தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று 
வருகின்றது.
இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு 
நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள்
 பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய்கட்டப்பட்ட மண் குடத்தில் 
கடல் நீர் எடுத்து வந்து விசேட பூஜை வழிபாடுகள் 
நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம் 
பெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருங்கடலுக்குச் சென்று கடல் நீர் எடுத்து வந்து விளக்கு எரிக்கும் வைபவம் ஆரம்பமாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


எலுமிச்சை (கனி) மாலை தெய்வ வழிபாட்டில் ஏன் சாத்துவார்கள்

துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களை பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது. 
கனிமாலை என்றால் அது எலுமிச்சம் பழ மாலையையே குறிக்கும். துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். 
 இம்மாலையை தயாரிப்பவர்கள் ஒரே அளவிலான நல்ல நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்க்க வேண்டும். எலுமிச்சம் பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாகவோ அல்லது மிகவும் பழுத்த நிலையிலோ இருந்தால் அவற்றை 
தவிர்ப்பது நல்லது. 
 உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது, அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். 
கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். நீண்ட நாள் தடைபட்ட செயல்கள் கனிமாலை சாத்தி வழிபாடு செய்தால் கைகூடும் என்பது நம்பிக்கை.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் 18.06.2023

 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திருமதி லோவிதன் ரஜீபா அவரின் பிறந்த நாள் 18,06,2023 இன்று தங்கள்  இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்புக்கணவர் அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்  மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்  வாழ்த்துகின்றனர்  இவரை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுர்க்கைஅம்மன்  மற்றும் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும்  என்றும் 
எல்லாநலமும் பெற்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>உங்கள் வீட்டில் இப்பொருட்களை வைப்பதன் மூலம் நல்ல சக்திகளை கொண்டு வரலாம்

புது வீடு கட்டி குடிபுகுரலுக்கு தயார் நிலையிலிருப்பவர்களிற்கும், ஒரே வீட்டில் பல இன்னல்களை துன்பங்களை அனுபவிப்பவர்களிற்கும் வாழ்பவர்களிற்கும் சிறந்த வாஸ்து பரிகாரம் செய்வதன் மூலம் 
நன்மையடையலாம்.
வீட்டில் சில பொருட்களை வாஸ்து பரிகாரமாக வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டில் அண்டாமல் ஓடி விடும்.
 இவற்றை தொடர்ந்து செய்து வருவதால் வீட்டிலும், வாழ்விலும் மிகப் பெரிய மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடியும்.
மணிகள் 
வீட்டில் அலங்காரத்திற்காக சிறிய மணியோசை கேட்பது போன்ற தோரணங்கள், பாசி மணிகள் ஆகியவற்றை தொங்கட விடலாம். இவை காற்றில் அசையும் போது ஏற்படும் ஒலியால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடுவதுடன், பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்க துவங்கும்.
 உப்பு :
 வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் கல் உப்பிவை சிறிதளவு வைப்பது நல்லது. கல் உப்பிற்கு தீய சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனால் தீய சக்திகளால் ஏற்படம் பாதிப்புக்கள் குறைந்து வீட்டில் நல்லது நடக்க துவங்கும்.
 சாமி சிலைகள் :
 சிறிய அளவிலான சாமி சிலைகள், சாமி படங்கள் அல்லது ஸ்வஸ்திக், ஓம், விநாயகர் உருவம் போன்ற ஆன்மிக சின்னங்களை வீட்டின் வரவேற்பு அறை, படுக்கை அறை போன்றவற்றில் மாட்டி வைக்கலாம். இவற்றை அடிக்கடி பார்ப்பதால் அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட பலன்கள் குறையும்.
எலுமிச்சை
 எலுமிச்சைக்கு தீய சக்திகளை ஈர்க்கும் தெய்வீக தன்மை உண்டு. ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கலாம். இது வீட்டில் தீய சக்திகளை அண்ட விடாமல் 
தடுக்கும். இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். வாரத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமைகளில் மட்டும் இந்த நீரை மாற்றினால் போதும்.
 நறுமணப் பொருட்கள் :
 வீட்டில் எப்போதும் நறுமணம் நிறைந்திருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வைக்கலாம். காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் தீய சக்திகள் நம்முடைய வீட்டை நெருங்காமல் இருக்கும். வீட்டில் நறுமணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தால் தெய்வீக சக்தி நிறைய துவங்கும்.
 கண்ணாடி :
 வீட்டிற்கு வெளியில் அல்லது வீட்டில் நுழைந்த உடன் கண்ணில் படும் இடத்தில் கண்ணாடி ஒன்றை மாட்டி வைக்கலாம். இது எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் அண்ட விடாது. வீட்டு வாசல் : வீட்டு வாசலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மங்கலகரமாக கோலமிட்டு 
வைத்திருக்க வேண்டும்.
 வீட்டு வாசலில் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு பொருட்களை வைப்பதும், வீட்டிற்குள் வரும் பாதையை மறைத்து வாகனங்கள் நிறுத்துவதோ கூடாது.
 வாசல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பாசிடிவ் எனர்ஜி வீட்டில் அதிகம் நிறைவதற்கு வழிவகுக்கும்.
இவற்றை நீங்களும் நல்ல நாள் மற்றும் விசேஷ தினங்களில் தொடங்கி தொடர்ந்து செய்து வர வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாது நல்ல சக்திகள் வந்து சேரும். என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி 15.06.2023

யேர்மன் டோ ட்முண்ட்னில் பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா தேவதி. அவர்களின் (17வது) பிறந்தநாள் 15.06.2023.-இன்று 
இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மச்சான் மச்சாள்மார் . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்
உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வென
நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன
இவர் தலை சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவதி மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர்
பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் இவர் எஸ் ரி எஸ் ஒளியகத்தில் 04.01.2013 உருவான பாடல் நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாருக்கான பாடலையும் இணைந்து பாடியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

பிறந்தநாள் வாழ்த்து:திருமதி கனகசபாபதி சரஸ்வதி 13-06-2023

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை வதிவிடமாகக் கொண்ட 
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13-06-2023..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி  அப்பா வயிரவர்  சன்னதிமுருகன் நல்லூர் கந்தன் கனடா முருகன்  இறை அருள் பெற்று  
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ 
ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி .பாலையா .12-06-2023


யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி பாலையா
இந்திராணி  அவர்களின்   பிறந்தநாள் இன்று 12..06.2023.இன்று   இவரை 
அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகன் 
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பிறந்த நாள் வாழ்த்து திருமதி தினேஷ் லக்சிகா(லக்சி) 10.06-2023

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்சில் வசிக்கும் திருமதி தினேஷ் லச்சிகா   (லச்சி) அவர்களின் பிறந்தநாள் 10.06.2023.இன்று தனது   குடும்ப உறவுகளுடன் பிரான்ஸ்சில் உள்ள உணவத்தில் 
மிகச்சிறப்பாக்  கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா அன்புமாமா  அன்பு மாமி அண்ணா அண்ணி 
அக்கா அத்தான் சகோதர்கள் பேரியப்பா பெரியம்மா சித்தாப்பா சித்தி மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இவரை  கிளிநொசசி பிள்ளையார் மற்றும் முருகன் . மற்றும்  நல்லூர்க்கந்தன் இறை அருள்பெற்று பல்லாண்டு. பல்லாண்டு காலம்  நீடூழி வாழ்கவாழ்க 
வென வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம் 
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும்
 நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால்
 மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள்
 சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.
அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் மிகச்சிறப்பாக நடைபெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, 
கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது  வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல் 
பெண்களால் எடுக்கப்பட்ட தூக்கு காவடிகாவடிகள் ஆட் டக்காவடிகளுடன் சிறப்பாகநடைபெற்றன  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>பாடகி செல்வி தேவராசா சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் 05.06.2023

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி .தேவராசா  சுதேதிகா அவர்களின் பிறந்தநாள் 05.06.2020.இன்று இவர்  பல பல மேடைநிகழ்வுகளிலும், இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்றபாராட்டுக்கழை பெற்ர   கலைஞர் ஆவார் ,இவர்  05.06.2023 இன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்,இவரை   அன்பு அப்பா அன்புஅம்மா  அன்புச்சகோதரிகள்     
 மாமா மாமி அண்ணா தம்பி மார்  மைத்துனர்கள்  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் 
 மார் மற்றும் உறவினர்கள் இவரை சிறுப்பிட்டி   அம்மன்  ஆசியுடன் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்   வாழ்த்துகின்றன
  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய தலவரலாறு உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம்

ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத் தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர்.
 பௌத்த ஆலயங்களில் ஷபத்தினித் தெய்யோ என்னும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாரள்
 கருதுகின்றனர்.
 கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
 கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது.
 சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் என்றும் அவனே ஈழத்தல் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் 
கூறப்படுகின்றது.
பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி 
வந்துள்ளது.
 வற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர். கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்;ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து 
குறிப்பிடுகின்றது.
 இடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம்படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர்.
 தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு 
மூதாட்டி கூறினாள். 
விளக்கேற்ற ஏண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். குடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே 
அவர்கள் விளக்கேற்றினர். 
தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். 
திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். ஷஷ கைவாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது. 
இடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்ப வில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். 
அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
இதன் நிமித்தமே தற்போதும் வைகாசி பூரணையன்று ஆலயத்தில் தற்போதும் பூஜை நடாத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.    


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>Powered by Blogger.