனது தாய் வானவன் மாதேவியின் பெயரில் பிரம்மதேயக் குடியிருப்பினை [பிராமணர்கள் வாழும் பகுதி] இங்கு 
அமைத்துள்ளான். அதில் [வடகை பிரம்மதேயம் பெரிய ஸ்ரீ வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து, ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்] விஜயமங்கலத்து மகாதேவர் ஆலயமும் இந்த கோவிந்தப்புத்தூரும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்ட இடமே இன்று கோவிந்தப்புத்தூருக்கு அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் ஊராகும்.
ஊரின் தென்புறம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து 1/2  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். ஆலயத்தின் எதிரே அர்ஜுனதீர்த்தக்குளம் அல்லிமலர் பரப்பி அழகு கொஞ்சுகிறது. இரண்டு பெரும் பிரகாரங்களை கொண்டு நீள்வாக்கில்அமையப்பெற்ற ஆலயத்தின் முகப்பில் பசு சிவபெருமானுக்கு பால் சொரிந்து வழிபடும் சுதை வடிவம் காணப்படுகிறது.உள்ளே வலப்பக்கம்
தனி விமானத்
துடன் கூடிய அம்பாள் சந்நதி தெற்குநோக்கியவாறு அமைந்துள்ளது. முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என அமையப்பெற்றுள்ளது. முன் மண்டபத் தூண்கள் சிங்கமுகத் தூண்களைக் கொண்டு பல்லவர் கலைத்திறனை பறைசாற்றுகின்றன.கருவறையில் நின்ற நிலையில் அழகு ததும்ப புன்னகை நாயகியாய், சர்வ மங்களங்களையும் தருபவளாய் அருள்பாலிக்கின்றாள், ஸ்ரீ மங்களாம்பிகை. அம்பாள் சந்நதிக்கு வலப்புறம் வசந்த மண்டபம் அமைந்துள்ளது. இரண்டாம் வாயிலுக்கு முன்னே நந்தியம்பெருமான் காணப்படுகின்றார். 
அருகே பலிபீடம் உள்ளது
. இரண்டாம் வாயில் கடந்து உள்ளே செல்ல விசாலமான மகா மண்டபம். ஈசான்ய மூலையில் நவக்கிரக சந்நதி உள்ளது. அருகே சந்திரன், சூரியன், பைரவர் ஆகிய சிலாரூபங்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் வலதுபுறம் தென்முகம் காட்டியபடியான அம்பலவாணர் சந்நிதி உள்ளது. 
நேராக மகாமண்டபம். அடுத்து ஸ்தபன மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை என அமைந்துள்ளது. கருவறையுள் கருணையே
 வடிவாய் காட்சி அளிக்கின்றார், ஸ்ரீ கங்காஜடாதீஸ்வரர். 
வழவழ லிங்கமாக சிறிய வடிவில் காட்சி தந்து பக்தர்களை தன் வசம் ஈர்த்து மகிழ்விக்கின்றார். உள் சுற்றினை வலம் வருகையில் திருமாளிகைப்பத்தியின் தென்புறம் சப்த 
மாதர்களின் அதி அற்புதமான சிற்பங்களைக் கண்டு மயங்குகின்றோம். உடன் பழைய தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பராந்தகச் சோழன் மற்றும் அவனது மனைவி உள்ளிட்ட சிலைகளை கண்ணுறுகின்றோம். நிருர்தி மூலையில் தல கணபதி கம்பீரமாக வீற்றருள்கின்றார். மேற்கில் கந்தனின் 
                தனிச்சந்நதி உள்ளது.
வடமேற்கில் தல புராணத்தை விளக்கும் சுதைச்சிற்பங்கள் பாங்குற வடிக்கப்பட்டுள்ளது. அருகே கஜலக்ஷ்மி சந்நதியும் உள்ளது. அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட சுவாமி கருவறை 
விமானம் காண்போரைக் கவரும் என்பதில் ஐயமில்லை. 
சண்டேசர் சன்னிதி அருகே திருமஞ்சனக்கிணறு ஒன்று உள்ளது. ஒன்பது மாடங்கள் கொண்ட இவ்வாலய கர்ப்பக்கிரக அமைப்பு நவகோஷ்ட வகையினைச் சார்ந்ததாகும்.பசு 
சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் காட்சி, அர்ஜுனன் தவம் புரிதல் மற்றும் அர்ஜுனனுடன் ஈசன் போரிடும் 
கிராதார்ஜுனக் காட்சி, 
வேதியர்கள் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி என அநேக சிற்பங்கள் கருவறையின் வெளியே மேற்குச் சுற்றில் புடைக்கப்பட்டுள்ளது. இவ்வூர்......முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டில், “வடகரை இராஜேந்திர சிங்கவள நாட்டுப் பெரிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து விசயமங்கை” என்றும், திரிபுவனச் 
சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில், “விக்கிரமசோழன் நாட்டு இன்னம்பர் நாட்டு விசயமங்கை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், பரகேசரி 
உத்தமசோழன், 
முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி
 இராஜராஜதேவன் ஆகியோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. அதோடு இக்கல்வெட்டுகளில் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர் மற்றும் விஜயமங்கலம் உடைய பரமசாமி என இறைவனது திருப்பெயர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரில் ‘திருத்தொண்டத் தொகையன் திருமடம்’ ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 32ஆம் ஆண்டு கல்வெட்டு 
உணர்த்துகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிந்தபுத்தூர் ஆலயத்திற்கு உண்டு. திருஞானசம்பந்தர் பாடிய \”வாழ்க அந்தணர் வானவர் ஆயினும்\” என்னும் பாடல் இக்கோயிலில் 
கி.பி. 1248இல் எழுதப்பட்டுள்ள மூன்றாம் இராஜேந்திரச் சோழனுடைய
 கல்வெட்டின் தொடக்க வரிகளாக முழுப்பாடலும் 
எழுதப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட்டன. அதுபோல் இந்த கோவிந்தபுத்தூர் கோயிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்டன. கி.பி. 948ல் வடிக்கப்பட்ட உத்தமச் சோழனின் கல்வெட்டு இக்கோவிலில் தேவாரத் திருப்பதிகம் விண்ணப்பம் செய்ததைப்பற்றி 
கூறுகின்றது.
 இத்திருமுறை ஓதலுக்காக இவ்வூர் சபையினரால் நெல் வழங்கப்பட்டதையும், முதலாம் இராஜேந்திரனின் கி.பி.1014ம் ஆண்டு
 கல்வெட்டு ஒன்று 
செய்தி சொல்கின்றது. பாண்டியர் மற்றும் விஜயநகரமன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பரவிக் கிடக்கின்றன. இக்கோயிலில் கிடைத்துள்ள 
கல்வெட்டுக்களில் ஆறு கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1426ஆம் ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலத்தில் 
வடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. இன்னம்பூரில் கி.பி. 1372ம் ஆண்டு 
விஜயநகர மன்னன் கம்பண்ணரின் கல்வெட்டினில் இவ்வூர் கோவிந்தபுத்தூர் என்றும் இவ்வூர் இந்நாட்டின் தலை நகரமாக 
விளங்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனுக்கு உண்டான அனைத்து விசேடங்களும் சிறப்புற நடத்தப்படுகின்றன.
கல்வி, தொழில் போன்ற 
எச்செயல் தொடங்கினாலும் அது மிகச் சிறப்பாக வளர்ச்சியடயவும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை துவங்கும் முன் இங்கு வந்து வணங்கிவிட்டுத் துவங்கினால் மிகசுபிட்சமாக நடைபெறும்.அரியலூர் மாவட்டம், தா.பழூரிலிருந்து இவ்வூரை அடையலாம்.அரியலூரில் இருந்து வி.கைகாட்டி, 
விக்கிரமங்கலம் வழியாகவும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா தர்மா.23-05-21

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் &தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2021.இன்று  40வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள் மாமி ,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்க 
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற வாழ்வீர்  திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். எங்கள்  பிறந்த நாளை போலவே வருடா வருடம் திருமண நாளும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிலைத்து நிற்கும்.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமண நாளிலே நம் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் நம் கல்யாண நாளிலே வருகை தந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்விப்பர்.
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து  தம்பதியினர் ,நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் நவற்கிரி அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்பாள் சுவிஸ் முருகன் -அம்பாள்-சிவன் மாதா இறை  அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம் நவற்கிரி. .கொம்  நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் இணையங்களும் மற்றும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றனர் 
.தம்பதியினர் வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்த நாள் வாழ்த்து..திரு தம்பு பரம்சோதிராஜா.(பரம்) 21.05.21

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.தம்பு   பரம்சோதிராஜா ,அவர்களின் (ரம்சோதி-பரம்) பிறந்தநாள்..21.05.2021..இன்று  .வரை அன்பு மனைவி  
   அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும் சந்தோசமாக  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி பிள்ளையார் -மற்றும் அம்பாள் சுவிஸ் விஸ்ணுதுர்க்கை அம்பால் .சுவிஸ் சூரிச் முருகன்  மற்றும் யாழ் நல்லூர் கந்தன்  இறை ஆசியுடன் எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடம் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>





மனிதர்களுக்கு மறுபிறவி உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது


மனிதர்களுக்கு மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது?தெளிவு பெறுஓம் ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது விதி. இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே யிருக்கும். மறுபிறவி அல்லாத வீடுபேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்நியாசிகள் மட்டுமே. ஆசை என்பதை முற்றிலும் துறந்தவர்களுக்கு மட்டுமே வீடுபேறு 
என்பது கிட்டும். மற்றபடி ஆசை என்ற எண்ணம் எவர் ஒருவர் இடத்தில் உள்ளதோ
 அவர் யாராக இருந்தாலும் மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. ஆசை என்பது இவ்வுலகில் நாம் விதைக்கின்ற விதை. அது மரமாகி கனி தரும் நேரத்தில் நாம் அதை அனுபவிப்பதற்கு மறுபிறவி எடுத்திருப்போம். இதில் ஒரு சிலர் புண்ணியம் எனும் நல்ல விதையை விதைத்து அதற்குரிய பலனை மறுபிறவியில் அடைகிறார்கள். இன்னும் சிலர் பாவம் எனும் விதையை விதைத்து அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள்.
நடைமுறை வாழ்வினில் ஒருவர் சகல சௌபாக்யங்களுடன் வாழ்வதையும் மற்றொருவர் தரித்திர நிலையில் கஷ்டப்படுவதையும் காண்கிறோமே, இவை அனைத்தும் முற்பிறவியின் பலனே. ‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே..’ என்று ஜோதிஷ சாஸ்திரமும், ஆயுர்வேத சாஸ்திரமும் ஒரே குரலில் சொல்கின்றன.
முன்ஜென்மத்தில் செய்த பாபத்தின் தண்டனையை இந்த ஜென்மத்தில் வியாதியாக அனுபவிக்கிறோம் என்பது இதன் பொருள். அவ்வாறு முன்ஜென்ம பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என்பது 
உண்மையாகில் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கான
 பலனை 
அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுவதால்
 மனிதருக்கு மறுபிறவி உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆசை என்பது எவர் ஒருவரிடத்தில் உண்டோ அவருக்கு மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. இதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.
?சிலர் கை மீது வைத்து சத்தியம் செய்கிறார்கள். சிலர் தலையில் அடித்தும், இன்னும் சிலர்
கற்பூரத்தை ஏற்றி அதனை அணைத்தும்
சத்தியம் செய்கிறார்கள். எது சக்தி வாய்ந்தது?
-    வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பேசுகின்ற வார்த்தையிலேயே சத்தியம் என்பது நிறைந்திருக்க வேண்டும். வாக்கு தவறாதவர்கள், நேர்மையானவர்கள் யாரும் இதுபோன்று சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒற்றைச் சொல்லே போதுமானது. தவிர்க்க முடியாத சூழலில் சத்தியம் செய்ய
 நேரிடும்போது  
கைமீது வைத்து சத்தியம் செய்வது என்பது நல்லது. தலையில் அடித்து சத்தியம் செய்வது என்பது மிகவும் பலம் வாய்ந்தது. இவ்வாறு தலையில் அடித்து சத்தியம் செய்யும்போது பொய் யுரைத்துவிட்டால் அது நிச்சயமாக பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
இந்த இரண்டையும் விட கற்பூரத்தை ஏற்றி அதனை அணைத்து சத்தியம் செய்வது என்பது அசாத்திய பலம் பொருந்தியது. அக்னி (நெருப்பு) என்பது ஜனனம் முதல் மரணம் வரை நம்மைத் தொடர்ந்து வருகின்ற ஒன்று. வாழ்வினில் நாம்  அனைவரும் பொதுவாக செய்கின்ற சத்தியப்பிரமாணம் என்பது திருமண பந்தத்தின்போது நடக்கின்றது. 
அந்த திருமணமும் அக்னிசாட்சி ஆகத்தான் நடக்கிறது. அக்னியை சாட்சியாகக் கொண்டுதான் பெண்ணின் பெற்றோர் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார்கள். அக்னியை சாட்சியாகக் கொண்டுதான் மணமகன் திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் அணிவித்து 
காலமெல்லாம் நீயும் நானும் இணைந்திருப்போமாக என்ற உறுதிமொழியைத் தருகிறான்.
நீர்தான் இந்த உலகத்திற்கு ஆதாரம் என்பது நாம் அறிந்ததே. அந்த நீரைத் தருவதும் இந்த அக்னிதான் என்பதை ‘அக்னேர் ஆப:’ என்று வேதம் அடித்துச் சொல்கிறது. ஆக இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் அடிப்படை சாட்சியாக இருப்பது என்பது நெருப்பு. அந்த நெருப்பினை
 அணைத்து
 சத்தியம் செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தவிர்க்க இயலாது
சூழலில் அதாவது வேறு வழியே இல்லை என்ற நிலை வரும்போது மட்டுமே கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்ய வேண்டும். சாதாரண விஷயங்களுக்கு இந்த மாபெரும் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது. விளையாட்டிற்காக இவ்வாறு செய்தால் அது விபரீதமான பலனைத்
தந்துவிடும்.
?அத்தை மகன், மாமன் மகள் ஆகியோருக்கு இடையே திருமணம் செய்து வைப்பது நமது சமுதாயத்தில் வழக்கத்தில் இருந்துவருகிறது. தற்போது மருத்துவ ரீதியாக சொந்தத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு வரும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தங்களின் கருத்து?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
இந்த கருத்தினை அடியேன் ஏற்றுக் கொள்ளவில்லை. சொந்த பந்தத்தில் மணம் முடிக்காமல் உறவிற்கு வெளியே அசலில் பெண் பார்த்து சம்பந்தம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவதில்லையா? பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவது என்பது 
அவரவர் செய்யும் பாவ புண்ணியத்தை பொறுத்து அமைகிறது. நமது கர்மவினையே குழந்தை வடிவில் வந்து சேர்கிறது. ‘
மாதா, பிதா மக்களுக்கு சத்ரு’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது ஒரு குழந்தை பாதிப்படைந்தால் அதற்கு காரணம் அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்-தந்தை செய்த வினையே காரணம் என்பதை நம் முன்னோர்கள் அறுதியிட்டுச்
 சொல்லியிருக்கிறார்கள்.
அதோடு மாமன் மகள் அல்லது மகன் அத்தை மகனையோ அல்லது மகளையோ திருமணம் செய்வது என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிற ஒரு பாரம்பரிய முறை. இத்தனை காலமாக 
பிறக்கின்ற குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் நேரவில்லை. தற்காலத்தில் மட்டும் இவ்வாறு நடக்கிறது, அதாவது சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்கு
 பிறக்கின்ற குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாவதன் விகிதம் அதிகரித்து வருகிறது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சொந்தத்தில் மட்டுமல்ல, அசலில் திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் கூட பாதிப்படைவதைக் காண முடிகிறது. இதற்கு அடிப்படை காரணம் என்பது நாம் உண்ணும் உணவும் நமது சமுதாய பழக்க வழக்கங்களும்தான் என்பது அடியேனின்
 தாழ்மையான
 கருத்து. சொந்தத்தில் திருமணம் செய்வதை சாஸ்திரம் எதிர்க்கவில்லை என்பதால் உறவுமுறையில் விவாகம் செய்வதில் எவ்வித தவறும் இல்லை என்பதே அடியேனின் எண்ணமும் ஆகும். ?கண்திருஷ்டி 
என்பதற்கு இத்தனை முக்கியத்துவம் 
அளிக்கத்தான் 
வேண்டுமா? அடுத்தவர்களின் எண்ணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருக்கும்போது பாதிப்பு என்பது வராதுதானே..?
-  அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். “இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே..” என்று
அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங் களில் ஒன்று.
சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதி வாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் 
தவிர்க்க இயலாது.
இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல், எலுமிச்சம்பழம் நறுக்கிப் பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஹாரத்தி சுற்றுதல், உப்பு சுற்றி போடுதல்,
 மிளகாய் சுற்றி 
போடுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனை 
மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு 
என்று தனியாக ஒரு சக்தி உண்டு. இதனை எதிர்கொள்ள இறைஅனுக்ரஹம் என்பது அவசியம். பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீசுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து பாதுகாத்துக் 
கொள்ள இயலும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,21

கனடா மொன்றியாலை பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகக் கொண்ட செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,       
அவர்களின் பிறந்தநாள் 19.,05,2021,இன்று, .இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா அப்பாம்மா அம்மப்பா  
அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் கனடா முருகன் ஆசியுடன்  
நோய் நொடி இன்றிஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று   இன்று பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
சாதி மதம் என்ற போர்வையில்
உன்னை நீ மறைத்து கொள்ள அல்ல
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
 நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

அட்சய திருதியை வாழ்த்துக்களும்அதன் பரிகாரமும்

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
 [1] இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.
 இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த 
நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் 
கருதப்படுகிறது.
 மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் 
கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர்
 விரும்புகின்றன
அட்சய திருதியை நாளில் கல் உப்பு வாங்குங்கள்...செல்வம் வீடு தேடி வரும் குறைவில்லாமல் பெருகும்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







ஐஸ்வர்யம் பெருக அட்சய திருதியை நாளில் குல தெய்வப பரிகாரம்

அட்சய திரிதியை அன்று நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பலமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. நம்முடைய வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்க, ஐஸ்வர்யம் பெருக இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு நமது மன நிம்மதியும் 
அதிகரிக்கும்
அட்சய திருதியை இந்த ஆண்டு நாளை மே 14ஆம் தேதி சுக்கிரனின் அருள் நிறைந்த மகாலட்சுமியின் அருளும் ஆசியும் நிறைந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் வளர்க என்று பொருள்படும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பன் மடங்கு பெருகும்
 என்பது ஐதீகம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருமண நாள்வாழ்த்து திரு திருமதி இன்பமோகன் .சுகிர்தா 12:05:21

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் ( நவற்கிரியயை தற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் & சுகிர்தா தம்பதியினரின் 
  பன்னிரண்டாவது வருட திருமணநாள் 12..05.2021 இன்று மிகவும் 
சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும்
 தம்பதியினரை   அன்பு ப் பிள்ளைகள்  அன்புஅம்மாமார்  சகோதரர்கள் ,மாமா மாமி   மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து தம்பதியினர்   
¨நவற்கிரி நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மாவிடடபுரமுருகன்  கோப்பாய்ப் பிள்ளையார் 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்மிதாவின் ஆறாவது  பிறந்த நாள் .09.05.2021..இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம் 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய வேண்டி இந்த பிறந்த நாளில்
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த என் வெண்ணிலா  வாழிய
 பல்லாண்டு பல்லாண்டு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள்

அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று 
தந்துள்ளார்கள்.
அந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் பெற சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி பார்ப்போம்.ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற
 நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் 
அரச மரத்தை 
தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும்.ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி
, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி
 பாதிப்புகள் நீங்கும்.
மிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, 
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு
 வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி 02.05.21

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2021. இன்று பிறந்தநாள்   இவரை 
 அன்புப்பிள்ளைகள்  சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்   மற்றும் நவற்கிரி சுவிஸ் கனடா ஜேர்மன் லண்டன் அமெரிக்க அவுஸ்திரேலிய ஒஸ்லோ வாழ் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




Powered by Blogger.