திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா


இன்று 23-05-2014 -33வது வருட திருமண நாள் காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்      சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா  (தேவன்).தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும்இவர்களுடன் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
 உறவு இணையங்களும் ,இறை அருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்
 

9வது பிறந்தநாள் வாழ்த்து:அபிஷா(21.05.14)

இன்று  தனது ஒன்பதாவது பிறந்த நாளை கொண்டாடும் அபிஷா குட்டிக்கு  எமது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இவரை அன்பு அப்பா
அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவை வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ‌ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.அபிஷாவை  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
 உறவு இணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல் கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்

பிறந்த நாள் வாழ்த்து.வே.ஸ்ரீசபேஷன் [20.05.2014]

                           
நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று
  [20.05.2014] இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்,,,
வல்வெட்டி வேவில் வீரகத்தி கோபுர திருப்பணி..

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான இராஜ கோபுரம் அமைக்கும் திருப்பணி சபை.. 2014.04.16
தலைவர்: வே.பாலச்சந்திரக்குருக்கள் ( தொ.பேசி இல 0213202558 )
செயலாளர்: மா.தங்கராசா
 பொருளாளர்: தி.விக்னேஸ்வரக்குருக்கள் ( தொ.பேசி இல 0212055092, 0778695552 )
போசகர்கள் : தி.நாகேஸ்வரன் ஐயா
: சதா மகாலிங்கசிவக்குருக்கள்
:தி.கமலநாதன் ஐயா
 கணக்காய்வாளர்: த.ஸ்ரீதர்ஷன் — Siva Dankaபிறந்தநாள் வாழ்த்து செல்வன் த. தர்ஷிகன் [19-05-2014]

கனடா “மொன்றியலில்வசிக்கும்” தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 14வது பிறந்த தினத்தை இன்று [19-05-2014] குடும்ப உறவுகளுடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார் 
  இவரை அன்பு. அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள்  மார் பெறமகள் மற்றும் நபர்கள்  உறவினர்கள் .இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் http://www.navarkiri.com/2014/05/blog-post_19.html இணையங்களும் உறவு  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல் கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்
எமது பிறந்த நாள் நல் வாழ்த்து
 நல்லதொரு தாரம் வரமாய்  
 வாய்த்தது தனிச்சிறப்பு
 இருந்தாலும் முதல் தாரம்
 கலை என்பதற்கு முதல் சாட்சி நாமே!
வல்லவனாய் ந‌ல்லவனாய் வித்தகனாய்
 வாழ்ந்த என்  எம் உறவே
 மேலும் பல வெற்றிப் படிகளேறி
 சாதனை மலர்கள் பறிக்க
 நண்பன் நான் வாழ்த்துகிறேன்
 காலத்தின் தேவை அதிகரித்த வேளையிது
 ஓய்வுக்கு இடமேது எம் உறவே!
களமிறங்கு கருத்தான படைப்போடு
 தளம் தேடிப் பொருள் சமைப்போம்
 கலையென்ற ஆயுதத்தால் குலைந்து போன
 எங்கள் சமூகக் கறை களைவோம்
 நாளை நமதாகட்டும்
 உழைப்போம் விடிவிற்காய்
 வளமும் நலனும் கிட்ட பிரார்த்திக்கும்…அன்பு.உறவுகள்‍!
 

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நடந்த அற்புதம்:

 பிரமித்துப்போன யாத்திரீகர்கள்
கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வெண்கலவேல் பூஜைக்காக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைக்கப்பட்டு காலையில் வெளியில் எடுத்தபோது வெள்ளி வேலாக மாறியிருந்தது.
இவ்வதிசயம் அற்புதம் பாதயாத்திரை தொடங்கிய கடந்த சனிக்கிழமையன்று காலை சந்நிதி சந்நிதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வற்புதத்தால் பாத யாத்திரையின் தலைவர் வேல்சாமி தொடக்கம் யாத்திரீகர்கள் குழுமியிருந்தோர் பிரமிப்பில் உறைந்துபோனார்கள். சந்நிதியானின் அற்புதத்தால் அனைவரும் ஆனந்தமடைந்தனர்.
இது தொடர்பில் தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில்,
நாம் பாதயாத்திரையை இம்மாதம் 29ம் திகதி ஆரம்பிப்பதாக இருந்தோம். சடுதியாக கதிர்காம நிருவாகம் கொடியேற்றம் மற்றும் தீர்த்த திகதிகளை அறிவித்ததை எமது கல்வியியலாளர் சகா அவர்கள் என்னிடம் தெரிவித்தற்கமைவாக உடனடியாக பாதயாத்திரையை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.
அதற்காக காரைதீவிலிருந்து கடந்த 15 வருடங்களாக கதிர்காம பாதயாத்திரையில் கொண்டுசெல்லப்படும் வழமையான வெண்கல வேலுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அன்றிரவு செல்வச்சந்நிதி ஆலய மூலஸ்தானத்தில் வேலை பூஜைக்காகவும் முருகனின் ஆசிக்காகவும் வழமைப்பிரகாரம் வைத்தோம்.
வைத்துவிட்டு வெளியேறும்போது சந்நிதி ஆலய முன்றலில் வழமையாக இருக்கும் வெள்ளிவேல் இருந்தது. அதைப்பார்த்து இப்படியொரு வேல் இருந்தால் நன்றாக இருக்குமே முருகர் அருள்வாயா? என்றெண்ணியபடி தூக்கத்திற்கு போய்விட்டேன். தூக்கத்திலும் முருகனிடம் வெள்ளிவேலிருந்தால் நன்றாக இருக்குமே. எனக்கு அருள்வாயா என்றபடி தூங்கிவிட்டேன்.
காலையில் அடியார்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். பூஜையும் நடந்தது. பூஜை முடிந்ததும் ஆலய குருக்கள் வேலைத்தூக்கிவரும்போது பார்த்தேன். என்னையே நம்பமுடியாமல் போய்விட்டது. நான் காண்பது கனவா நிஜமா? என்று பிரமித்துப்போனேன்.
நான் இரவு பூராக முருகனிம் கேட்ட வெள்ளி வேலே அது. சந்நிதியானின் அற்புதத்தை நினைந்து சற்றுநேரம் கண்ணீர் மல்க வாயடைத்துநின்றேன். சகலரும் என்ன நடந்தது என்று கேட்டார்கள்.
ஏனையோரிடம் விடயத்தைச் சொன்னதும்தான் அவர்களும் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்கள்.
எமது பாதயாத்திரைக்கான முருகனின் அங்கீகாரமாக இதனைக் கருதுகின்றேன். முருகனின் அருள் சகலருக்கும் கிடைப்பதாக என்றார்.
 செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காம பாத யாத்திரை

                               தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன்ஆலயத்தில் இருந்து
                                 கதிர்காமகந்தன்ஆலயத்திற்க்கு பாத யாத்திரை ஆரம்பமனது

                      
 

இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள்


எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் இரண்டாம் ஆண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில் navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/     http://www.navakkri.com/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/
http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/
http://www.nilavarai.com/உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை

 விநாயகர் சதுர்த்தி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமி கோவிலின் உச்சியில் பி்ள்ளையார் கோவில் உள்ளது. மேலே உள்ள கோவில் உச்சி பிள்ளையார் கோவில் என்றும், கீழே உள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கியது. இந்த விழா இன்று முதல் 14 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினமான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை உச்சி பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து கொழுக்கட்டை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஜாதிக்காய், ஏலக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை கலந்து 2 பங்காக பிரித்து துணி்யில் கட்டி நேற்று காலை வரை 18 மணிநேரமாக அவித்து எடுத்தனர். பின்னர் அதை ஒரு பெரிய துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து வந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அந்த மெகா கொழுக்கட்டை சாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் மலைக்கோட்டை கோவிலுக்கு வரத் தொடங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 
 
Powered by Blogger.