வாழ்வில் மாற்றம் தரும் நாகராஜா கோவில்


nakarajarkovil
தன் தந்தையைக் கொன்றதன் காரணமாக, சத்திரியர்கள் பலரையும் அழித்தார் பரசுராமன். அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெற விரும்பினார். அதற்காக மகரிஷிகளை அணுகினார். சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர். பரசுராமன் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார். பரம்பொருளான சிவன்

அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர்களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம். உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால்

 வாழ்க்கை நடத்த தகுதியுடையதாக இல்லை என்பதால் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இந்த உண்மையறிந்து பரசுராமன் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். ‘நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே

எண்ணியவை நடக்கும். அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜா மன திருப்தி கொண்டு அருள்பெற வேண்டும்’ என கூறி மறைந்தார். கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும், அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமன் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை

திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார். கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார். தவத்தைத் தொடர்ந்தார். கடும் தவத்தின் காரணமாக நாகராஜாவின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவரிடம் கரம் குவித்து மெய்சிலிர்க்க தன்

வேண்டுதலை தெரிவித்தார். நாகராஜா, பரசுராமனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். கொடிய விஷக் கதிர்களை பரப்பிட, பயங்கரமான நாகங்கள் உடனடியாக அங்கு தோன்றின. விஷ ஒளிக்கதிர்கள் மூலம் கேரள பூமி முற்றிலும் நாக பூமியாக மாறியது. நாகராஜா எந்தவித தயக்கமும் இன்றி, அதை ஏற்றுக்கொண்டார். தனது சிஷ்யர்களில் முக்கியமான ‘விப்ரனை’ நாக பூஜை செய்யும் அதிகாரியாக தேர்ந்தெடுத்தனர். அவருடைய வம்சத்தில்

பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அவதார நாதனான பரசுராமன் ஆசி அருளினார். வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள் பாலிப்பதால், இந்த சோலை மந்தார சோலை எனும் பெயரில் மருவி பிரபலமாகி உள்ளது. தலைமுறைகள் பல கடந்தன – வம்சம் கடினமான துக்கக்கடலில் வீழ்ந்தது. இந்த நிலையில்

பொறுப்பினை ஏற்றிடும் நிலைக்கு வந்தவர்கள் வாசுதேவனும் ஸ்ரீதேவியும் ஆவர். அந்தத் தம்பதிகளின் நீண்டகால தவ வலிமையின் காரணமாக அவர்களுக்கு நாகராஜா காட்சியளித்தார். இவ்வேளையில் நாகராஜாவின் வாழ்விடத்தின் சுற்றுமுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. அக்னியின் கோரத் தாக்குதலில், பல இடங்களிலும் வாழ்ந்து வந்த சர்ப்பங்கள் (பாம்புகள்) உயிருக்கு பாதுகாப்பு தேடி, நாகராஜாவின் பாதங்களை சரணடைந்தன.

இதையடுத்து காட்டுத் தீ முழுவதுமாக அணைந்து ஓய்ந்தது. தீயின் வெப்பம் தணிந்து, மண் முழுமையாக ஆறிய சாலை, ‘மண்ணாற சாலை’யானது. மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி

கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து, நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது. பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை–வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும். பண்டைய காலத்தில் ஐப்பசி மாத ஆயில்ய தினத்திற்கு முக்கியத்துவமோ, சிறப்போ இருந்ததில்லை. நாகராஜா

கோவில்களில் புராட்டாசி மாத ஆயில்யம் தினம் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படும். மண்ணாறசாலை நாகராஜா தலத்திலும் அதே போல், புராட்டாசி மாத ஆயில்யம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த தினத்தில் இறைவனை தரிசனம் செய்வது, திருவிதாங்கூர் மன்னர் களிடம் ஒரு விரதமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு முறை வழக்கம்போல் கோவிலுக்கு வர மன்னரால் இயலாமல் போனது. அடுத்த துலாம் (ஐப்பசி) மாத ஆயில்ய நாளில் வருகை தந்து வழிபாடு நடத்த தீர்மானித்தார். அந்த

ஆயில்யத்திற்கான அனைத்து செலவுகளையும் அரண்மனை சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் கோவில் சொத்துக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டது. அதில் இருந்து ஐப்பசி மாத ஆயில்ய தினமும் மாபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் ஆயில்யம் விழா தொடர்ந்து கோலாகலமாக நடைபெறுகிறது. சிவ

ஆலயங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த விழா சிவராத்திரி ஆகும். இந்த நாகராஜா கோவிலிலும் அந்த புண்ணிய தினம் முக்கிய விழாவாக கருதப்படுகிறது. அதன்படி பல கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நாகராஜா பிரதிஷ்டை, சிவாகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகளும் அதன்படி சிறப்பாக பல்வேறு நிகழ்ச்சியுடன் சிறப்பாக

 நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷ கால பூஜை, 10 மணிக்கு உச்சிகால பூஜை, 12 மணிக்கு நடை அடைத்தல், மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடைதிறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது
.nakarajarkovil
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.