பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்மிதாவின் ஆறாவது  பிறந்த நாள் .09.05.2021..இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அன்பு ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை
இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம் 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய வேண்டி இந்த பிறந்த நாளில்
தனியாய் நிலவொன்று விண்ணுலகை விட்டு மண்ணுலகம் வந்து என்னுலகில் என் கண் முன்னே தேவதையாய் வலம் வருகிறதோ… இன்று பிறந்த என் வெண்ணிலா  வாழிய
 பல்லாண்டு பல்லாண்டு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருக இதை மட்டும் செய்யுங்கள்

அனேகமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கஷ்டங்களும் நெருக்கடிகளும் சந்தித்து கொண்டு தான் உள்ளார்கள்.இதற்கு இறை நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவதற்கான சில ஆன்மீகப் பரிகாரங்களையும் நமது முன்னோர்கள் நமக்கு கற்று 
தந்துள்ளார்கள்.
அந்தவகையில் உங்களின் பண கஷ்டங்களை போக்கி நன்மைகள் அனைத்தையும் பெற சில அற்புத ஆன்மீக பரிகார குறிப்புகள் பற்றி பார்ப்போம்.ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற
 நாட்களில் மதியம் 12 மணியிலிருந்து 1.30 வெயில் மணிக்குள்ளாக அரச மர வேரை தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும். உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் நோய் பாதிப்பு உண்டானவர்கள் 
அரச மரத்தை 
தொட்டு பிறகு உடலில் பாதிப்புக்குள்ளான இடத்தில் தொட்டு வணங்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்கு பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அவை உங்கள் செல்வம் வரவையும், வசீகர சக்தியும் பாதிக்கும். மேலும் உங்கள் வீட்டில் துஷ்டசக்திகள் புகுவதற்கும் வழிவகை செய்யும்.ஒரு செவ்வாய்க்கிழமை அன்று உங்கள் வீட்டை சுற்றியிருக்கும் வாடிய செடிகளை வேருடன் பிடுங்கி
, ஓடும் ஆற்று நீரில் போட்டு விடுவதால் துஷ்ட சக்தி
 பாதிப்புகள் நீங்கும்.
மிகுதியான கடன் பிரச்சனை மற்றும் கடுமையான வறுமை நிலையால் அவதிப்படுபவர்கள் ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை தொடங்கி, 
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டு பசுமாட்டிற்கு
 வாழைப்பழம் கொடுத்து வருவதால் வீட்டில் துரதிர்ஷ்டங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் துளசி மாடத்திற்கு தீபமேற்றி, தூபங்கள் காட்டி துளசி செடியை சுற்றி வந்து வழிபாடு செய்பவர்களுக்கு துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. வீட்டில் வளமை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி 02.05.21

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2021. இன்று பிறந்தநாள்   இவரை 
 அன்புப்பிள்ளைகள்  சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்   மற்றும் நவற்கிரி சுவிஸ் கனடா ஜேர்மன் லண்டன் அமெரிக்க அவுஸ்திரேலிய ஒஸ்லோ வாழ் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று  
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் வரலாறு

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது.
 இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் மருதடி விநாயகர் ஆலயம் என அழைக்கப்படுகின்றது.[2] இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவம் சித்திரைப் புத்தாண்டு அன்று இடம்பெறும் இரதோற்சவத்திற்கு அமைய இடம்பெறும்.
வரலாறு >>>>>>
அக்காலத்தில் மானிப்பாயில் மக்கள் தம் கையாலேயே பாகம் செய்த பொங்கல், மோதகம், நெய்வேந்தியங்களை ஏற்று மருதமரத்தின் கிழக்குத் திசையிலேயே பிள்ளையார் பிரதிட்டையாக இருந்ததாக கர்ணபரம்பரையாக அறியப்படுகிறது. இக்கோவிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளக்கூடியதான முதல் ஆவணம் பிரித்தானிய இலங்கைக் காலத்தில் ஏற்பட்டதாகும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்காக இக்கோவிலுக்கான 
காணியை 1856ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி வழங்கினார். அவர் நிறைவேற்றிய 35ஆம் இலக்க லிகித சாசனத்தின்படி பிள்ளையார் கோவிலுக்கு அண்ணளவாக 7 நெல் பரப்புக்காணி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு பிள்ளையார் திடல் என்ற பெயரிடப்பட்டது. 
இதற்கான வரைபடத்தை அக்காலத்து பெருந்தெருக்கள் திணைக்களப் பொறியியலாளர் கென்றி பயிறே என்பவர் தயாரித்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த குமாரசிங்கம் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக்கு நியமிக்கப்படுபோர் கோயிலை மேற்பார்வை 
செய்ய வேண்டும் என மகாராணியாரின் சாசன வாகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் பிற்காலத்தில் இது தனியார் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது.
போர்த்துக்கேயர் காலம்
போர்த்துக்கேயரின் காலத்தில் கிராமக் கோயில்களை இடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிரகங்களையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்தார்கள். இவ்வகையில் இடிக்கப்பட்ட கோவில்களில் மானிப்பாய் பிள்ளையார் கோவிலும் ஒன்று 
என்று கூறுவர்.[3] போர்த்துக்கேயர் பறங்கியர் இக்கோயிலை இடித்து இவ்விடத்தைச் சவக்காலையாக்கி விட்டனர். முன்னைய மருதம ரத்துப்பிள்ளையார் தோற்றம்]]சவக்காலையும் மயானமும் இப்போது கோயிலிருந்து ஏறக்குறைய நூற்றிருபத்தைந்து யாருக்கப்பால் ஆலயத்தின் மேற்கு வாசலின் நேர்திசையிலுள்ளது. இது நிற்க, 
பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்துவந்த நாட்களில், அவர்கள் தண்டத்திற்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே 
கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலர் மருதமரத்தின்கீழ் இராக்காலங்களிலும் பறங்கியர் கண்களுக்கு புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்புரமெரித்து 
விநாயகரை வழிபட்டு வந்தார்கள்.இப்பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும் வெளிவீதிகளில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும் சனங்கள் உற்சவகாலங்களிலே 
கற்புரமெரித்து மருதத்தழிரைப்பறித்துக் கண்ணில்ஒற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதை காணலாம். யாழ்ப்பாணத்தில் எந்தப்பாகங்களில் இருப்பவர்களும் முதல் எடுக்கும் நெற் தானியத்தை ”மருதடிப்பிள்ளையாருக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம். [4]
ஆலய உற்பத்தி
மருதடி விநாயகர் ஆலயமுன்னைய தோற்றம்
ஒல்லாந்தர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நடந்த ஓர் இராச கலத்திற்கஞ்சி அனேக வேளாண் குடும்பத்தவர் புறப்பட்டு வந்து வட்டுக்கோட்டை, காரைநகர் முதலிய இடங்களில் குடியேறினர். இவர்களில் தியாகராசக் குருக்களென்பவர் நவாலி வயல்களிலிருக்கும் தூக்கிணி வைரவர் கோலடியில் வந்து தங்க நேரிட்டது. 
இவர் சைவசித்தாந்தம் முற்றும் கற்றுணர்ந்தவராவார். இத்தூக்கிணி வைரவர் கோயிலிலிருந்து ஒரு வருடம் வரையிற் சிவபுசை செய்துவரும் நாட்களில், இக்கோவிலில் ஆண்டுதோறும் நடந்துவரும் வைரவமடையிலிம், வேள்வியிலும் பெருந்தொகை ஆடுகள் வெட்டப்படுமென்று
 கேள்விப்பட்டார். இதனால் அப்பெரியவர் அவ்விடம் விட்டு நீக்கிக் கீழ்த்திசை நோக்கிச் சென்று மானிப்பாய் மருதச் சோலையை அடைந்தார். இச்சோலைக்கு அணித்தாயுள்ள காணிகள் மானியம்பதி சுவாமிநாத 
முதலியாருக்குரியது. மருத மரங்கள் நின்ற சிலமும் பக்கத்திலுள்ள குளமும் ”முக்கோணத்திடரும் பிள்ளையார் குளமும்” எனப் பெயர் வழங்கலாயிற்று.
திருப்பணி வேலைகள்
ஆங்கிலேயர் காலம் உதயமானதும் அதிகாலையிற் கதிரவன் உதயமாகும் பொழுது புஷ்பங்கள் மலருமாறுபோல் (மதப்பைத்தியங்கொண்ட பறங்கிக்காரராலும் ஒல்லாந்தராலுங் கொடிய தண்டங்களை அனுபவித்த) எமது யாழ்ப்பாண மாது ஈன்ற புத்திர
கட்டடநிர்மாணப்பணியின்போது
இரத்தினங்கள் சமய சுயாதீனம் பெற்று முகமலர்ந்தார்கள். [3] ஆங்கிலேயர் காலத்தில் மருதடியாலயம் அதி உன்னத மகத்துவ மேம்பாடுகள் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. கோயிற்றிருப்பணி வேலைகள் தர்மசீலராயும், விநாயகரடியவராயும் விளங்கின. பெரியவர்களுடைய
 பரோபகாரங்களினால் நடைபெற்றன. விநாயகரின் கர்ப்பக்கிருக தூபியும், அர்த்தமண்டபமும், மகாமண்டபமும் ஸ்ரீமான் பொன்னம்பலச் சிறாப்பரவர்களாலும், சபாமண்டபம் ஸ்ரீமான் 
மண்டலத்தாரவர்களாலும், ஸ்தம்பமண்டபம் ஸ்ரீமான் இரகுநாதமுதலியார் சின்னத்தம்பியாரவர்களாலும், சிவன்கோயில், நடராசர் கோயில், அம்மன்கோயில்கள் ஸ்ரீமான் தன்மாவரதர்முத்துத்தம்பியவர்களாலும்,முற்போபுரம் ஸ்ரீமான் தம்பையா முதலியவர்களாலும், மடைப்பள்ளி, வாகன மண்டபம், தெற்குமானியம்பதி ஸ்ரீமான் மருதப்புரவர்களாலும், வசந்த மண்டபம் வைரவ ஆசாரியாலும், வசந்த மண்டபக் கொட்டகை வட்டு நகரிலுள்ள சில 
புண்ணியவான்களாலும், தேர்மூட்டியும், இரதமும் ஸ்ரீமான் இரகுநாதய முதலியார் சின்னத்தம்பியாரவர்களாலுஞ் செய்விக்கப்பட்டன. பின்பு கீழைக்கோபுரம் ஸ்ரீமான் செல்லப்பா வைரமுத்து
 அவர்களாலும், பொங்கல் மண்டபக்கொட்டகை ஸ்ரீமான் வன்னியசிங்கம் தம்பிப்பிள்ளையவர்களாலும், திருநந்தனவதனம் ஸ்ரீமான் ம.சிவப்பிரகாசமவர்களாலும், திருமஞ்சணக்கிணறு 
புதிதாய் ஸ்ரீமான் முருகேசமுதலியார் பொன்னுச்சாமியவர்களாலும், தீர்த்தக்கிணறு ஸ்ரீமான் முருகேசர் வினாசித்தம்பியவர்களாலும் உருவாக்கப்பட்டன.
கோயிற் பூசகரும் தருமகர்த்தாக்களும்
தியாகராசக்குருக்கள் இல்லறம் நடத்தவெண்ணி ஆவரங்காலிற் சைவச்செட்டி வேளாண்குடும்பத்தில் ஓர் பெண்ணை விவாகம் செய்து குமரகுருபரர், வெற்றிவேலர் டினும் இருவரைப் பெற்றனர்.
புனர்நிர்மானத்தின்பின்மூலஸ்தானவாயில்
வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரை அவர்கள் இன்றைக்கும் மானிநகரில் வசிக்கின்றார் மேற்கூறப்பட்ட வெற்றிவேலருடைய பௌத்திரனே சிவபூசா ஒழுக்கங்களிற்றவறாத ஸ்ரீமான் செல்லயாரவர்கள்.[5] ஆங்கிலேயர்காலமுதயமானதும் சந்தான
 விர்த்தியுடையராய் விளங்கியவரும், விக்கினேசுரப்பெருமானின் தொண்டு பூண்டு குருத்துவம் புரிந்த புண்ணியோத்தமஐமாகிய தியாகராசர் இம்மண்ணுலக வாழ்க்கையை விட்டு விண்ணுலகில் 
விநாயகர் மூர்த்தியின் திருத்தாளெய்தினர். ஆலய பூசா கருமங்கள் அவரது சிரேஷ்ட புத்திரன் வெற்றிவேலையரால் நடைபெற்று வந்தன.
 கோயிற்காரியதரிசி சுவாமிநாதமுதலியாரும் சிவபதமடைய, அவருடைய மகன் வலிகாமம் மேற்கு மணியகாரனாய் விளங்கிய குமாரசிங்கமணியமென்பவர் கோயில் மணியகாரனாயும் விளங்கினார். இவருக்குப் பின் இவரது புத்திரர்கள் ஸ்ரீமான் டாக்டர் சுவாமிநாதபிள்ளையவர்களும் இராசகாரிய 
உத்தியோகம் நடாத்திய ஸ்ரீமான் இராசகாரிஙரவர்களும் கோயிற்காரியங்கள் பார்த்து வந்தனர். பின் இவர்களின் பிள்ளைகள் சுகாதார பரிசோதகர் ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களும் ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களும் தருமகர்த்தாக்களாய் விளங்கினர்.
ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்கள் ஆலயத்திற்கு அனேக நன்மைகளைச் செய்திருக்கின்றார். அவைகளிலொன்று, தெற்கு வீதியிலிருந்த அரசாட்சி யாருக்குரிய குளம் ஆலயத்திற்கு அதிகம் கிட்டியிருந்தமையால் இரதோற்சவத்திலன்று தேர் ஓடுவதற்கு வீதி 
அகலம் போதாதிருந்தது பற்றி, அப்போது வடமாகாண ஏசண்டராயிருந்த சேர் வில்லியம் துவையினம் என்பவர் உதவியைக் கொண்டு குளத்திலொரு பாகத்தை மூடி 
ஒடுக்கமாயிருந்த வீதியை விசாலமாக்கி விட்டார். இக்காலத்திற் கோயிற் பூசை செய்து வந்தவர் வெற்றிவேலருடைய மகன் ஸ்ரீமான் ஜயாத்துரையவர்கள். இவ்விதமே ஏறக்குறைய நுற்றைம்பது வருஷகாலம் பூசைசெய்து வந்த சைவக்குருமார் கோயிலைவிட்டு நீங்கிப் பிராமணருக்கு 
இடங்கொடுத்தனர். பிராமணருள்ளே முதற் பூசகராயேற்பட்டவர் பிரம்மஸ்ரீ சீதாபதி ஜயரவர்கள் இங்கு ஏறக்குறைய ஜம்பது வருஷகாலமாய் விநாயகரது நித்திய நைமித்திகங்களை நடாத்தி வந்து 
மூன்று வருடங்களுக்கு முன் சிவலோகஞ் சேர்ந்தனர். இவருடைய குமாரர்களே இப்போது பூசகராய் விளங்குகின்றனர். கோயிற் காரியதரிசிகளாய் விளங்குகின்றவர்கள் மேற்படி ஸ்ரீமான் நவரத்தினசிங்கமவர்களதும், ஸ்ரீமான் இரத்தினசிங்கமவர்களதும் பிள்ளைகள். [6]
பூசைகளும் மகோற்சவமும்
இவ்வாலயத்தில்,
மூன்றுகாலப் பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.
புனர்நிர்மானத்தின்பின் மருதம ரத்துப்பிள்ளையார்
வருசத்திலே பங்குனிமாதத்தில் உற்சவம் ஆரம்பமாகி தமிழ்ச்சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று இரதோற்சவமாகக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை பதினெட்டு நாட்கள் உற்சவமும் 2004உற்சவத்தையடுத்து புனரமைப்புச் செய்வதற்காக முற்றாகத் தகர்த்தப்பட்டு மீண்டும் 2014ஆண்டு
 புதுபொலிவுபெற்று 48 நாட்கள் கும்பாபிஷேகம் நடைபெற்று அதனைணடுத்து 25 நாட்களாக மாற்றம்செய்யப்பட்டு மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல், பிள்ளை விற்று வாங்கல், மடிப்பிச்சை எடுத்தல், பட்டுச் சார்த்தல், தேவாரம் ஓதுதல், வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.
இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.
ஒவ்வொருமாத்திலும் அமாவாசையையடுத்துவரும் 
சதுர்த்தி திதியில் விநாயகப்பெருமானுக்கு 
விஷேடபூசைகள் நடைபெறும் ஆவணி சதுர்த்தி தினமானது பெருமானது திருசந்திதானத்தை பார்ப்பவர் கண்களை பூரிக்கச்செய்கின்றது.இச்சதுர்த்தி ”தேவர்கள், முனிவர், சித்தர், கந்தருவர் யாவரும் வந்திவனேவல் செய்திடும்நாள்”
கார்த்திகை மாதத்தில் விநாயகவிரதம் ஆரம்பமாகி இருபத்தொருநாட்களாய் பிள்ளையார்கதை வாசிக்கப்பட்டு கடைசிநாளிலே கஜமுகாசூரசங்காரம் நடைபெறும்.
மருதடியான் தோத்திரங்கள்
விநாயகர் துதி
மின்னும் மருதடி வாழ் வேழமுகன் றாள் பணிந்து
பன்னுவவன் காதை பகர்ந்திடவே – மன்னுபுகழ்
நீட்டு மலைமேல் றிகழ்பா ரதம்வரைந்த
கோட்டுமுகன் பாதங் குறி
நாமகள்துதி
விக்கினங்கள் நீக்க மருதடியில் வேழமுகன்
பக்கத்தை யாவும் புகலவே – மிக்க புகழ்
வன்னமே வுங்கமல மாமலர்மேல் வீற்றிருக்கும்
அன்னமே முன்னின் றருள்
வாழ்த்துகவி
” பூவாழி மன்னர்மநு நீதி வாழி
புகலரிய மடமகளீர் நிறையும் வாழி
ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி
ஓவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சாரசரங்க ளனைத்தும் வாழி
மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும்
மருதடியிற் கணபதிதாள் வாழிவாழி.” [7]
மருதடி விநாயகர் கும்மி
”ஏர்புத்த மானி மருதடி மேவிய
ஏரம்பன் பாதம் மனத்திருத்திச்
சீர்புத்த செந்தமிழ்க் கும்மி யுரைத்திடச்
செப்பு மவன்பதங் காப்பாமே.
ஆதியு மந்தமுமில்லாத நான்மறை
ஆதிப் பிரணவ நல்வடிவாய்
ஓதிய தொண்டர்கள் விக்கினம் நீக்கிட
ஒரு வானாண்டி ஞானப் பெண்ணே.
உச்சியில் மாமகு டந்துலங்க வெள்ளை
ஒற்றை மருப்பு மணிவிளங்க
மெய்ச்செவிச் சாமரம் வீசப் பிரணவ
வேழமுகங் கொண்டு வந்தாடி.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
ஆகுமொர் மூவடி வானவனை
தொந்தி வயிற்றனை மானி மருதடித்
தோன்றலைப் பாடுவம் ஞானப்பெண்ணே.
எந்தக் கருமஞ் செய்யினும் முன்னாக
எம்பெருமா னெற்று போற்றாங்காதல்
அந்தக் கருமஞ் சிவனுக்கு மாகாதா
மஞ்சு முறிந்தது காணுங்கடி.
முன்னாளி னான்முக னிந்திரன் தேவர்
முகுந்தனோ டேனையர் தம்மையெல்லாம்
பன்னாள் வருத்து கயமுகனைக் கொன்ற
பண்ணவ னென்றென்று பாடுங்கடி
சர்க்கரை மோதகந் தேங்கா யவல்கனி
சாற்றிய பாற்பொங்கற் புத்தமுதம்இ
க்குட னெள்ளுருண்டை யிட்டுத் துதிக்க
இருவினை தீர்க்குவன் ஞனப்பெண்ணே
தொட்டு வணங்க வருள்தரு மற்புதச்
சோதி மருத மரம்பாடிக்
குட்டை யுவந்தருளைங்கரன் பாதங்கள்
கும்பிட்டுக் கும்மியடியுங்கடி
பூசைச் சிறப்பினைப் பாடுங்கடி நல்ல
பொங்கற் சிறப்பினைப் பாடுங்கடி
ஆசை யுடன்வன் றேரேறி யேவரும்
ஆனந்தங் கும்மி னடியுங்கடி
அங்குச பாசந் தரித்தாண்டி யவன்
அம்பிகை பாலுங் குடித்தாண்டி
தங்கு விகட நடித்தாண்டிபெருஞ்
சந்திகள் தோறுமிருந்தாண்டி
சேணும் நிலனு நிறைந்தருவாய்நின்ற
செஞ்சடைச் சோதிய னெம்பெருமான்
காணும் படிசிறு சாணத்திற் புல்லினிற்
சார்வது செப்பி யடியுங்கடி
வந்த வினைகெடும் பேய்கள விலகிடும்
மாறாத நோயெல்லாம் மாறிவிடும்
சிந்தை நினைந்தன சேரும் மருதடிச்
சித்தி விநாயகற் போற்றுங்கடி
ஆசை யுடனடி யார்தரு மோதகம்
அப்பமு முப்பழ மானவெலாம்
ஓசையுட னுண்டு நல்லருள் செய்கின்ற
உத்தம னென்றடி யுன்னுங்கடி
சைவ சமயிகளன்றிய மேனைச்
சமயிகளும்மனத் தில் நினைத்தால்
ஜயமொன் றின்றி யருள்செயு மெம்பிரான்
வரும் மருதடி யைங்கரனே
வாழி மருதடி யைங்கரன் பாதங்கள்
வல்லபை வாழி யருள் வாழி
வாழி யடியவ ரந்தண ரென்றென்றும்
மானேசர் வர்க்கமும் வாழியரோ”

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து.செல்வி சாந்தரூபன் சிவனியா 28.04.21

யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண்ட  
திரு திருமதி 
சாந்தரூபன்&சாளினி தம்பதிகளின், அன்புச்செல்வி சிவனியா (பிறப்பிடம்.சுவிஸ் )அவர்களின் ; பிறந்தநாள்.
28.04.2021 இன்று. இவரை அன்பு அப்பா அம்மா அப்பப்பா அப்பம்மா .அம்மப்பா அம்மம்மா  அன்புத்தாத்தா 
பெரியப்‌பா பெரியம்மா 
 மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் 
மச்சாள் மார் மற்றும் அண்ணா தம்பி மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை உடுப்பிட்டிப்பிள்ளையார் .
மற்றும்  அம்பாள் 
சன்னதி முருகன்  நல்லூர் முருகன்  இறை அருள்
பெற்று   பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடிகளின்றி  பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,  
நோய் நொடி இன்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து.திரு குலசிங்கம் கஜிபன் 25.04.20.21

    யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் ஜேனிவாவை  வசிப்பிடமாககொண்ட திரு குலசிங்கம்  கஜிபன் (கஜி ) அவர்களின் பிறந்த நாள் 25.04.2021 இன்று  இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா சகோதரிகள் (அக்கா) அத்தான்
அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் முருகன்  இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    சகல சீரும்சிறப்பும்  பெற்று நீ பல்கலையிலிலும் சிறந்து
பண்புடனும் புகழுடனும்
பார் போற்ற பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 


 

 

 

பிறந்தநாள் வாழ்த்து திரு கணவதிப்பிள்ளை அமிர்தலிங்கம் 24.04.21

 யாழ் ஆவரங்காலை  பிறப்பிடமா​வும்  கனடா (Toronto, Ontario)
 வதிவிடமாகவு​ம் உள்ள
திரு கணவதிப்பிள்ளை அமிர்தலிங்கம் (லிங்கம் ) அவர்களின்
பிறந்தநாள் 24-04-2021 .இன்று
இவரை அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்  அன்புச்கோதர்கள்  மாமா மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி , மச்சான்
 மச்சாள்  மார் ம​ற்றும்
 ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை ஆவரங்கால் சிவன் அல்லாரை அம்பாள் மற்றும் கனடாமுருகன்  இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று
 நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்னைய தோற்றம்

மருதடி விநாயகர் கோயில் சிவயோகி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்ட புண்ணிய தலமாகும். கோயிலின் தென் திசையில் உள்ள திருக்குளம் ‘பிள்ளையார் குளம்’ என வழங்கப்பட்டது. 
18 நாட்கள் உற்சவம் புது வருடப்பிறப்பன்று தேர்த்திருவிழா பஞ்சமுகவிநாயக விக்கிரகமும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் மேற்கு நோக்கியுள்ளது. விநாயகர் மூலஸ்தானத்தில் ஆகுவாகனாகக் காட்சியளிக்கிறார். 2.2.87 கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மலர் ஒன்று வெளியிடப்பட்டது.
கோயிலில் உறையும் பஞ்சமுகவிநாயகர் ஐந்து தொழிலைச் செய்கின்றவரும் ஐம்பொறிகளை அடக்கி ஐந்தெழுத்தை ஓதும் அன்பர்களை ஆள்கின்றவரும் ஐந்து மூர்த்திகளுக்கும் அதிபரான பரம்பொருள் தாமே என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
திரிபுராசுரனால் துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவபெருமான் யுத்தத்திற்கு முதலில் விநாயகரைத் தியானம் செய்கிறார். விநாயகர் சிவபெருமானுடைய ஐந்து திருமுகங்களிலிருந்தும் தோன்றி பஞ்சமுக விநாயகராகக் காட்சியருளுகின்றார்.
 சிவபெருமான் திரிபுராசுரனை அழித்தார். இக்கதை விநாயக புராணத்திலுள்ளது. நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ‘மருதடி விநாயகர் பதிகம்’ பாடியுள்ளார். இவருடைய பாடல்களின் இறுதியடி வருமாறு அ
மைந்துள்ளது.
“கருதடியர் வினைகடிய மருதடியில் நடனமிடு 
கற்பகப் பிள்ளையாரே”

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் திரு நாகராஜா முல்லை மோகன் 22.04.21

  யாழ்பாணம் (வடலியடைப்பை ) பிறப்பிடமாகவும் முல்லைத்திவில்
வசித்து தற்போது
யேர்மனியில் வசிக்கும்  திரு நாகராஜா  முல்லைமோகன் அவர்களின் பிறந்த நாள்-22.04.2021 இன்று
இவரை அன்பு மனைவி அன்புப்பிளைகள்   சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
இவர் 47 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் ஆவர்
இவர் தாய் நாட்டில் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் ஜெர்மனியில்  தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் தொடர்ந்து எமது கலைஞர்களுக்கான தனிக்களமான எஸ்ரி  தமிழ் ரிவி யில் பணியாற்றும் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை எனஇன்று பிறந்தநாளை காணும்.
சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர். மூத்த கலைஞர் முல்லைமோகன் அண்ணாவுக்கு
எம் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
அன்பே இயல்பாய்..
அகமே அழகாய்..
சிந்தனை சிறப்பாய்..
செயல்கள் செம்மையாய்..
அறமே துணையாய் ..
வார்த்தைகள் கவிகளாய்..
நட்போடு நலமாய் பழகும்
இனிய உங்களுக்கு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
என்றென்றும் மகிழ்ச்சியும்
புன்னகையும் நிறைந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்..
வாழ்த்தும் தேவன் ராஜா
  இவர்களுடன் இணைந்து .இன் நன்னாளில் உற்றார்
.உறவினர்களுடன் இவரை .நல்லூர் கந்தன் .இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன-
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

Powered by Blogger.