பிறந்தநாள் வாழ்த்து திரு. பாலசிங்கம் ராஜசேகரம் (சேகர் ) 29.04.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது பிரான்ஸ்நாட்டில்   
வசித்துவரும் திரு. பாலசிங்கம் ராஜசேகரம்(சேகர் )அவர்களின் பிறந்தநாள்  29.04.2023.இன்று 
இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் அன்பு அப்பா  மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் பிரான்ஸ் அம்பாள் இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திடஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்று  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>உங்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டி கழிக்கும் முக்கிய முறைகள்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கட்டி கர்பூரத்தை கொழுத்தி வைக்க வேண்டும். இப்போது கற்பூரம் எரிந்து கொண்டே தண்ணீரில் 
மிதக்கும். அப்போது
அரி ஓம் கணபதியே நம. சர்வ தோஷமும்,
சர்வ வியாதியும் கண்ணேறு மனக் கொதிப்பு தீட்டு முறைப்பாடு, பில்லி ஏவல் பிசாசு சகல சத்திராதிகளையும் எரி எரி சுடு சுடு நசி மசி நசி ஓம்
 சிவாய சிவாய நம்.
என்று 21 தடவை தண்ணீரைப் பார்த்து ஓதி ( நீரில் கற்பூரம் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும். கற்பூரம் போதவில்லை என்றால் வேறு கற்பூரம் எரிய செய்து மிதக்கும்படி செய்யலாம் ) பின் அந்த தண்ணீரை 
மூன்று முறை முகத்தில் தெளித்து பின் குழந்தையைத் தூக்கி கை கால்களை உதற செய்து அனுப்புக. அதிக பணம் வேண்டுமானால் 
தாயத்துக் கட்டலாம்.
இதுபோலவே பெரியவர்களுக்கும் செய்யலாம் கிராமங்களில் இதுபோல் வேர் கட்டுதல், தண்ணீர் எரிதல், ஆகியவற்றை செய்வதை தாங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கலாம். மேற்சொல்லிய முறைகள் 
நல்ல பலன் தரும்.
இதுபோல் குழந்தைகளுக்கு கண்பட்டுவிட்டது என்பார்கள். இதற்கு முன் சொல்லிய முறைதான் என்றாலும் கூட ஒரு முறை சொல்லுகிறேன். படிப்பதற்கு விளையாட்டாகத் தான் இருக்கும். ஆனால் 
அதிகம் விஷயம் உண்டு.
கட்டச்சி கண், நெட்டச்சி கண், கருப்பி கண், சிவப்பி கண், முண்டக்கண், ஆந்தைகண், பச்சி கண், பாம்பு கண் சுடு சுடு சுடு.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
கொழும்புக் கோவிலில் யாழ் மக்களுக்காக 350 ஆண்டு பழமை வாய்ந்த விசேட பூஜை வழிபாடு

யாழ்ப்பாண மக்களுகான 350 ஆண்டிற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கொழும்பு கோவிலில் 20-04-2023.அன்று  விசேட பூஜை வழிபாடுகள் 
இடம்பெற்றன.  
சூரிய நிறுவகத்தின் நிதி அனுசரணையில் யாழிலும், கிளிநொச்சியிலும் இலவச சிங்கள கற்கை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் நான்கு கல்வி நிலையங்களும் கிளிநொச்சியில் ஒரு கல்வி நிலையமும் இயங்கி 
வருகின்றது.
அந்த 5 கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விசேட சுற்றுலா பயணமானது சூரியா அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 19-04-2023.அன்றுஆரம்பமானது.
இந்த பயணம் நான்கு நாட்கள் கொண்டவை.
இவ்வாறு கொழும்புக்கு பயணமான மாணவர்களின் ஆன்மீக நலன் கருதி இன்றையதினம் கொழும்பில் உள்ள, 350 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கைலாசநாதர் சமேத கருணாட்சி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த சுற்றுப்பயணமானது, சூரியா அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் திரு தேவராஜா பிரேமராஜா அவர்களது தலைமையில் ஆரம்பமாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 14.04.23

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை சோபகிருது புது வருடப்பிறப்பு   நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்,
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,
தமிழ் பிலவ ஆண்டு.14.04.2023 இன்று வெள்ளிக்கிழமை  பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

எம் இணையங்களின் பத்ஒன்பதாவது ஆண்டு வாழ்த்துக்கள்.14.04.2023

எம் பெருமான் நவற்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  துணையுடன் எங்கள்  நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின்.14-04-2023.இன்று பத்ஒன்பதாவது ஆண்டு நல் வாழ்த்துக்கள் தகவல் களை ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய 
நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு
 நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ளஉங்கள் கிராமத்து இணையங்களை எமக்கு அனுப்பிவைக்கவும்
இங்கு பதிவிடப்படும் ( E M) navatkiri@ hispeed .ch navatkiricom@gmail.com.அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரின் பக்த்திப்பாடல்{ காணொளி }

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி சாந்தி.10.04.2023

 

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி&தர்மசாந்தினி 
(முரளி, ஓட்டுமடம் &சாந்தி,நவற்கிரி ) தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது திருமணநாள் 10.04.2023,,இன்று தங்களது இல்லத்தில் கொண்ண்டாடுகின்றனர் தம்பதியினரை அன்பு.
அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா மாமா மாமி அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளைகள் மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி  அப்பாச்சி அம்பாள்  சன்னதிமுருகன் ஒஸ்லோமுருகன்  ஒஸ்லோஅம்மன் நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷசீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
திருமண நாள்வாழ்த்து கவிதை>>>
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து.
அழகான வாழ்க்கை இது..
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!.
இணை பிரியா
தம்பதியினராய்
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் 
எங்கள் உள்ளம் கனிந்த இனிய திருமண நாள் 
நல் வாழ்த்துக்கள்.தம்பதியினர் .வாழ்க்கைவளமுடன்,


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பங்குனி உத்திரம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக 
கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று பங்குனி 
உத்திர திருவிழாவும், முருகப்பெருமான் தெய்வானையை 
மணந்த நாளில் பங்குனி உத்திர திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.அதன்படி, பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
 கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. 
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் தற்போது 
நடைபெற்று வருகிறது.
தேர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் கூட்டம் அலைமோதியது. 
பக்தர்களின்
 பாதுகாப்பை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2023

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2023.இன்று தனது இல்லத்தில்
கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ப்பிள்ளைகள்,மருமகன் மருமகள் மாமா மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்  சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்பாள் மறுவன்புலத்து  வீரபத்திரர்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன் இறை அருள் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட.
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்.

இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..
 உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்.
மகிழ்ச்சிகள் நிறைந்து..
உன் கனவுகளை அடைந்து..
பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்
நோய் நொடி இன்றி
வாழ வாழ்த்துகின்றனர்
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
வாழ்க வளமுடன்

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


Powered by Blogger.