பிறந்தநாள் வாழ்த்து திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் 30.05.20

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்களின்  பிறந்தநாள்
   30.05.2020 .இன்று இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள் 
மாமா மாமி மற்றும்
 பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்பெறமக்கள் பேத்தி பேரன் மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் நோய் நொடி இன்றி சகல வளங்களும் பெற்று இன்புற்று 
சந்தோஷ மாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-2020

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாள் .29-05-2020.இன்று 
தமது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  மிகச் சிறப்பாகக்  கொண்டாடுகின்றனர்
இவர்களைஅன்புப் பிள்ளைகள், அக்கா அண்ணா, தம்பிமார், தங்கை குடும்பத்தினர் 
இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இவர்களை சிறுப்பிட்டி அம்மன்  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று தம்பதியினர் நோய்நொடி இன்றி என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாளும்  பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.
வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகச்  சிறந்த நன்னாளே உஙகள்  இனிய திருமண நாள்.
எங்கள்  இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.இவர்களுடன் இணைந்து 
தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நீங்கள் சனிக்கிழமைகளில் இப்படி விரதம் இருந்தால் வாழ்வில் இந்த மூன்றும் கிடைக்குமாம்

நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை 
அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். நவக்கிரகங்களில், சனிபகவானை 
ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே 
ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே.பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. 
இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை 
எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.சனிக்கிழமை விரதம் எளிமையானது. 
பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று 
எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற 
வேண்டும்.சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த
 பலன் கிடைக்கும்.சகல செல்வமும் பெற்று 
ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் 
காத்தருள்வார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயா விதுர்சா 27-05-20

கனடா  ரொறன்றோவில் வசிக்கும். திரு திருமதி  தயா சர்மி தம்பதிகளின் செல்வப்புதலி  விதுர்சாவின்       
  பிறந்தநாள் , 27.,05,2020, இன்று,  இவரை   அன்பு அப்பா அம்மா  சகோதரர்கள்   அம்மம்மா 
அம்மா மாமா மாமி  மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் மற்றும்  நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருசுப்பிரமணியம் மகி .26-05-20

பளையை பிறப்பிடமாகவும்சுவிஸ்  சூரிச்சை   வதிவிடமாகவும் கொண்ட திருசுப்பிரமணியம்  மகி (சுவிஸில் மிக பிரசித்தி பெற்ற மகி அச்சக உரிமை  யாளர்)அவர்களின்  பிறந்தநாள் 26-05-2020..இன்று  இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு, அப்பா அம்மா  அன்புச்  சகோதரசகோதரர்கள் பெரியோர்கள் சிறியவர்கள் மாமா  மாமி 
மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் இவரை சகல வளமும் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியன் குருஅருளாலும் திரு அருளாலும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்.
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் உற்சவம்.25-05-20. இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ள 
ஆரம்ப காலத்தில் ஆலயத்துக்கு வருமானம் இல்லை.இதனால் 09 வீடுகளுக்கு சென்று பொங்கலுக்கு அறிவிக்கும் முகமாக இந்த நிகழ்வு சம்பிரதாயமாக இடம்பெறுகிறது.பொங்கல் வருகை தர இருக்கின்றது
 என்பதை அறிவித்து அடுத்த 07 ஆம் நாள் தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் உற்சவம் இடம்பெறும். இதற்கான அறிவித்தலாகவே இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெறுவது வழமை.நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதற்கு 
தடைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பக்தர்களோடு.25-05-20. இன்று அதிகாலையில் இந்த உற்சவம் இடம் பெற்றிருந்தது.அதிகாலை 1.45 மணியளவில் ஆலயத்தில்
 மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து ஒன்பது குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.பாக்கு தெண்ட சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று இன்றைய உற்சவம்
 நிறைவு பெற்றுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜா தவபாலன்.23.05.20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் பிறந்தநாள் 23.05.2020.இன்று
 பிறந்தநாள் காணும் இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் மற்றும் சூரிச்சிவன்  இறை அருள்பெற்று ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-20

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2020.இன்று  39வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்   
வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து 
 திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை
சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா தம்பதியனர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்இறைவன் ஆணையிட்ட விதியின் படி இணையவிருக்கும் இரு நல்ல இதயங்களின் இல்லற விழாவான இந்த திருமண நன்னாள் நல்லபடியாக அமைய வாழ்த்துகின்றோம்…
என்றும் அன்புடன் வாழ்த்தும் நவற்கிரி. .கொம் 
 நிலாவரை .கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி .கொம் மற்றும் 
உறவு இணையங்களும் ,
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையர் மற்றும் 
அப்பா வயிரவர் மேல்மருவத்தூர் அம்மன் அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்  வாழ்வில் எல்லா சுகங்களோடும்
,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
. வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
நீங்கள் தெரிந்திராத சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் சிறப்புகள்

விநாயகப் பெருமானை எல்லா நாளும் வழிபடலாம். தவிர, எந்த தெய்வங்களை வழிபட்டாலும் முதலில் முதல்வன் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட்ட பிறகுதான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம்.அதேபோல், மாதந்தோறும் 
சதுர்த்தி வரும் .அதாவது அமாவாசையில் இருந்து நான்காம் நாளும்பெளர்ணமியில் இருந்து நான்காம் நாளும் சதுர்த்தி வரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி 
வழிபடுவது ரொம்பவே சிறப்பு.மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி இன்னும் சிறப்பானது. இந்த நாளில், மாலையில் விநாயகருக்கு, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறும்.அப்போது,
 பால், தயிர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் முதலான 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த நாளில், கணபதி பெருமானுக்கு, வெள்ளெருக்கம்பூ 
மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். 
காரியத் தடைகள் யாவும் விலகிவிடும்.மேலும், 
சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு கொழுக்கட்டை அல்லது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வீட்டில் மங்கல 
காரியங்கள் விரைவில் நடந்தேறும். கடன் தொல்லையை நிவர்த்தி செய்து அருள்வார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய்
 நவகிரகங்களில் ஒரு 
கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.பதியான சிவனைப் பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 
பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன், மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று 
போற்றப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன்,19,05,20

னடா மொன்றியலில் வசிக்கும் செல்வன்  தர்மதேவன் தர்சிகன்,       
  பிறந்தநாள் , 19.,05,2020,இன்று,  இவரை   அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பாமமா அம்மப்பா  
அம்மா மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் நவற்கிரி அம்பா வையிரவர் ஆசியுடன் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு 
சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா. 09.05.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் ஐந்தாவது பிறந்த நாள் .09.05.2020..இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர் இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன..
பிறந்த நாள் வாழ்த்து கவிதை

தேனிலும் இனியவள்
தேகிடாத சுவையவள் .
முள்ளில்லா மலரவள்
முகம் காட்டும் நிலவவள் .
மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள் .

கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கடவுள் கொடுத்த நல்ல குணம்
கவர்ந்திடுவாள் விழிகளால்
கவலை தீர்ப்பாள் கனி மொழியினால்
கோபம் போல நான் நடித்தால்
குழந்தையவள் தான் துடிப்பாள்
கொஞ்சி கொஞ்சி அருகில் வந்து
கன்னமதில் இதழ் பதிப்பாள்.

என் தேவதைக்கு இன்றோடு
வயது தான் ஐந்து
எம் வீட்டினில் இவளே தான்
மணம்வீசும் மலர் 
வாழ்த்துகின்றேம் 
எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது 
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நீங்கள் வெள்ளிக்கிழமையில் இப்படிச் செய்வதால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய நாளாகும். பிற நாட்களை காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகும். எனவே, இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினால் அது வெற்றியாகவே அமையும். நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை.செல்வத்திற்கு
 உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பணவரவு உண்டாகும்.பச்சை வளையலை 
தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும்.வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி 
செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தனலாபம் கிடைக்கும்.மேலும், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.வெள்ளிக்கிழமைகளில் மாலை 
வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகிவிடும். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
 இதன்மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்வு கிடைக்கும்.அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணவரவு அதிகரிக்கும். இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த நற்பலன்களை தரும்.வெள்ளிக்கிழமைத்தோறும் குபேர 
விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது 
மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சு
க்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக 
விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து 
இருக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>எம் பெருமான் முருகரின் அறுபடை வீடு என்பது என்ன

போகரே குருவிஷ்ணு போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
முருகரின் அறுபடை வீடு என்பது என்ன?
அடங்கி இருக்குமிடம் . அடங்கி இருக்கும் ஸ்தானங்கலே இயற்கை விளக்கம் தங்குமிடங்களாகும் , இவற்றிற்கு ஊர் ஆறு ஆவது ஏன்?
ஏரகமென்பது அழகு பொருந்திய 
உள்ளமென்னும் இடம் . 
திருவாவினன்குடி என்பது திரு - ஆ - இன்ன - குடி . திரு - இலக்குமியாகிய சந்தோஷமும் , ஆ - பசுவாகிய விளக்கமென்னும் சீவனும் , இனன் - சூரியனாகிய புத்தியும் , ஒன்று கூடி விளங்கும் ஆன்ம 
அறிவின் சுத்த காரிய இடம் .
 பழமுதிர்சோலை என்பது , இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப்பழங்கலாகிய பிரயோஜன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற 
அறிவாய் விளங்கும் இடம் .
திருசீரலைவாய் / திருச்செந்தில் / செயந்திபுரம் என்பன சுத்தமனத்தின் முகத்தில் விஷயக்கடலின் அவாவாகிய அலை அடித்துக்கொண்டு இருக்கும் இடமாகிய கரை , செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம் அக்ஞான சூரனை நிவர்த்தித்து சந்தோஷகரத்தை
 பெற்ற பதி மனத்தின் விளக்கம் .
திருப்பரங்குன்றம் என்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தை உடைய விவேக உல்லாச இன்ப நிறைவு .
குன்றுதோறாடல் என்பது மலைதோறாடல் , மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு  முதற் காரணமாய் உள்ள துரிய நன்னிலை , இத்துரியம் , பரதுரியம் , சுத்த துரியம் , குருதுரியம் , சிவதுரியம் , சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவகாட்சியில்
அனந்தம் உண்டு .
மேற்குறிய அனுபவக்காட்சிகளுக்கு தேகத்தில் இடம் எவை ? 
கோசத்தின் அடி , தொப்புளின் கீழ் , தொப்புள் , வயற்றில் தொப்புளுக்கு மேல் , மார்புக்கு கீழ் , மார்பு நெஞ்சு ஆக ஆறு .
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Powered by Blogger.