உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை

 விநாயகர் சதுர்த்தி திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் வைக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமான சுவாமி கோவிலின் உச்சியில் பி்ள்ளையார் கோவில் உள்ளது. மேலே உள்ள கோவில் உச்சி பிள்ளையார் கோவில் என்றும், கீழே உள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று துவங்கியது. இந்த விழா இன்று முதல் 14 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினமான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை உச்சி பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து கொழுக்கட்டை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஜாதிக்காய், ஏலக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை கலந்து 2 பங்காக பிரித்து துணி்யில் கட்டி நேற்று காலை வரை 18 மணிநேரமாக அவித்து எடுத்தனர். பின்னர் அதை ஒரு பெரிய துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து வந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு அந்த மெகா கொழுக்கட்டை சாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் மலைக்கோட்டை கோவிலுக்கு வரத் தொடங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
 
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.