மலரும் 2015தின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 
களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்அணைத்து இணைப் பார்வையாளருக்கும் இணைய வாழ்த்துக்கள்
2015ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.

மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணி ஆனவுடன் , விஸ் யூ ஹேப்பி நியூ இயர் வாழ்த்துக்கள் 

.எமது இனிய அன்பு உறவுகளுக்கும் வாசகர்கள் அணைவரையும் வாழ்தி நிற்கிறது  இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் இணையப்பார்வையாளர்களே. உங்கள் வருகையால்சிறப்புற்ரு நிற்கின்றது இணையங்கள் சார்பாக உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
இணையங்கள் சார்பாக எனது உள்ளம்கனிந்த
. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சுவிசில் கடும் பனிப்பொழிவு :வாகன போக்குவரத்து நெரிசல்கள்

 சுவிஸ்லாந்தில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது
இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால்கடும் குளிர்  ஏற்பட்டுள்ளது . 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் யாழ்னின்.29.12.14

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) யசோதா தம்பதிகளின்.
அன்புச்செல்வன் யாழவனின் பிறந்தநாள் .29.12.2014.இன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அக்கா பெரியப்‌பா பெரியம்மா அண்ணா தம்பி மார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் பல் கலைகளும்பெற்று
இறைஆசியுடன் சகல வளமுடன் பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் .தேவன் மாமா  லோவிதன் அண்ணா குடும்பத்தினரும்  வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது.
எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும்?
கிழக்கு முக விளக்கு பலன்
குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.
மேற்கு முக விளக்கு பலன்
மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முக விளக்கு பலன்
வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு.
தெற்கு முக விளக்கு பலன்
தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும்.
எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்?
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.
இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை.
மும்முகம் யற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.
நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
எந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?
தாமரைத் தண்டு திரி பலன்
தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.
வாழைத் தண்டு திரி பலன்
வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும்.
புது மஞ்சள் சேலைத் துண்டு திரி
புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும்.
புது வெள்ளை வஸ்திர திரி
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வந்து மூதேவி அகன்று விடுவாள்.
எந்த எண்ணையை திரிக்கு விட்டால் என்ன பலன்?
நெய்
நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
இலுப்பை எண்ணை
இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி
விளக்கு எண்ணை
விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்
நல்லெண்ணை
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலன்
குறிப்பு: கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால்,
அவற்றை நீக்குவது நன்மை தரும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அரிசி சாதம் சேர்க்க கூடாது ஏன்?

சாந்திராயன பகுதியின் 11-வது நாளான ஏகாதசியில் உபவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலியுகத்தில் நம்பிக்கை, வைராக்கியம் மற்றும் பக்தியுடன் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு, மனமானது முழுக்க ஹரியிடம் செலுத்தப்பட்டால் ஒருவன் பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுவிக்கப்படுவான்.
இதில் ஐயமேயில்லை. இந்த விஷயத்தில் மறை நூல்கள் நமக்கு உறுதி அளிக்கின்றன. பக்தர்கள் இந்த தினத்தில் உபவாசம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து ஜபம் செய்து ஹரி கீர்த்தனம், தியானம் செய்கின்றனர். சிலர் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்துவதில்லை. பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம்.
ஏகாதசி நாட்களில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. இது மிகவும் முக்கியம். பிரம்மாவின் தலையிலிருந்து விழுந்த வியர்வை. ஓர் அரக்கனின் உருவத்தை எடுத்து, எனக்கு வசிக்க ஒரு இடம் கொடுங்கள் என்று கேட்டது. "அரக்கனே, ஏகாதசி அன்று சாப்பிட்டவர்களின் சாதத்தில் போய் இருந்து கொண்டு அவர்கள் வயிற்றில் புழுக்களாக ஆவாயாக'' என்று பிரம்மா பதில் சொன்னார்.
இதற்காக ஏகாதசி அன்று சாதம் தவிர்க்கப்படுகிறது. ஒருவன் ஏகாதசி உபவாசத்தை தொடர்ந்து செய்தால் பகவான் ஹரி மகிழ்வுறுகிறார். எல்லாப் பாவங்களும் போக்கப்படுகின்றன. மனம் தூய்மை அடைகிறது.
பக்தி படிப்படியாக வளர்கிறது. கடவுளிடம் பக்தி தீவிரமடைகிறது. ஆசார சீலர்கள் சாதாரண ஏகாதசி நாட்களில் கூட பூரண உபவாசத்துடன் விழித்திருக்கின்றனர். விஷ்ணு பக்தர்களுக்கு ஒவ்வொரு ஏகாதசியும் புனிதமான நாள்தான்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

பாவம் போக்கும் திருவாண்ணாமலை தீப வழிபாடு

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும். 

• தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரியபாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

• கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். 

• கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும். 

•  கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

• தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி கனகரத்தினம்-11.12.14.

புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்கள்
தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக தனதுகுடும்பத்தினர்காளுடன் இன்று.11.12.2014 இத்தாலியில்
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்

கார்த்திகை தீபத் திருவிழா 3-ஆவது நாளாக கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் மாத பௌர்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இக் கோயிலின் கார்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தைக் காண வியாழக்கிழமை பிற்பகலே பல ஆயிரம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
இவர்கள் வியாழக்கிழமை முதலே திருவண்ணாமலையில் கிரிவலம் வரத் தொடங்கினர்.
தொடர்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
3-ஆவது நாளாக கிரிவலம்: டிசம்பர் மாதத்துக்கான பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் சனிக்கிழமை மாலை 6.13 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். சனிக்கிழமை காலை 9 மணிக்குப் பிறகு கிரிவலம் வந்த பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வாழ்வில் மாற்றம் தரும் நாகராஜா கோவில்


nakarajarkovil
தன் தந்தையைக் கொன்றதன் காரணமாக, சத்திரியர்கள் பலரையும் அழித்தார் பரசுராமன். அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெற விரும்பினார். அதற்காக மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர். பரசுராமன் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன்

அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர்களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம். உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால்

 வாழ்க்கை நடத்த தகுதியுடையதாக இல்லை என்பதால் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இந்த உண்மையறிந்து பரசுராமன் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். ‘நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே

எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜா மன திருப்தி கொண்டு அருள்பெற வேண்டும்’ என கூறி மறைந்தார். கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும், அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமன் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை

திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார். தவத்தைத் தொடர்ந்தார். கடும் தவத்தின் காரணமாக நாகராஜாவின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவரிடம் கரம் குவித்து மெய்சிலிர்க்க தன்

வேண்டுதலை தெரிவித்தார். நாகராஜா, பரசுராமனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். கொடிய விஷக் கதிர்களை பரப்பிட, பயங்கரமான நாகங்கள் உடனடியாக அங்கு தோன்றின. விஷ ஒளிக்கதிர்கள் மூலம் கேரள பூமி முற்றிலும் நாக பூமியாக மாறியது. நாகராஜா எந்தவித தயக்கமும் இன்றி, அதை ஏற்றுக்கொண்டார். தனது சிஷ்யர்களில் முக்கியமான ‘விப்ரனை’ நாக பூஜை செய்யும் அதிகாரியாக தேர்ந்தெடுத்தனர். அவருடைய வம்சத்தில்

பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அவதார நாதனான பரசுராமன் ஆசி அருளினார். வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள் பாலிப்பதால், இந்த சோலை மந்தார சோலை எனும் பெயரில் மருவி பிரபலமாகி உள்ளது. தலைமுறைகள் பல கடந்தன – வம்சம் கடினமான துக்கக்கடலில் வீழ்ந்தது. இந்த நிலையில்

பொறுப்பினை ஏற்றிடும் நிலைக்கு வந்தவர்கள் வாசுதேவனும் ஸ்ரீதேவியும் ஆவர். அந்தத் தம்பதிகளின் நீண்டகால தவ வலிமையின் காரணமாக அவர்களுக்கு நாகராஜா காட்சியளித்தார். இவ்வேளையில் நாகராஜாவின் வாழ்விடத்தின் சுற்றுமுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. அக்னியின் கோரத் தாக்குதலில், பல இடங்களிலும் வாழ்ந்து வந்த சர்ப்பங்கள் (பாம்புகள்) உயிருக்கு பாதுகாப்பு தேடி, நாகராஜாவின் பாதங்களை சரணடைந்தன.

இதையடுத்து காட்டுத் தீ முழுவதுமாக அணைந்து ஓய்ந்தது. தீயின் வெப்பம் தணிந்து, மண் முழுமையாக ஆறிய சாலை, ‘மண்ணாற சாலை’யானது. மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி

கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து, நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை–வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. நாகராஜா

கோவில்களில் புராட்டாசி மாத ஆயில்யம் தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படும். மண்ணாறசாலை நாகராஜா தலத்திலும் அதே போல், புராட்டாசி மாத ஆயில்யம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தில் இறைவனை தரிசனம் செய்வது, திருவிதாங்கூர் மன்னர் களிடம் ஒரு விரதமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த

ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதில் இருந்து ஐப்பசி மாத ஆயில்ய தினமும் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்யம் விழா தொடர்ந்து கோலாகலமாக நடைபெறுகிறது. சிவ

ஆலயங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா சிவராத்திரி ஆகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினம் முக்கிய விழாவாக கருதப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் சிறப்பாக

 நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ கால பூஜை, 10 மணிக்கு உச்சிகால பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடைதிறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது
.nakarajarkovil
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Powered by Blogger.